Sunday, October 13, 2013

கருக் முருக் நொறுக்ஸ்!


கல்லூரி முதல்வர் படுகொலை: 3 மாணவர்களையும் காவலில் எடுக்கிறது போலீஸ்!

செய்தி!

தூத்துக்குடி மாவட்டம், கீழ வல்லநாட்டில் உள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வரை கடந்த வியாழக் கிழமை 3 மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே வெட்டி கொலை  செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. - இது செய்தி.

இந்த கொலை அடங்காத மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்டித்ததால் ஆத்திரம் கொண்டு வெட்டிச்சாய்த்தனர் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட எக்ஸ்ட்ரீமான மனோநிலையில் மாணவர்கள் இருப்பது அதிர்ச்சியான சம்பவம் தான், இந்தக் கொலை ஞாயம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் இன்றைய பள்ளிகளும் கல்லூரிகளும் மாணவர்களுக்கு போதிப்பது என்ன? என்று ஆராய்ந்தால் ஒன்றுமில்லை. நல்லொழுக்கம் பண்புகள் போதிக்கும் கல்வி எதுவும் இல்லை. தமிழ் செய்யுளில் இருக்கும் நெறிமுறைப் பாடங்களைத் தவிற வேறு பாடங்கள் எதிலும் மனிதப்பண்பை வளர்க்கும் திட்டம் கொஞ்சமும் இல்லை. பாடத்திட்டங்கள் எல்லாம் பணம் சம்பாதிக்க என்பது ஒரு புறம் இருந்தாலும் கல்விக்கூடங்கள் கொள்ளைக்கூடங்களாகவே இருப்பது இன்னொரு கொடுமை. கொலை செய்த மாணவர்களில் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் இப்படிப்பட்ட கொள்ளையை வெளிப்படுத்தியது.

"5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். " - என கல்லூரி முதல்வர் மீது குற்றம் சாட்டுகிறான் இந்தக் கொலைகாரன். அப்படியெல்லாம் வாங்குவாங்களா? என கேட்டால் ஆம் வாங்குவார்கள்' என பலரிடமிருந்து பதில் பெற முடியும். பல தனியார் பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் பெற்றோர்களிடம் பணம் கறப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறன. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளாக இருந்தாலும் சரி, உயர்நிலை வகுப்பு மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தாமதமாக பள்ளிக்கு வந்தால் 50 ரூபாய் முதல் 100 வரை அபராதம் விதிக்கும் வழிபறிக்கொள்ளைக்கூடங்களாக இருக்கின்றன. இவர்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு நேரத்திற்கு வர வேண்டும் என்கிற நோக்கத்தை விட தாமதமாக வருபவர்களிடம் பணம் கறக்க வேண்டும் என்பது தான் முதல் நோக்கமாக இருக்கிறது. மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிப்பது இவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான். 

தட்டிக்கேட்க ஆளில்லாமல் இப்படி பள்ளிக்கூடங்கள் கொள்ளைக்கூடங்களானால் அங்கே கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் தான் உருவாவார்கள் என்பது நிச்சயம். 

***

வாய்க்கொழுப்பால் ஹிந்துக்களை ஹிம்சை செய்வது என்பதை தொழிலாகவே செய்துவரும் க மல ஹாசன் மீண்டும் வாய்திறந்து மலத்தைக் கக்கி இருக்கிறார். வைணவ பக்தரான ராமானுஜரை ராமசாமி நாயக்கருடன் ஒப்பிட்டுப் பேசி ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வேலையை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார்.


" ராமானுஜரின் தம்பிதான் பெரியார். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போதும் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன்."

என்றெல்லாம் வாய்வழியாக மலம் கொட்டியிருக்கிறார். இவருக்கு யாரை வேண்டுமானாலும் பிடிக்கட்டும். ஆனால் யாரோடு யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லாதவராக இருந்து பிறருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? 

மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் எதிர்ப்பேன் என்று கூறும் இந்த முற்போக்கு மல ஹாசன் கிறிஸ்தவ இஸ்லாமிய மூடநம்பிக்கையை பகடி செய்து எத்தனைப்படத்தில் எதிர்த்திருப்பார்? அல்லது பேசியிருப்பார்? சாமியார் வாயில் லிங்கம் வருவது போன்ற காட்சியை எடுக்கத்தெரிந்த க மலஹாசனுக்கு ஜபம் செய்தால் ஊமைக்கு வாய் வரும் குருடனுக்கு பார்வை வரும் என்று மேடை போட்டு மத வியாபாரம் செய்பவர்களை பகடி செய்து படம் எடுக்கத் தெரியாதது ஏன்? அது மட்டுமில்லாமல் ஈன வெ ராவை ராமானுஜரின் இளைய தம்பி என்கிறார். எந்த வகையில் தம்பியாம்? ஒழுக்கத்தையும் பக்தியையும் போதித்த ராமானுஜர் எங்கே, விபச்சாரிகளுடன் கூத்தடித்த ஈ வெ ரா எங்கே?

கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்க வேண்டும் என கூறினார் என்பதற்காக ராமானுஜரை ராமசாமி நாயக்கருடன் ஒப்பிட்டுவிடுவதா? அதே பேட்டியில் க மல ஹாசன் "சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா?" என்று கேட்கிறார். அப்படித்தானே இவர் ராமானுஜரையும் ராமசாமி நாயக்கரையும் பார்த்திருக்க வேண்டும்?

இந்த க மலஹாசன் வாந்தி எடுப்பதில் இருக்கும் அதிமேதாவித்தனமான பிதற்றல்களின் அர்த்தங்களை மலப்புழுக்களால் மட்டுமே கொண்டாட முடியும்!

***

"1937 ல் ராஜாஜி சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த போது, 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று பெரியார் கோஷம் எழுப்பினார். தமிழ்நாடு பிரிய வேண்டும் என்று மட்டும் தான் சொன்னார். அப்போது சென்னை ராஜதானியில் இருந்து வந்த கன்னடர்களும், மலையாளிகளும், ஆந்திரர்களும், 'தமிழ்நாடு தமிழருக்கே என்றாகி விட்டால் எங்கள் கதி என்ன ஆவது என கேட்டார்களாம். உடனே பெரியார் தம் கோஷத்தை மாற்றிக் கொண்டு, 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று சொன்னார். இப்படித்தான் திராவிட்ட நாடு கோரிக்கை பிறந்தது." 

- கண்டுகொள்வோம் கழகங்களை புத்தகத்திலிருந்து, தியாகி ர. ஜெபமணி

இதனால் தெரிந்து கொள்ளப்படுவது என்னவென்றால் ராமசாமி நாயக்கர் தமிழரும் இல்லை. தமிழருகளுக்காக ராமசாமி நாயக்கர் குரல் கொடுக்கவுமில்லை, திராவிடர் என்கிற வார்த்தை தமிழர்களைக் குறிக்கும் வார்த்தையும் இல்லை.

No comments: