Friday, January 18, 2013

யானைக் கூட்டம் காண வாரீர்!


குருவாயூரில் யானைக் கொட்டாரத்தில் கண்ட அழகான யானைகளின் அழகான படங்கள் இவை. ரசித்து ரசித்து படம் பிடித்ததை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள இங்கேயும் பகிர்கிறேன்.

யானைக் கொட்டாரத்துக்குள்ளே செல்லும் போது நமக்கே ஏதோ யானைகள் வாழும் காட்டுக்குள் புகுந்து விட்டது போல ஒரு அச்சம் தொற்றிக்கொள்ளும். நமக்கு முன்னும் பின்னுமாக சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட யானைகள் விதவிதமான சப்தங்களை எழுப்பிக் கொண்டும் ஆடிக்கொண்டும் பாகனின் சொல்லுக்கு சின்னக் குழந்தை போல பணிந்து அவர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தன. பார்க்கவே மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்தது அந்த இடம்.

லட்சக்கணக்கான யானைகளை போர்ப்படைகளில் வீரர்களாக வைத்திருந்த நாடு இது! அவற்றின் எச்சங்களாக இன்று மிஞ்சி நிற்பது இந்தக் கோவில் யானைகளே


குளிரக்குளிர குளிப்பாட்டிக்கொண்டிருந்தார்கள். ஆடி அசைந்து அருமையாக குளித்த அழகு யானை!





சங்கிலிய மட்டும் கழட்டி விடுங்கடா சொல்றேன் என மிரட்டும் யானை!

'போட்டோவா எடுக்குற, இருடீ இன்ன மிதிக்கிறேன்' என்று என்னைப் பார்த்த உடன் சங்கிலை கழற்ற முயன்ற யானை! எதுக்கும் நீங்க மானிட்டரை விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க...!

அழகுக் கூட்டம்

தொட்டியில் தண்ணீர் குடித்து விட்டு இளைப்பாரும் கொம்பன்


கீழே காணும் இந்த யானைக்கு ஏதோ உடல் நிலை சரியில்லாமல் இருந்தது போல, மிகவும் மெதுவாக அடிமேல் அடி வைத்து நடந்து வந்தது. அதன் கால்களை மஞ்சள் கலந்த தண்ணீருக்குள் வைத்து நிற்கும் படி செய்து 'டெர்மரிக் ட்ரீட்மெண்ட்' கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.


தரையில் கண்டதையெல்லாம் தலையில் போட்டுக் கொண்டிருந்தது இந்த யானை!




நீண்ட கொம்புகளைக் காட்டி மிரட்டும் கம்பீரமான யானை

 கொட்டாவி விடும் யானை

 அமைதியாக நிற்கும் கட்டழகு இளைஞன்!

காதுல தொரட்டிய சாச்சி வெச்சிட்டா போதுமாம். அசையக்கூடாது என்று கட்டளையாம். 

அடேங்கப்பா எத்தனை யானைகள் ! 



சாலையில் கண்ட அலங்கரிக்கப்பட்ட யானை, திருசூரில் உள்ள ஒரு சுப்ரமணியர் கோவிலுக்கு அழகு முருகனை சுமந்து வந்த அழகு யானைகள்!



2 comments:

gujjan said...

பிளாக் எழுதும் உங்களுக்குள் ஒரு போட்டோகிராபரும் இருக்கிறார் போல :) இன்னமும் எவ்வளவு முகங்கள் இருக்கு அண்ணே உங்களுக்குள்ள ?

hayyram said...

நன்றி குஜ்ஜன்,

பல ரூபங்கள் இருக்கின்றன.

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே இருப்பான்
வெட்டுப்படும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்

அப்படி இருக்கிறேன் போல இந்த அடியேன்! :-)