Sunday, May 19, 2013

சில புத்தகங்கள் சில தகவல்கள்!


பிரிவினையின் போது, திருட்டுகளும் கொள்ளைகளும் மேலும் கொலைகளும் முன்போலவே நன்றாக நடந்து கொண்டு வந்தன. காவல்துறை அதிகாரிகள் இந்துக்களால் செய்யப்படும் பாதிக்கும் மேற்பட்ட புகார்களை பதிவே செய்வதில்லை. 12 வயது முதல்  30 வயது வரை உள்ள ஹிந்துப் பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனார்கள்.

கிராமங்களில் வசிக்கும் ஒரு சில பட்டியல் வகுப்பு ஹிந்துப் பெண்களும் கூட இந்த முஸ்லீம் குண்டர்களால் கர்பழிக்கப்பட்டனர். என்னிடம் வந்த புகார்களை
வைத்துப் பார்த்தால் முஸ்லிம் குண்டர்கள் பெரும் அளவில் ஹிந்துப் பட்டியல் வகுப்புப் பெண்களை கற்பழித்து உள்ளனர். சந்தைகளில் ஹிந்துக்களால் விற்கப்படும் சணல் மற்றும் மற்றைய விவசாய பொருட்களுக்கு முஸ்லிம் வியாபாரிகள் ஒரு பொழுதும் முழுவிலை தருவதில்லை. ஹிந்துக்களைப் பொறுத்தவரை சமநீதி, சட்டம் ஒழுங்கு என்பவை பாகிஸ்தானில் இல்லாமல் போய்விட்டன.

- '1947 பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டோர்', மொழிபெயர்ப்பு: ராஜசங்கர். இந்துத்துவப் பதிப்பகம்.

பாரதியார் பொம்மைக் கல்யாணம் செய்து விளையாடுவதைப் போல பூணூல் கல்யாணம் செய்யவில்லை.  பிராமண ஜாதிதான் உயர்ந்தது என்பதை உணர்த்துவது போலவும் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞனுக்குப் பூணூல் போட்டுவிடவில்லை. எவனும் பிராமணன் ஆகலாம் எனச் சுட்டுவதற்காகவே அதைச் செய்தார். அதை புரொஃபஸர் சுப்பிரமணிய ஐயர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் அங்கீகரித்திருக்கிறார்கள். புரோகிதர்கள் சிலர் நிகழ்ச்சிக்கு வந்து ஹோமம் வளர்த்து வேத மந்திரங்கள் சொல்லியிருக்கிறார்கள். 1910-களின் தொடக்கத்தில் நடந்திருக்கிற சம்பவம் இது!

பிராமணர்கள் தம்மைத்தாமே சுயவிமர்சனம் செய்து கொண்டதைப் போல வேறு எந்த ஜாதியினரும் செய்ததில்லை. ஹிந்து சமூகத்தில் நடைமுறையில் இருந்த குழந்தைத் திருமணம், பொருந்தாத் திருமணம், இருதார மணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தையும் நீக்குவதற்கும் பிரமணர்களே முன் முயற்சி எடுத்திருக்கிறார்கள், ராஜா ராம் மோயன்ராய் தொடங்கி!

- 'திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்' , ஆசிரியர்: மலர்மன்னன்.

கிறிஸ்தவ மத வெறுப்புப் பிரச்சாரத்துக்கு ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். மண்டைக்காடு கலவரங்களுக்கு பின்னர் கொல்லங்கோடு எனும் கடலோர கிராமத்தில் ஓர் உள்ளூர் கிறிஸ்தவப் பிரசாரகரால் ஹிந்துக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தலை வெட்டி எடுக்கப்பட்ட கிருஷ்ணரின் உருவப்படம் அது. உள்ளூர் கிறிஸ்தவ ஓவிய அமைப்பு (ஜீஸஸ் ஆர்ட்ஸ்) உருவாக்கிய வாழ்த்து அட்டை அது. இத்தகைய வாழ்த்து அட்டைகள், அந்தக் கிராமத்திலும் சுற்று வட்டாரத்திலும் இருந்த கிராமப் பூசாரிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்த வாழ்த்து அட்டைகளில் க்ருஷ்ணரின் தலை வெட்டி எடுக்கப்பட்டிருந்ததுடன், 'புருஷோத்தமரின் தலை ஏசுஎனும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது ஒருவிதத்தில் பூரணத்துவ இறையியல் எனக் கிறிஸ்தவ செமினரிகளில் கற்பிக்கப்படும் கோட்பாட்டின் பண்பாடற்றமூர்கத்தனமான வெளிப்பாடே ஆகும்.

- 'உடையும் இந்தியா?' , ஆசிரியர்: அரவிந்தன் நீலகண்டன்.


கலைஞர் அவர்கள் சுயநலத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் நிறைவேற்றிய சட்டம் தான் தை மாதம் தமிழ்புத்தாண்டு என்பது. பிப்ரவரி 9 அன்று, தங்களை அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் கலைஞரின் தாசானுதாசர்கள் சிலர் சங்கத் தமிழ்ப் பேரவை என்கிற பெயரில் வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகரமான சட்டமாற்றத்தைக் கொண்டுவந்ததற்காக கலைஞருக்குப் பாராட்டு விழா ஒன்றை நடத்தினர். அந்த அறிஞர்களில் பலர் சமஸ்கிருதத்திற்கும் , ஹிந்து மதத்திற்கும் விரோதமானவர்கள்; மற்றும் சிலர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள். அந்தப் பாராட்டு விழாவில் வெட்கக்கேட்டின் உச்சக்கட்டமாக, திருவள்ளுவர்தொல்காப்பியர், கம்பர் , அவ்வையார், இளங்கோ அடிகள் போன்று வேடமிட்ட நடிகர்கள் கலைஞர் கருணாநிதியைப் பாராட்டுவது போன்ற காட்சியொன்று அமைக்கப்பட்டது. சுயநலத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் மட்டுமே இந்தச் சட்டத்தைக் கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

- 'தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் சித்திரையே' - கட்டுரைத் தொகுப்பு புத்தகத்தில் , பி ஆர் ஹரன்.


No comments: