- ஆனந்த்கனேஷ்
எதனால் மத மாற்றம் நடக்கிறது?
மதமாற்றத்தால் அப்படி என்ன பெரிய கெட்ட விளைவு
ஏற்பட்டுவிடும்?
சாதி உயர்வு தாழ்வு காரணமாக நடக்கும் கொடூரங்கள் மத
மாற்றத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன.
மதம் மாறியவர்களும் தங்களுடைய மத மாற்றத்தை
நியாயப்படுத்த இந்தக் காரணத்தை முன்வைக்கிறார்கள்.
கற்பழிப்பு செய்பவர்களும்கூட ஒரு நியாயமான காரணத்தை
வைத்து தங்களது செயல் சரியானது என்று வாதிடுவார்கள். அதே போல, மதமாறியவர்களுக்கு சாதியக்
கொடுமைகள் ஒரு சாக்காக அமைகிறது.
உண்மையில், நம் ஹிந்து சமூகத்தில் நிலவும் வறுமையும், ஆதரவற்ற நிலையும்தான் ஹிந்துக்கள் மதம்மாற காரணம்.
அந்தக் காலத்தில் அனைத்து ஹிந்துக்களும்
ஒருவருக்கொருவர் உதவி ஒருவரை ஒருவர் பாதுகாத்து வந்தார்கள். வறுமையும், வளமையும் அனைவருக்கும்
பங்கிடப்பட்டன.
அந்த சமூக அமைப்பை ஆங்கிலேய ஆட்சியானது உடைத்து
எறிந்தது.
அப்படி உடைத்து எறிந்தபின்னர், நம்மை ஆக்கிரமிக்க அடிமையாக்க
அவர்களால் முடிந்தது.
உடைக்கப்பட்ட அந்த சமூக ஆதரவு அமைப்பை மீண்டும்
கொண்டு வந்தால் மட்டுமே மதமாற்றத்தை தடுக்க முடியும்.
அந்த சமூக ஆதரவு அமைப்பை மீண்டும் கொண்டு வரவேண்டும்
என்று கடைசியாக சொன்னவர் மகாத்மா காந்தி.
அதற்கு அவர் கிராம ராஜ்யம் என்று பெயரிட்டார்.
மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்
வெளிப்படையாகவே எழுதினார்.
மதமாற்றத்தால் அப்படி என்ன பெரிய கெட்ட விளைவு
ஏற்பட்டுவிடும்?
மதம் மாறிய அனைத்து நாடுகளும் மதம் மாற்றிய நாடுகளின்
அடிமை நாடுகளாகவே இருக்கின்றன. வறுமையும், ஊழலும், வன்முறையும் மட்டுமே அந்த
நாடுகளில் பிழைக்க வழிகளாகக இருக்கின்றன. ஒரு உதாரணம் பார்ப்போம்.
இருப்பதிலேயே மோசமான நாடு என்றவுடன் நம் மனத்தில்
பளிச்சிடும் நாட்டின் பெயர்: சோமாலியா.
அந்த நாட்டு குழந்தைகள் பட்டினியால் சாகிற படங்களை
செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். ஆனால், அந்த நாடு ஏன் வறிய நாடாக மாறியது ?
ஏனெனில், அந்த நாடு இசுலாமிய நாடாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறியது. அதாவது
அரேபியரின் அடிமை நாடாக மாறியது.
மத மாற்றத்தின் பின்னால், அரேபியா போன்ற பாலைவனத்து
நாடுகளினால் தொடர்ந்து சுரண்டப்பட்டது. அதன் விளைவுதான் சோமாலியாவில் இப்போது
நிலவும் கொடூர பஞ்சம். வறுமை.
வன்முறைகள்.
அங்கு தீவிரவாதிகளை உருவாக்கியதன்மூலம் அந்த நாட்டு
வளங்களை இன்றும் சுரண்டி வருகின்றன அரேபிய இசுலாமிய நாடுகள்.
இந்தக் கட்டுரையில் அது குறித்து சிறிய அளவு தகவல்கள்
கிடைக்கும்: மேலும் படிக்க!
அதேபோல, இந்தியாவில் நிலவிய பஞ்சங்களில் பெரும்பாலானவை ஆங்கிலேய காலனிய
ஆதிக்கத்தின்போது அவர்களால் உருவாக்கப்பட்டவையே.
இந்தியாவின் வளத்தை கொள்ளை அடிக்க முகமதியர்கள்
வந்தபோது அவர்களை எதிர்த்து நின்று விரட்டிய பேராண்மை மிக்க நாடுகள் எவை தெரியுமா? ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான்.
அப்போது அவை வளம் கொழிக்கும் நாடுகள். மதம் மாறிய
பின்னர் அவற்றின் நிலை என்ன?
அரேபிய ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாக பயங்கரவாதிகளை
உருவாக்குவது மட்டுமே அந்த நாடுகளின் பிழைக்கும் வழியாக இருக்கிறது.
இதுதான் மதமாற்றத்தின் விளைவு.
உலகிலேயே அதிக இயற்கை வளங்களை கொண்ட ஆப்பிரிக்க
நாடுகள் ஏன் உலகிலேயே மிகுந்த வறுமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன ?
மதமாற்றம் மூலம் நடக்கும் பொருளாதார சுரண்டல்களாலேயே.
மத மாற்றம் என்பது, தனிமனிதர்கள் அவர்கள் வணங்கும் தெய்வத்தை மாற்றிக் கொள்வதாக
மட்டுமே இருந்தால் பிரச்சினையே கிடையாது. ஆனால், மதமாற்றம் என்பது நம்மை, நம் குடும்பத்தை பல தலைமுறைகளுக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலியாக்குவதாக
இருக்கிறது.
அந்த வகையில் மதமாற்றம் என்பது முற்றிலும் ஒரு
சமூக-பொருளாதார பிரச்சினை. மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரின் ஆன்மிகப் பிரச்சினை
இல்லை.
குறிப்பு: 1994 ல் இப்படம் சிறந்த புகைப்படத்திற்கான புலிட்சர் விருது பெற்றது. சூடானில் - குழந்தையின் இறப்பிற்குப்பின் அதனைத் தின்னக்காத்திருக்கும் கழுகு. கெவின் கார்ட்டர் என்பவர் இப்படத்தை எடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்புறம் போட்டு பார்த்த அவர் மனதில் பெரிய கேள்வி. அந்தக் கழுகு என்ன செய்திருக்கும் குழந்தை என்ன ஆகியிருகும்? இந்த நினைப்பு மேலும் மேலும் உந்தித்தள்ள மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
நம்முடைய, நம் சந்ததியினருடைய,
நம் நாட்டினுடைய
அடிப்படை வாழ்வாதார உரிமைகளை இழப்பதற்கு போடும் அஸ்திவாரமாக மதமாற்றம் இருக்கிறது.
எனவே, மதமாற்றம் என்பது ஆன்மிகவாதிகளின், ஆத்திகர்களின் பிரச்சினை இல்லை.
முக்கியமாக அது ஆன்மீக பிரச்சினை இல்லை. முழுக்க
முழுக்க ஒரு சமூக பொருளாதார பிரச்சினை.
சோமாலியக் குழந்தையாக தன்னுடைய குழந்தை ஆகக் கூடாது
என்று நினைக்கும் ஒவ்வொரு தந்தையின் பிரச்சினை அது.
தன் மகன் தற்கொலை வெடிகுண்டாக நடுத் தெருவில் உடல்
சிதறி செத்தால்தான், எனக்கு ஒரு வாய் சோறு
கிடைக்கும் என்ற நிலையை வெறுக்கிற ஒவ்வொரு தாயின் பிரச்சினை அது.
இது அந்தக்காலத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும்.
காந்தி ஜியே மிகத் தெளிவாக அவருடைய “யங் இந்தியா” பத்திரிக்கையில் எழுதி
இருக்கிறார்.
அவர் சொன்னது:
“கடந்த 150 வருட பிரிட்டிஷ் ஆட்சியோடு
பிரிக்க முடியாதமுறையில் கிரிஸ்தவ மதம் இந்தியாவில் இணைந்துள்ளது. இது லெளகீக (materialistic) சமுதாயத்தோடும், வலிமையான வெள்ளை இனம் தனது
சாம்ராஜ்ய சுரண்டலை வலிமையற்ற இனங்கள் மீது செலுத்தும் வகையில்தான் காணப்படுகிறது.
ஆகவே இந்தியாவுக்கான இதன் பங்கு எதிர்மறையானதுதான். (Young India: March 21, 1929)”
இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு ?
கிராமங்களிலும் நகரங்களிலும் இருக்கிற சமூகப்
பிரிவுகள் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும், இணக்கமாகவும் இருக்கிற பண்டைய
சுயராஜ்ஜிய ஆட்சி முறையை மீண்டும் கொண்டு வருவது மட்டுமே இதற்குத் தீர்வு.
அந்த சமூக அமைப்பைத்தான் காந்தி ஜி கிராம
சுயராஜ்ஜியம் என்று அழைத்தார். லோகமான்ய திலகர் “சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமை” என்றார்.
வேதகாலத்து சமூக-அரசியல் அமைப்பை “சுயராஜ்ஜியம்” என்று முதன் முதலில்
பெயரிட்டவர் யார் தெரியுமா ?
நம் அரசர் சத்திரபதி சிவாஜி.
தொடர்புடைய பதிவுகள்: சூடானைக் கடித்த டிராகுலாக்கள் 1!
சூடானைக் கடித்த டிராகுலாக்கள்! - 2
சூடானைக் கடித்த டிராகுலாக்கள் 3!