Showing posts with label நொறுக்ஸ். Show all posts
Showing posts with label நொறுக்ஸ். Show all posts

Sunday, October 13, 2013

கருக் முருக் நொறுக்ஸ்!


கல்லூரி முதல்வர் படுகொலை: 3 மாணவர்களையும் காவலில் எடுக்கிறது போலீஸ்!

செய்தி!

தூத்துக்குடி மாவட்டம், கீழ வல்லநாட்டில் உள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வரை கடந்த வியாழக் கிழமை 3 மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே வெட்டி கொலை  செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. - இது செய்தி.

இந்த கொலை அடங்காத மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்டித்ததால் ஆத்திரம் கொண்டு வெட்டிச்சாய்த்தனர் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட எக்ஸ்ட்ரீமான மனோநிலையில் மாணவர்கள் இருப்பது அதிர்ச்சியான சம்பவம் தான், இந்தக் கொலை ஞாயம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் இன்றைய பள்ளிகளும் கல்லூரிகளும் மாணவர்களுக்கு போதிப்பது என்ன? என்று ஆராய்ந்தால் ஒன்றுமில்லை. நல்லொழுக்கம் பண்புகள் போதிக்கும் கல்வி எதுவும் இல்லை. தமிழ் செய்யுளில் இருக்கும் நெறிமுறைப் பாடங்களைத் தவிற வேறு பாடங்கள் எதிலும் மனிதப்பண்பை வளர்க்கும் திட்டம் கொஞ்சமும் இல்லை. பாடத்திட்டங்கள் எல்லாம் பணம் சம்பாதிக்க என்பது ஒரு புறம் இருந்தாலும் கல்விக்கூடங்கள் கொள்ளைக்கூடங்களாகவே இருப்பது இன்னொரு கொடுமை. கொலை செய்த மாணவர்களில் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் இப்படிப்பட்ட கொள்ளையை வெளிப்படுத்தியது.

"5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். " - என கல்லூரி முதல்வர் மீது குற்றம் சாட்டுகிறான் இந்தக் கொலைகாரன். அப்படியெல்லாம் வாங்குவாங்களா? என கேட்டால் ஆம் வாங்குவார்கள்' என பலரிடமிருந்து பதில் பெற முடியும். பல தனியார் பள்ளிக்கூடங்கள் இப்படித்தான் பெற்றோர்களிடம் பணம் கறப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறன. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளாக இருந்தாலும் சரி, உயர்நிலை வகுப்பு மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தாமதமாக பள்ளிக்கு வந்தால் 50 ரூபாய் முதல் 100 வரை அபராதம் விதிக்கும் வழிபறிக்கொள்ளைக்கூடங்களாக இருக்கின்றன. இவர்களுக்கு மாணவர்கள் பள்ளிக்கு நேரத்திற்கு வர வேண்டும் என்கிற நோக்கத்தை விட தாமதமாக வருபவர்களிடம் பணம் கறக்க வேண்டும் என்பது தான் முதல் நோக்கமாக இருக்கிறது. மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிப்பது இவர்களுக்கு இரண்டாம்பட்சம் தான். 

தட்டிக்கேட்க ஆளில்லாமல் இப்படி பள்ளிக்கூடங்கள் கொள்ளைக்கூடங்களானால் அங்கே கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் தான் உருவாவார்கள் என்பது நிச்சயம். 

***

வாய்க்கொழுப்பால் ஹிந்துக்களை ஹிம்சை செய்வது என்பதை தொழிலாகவே செய்துவரும் க மல ஹாசன் மீண்டும் வாய்திறந்து மலத்தைக் கக்கி இருக்கிறார். வைணவ பக்தரான ராமானுஜரை ராமசாமி நாயக்கருடன் ஒப்பிட்டுப் பேசி ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வேலையை மீண்டும் நிகழ்த்தியிருக்கிறார்.


" ராமானுஜரின் தம்பிதான் பெரியார். பெரியாரையும் பிடிக்கும். மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் கண்டிப்பேன். பகுத்தறிவையும்,முற்போக்கு சிந்தனைகளையும் எப்போதும் போற்றுவேன். இன்னும் சொல்லப்போனால் பெரியார் செய்ததைத்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் செய்தார். ஆதலால் பெரியாரை ராமானுஜரின் இளைய தம்பி என்பேன்."

என்றெல்லாம் வாய்வழியாக மலம் கொட்டியிருக்கிறார். இவருக்கு யாரை வேண்டுமானாலும் பிடிக்கட்டும். ஆனால் யாரோடு யாரை ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லாதவராக இருந்து பிறருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? 

மூட நம்பிக்கை எந்த மதத்தில் இருந்தாலும் எதிர்ப்பேன் என்று கூறும் இந்த முற்போக்கு மல ஹாசன் கிறிஸ்தவ இஸ்லாமிய மூடநம்பிக்கையை பகடி செய்து எத்தனைப்படத்தில் எதிர்த்திருப்பார்? அல்லது பேசியிருப்பார்? சாமியார் வாயில் லிங்கம் வருவது போன்ற காட்சியை எடுக்கத்தெரிந்த க மலஹாசனுக்கு ஜபம் செய்தால் ஊமைக்கு வாய் வரும் குருடனுக்கு பார்வை வரும் என்று மேடை போட்டு மத வியாபாரம் செய்பவர்களை பகடி செய்து படம் எடுக்கத் தெரியாதது ஏன்? அது மட்டுமில்லாமல் ஈன வெ ராவை ராமானுஜரின் இளைய தம்பி என்கிறார். எந்த வகையில் தம்பியாம்? ஒழுக்கத்தையும் பக்தியையும் போதித்த ராமானுஜர் எங்கே, விபச்சாரிகளுடன் கூத்தடித்த ஈ வெ ரா எங்கே?

கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவரை அனுமதிக்க வேண்டும் என கூறினார் என்பதற்காக ராமானுஜரை ராமசாமி நாயக்கருடன் ஒப்பிட்டுவிடுவதா? அதே பேட்டியில் க மல ஹாசன் "சேகுவேராவும் ஆயுதம் ஏந்தினார். பின்லேடனும் ஆயுதம் ஏந்தினார். அதனால் இருவரையும் போராளி என்று சொல்லிவிட முடியுமா?" என்று கேட்கிறார். அப்படித்தானே இவர் ராமானுஜரையும் ராமசாமி நாயக்கரையும் பார்த்திருக்க வேண்டும்?

இந்த க மலஹாசன் வாந்தி எடுப்பதில் இருக்கும் அதிமேதாவித்தனமான பிதற்றல்களின் அர்த்தங்களை மலப்புழுக்களால் மட்டுமே கொண்டாட முடியும்!

***

"1937 ல் ராஜாஜி சென்னை ராஜதானியின் பிரதமராக இருந்த போது, 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று பெரியார் கோஷம் எழுப்பினார். தமிழ்நாடு பிரிய வேண்டும் என்று மட்டும் தான் சொன்னார். அப்போது சென்னை ராஜதானியில் இருந்து வந்த கன்னடர்களும், மலையாளிகளும், ஆந்திரர்களும், 'தமிழ்நாடு தமிழருக்கே என்றாகி விட்டால் எங்கள் கதி என்ன ஆவது என கேட்டார்களாம். உடனே பெரியார் தம் கோஷத்தை மாற்றிக் கொண்டு, 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று சொன்னார். இப்படித்தான் திராவிட்ட நாடு கோரிக்கை பிறந்தது." 

- கண்டுகொள்வோம் கழகங்களை புத்தகத்திலிருந்து, தியாகி ர. ஜெபமணி

இதனால் தெரிந்து கொள்ளப்படுவது என்னவென்றால் ராமசாமி நாயக்கர் தமிழரும் இல்லை. தமிழருகளுக்காக ராமசாமி நாயக்கர் குரல் கொடுக்கவுமில்லை, திராவிடர் என்கிற வார்த்தை தமிழர்களைக் குறிக்கும் வார்த்தையும் இல்லை.

Sunday, February 17, 2013

கருக் முருக் நொறுக்ஸ்!

படத்தின் பெயர்: மடிசார் மாமியும் மதன மாமாவும்

விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களின் பொதுவான உணவுப்பழக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கமல் படமாக்கினார் என்று பிராமணர்கள் புகார் கொடுத்தார்கள். இப்போது அதே பாணியில் பிராமணர்களின் உணர்வுகளை திட்டமிட்டு புண்படுத்தும் ஒரு சாடிஸ மனோபாவத்தில் வெளிவந்திருக்கிறது இந்த விளம்பரம்.

Tide -  Soap விளம்பரம். இதில் துணியை வெளுப்பது பற்றி தானே காட்ட வேண்டும் . ஆனால் காட்டியதெல்லாம் பிராமண பாஷை பேசும் பெண் சிக்கன் சமைப்பதைத்தான். பிராமண பாஷையில் இந்தப் பெண் 'நானே சிக்கன் சமைக்க கஷ்டப்பட்டுண்டு இருக்கேன், இதுல கரை வேற' என்று மசலா கரையை சேலையில் காட்டுகிறாள். கடைசியில் 'இவ்ளவு கஷ்டத்துக்கு நடுவுல Non Veg சமைக்க கத்துண்டேன்னா பாருங்கோளேன்' என்று முடிக்கிறாள். டைட் விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? பிராமணர்களிடம் சிக்கனை பிரபலப்படுத்த வருகிறதா? அல்லது சோப்பு விற்க வருகிறதா? இதற்கெதிராக புகார் கொடுத்தால் சோப்பு கம்பெனிக்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பது இவர்களது கணக்கு என தோன்றுகிறது.

முஸ்லீம்கள் பற்றி படம் எடுத்தவரை ஓட ஓட விரட்டியதைப் பார்த்த பிறகும் கூட, ஏன் என்றும் கேட்காமல் ஒதுங்கிப் போக்கும் பிராமணர்களை மீண்டும் மீண்டும்  வம்புக்கிழுக்கும்   இந்த மீடியா வீரர்களை நினைத்தால் அவர்கள் மீது பரிதாபம் உண்டாகிறது.  பிராமணர்கள் மீதும் தான்!

இதே ரீதியில் பிராமணர்களின் கலாச்சார உடையணிந்து கொண்டு ஆபாசமாக ஒரு படம் வெளியாகப் போகிறது. படத்தின் பெயர் மடிசார் மாமியும் மதன மாமாவும். என்ன செய்வார்கள் பிராமணர்கள்?

வெஸ்ட் மாம்பலம் பக்கம் மதமாற்றம் சுடச்சுட நடந்து வருகிறதாம். அதிலும் பிராமணர்களை மாற்றுவது தான் முதல் இலக்காம். வெளியில் பெரிதும் தெரியாத பெரிதும் பேசப்படாமல் வறுமையில் தத்தளித்துவரும் பெரிய பிராமணர் கூட்டம் பெரிய அளவில் மதம்மாறிடும் அபாயம் தென்படுகிறது. கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் ஊட்டி வளர்க்கும் திராபை திராவிட கட்சி முதல்வர்கள் ஹிந்துக்கள் மீது நடந்து வரும் திட்டமிட்ட தாக்குதலை கண்டிக்காவிட்டால் ஹிந்துக்கள் திராவிடக் கட்சிகளை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அடியோடு புறக்கணித்து தோற்கடிக்க வேண்டும். இதனை ஒவ்வொருவரும் சத்தியப்பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


விஸ்வரூபம் பட விவகாரத்தில் பாரதமே மூழ்கிவிட்ட போது, ஒன்னரை லட்சம் கோடிக்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க விண்ணப்பம் கொடுத்த கடலை வியாபாரியை தமிழகம் மறந்தே விட்டது! எங்கெங்கே எப்படி செட்டில் மெண்ட் ஆச்சோ! ஆனாலும் மறதி ஜாஸ்திப்பா நம்மாளுங்களுக்கு!


மேலே காணும் படத்தைப் பாருங்கள். தீண்டாமை ஒழிப்புத் திருமணமாம். இதற்காக இவர்கள் ஒரு வன்னியர் பையனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் நிக்காஹ் செய்து வைத்திருக்கிறார்கள். 

இணையத்தில் உலவிய செய்தி இது: 

"கடந்த 5ம் தேதி செவ்வாய்க்கிழமை திராவிட விடுதலைக் கழகத்தினரால் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீண்டாமையை ஒழிக்கும் விதமாக ஒரு வண்ணிய இளைஞரான மாணிக்கத்திற்கும் இசுலாமிய சமயத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் யுவதிக்கும் நடந்த புரட்சி திருமணத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் திராவிட விடுதலைக்கழகத்தின் கொளத்தூர் மணி ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். இந்நிலையில் மணமகன் மாணிக்கம் கடவுள் மறுப்பை துறந்து இஸ்லாத்தை தழுவி மாலிக் ஆக மாறியுள்ளார். "

இணையத்தில் உலவிய இந்த செய்தி உண்மையெனில், இந்த செய்தியில் ரெண்டு கேவலங்கள் அடங்கியுள்ளது. முதல் கேவலம் கடவுள் மறுப்புபைத் துறந்து ஒருவர் இஸுலாத்துக்கு மாறினார் என்பது. இதில் கருப்புச்சட்டையின் வெற்றி என்ன என்பது முதல் கேள்வி. மனுஸ்மிருதியை எரிக்க வேண்டுமென்றால் எல்லோரும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என இந்த திராபை திராவிட பகுத்தறிவு சிங்கங்கள் சொல்கிறதா என்று தெரியவில்லை. ஆக கடவுள் மறுப்பு செத்துப் போனது. ஹிந்து மனுஸ்மிரிதிக்குப் பதிலாக அரபி மனுஸ்மிரிதியை ஆதரிக்கும் அவலமும் நடந்துவிட்டது. இதற்குப் பெயர் தான் பகுத்தறிவாமாம். இப்படி ஹிந்துக்களை மதம் மாற்றும் வேலையைச் செய்யுங்கள் என்று தான் ராமசாமி நாயக்கர் வழிகாட்டினாரா?

இதை விட இன்னொரு கேவலம் கலப்புத் திருமணம் என்ற பெயரில் நடைபெற்ற முஸ்லீம் நிக்காஹ். வன்னியர் பையனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் திருமணம் நடந்தால் அது கலப்புத் திருமணம். ஆனால் வன்னியர் பையனை முஸ்லீமாக மாற்றி ஒரு முஸ்லீம் பையனுகும் அதே மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்க்கும் மணம் முடிப்பது எந்த விதத்தில் கலப்புத் திருமணம் ஆகிறது

ஒரு வேளை பிரியானிக்கு ஆசைப்பட்டு ஹிந்துப் பையனை முஸ்லீமாக மதம் மாற்றி முஸ்லீம்களுக்கு மதம் மாற்ற ப்ரோக்கராக வேலை செய்வதற்குப் பெயர் தான் கலப்புத் திருமணமா அல்லது பகுத்தறிவா? இது தான் ராமசாமி நாயக்கரின் வழிகாட்டுதலா?

பகுத்தறிவுக் குஞ்சுமணிகள் தான் பதில் சொல்ல வேண்டும்!



முக நூலில் உலவிய ஒரு படம். இதனை ஸ்கேன் செய்து போட்ட அந்த முகம் தெரியாத முதல் நபருக்கு நன்றி! பிரச்சனை என்னன்னா, இதோட அடுத்த பக்கத்தைக் கானோம்! யாருக்காவது கெடச்சா கொஞ்சம் ஷேர் பண்ணுங்கப்பு!

கஸ்ட்டு 15 பாரதம் இந்தியாவாக மாறி சுதந்திரம் பெற்ற அன்று அந்த கொண்டாட்டத்தில் காந்தி கலந்து கொள்ள வில்லை என்பது தெரியுமா? காந்தியார் கல்கத்தாவில் ஏற்பட்டிருந்த மதக்கலவரத்தின் சூட்டைத் தணித்து அமைதியைத் திணிக்க அங்கே யாத்திரை மேற்கொண்டிருந்தார். காங்கிரஸ்காரர்கள் முதலில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் , பிறகு கல்கத்தா போகலாம் என்று வற்புறுத்தியதைக் கூட புறக்கனித்து, சுதந்திரத்திற்கான வாழ்த்துச் செய்தியை கூட வெளியிடாமல்  கல்கத்தாவில் அமைதி முயற்சியை ஏற்படுத்த சென்றுவிட்டார். மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டார் என்பது செய்தி.
                  
திரு. மலர் மன்னன்

காந்தியின் கல்கத்தா யாத்திரை பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை திரு. மலர்மன்னன் (சமீபத்தில் மறைந்த அவருக்கு எமது அஞ்சலிகள்) அவர்களது கட்டுரையில் இதுவரை படித்திராதவர்கள் கொஞ்சம் படிக்கலாம். காந்தி எப்படி ஹிந்துக்களை மட்டும் அமைதிகாக்கச் செய்து முஸ்லீம்களை கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் விட்டார் என்கிற மறுபக்கத்தை எடுத்துச் சொல்லும் கட்டுரையாக இதனை பார்க்கமுடிகிறது.

சில வரிகள்:


"நவகாளியில் ஹிந்துக்கள் மீதான படுகொலைத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவில்தான் இருந்தார். அங்கு அவர் சமரசப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது நவகாளியில் ஐம்பதாயிரத்திலிரிருந்து எழுபதாயிரம் வரையில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்று நவகாளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை இருபது முதல் இருபத்தைந்து லட்சம் வரை. அக்டோபர் மாதம் முழுவதும் முகமதியரின் தாக்குதலுக்குப் பலியான பிறகு வெளி மாவட்ட ஹிந்துக்களின் துணையோடு நவகாளி மாவட்ட ஹிந்துக்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கத் தயாரானபோது, பிரதமர் சுரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நவகாளி வந்து சேர்ந்தார், காந்திஜி. கிராமம் கிராமமாகப் பாத யாத்திரை சென்று ஹிந்துக்களை சமாதானப் படுத்தலானார். முகமதியர் தாக்கினாலும் ஹிந்துக்கள் திருப்பித் தாக்கலாகாது. அஹிம்சையே ஹிந்துக்களின் ஆயுதம். முகமதியரால் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்களை ஹிந்து இளைஞர்கள் மணம் செய்துகொள்ளவேண்டும். வலுக்கட்டாயமாக முகமதியராக மதம் மாற்றப்பட்டவர்கள் விரும்பினால் திரும்பவும் ஹிந்துக்களாகிவிடலாம். அவர்களை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் காந்திஜி மக்களுக்குச் சொன்ன அறிவுரைகள். தினமும் மாலையில் பிரார்த்தனை கூட்டம் நடத்தி சர்வ சமய வேதங்களை ஓதச் செய்வார். குறிப்பாகக் குரானிலிருந்து அதிக வரிகள் படிக்கச் செய்து முகமதியரை அமைதி வழிக்குத் திருப்ப முயற்சி செய்வார்."
மேலும் படிக்க...!

Sunday, December 30, 2012

கருக் முருக் நொறுக்ஸ்!


அஞ்சலி!
கொடூரமாக கொல்லப்பட்ட இந்தப் பெண்ணுக்கு நடந்த கொடுமை போல வேறு யாருக்கும் இனி நடக்காமல் இருக்க வேண்டும். காவல் துறையும் சட்டமும் அதற்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மனிதர்கள் உருவில் கொடிய மிருகங்கள் நடமாடும் உலகில் அப்பாவிப் பெண்கள் சமூகத்தின் மீது பழி போடாமல் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்நிகழ்ச்சி உணர்த்துகிறது.

டெல்லி வாழ் நண்பர் மூலமாக ஒரு விஷயம் கேள்விப்பட நேர்ந்தது. அதாவது டெல்லி மாநகரக்காவல் துறை முழுக்க முழுக்க 'உள்துறை அமைச்சரின்' கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்றார். அதனால் முதல்வர் நேரடியாக தலையிட்டால் கூட அமைச்சரே கேட்கவில்லை இவருக்கென்ன வேலை என்று காவல்துறை மேலதிகாரிகள் மெத்தனமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

ஒரு நாட்டின் தலைநகரம், அத்தனை உயர் மட்ட ஆட்சியாளர்களும் குடியிருக்கும் பகுதியில் இந்தளவு அட்டூழியம் நடக்கிறது என்றால் மேல்மட்டத்திலிருந்தே அவைகள் வெளிக்கு வெளி தெரியாமல் நடந்து வருகிறது என்றே தோன்றுகிறது. அதனால் தான் 'இவர்களா நம்மைக் கேட்கப் போகிறார்கள்?' என்று சமூக விரோதிகள் அத்தகைய சூழலை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அதைப் பார்த்து சில ஒழுக்கம் கெட்ட மிருகங்கள் நம்மளும் இதே போல செய்யலாமே என்று கொடூரங்களை நிகழ்த்தி விடுகிறார்கள் போல!.

மிகக்கடுமையான கண்காணிப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பும் டெல்லி மட்டுமல்ல நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் தேவையாகிறது.

இது ஒரு புறம் இருக்க, ஓரிரு தினங்களுக்கு முன்பாக கனிமொழி சுப்பையா என்பவனின் பாலியல் கொலையை கண்டித்து ஒரு தெரு முனைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

இது செய்தி:
"தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகள் புனிதா (13). பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் பாலியல் பலாத்கார செய்து படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியாச்சி அருகேயுள்ள பாறைகுட்டத்தை சேர்ந்த சின்னத்துரை மகன் சுப்பையா(36) என்பவரை கைது செய்தனர்."
அதே நேரம் இந்த வார நக்கீரனில் (25-12-2012) பாலியல் கொடுமை செய்த பாதிரியார் பற்றிய செய்தி வந்திருந்தது. பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் பற்றிப் பேசிய எந்த அரசியல் தலைவரும், தொலைக்காட்சி மீடியாக்களும் இந்த விஷயத்தை கையிலெடுத்துப் பேசவில்லை.

நக்கீரனில் வந்திருந்த விபரங்களில் சில...

கும்பகோனம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இருக்கும் இருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரியின் இயக்குநரும் பாதிரியாருமான மரியபிரான்சிஸை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மானவிகள் நடத்திய போராட்டத்திற்கு முன்நின்றவர் மாணவி திருத்துறைப்பூண்டி ராஜலட்சுமி. அந்த ராஜலட்சுமி தான் "என் மரணத்திற்குப் பிறகாவது அந்த ஆபாச பாதிரியாரிடமிருந்து மாணவிகளுக்கு நீதி கிடைக்கட்டும்" என்று உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.


"போன பொங்கலுக்கு லீவு விடாமல் மதப்பிரச்சாரத்திற்காக வேளாங்கண்ணிக்கு அழைத்துப் போனார்கள். அங்கே பாதர் மரியபிரான்ஸிஸ் பாக்கெட் தண்ணீரை மார்பில் பீச்சியடித்துவிட்டு 'ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கா?" என்று ரெட்டை அர்த்தத்தில் கிண்டலடித்தார்....."

"...திருமணத்திற்கு முன்னால் செக்ஸ் வைத்துக் கொண்ட மாணவிகள் எல்லாம் கையைத் தூக்குங்கள்' என்று ப்ரேயரில் பகிரங்கமாகக் கேட்டு எங்களைத் தலை குனிய வைத்தவர் அவர்"...

இப்படி போகிறது அந்தச் செய்தி. பாலியல் வன்கொடுமை பற்றி பரபரப்பாக அனைவரும் விவாதங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஒரு பாதிரியார் மரியபிரான்ஸிஸ் என்பவனின் பாலியல் வன்முறை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட  செய்தி பற்றி ஏன் யாரும் விவாதிக்கவில்லை எனத் தெரியவில்லை. பாதிரியாகள் செய்தால் அது பாலியல் வன்கொடுமை வரிசையில் வராதா அல்லது அப்படி ஒரு சம்பவத்தால் அவமானப்பட்ட பெண் தானே தற்கொலை செய்து கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாதா? சுப்பையா பற்றி பேசத்தெரிந்த கனிமொழிக்கு ஏன் பாதிரியார் மரியபிரான்ஸிஸ் பற்றி பேசத்தெரியவில்லை?

செலக்ட்டிவ் அம்னீஷியா?

தொடர்புடைய பழைய செய்தி!

பாதிரியார்கள் பற்றிய சம்பவமெல்லாம் தினக்கதை தானே..ஸ்பெஷலாக ஒன்றுமில்லையே என்று விட்டு விட்டார்கள் போல.

இனி இவ்வார துக்ளக்கில் திரு.சுப்பு எழுதும் திராவிட மாயை பகுதியிலிருந்து சில சுவாரஸ்யங்களைப் பார்ப்போம்:


திரு.சுப்பு

"பிரமணர்களுக்குத் தமிழ் மீது மரியாதை கிடையாது. தமிழர் மீது துவேஷம் உண்டு" என்று பிரசாரம் செய்தார் ஈ.வெ.ரா." ஆனால்...

"காஞ்சிபுரத்தில் இருந்த தன்னுடைய மிகப்பெரிய வீட்டை பெண்களுக்கான பள்ளிக்கூடம் நடத்துவதற்காக நன்கொடையாகக் கொடுத்தார் ஒரு பிராமணர். நூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்த எஸ்.எஸ்.கே.வி. பள்ளியில் 7000 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்."

"தமிழ் இலக்கண இலக்கியங்களை மனப்பாடமாக வைத்துக் கொள்ளும் மரபு தமிழில் இருந்து வந்துள்ளது. கோபாலய்யர் இந்த மரபின் இறுதிக் கண்ணி என்று துணிந்து கூறலாம்.. 'பிராமணருக்குத் தமிழபிமானம் கிடையாது' என்ற ஈ.வெ.ரா. கட்சியின் வாதங்களை தவிடு பொடியாக்க கோபாலய்யரின் உழைப்பால் உருவான 'தமிழ் இலக்கணப் பேரகராதி' யின் பதினேழு தொகுதிகளே போதும். தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த நூல் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது."

- (02.01.2013) துக்ளகில் திராவிட மாயை; திரு. சுப்பு



கொஞ்சம் வரலாறு:

1972 - ல் எம் ஜி ஆரின் பேட்டியை தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளில் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

நிருபர்: தி.மு.க. மந்திரிசபை கவிழ்ந்து விடுமா?

எம்.ஜி.ஆர்: கவிழ்ந்தால் ஆச்சரியம் இல்லை.

நிருபர்: தமிழ்நாட்டில் இப்போது நிலைமை எவ்வாறு உள்ளது?

எம்.ஜி.ஆர்: என் கட்சிக்காரர்கள் தாக்கப்படுகிறார்கள். பீதி நிலைமை நீடிக்கிறது.

நிருபர்: தமிழ் நாட்டில் உங்களுக்கு எவ்வளவு ஆதரவு?

எம்.ஜி.ஆர்: 1000 க்கு 999 பேர் என் பக்கம். ஒருவர் தி.மு.க பக்கம்.

நிருபர்: இவ்வளவு பலம் பொருந்திய நீங்கள் ஏன் அவர்கள் (தி.மு.க) தாக்குவதாகப் புகார் செய்கிறீர்கள்?

எம்.ஜி.ஆர்: அந்த 1000 பேரில் ஒருவர், ஆட்களுடன் வந்து தாக்குகிறார்கள்.


Saturday, November 24, 2012

கருக் முருக் நொறுக்ஸ்!



பதவிக்காகவும் கூட்டனிக்காகவும் கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தவர்கள் இப்போது மாறி மாறி குற்றம் குறை சொல்லிக் கொள்கிறார்கள். முதுகு ஸ்டாண்டில் கத்தியை ஒளித்து வைத்துக்கொண்டு, முகமூடி போட்டு கொண்டு பழகினாலும் சுயரூபம் வெளிப்படாமல் போகுமா என்ன?

எப்டி தான் சிரிக்க முடியுதோ!!?

வாடகைக் கட்டிடத்தில் 'பிராமணாள் ஹோட்டல்' என்ற பெயரில் கடை நடத்திக்கொண்டு, பெயரை மாற்ற முடியாது என்று 'தில்'லாக நின்றவரை, அந்தக் கட்டிடத்திற்கு சொந்தக்காரரை மிரட்டி கடையை காலி பண்ண வைத்து விட்டார்களாம். சொந்தக் கடை வாங்கியாவது அதே பெயரில் கடை நடத்துவேன் என்று சபதம் ஏந்திச் சென்றிருக்கிறாராம் ஹோட்டல்காரர். எனக்குத் தெரிந்து ஜாதியை ஒழிக்கிறேன் என்று கூத்தாடுபவர்களால் தான் ஜாதி பிடிவாதமாக நிலை நிறுத்தப்படுகிறது என்று நினனக்கிறேன்.


சில விஷயங்களை பேசாமல் விட்டாலே காலச்சக்கரத்தில் காணாமல் போகும். பிராமணர்களில் பல பிரிவுகள் உண்டு. 'சோழியர்' என்கிற பிரிவு அநேகமாக இப்போது சத்தமில்லாமல் காணாமல் போய்விட்டது. "சோழியன் குடுமி சும்மா ஆடுமா?" என்கிற பழமொழியே அந்தப் பிரிவினரை அதிலிருந்து விலகச் செய்துவிட்டதோ என்னவோஅதைப்பற்றி யாரும் பேசுவதும் இல்லை. அதனால் கானாமல் போன இனப்பட்டியலில் அப்பிரிவைக் கூடச் சேர்த்துவிடலாம். ஜாதிகளும் இப்படி காலத்தால் கரைந்து போகக்கூடும். ஒரு சிலர் பேசாமல் இருந்தால்...! முடியுமா

தினமலரில் ஒரு செய்தி படித்த ஞாபகம்! கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள் என்ற தலைப்பில். இதற்கு வன்னியர்கள் தரப்பிலிருந்து தினமலருக்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

**. தமிழகத்தின் மூவேந்தர்களின் ஆட்சிக்கு பின், கவுண்டர்களை, "நாட்டுக் கவுண்டர்' எனவும், வன்னியர்களை, "வன்னியக் கவுண்டர்' என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கால மாற்றத்தின் காரணமாக, பெருந்தாளி கவுண்டர், சிறுதாளி கவுண்டர் என, கிராமங்களில் நடைமுறைக்கு ஏற்ப அழைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல், நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழும் கவுண்டர்கள் மட்டுமே இன்றளவும், "நாட்டுக் கவுண்டர்' என அழைக்கப்படுகின்றனர்.**


இப்படி பல்வேறு குழப்பங்களுடன் உலாவரும் ஜாதியினை மக்களே ஒரு கட்டத்தில் தங்களைச் சுற்றி இருக்கும் சமூகச் சூழலைப் பொறுத்து பழைய ஜாதிகளை மாற்றி புதிய ஜாதிகளை எடுத்துக் கொண்டு ஒன்றோடொன்றாக கலந்து காணாமல் போவார்கள். ஆனால் இந்த கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் மாற்றங்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலே போதும். பல ஜாதிகள் காலப்போக்கில் கானாமல் போய்விடும். இது போன்ற நிகழ்வுகள் பௌதிக விதிப்படி ஒத்துப்போகக்கூடியவை. அதாவது (Energy) சக்தியை யாரும் ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. ஆனால் ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும். அதே தியரி தான் ஜாதிகளுக்கும். ஜாதிகளை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது. ஒன்று இன்னொன்றாக மாறலாம். ஏற்றத்தாழ்வுகள் அதனதன் சக்திக்குத் தகுந்தாற்போல காலச்சூழலுக்குத் தகுந்தாற்பொலவும் இடம் மாறும் அவ்வளவே!

இனி ஒரு அதிசயத்தைப் பற்றி பார்ப்போம். அனுமார் கடல் கடந்து லங்கைக்குச் செல்லும் போது தன் உயரத்தை பெரிதாக ஆக்கிக் கொண்டார் என்று படித்திருப்போம். அதைப் பற்றி ஏதோ அதீதமான கற்பனை அல்லது வெறும் இதிகாசக் கதை என்றும் சாத்தியமில்லாதது என்றும் நாம் நினைக்கலாம். டேனியல் டக்ளஸ் ஹியூம் என்பவரைப் பற்றி மதன் தனது 'மனிதனும் மர்மங்களும்' என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார். அதில்...



"ஹ்யூம் ஒரு சுவர் ஓரமகப் போய் நின்று கொண்டு தன் உயரத்தை அளக்கச் சொன்னார். ஆராய்ச்சியாளர்கள் ஸ்கேல் கொண்டுவந்து அவரை மாறி மாரி அளந்தார்கள். அவர் உயரம் கரெக்டாக ஐந்தடி பத்து அங்குலம். பிறகு அத்தனை பேர் முன்னிலையிலும் மூச்சை இழுத்துக் கண்களை மூடிக்கொண்டார் ஹ்யூம். ஆச்சர்யம்..மெல்ல மெல்ல அவரது உயரம் அதிகமானது! மீண்டும் ஓடிச்சென்று அவர் உயரத்தை அளந்தார்கள். இப்போது ஹ்யூம் ஆறடி ஆறு அங்குலம் இருந்தார். அவர் பாதங்கள் நன்கு தரையில் பதிந்திருந்தன. இது எப்படி சாத்தியம்? விஞ்ஞானிகள் வாய்பிளந்து நின்றார்கள்." என்று எழுதுகிறார். விஞ்ஞானத்திற்கு விளங்காத மெய்ஞானம் எப்போதும் உண்டு. அதனை அறிய முற்படுவதே பகுத்தறிவு.

கொஞ்சம் கொடூரத்தைப் பார்க்கலாமா?



சோவியத் ரஷ்யா! "1932-33 ல் உக்ரைனில் பஞ்சம் உச்சத்தை அடைந்தது. குழந்தைகளை சிலர் வேட்டையாடி உண்ண ஆரம்பித்தனர். பெற்றோர்கள் அச்சத்துடன் குழந்தைகளை வீடுகளில் அறைகளில் பூட்டி வைத்தனர். ஆங்காங்கே குழந்தைகளின் உடல் மீதங்கள் கிடைக்கலாயின. மனப்பிறழ்வுகளும் இதனுடன் இணைந்து ஏற்பட்டன. உதாரணமாக ஒரு குழந்தையைக் கொன்று உண்டவன் மக்களால் பிடிக்கப்பட்ட போது அவனது வீட்டில் அவன் உண்ட பதினொரு குழந்தைகளின் தலைகள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். சில சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொன்று உண்டார்கள்.

ஒரு தாய் தன் இளைய மகனைக் கொன்று தன் ஆறு வயது மகளுக்குக் கொடுத்தாள். உறவினர்களால் காப்பாற்றப்பட்ட ஒரு பெண் குழந்தை, கடைசியாகத் தன் தந்தையைப் பார்த்த போது, அவர் அவளைக் கொன்று உண்ணக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்.....!"

- அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிசம் புத்தகத்திலிருந்து! வாழ்க்கையின் நிதர்சனங்கள் பல நேரங்களில் கற்பனைக் கெட்டாதவையாகத்தான் இருக்கும். மிக மோசமானதும் மிக நல்லதும் அதில் அடக்கம்!


"மக்கள் தலைவராக தேவர் இருப்பதால், பரமகுடியைத் தாண்டி தி மு க போகவே இல்லை" என்று அன்ணாதுரையே குறைபட்டுக் கொண்டிருக்கிறார். இத்தகைய காரணங்களால் கருணாநிதி வஞ்சத்தை வளர்த்துக் கொண்டார். ஒன்றாக இருந்த முக்குலத்தோர் சமுதாயத்தை, அரசானை போட்டுப் பிளவு ஏற்படுத்தினார் கருணாநிதி. மதுரை மாவட்டத்தில் வாழக்கூடிய பிறமலைக்கள்ளர், ராமநாதபுரத்தில் வாழக்கூடிய மறவர்களை மட்டும் 'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' என்றும், இதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மாவட்டங்களில் இருந்தால் அவர்கள் 'பிற்படுத்தப்பட்டவர்கள்' என்றும் அரசாணை மூலம் பிரிவினை உண்டாக்கினார்" என்றார் கோ.மாரி சேர்வை

- துக்ளக்கில் திரு சுப்பு, திராவிடமாயை

ஒரு கேள்வி?

பெங்குயின்கள் கூட்டமாக இருக்கும் இந்த இடம் - ஆர்ட்டிக்கா? அண்டார்ட்டிக்கா?