Friday, June 7, 2013

ஹிந்து சேவை அமைப்புகள் – ஓரு பார்வை

-   ஞானதேசிகன்



சேவை அமைப்புக்கள் என்றாலே பலருக்கும் வெள்ளைப்பாவாடை தரித்த கன்னியாயிஸ்திரிகளும் கிறிஸ்தவ அமைப்பினரும் மட்டுமே நினைவிற்கு வரும். சேவைக்காகவே பிறந்தவர்கள் அவர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டாகி இருக்கிறது. மீடியாக்கள், சினிமாக்கள், கதைகள் என பலவும் வெள்ளைப்பாவாடைக்காரர்களை தான் கருனைக்கடல் என காட்டி நம்மக்களை ஏமாற்றி வருகின்றன. கருனையின் மறு உருவம் அன்னை தெரசா என்று மேடைக்கு மேடை முழங்குவார்கள். ஆனால் இவர்கள் யாரும் எந்த விளம்பரமும் இல்லாமல் ஆடம்பர கருணை வேடங்கள் அணியாமல் சேவை செய்யும் மக்களைப் பற்றி பேசுவதில்லை, அப்படி யாருமிருப்பார்களா என்று தெரிந்து கொள்ளும் அக்கரை கூட இல்லாதவர்களாக இருப்பார்கள். இங்கே நாம் அத்தகைய சேவை அமைப்புகள் பற்றி கொஞ்சம் பார்க்கப் போகிறோம். 

இந்தியாவில் பல இடங்களில் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு, ஹிந்து சமுதாயத்தில் சேவை அமைப்புகள் இல்லை என்பது. மாற்று மதத்தவர்கள் மட்டுமே சேவை செய்கிறார்கள் எனக் கூறுவார்கள். இப்படி போகும் வாதம் கடைசியில் எப்படி முடியும் தெரியுமா? ஜாதி, பிராஹ்மணன், இத்யாதி, இத்யாதி. இதற்கும் மேல், ஹிந்து மதத்தவர்கள் கூட இதை பற்றி தெரியாமல், குறை கூறுவது. இதை போன்ற வெற்று கூச்சல்களை நாம் பலரும் தினமும் கேட்கிறோம். என்ன செய்வது??????? இன்றைக்கு ஒரு சேவை அமைப்பைப் பற்றிப் பார்ப்போம்.

அமர் சேவா சங்கம் – ஆயிகுடி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ளது ஆயிகுடி. இவ்வூரில் உள்ள பாலசுப்ரமணியர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு படி பாயசம் திருவிழா மிக பிரபலம்.

அமர் சேவா சங்கம் 1981ம் ஆண்டு ஆயிகுடியில் திரு.ராமகிருஷ்ணன் அவர்களால் ஆரம்பிக்கபட்டது. 1981ம் ஆண்டு உலக மாற்று திறனாளிகள் ஆண்டு. திரு.ராமகிருஷ்ணன் மற்றும் அவர் நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம். 1991ம் ஆண்டு திரு.சங்கரராமன் அவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தார். திரு.ராமகிருஷ்ணன் மற்றும் திரு.சங்கரராமன் இருவருமே மாற்று திறனாளிகள். இங்கு முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்மணி திருமதி சுமதி ஸ்ரீனிவாசன். இவர்களும் மாற்று திறனாளி ஆவார்.


திரு.ராமகிருஷ்ணன்



திரு.ராமகிருஷ்ணன் கடற்படையில் சேர்வதற்கு, நேர்முக தேர்வுக்கு செல்லும் போது முதுகுதண்டு வடத்தில் அடி பட்டது. பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சிகிச்சை அளித்தவர் திரு.அமர்ஜித் சிங் சஹால் அவர்கள். அவர் நியாபகமாக இந்த அமைப்புக்கு அமர் சேவா சங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது.

சங்கத்தின் பணிகள்:

  • மாற்று திறனாளிகள் மறுவாழ்வு
  • பள்ளிகள்
  • தங்கும் வசதி
  • மாற்று திறனாளிகளுக்கான சாதனங்கள்
  • வேலை வாய்ப்பு
  • வொகேஷனல் பயிற்ச்சி

திருமதி சுமதி ஸ்ரீனிவாசன் &  திரு.சங்கரராமன்


இந்த இயக்கம் மக்கள் நன்கொடை மூலமாக நடை பெருகிறது. பல்வேறு பணிகள் உள்ளன. ஆகவே, வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உடனே இந்த இயக்கங்களுக்கு உதவி செய்யுங்கள்.

தொடர்புக்கு:

அமர் சேவா சங்கம்
சுலோச்சனா கார்டன்ஸ்,
தபால் பெட்டி எண் – 001
தென்காசி சாலை,
ஆயிகுடி – 627852
திருநெல்வேலி மாவட்டம்.

இவர்களுடைய ஆண்டு அறிக்கை இவர்கள் இணைய தளத்தில் உள்ளது. படித்து பாருங்கள்…… அருமையான உழைப்பு….

இப்படி பட்ட இயக்கங்களை பற்றி மேலும் கட்டுரைகள் வரும்……….

படித்து விட்டு மறந்து விடாதீர்கள். இதை உங்கள் நண்பர்கள், உறவுகள் ஆகியோரிடம் சொல்லுங்கள். வழக்கம் போல் மறக்காதீர்கள். பின்பு புலம்பாதீர்கள்.


யூடியூபில் உள்ள காணொளி



No comments: