Wednesday, May 1, 2013

நான் தப்பு செஞ்சிட்டேன்..! ஒத்துக்கொண்ட ஈ வெ ரா


பி டி ராஜன்

முதலியார்கள் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தார் வெ ரா என்பதைப் பற்றி பார்த்தோம். தி மு வைத் தோற்றுவித்த அண்ணாதுரை வெ ரா வை எப்படியெல்லாம் புறக்கனித்தார் என்பதையும் பார்ப்போம்.

பொன்னம்பல தியாக ராஜன் பி டி ராஜன் என்று அழைக்கப்பட்டார். நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தன் ஆளுகைக்குள் நீதிக்கட்சி வரவேண்டும் என்று விரும்பினார்ஆனால் பி டி ராஜன் இதனை விரும்பவில்லை

வெ ரா பி டி ராஜனுடன் முரன்பட்டார். காரணம் பி டி ராஜன் ஒரு முதலியார்அதனால் வெ ரா வின் திராவிடர் கழகத்தில் இணைந்திருக்க அவர் விரும்பவில்லை.  தனியாக நீதிக் கட்சியை பதிவு செய்து கொண்டு அதிலேயே நீடித்தார்

சில வருஷங்களுக்குப் பின்னர் திமுக மாபெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தலில் வென்றது. அண்ணாதுரை முதல்வரானார். அப்போது அண்ணாதுரையை நீதிக்கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பி டி ராஜன் அழைப்பு விடுத்தார். அந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை கலந்து கொள்ளக் கூடாது என வெ ரா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் வெ ரா முதலியார்களை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தில் இருந்ததால் அண்ணாதுரை வெ ராவை புறக்கனித்தார். பி டி ராஜனின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். காரணம் அண்ணாதுரையும் முதலியார்.

ஆக முதலியார்களை வெறுத்த வெ ரா வை முதலியார்கள் ஒதுக்கினார்கள் என்பது வரலாறு.

காங்கிரஸில் தனது செல்வாக்கு செல்லாக்காசானவுடன் பிராமணர்களை ஒழிக்க வேண்டுமென கிளம்பிவிட்டார் ராமசாமி நாயக்கர். காரணம் அக்கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள் என்பதே! அது போலவே சில முதலியார்கள் மீது கொண்ட கோபத்தால் முதலியார் ஒழிப்பு போராட்டமும் நடத்திக் கொண்டிருந்தார்

ஆனால் அத்தகைய ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாக தவறு செய்துவிட்டோம் என்பதை வெ ரா உணர்ந்தே இருந்திருக்கிறார்.

அது பற்றி 'சிலம்புச் செல்வர் பொ சி யுடன்' புத்தகத்தில் திரு மு மாரியப்பன் அதனைப் பதிவு செய்கிறார். அதிலிருந்து சில வரிகள்...

ஒரு முறை கும்பகோனம் பயனியர் விடுதியில் பொ சி மற்றும் அவருடன் மு மாரியப்பனும் தங்கி இருந்தார்கள். அங்கே பக்கத்து அரையில் ராமசாமி நாயக்கரும் தங்கியிருக்கிறார் என்ற விபரம் பொ சி க்கு தெரியவரவே இருவரும் சென்று வெ ரா வை அவரது அரையில் சந்திர்க்கிறார்கள்.

முதலியார்களின் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டிருந்த வெ ரா தான் எழுதிய முதலியார் ஒழிப்பு தலையங்கம் பற்றி பொ சி இடம் கேட்கிறார்.

" வெ ரா: 'முதலியார் ஒழிப்பு தலையங்கம் படிச்சீங்களா'

பொ சி: 'நாங்கள் இருவரும் படித்தோம்'

வெ ரா: 'தங்கள் அபிப்பிராயம் என்ன?'

'இதற்கு நான் என்ன அபிப்பிராயம் சொல்ல இருக்கிறது, உங்களுடைய பிராமண எதிர்ப்பு இயக்கம் இப்படித்தான் வந்து முடியும் என்று எனக்குத் தெரியும், இதோடு இது நிற்கப் போவதில்லை. இன்னும் பலபடி இறங்கி இவ்வியக்கம் தொடரும்' என்றார் பொ சிவஞானம் அவர்கள்.

உடனே ராமசாமி நாயக்கர் 'ஏதோ நல்லது என்று தான் செய்யப் போய் இவ்வாறு முடிந்து விட்டதே, தங்களைப் போன்றவர்கள் தான் இதனை சரிப்படுத்த வேண்டும்' எனக் கூறுகிறார்.

அதற்கு ஐயா பொ சி அவர்கள் "நான் மட்டுமல்ல யாராலும் எதுவும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு இப்பிரச்சனை செப்டிக் ஆகிவிட்டது" எனக் கூறினார்.

வெ ரா ஐயா சொன்னதை ஆழ்ந்த சிந்தனையுடன் கேட்டுக் கொண்டார்."

இவ்வாறு வெ ரா மற்றும் பொ சி அவர்களுடன் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் திரு மு மாரியப்பன் அவர்கள்.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ராமசாமி நாயக்கர் பிராமண எதிர்ப்பு என்று துவங்கியது தவறாகப் போய்விட்டது என்று தன்னளவில் உணர்ந்திருந்தார் என்பதே! "நான் தவறு செய்து விட்டேன், யாராவது தடுத்து நிறுத்துங்கள்" என்று மன்றாடி இருக்கிறார். தானாக முன்வந்து வெளிப்படையாகத் தன் தவறை ஒத்துக் கொள்ள அவரது 'கோ' இடம் கொடுக்கவும் இல்லை. அதைப் பற்றி நெருங்கியவர்களிடம் மட்டுமே கூறியிருக்கிறார். ஆனால் திட்டமிட்டு அதனை திராவிடக்காரர்கள் மக்களிடம் வெளிப்படுத்தாமல் மறைத்து வருகின்றனர். ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட காழ்ப்புகளை சித்தாந்தமாக்கி தமிழகத்தை இன ஒழிப்பு என்கிற ஆழ்ந்த சைக்கோத்தனமான மனநோய்க்குள் தள்ளி விட்டுவிட்டனர் என்பது புலனாகிறது.

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்...! ஜாதி ஒழிப்பு என்று துவங்குவோரால் தான் ஜாதித்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற திராவிடம் பேசுவோர்களை நம்பாமல் விலகி வாருங்கள்

ஆன்மீகமும் மனிதமும் மட்டுமே அடுத்த கட்ட சந்ததியினரை வாழ வைக்கும் என்பதை புரிந்து கொண்டு ஹிந்து என்கிற மனநிலையில் ஒன்று கூடுங்கள்.

ஒற்றுமையாய் இருப்போம்! பாரதம் காப்போம்!

No comments: