Showing posts with label convertion. Show all posts
Showing posts with label convertion. Show all posts

Saturday, November 30, 2013

மதமாற்றத்தை எதிர்க்க வேண்டும், ஏன் ?

- ஆனந்த்கனேஷ்


எதனால் மத மாற்றம் நடக்கிறது?

மதமாற்றத்தால் அப்படி என்ன பெரிய கெட்ட விளைவு ஏற்பட்டுவிடும்?

சாதி உயர்வு தாழ்வு காரணமாக நடக்கும் கொடூரங்கள் மத மாற்றத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன.

மதம் மாறியவர்களும் தங்களுடைய மத மாற்றத்தை நியாயப்படுத்த இந்தக் காரணத்தை முன்வைக்கிறார்கள்.

கற்பழிப்பு செய்பவர்களும்கூட ஒரு நியாயமான காரணத்தை வைத்து தங்களது செயல் சரியானது என்று வாதிடுவார்கள். அதே போல, மதமாறியவர்களுக்கு சாதியக் கொடுமைகள் ஒரு சாக்காக அமைகிறது.

உண்மையில், நம் ஹிந்து சமூகத்தில் நிலவும் வறுமையும், ஆதரவற்ற நிலையும்தான் ஹிந்துக்கள் மதம்மாற காரணம்.

அந்தக் காலத்தில் அனைத்து ஹிந்துக்களும் ஒருவருக்கொருவர் உதவி ஒருவரை ஒருவர் பாதுகாத்து வந்தார்கள். வறுமையும், வளமையும் அனைவருக்கும் பங்கிடப்பட்டன.

அந்த சமூக அமைப்பை ஆங்கிலேய ஆட்சியானது உடைத்து எறிந்தது.

அப்படி உடைத்து எறிந்தபின்னர், நம்மை ஆக்கிரமிக்க அடிமையாக்க அவர்களால் முடிந்தது.

உடைக்கப்பட்ட அந்த சமூக ஆதரவு அமைப்பை மீண்டும் கொண்டு வந்தால் மட்டுமே மதமாற்றத்தை தடுக்க முடியும்.

அந்த சமூக ஆதரவு அமைப்பை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கடைசியாக சொன்னவர் மகாத்மா காந்தி.

அதற்கு அவர் கிராம ராஜ்யம் என்று பெயரிட்டார்.

மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாகவே எழுதினார்.

மதமாற்றத்தால் அப்படி என்ன பெரிய கெட்ட விளைவு ஏற்பட்டுவிடும்?

மதம் மாறிய அனைத்து நாடுகளும் மதம் மாற்றிய நாடுகளின் அடிமை நாடுகளாகவே இருக்கின்றன. வறுமையும், ஊழலும், வன்முறையும் மட்டுமே அந்த நாடுகளில் பிழைக்க வழிகளாகக இருக்கின்றன. ஒரு உதாரணம் பார்ப்போம்.

இருப்பதிலேயே மோசமான நாடு என்றவுடன் நம் மனத்தில் பளிச்சிடும் நாட்டின் பெயர்: சோமாலியா.

அந்த நாட்டு குழந்தைகள் பட்டினியால் சாகிற படங்களை செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். ஆனால், அந்த நாடு ஏன் வறிய நாடாக மாறியது ?

ஏனெனில், அந்த நாடு இசுலாமிய நாடாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறியது. அதாவது அரேபியரின் அடிமை நாடாக மாறியது.

மத மாற்றத்தின் பின்னால், அரேபியா போன்ற பாலைவனத்து நாடுகளினால் தொடர்ந்து சுரண்டப்பட்டது. அதன் விளைவுதான் சோமாலியாவில் இப்போது நிலவும் கொடூர பஞ்சம். வறுமை.
வன்முறைகள்.

அங்கு தீவிரவாதிகளை உருவாக்கியதன்மூலம் அந்த நாட்டு வளங்களை இன்றும் சுரண்டி வருகின்றன அரேபிய இசுலாமிய நாடுகள்.

இந்தக் கட்டுரையில் அது குறித்து சிறிய அளவு தகவல்கள் கிடைக்கும்: மேலும் படிக்க!

அதேபோல, இந்தியாவில் நிலவிய பஞ்சங்களில் பெரும்பாலானவை ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்தின்போது அவர்களால் உருவாக்கப்பட்டவையே.

இந்தியாவின் வளத்தை கொள்ளை அடிக்க முகமதியர்கள் வந்தபோது அவர்களை எதிர்த்து நின்று விரட்டிய பேராண்மை மிக்க நாடுகள் எவை தெரியுமா? ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான்.

அப்போது அவை வளம் கொழிக்கும் நாடுகள். மதம் மாறிய பின்னர் அவற்றின் நிலை என்ன?

அரேபிய ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாக பயங்கரவாதிகளை உருவாக்குவது மட்டுமே அந்த நாடுகளின் பிழைக்கும் வழியாக இருக்கிறது.

இதுதான் மதமாற்றத்தின் விளைவு.

உலகிலேயே அதிக இயற்கை வளங்களை கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏன் உலகிலேயே மிகுந்த வறுமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன ?

மதமாற்றம் மூலம் நடக்கும் பொருளாதார சுரண்டல்களாலேயே.

மத மாற்றம் என்பது, தனிமனிதர்கள் அவர்கள் வணங்கும் தெய்வத்தை மாற்றிக் கொள்வதாக மட்டுமே இருந்தால் பிரச்சினையே கிடையாது. ஆனால், மதமாற்றம் என்பது நம்மை, நம் குடும்பத்தை பல தலைமுறைகளுக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலியாக்குவதாக இருக்கிறது.

அந்த வகையில் மதமாற்றம் என்பது முற்றிலும் ஒரு சமூக-பொருளாதார பிரச்சினை. மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரின் ஆன்மிகப் பிரச்சினை இல்லை.


குறிப்பு: 1994 ல் இப்படம் சிறந்த புகைப்படத்திற்கான புலிட்சர் விருது பெற்றது. சூடானில் - குழந்தையின் இறப்பிற்குப்பின் அதனைத் தின்னக்காத்திருக்கும் கழுகு. கெவின் கார்ட்டர் என்பவர் இப்படத்தை எடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்புறம் போட்டு பார்த்த அவர் மனதில் பெரிய கேள்வி. அந்தக் கழுகு என்ன செய்திருக்கும் குழந்தை என்ன ஆகியிருகும்? இந்த நினைப்பு மேலும் மேலும் உந்தித்தள்ள மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நம்முடைய, நம் சந்ததியினருடைய, நம் நாட்டினுடைய அடிப்படை வாழ்வாதார உரிமைகளை இழப்பதற்கு போடும் அஸ்திவாரமாக மதமாற்றம் இருக்கிறது.

எனவே, மதமாற்றம் என்பது ஆன்மிகவாதிகளின், ஆத்திகர்களின் பிரச்சினை இல்லை.

முக்கியமாக அது ஆன்மீக பிரச்சினை இல்லை. முழுக்க முழுக்க ஒரு சமூக பொருளாதார பிரச்சினை.

சோமாலியக் குழந்தையாக தன்னுடைய குழந்தை ஆகக் கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு தந்தையின் பிரச்சினை அது.

தன் மகன் தற்கொலை வெடிகுண்டாக நடுத் தெருவில் உடல் சிதறி செத்தால்தான், எனக்கு ஒரு வாய் சோறு கிடைக்கும் என்ற நிலையை வெறுக்கிற ஒவ்வொரு தாயின் பிரச்சினை அது.

இது அந்தக்காலத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும். காந்தி ஜியே மிகத் தெளிவாக அவருடைய யங் இந்தியாபத்திரிக்கையில் எழுதி இருக்கிறார்.

அவர் சொன்னது:

கடந்த 150 வருட பிரிட்டிஷ் ஆட்சியோடு பிரிக்க முடியாதமுறையில் கிரிஸ்தவ மதம் இந்தியாவில் இணைந்துள்ளது. இது லெளகீக (materialistic) சமுதாயத்தோடும், வலிமையான வெள்ளை இனம் தனது சாம்ராஜ்ய சுரண்டலை வலிமையற்ற இனங்கள் மீது செலுத்தும் வகையில்தான் காணப்படுகிறது. ஆகவே இந்தியாவுக்கான இதன் பங்கு எதிர்மறையானதுதான். (Young India: March 21, 1929)”

இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு ?

கிராமங்களிலும் நகரங்களிலும் இருக்கிற சமூகப் பிரிவுகள் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும், இணக்கமாகவும் இருக்கிற பண்டைய சுயராஜ்ஜிய ஆட்சி முறையை மீண்டும் கொண்டு வருவது மட்டுமே இதற்குத் தீர்வு.

அந்த சமூக அமைப்பைத்தான் காந்தி ஜி கிராம சுயராஜ்ஜியம் என்று அழைத்தார். லோகமான்ய திலகர் சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமைஎன்றார்.

வேதகாலத்து சமூக-அரசியல் அமைப்பை சுயராஜ்ஜியம்என்று முதன் முதலில் பெயரிட்டவர் யார் தெரியுமா ?

நம் அரசர் சத்திரபதி சிவாஜி.

தொடர்புடைய பதிவுகள்:  

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் 1! 

சூடானைக் கடித்த டிராகுலாக்கள்! - 2

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் 3! 

Wednesday, April 18, 2012

மதமாற்று நிறுவனங்கள்!


என் அலுவலக ஹெச் ஆர் மேனேஜருக்கு கலர்புல்லான சில போட்டோக்களுடன் நல்ல அச்சுக்காதிதத்தில் ஏழை சிறுவர் சிறுமியர், பசித்திருக்கும் மூதாட்டி போன்றோரை காண்பித்து நோட்டீஸ் வந்திருந்தது. அதைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். எதேச்சையாக அவரைக் கடந்து போகையில் கவனித்தேன். அது வேர்ல்ட் விஷன் என்கிற தொண்டு நிறுவனத்தின் நோட்டீஸ். வேறென்ன நன்கொடை கொடுங்கள் என்று கேட்டுத்தான்.

அந்த நான் அவர் அருகே நின்று அது என்ன என்று சில வினாடிகள் பார்த்தேன். அந்த மேனேஜர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ஒரு சிறு புன்னகையுடன் "இல்லை, வேர்ல்ட் விஷன்' னு போட்டிருகே, குழந்தைகள் படங்களோட அதான் பார்த்தேன்" என்றேன்.

"ஆங், டொனேஷன் ரெக்வெஸ்ட். இப்டி டெய்லி நிறைய வரும்"!

"நீங்க குடுப்பீங்களா?"

"கொஞ்சம் ரிலையபிளா தோனிச்சின்னா ஹெச் ஆர் ஜிம் கிட்ட வெப்போம், அவர் சொன்னா ஐநூறோ ஆயிரமோ கொடுப்போம்" என்றார்.

"இந்த வேர்ல்ட் விஷன் னுக்கு?"

"முன்னாடி ரெண்டு வாட்டி குடுத்தோம், அப்புறம் என்ன தோனிச்சோ நடுவில நிறுத்தினாங்கஇப்போ மறுபடி வந்திருக்கு, என்ன டீட்டெய்லா கேக்றீங்க"

"ஒன்னுமில்ல சும்மாதான், இந்த வேர்ல்ட் விஷன் ஏழைகளுக்கு டொனேஷன் னு நம்ம கிட்டயே காசு வாங்கிட்டு நம்மாளுங்களையே மத மாற்றம் பன்றாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் கேட்டேன்!"

ஹெச் ஆர் மேனேஜர் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. என்னை உற்றுப் பார்த்தார்.

"ஆமாம், எனக்கும் தெரியும். நான் பெரும்பாலும் இந்த நோட்டீஸை கொண்டு குடுக்க மாட்டேன்! ஆனா சில சமயம் அவங்களே நோட்டிஸைப் பாத்தா டொனேஷன் அனுப்பி வெப்பாங்க. தெரிஞ்சி செய்றாங்களா, தெரியாம செய்றாங்களான்னு தெரியாது."

'என்ன சார், இது கூடவா புரியலை, நம்ம வேலை பாக்றது எம் என் ஸி கம்பெனி. அதுக்கு ஓனர் இத்தாலி, அமெரிக்கான்னு அங்கெதான் இருக்காங்க. அவங்களுக்குள்ள காண்ட்டாக்ட் இருக்கலாம். அவன் நாட்டு அமைப்புக்கு அவன் விசுவாசமா இருக்க மாட்டானா?" என்றேன்.

கொஞ்சம் அமைதியாக இருந்தார். "ம்..நம்ம காசு குடுக்காட்டாலும் உள்நாட்டில் இருந்துக்கிட்டே அவங்களுக்கு அவங்க ஆளுங்களே குடுத்துப்பாங்க போலருக்கு. நம்ம என்னவோ தோக்கற சைட்ல இருக்கறமாதிரியே ஒரு ஃபீலிங் வருது" என்றார். "சரி, இந்த வேர்ல்ட் விஷன் டீட்டெயில் எல்லாம் உங்களுக்கு எப்டி தெரியும்."

"என்ன சார், இவங்க மாதிரி ஆளுங்க கருனை காட்டறதே மத வியாபாரத்துக்குத் தானே, அது போக ஏற்கனவே நிறைய படிச்சிருக்கேன். வாங்கும் டொனேஷனையெல்லாம் வெச்சி,  சர்சு கட்டுவாங்க. இருக்கிற டிவி மற்றும் இதர மீடியால பூராம் புகுந்து மதப்பிரச்சாரம் பன்றாங்க. தெரிஞ்சது தானே! அது மட்டுமில்லை, இப்போ சமீபத்துல அரவிந்தன் நீலகண்டன் எழுதி ரிலீசான "உடையும் இந்தியா" ங்கற புத்தகத்துல கூட ரொம்ப டீட்டெயிலா நிறைய எடுத்துச் சொல்லிருக்காங்க.

"அப்டியா?" என்றார்.

"ஆமாம், படிச்சுப் பாத்தீங்கன்னா உங்களுக்கே மலைப்பா இருக்கும், உதாரணத்துக்கு சில வரிகளை சுருக்கமா சொல்றேன் பாருங்க -

அதிகார ஆற்றல் கொண்ட ஒரு கிறிஸ்தவ வலைப்பின்னல் வட அமெரிக்கா முழுவதும் பரவிக்கிடக்கிறது. அதற்கு இந்தியாவில் உள்ள கிறிஸ்தவக் குழுக்களுடன் மிக நெருக்கமான
உறவு இருக்கிறது. இந்த அமெரிக்க அமைப்புக்கள் இந்தியக் குழுக்களுக்கு அரசியல் கோட்பாடுகளையும் நிதியுதவிகளையும் வழங்குகின்றன.

உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ பன்னாட்டு நிறுவனங்களில் மத மாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அமைப்புகளில் ஒன்று வேர்ல்ட் விஷன். அதன் மோசடித்தன்மையை ஒரு மேற்கத்திய அறிஞரே விளக்குகிறார்.

"பல சமயங்களில் வேர்ல்ட் விஷன், அமெரிக்க அரசுக்கு உளவு சேகரிக்கும் கரமாகவே இயங்கியுள்ளது. 1970 களில் வேர்ல்ட் விஷன் சி ஐ ஏ க்காக வியட்நாமிலிருந்து களத்தகவல்களைத் திரட்டி அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கத் துருப்புக்கள் இப்பகுதியை விட்டுப் போன பிறகு வேர்ல்ட் விஷன் அகதிகள் முகாம்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது."

வேர்ல்ட் விஷன் அமைப்பின் இந்திய இணையதளம் அதனை மனித நேயத்தன்மை கொண்ட ஓர் அமைப்பாகக் காட்டுகிறது. வேர்ல்ட் விஷனும் அதைப் போன்ற மிஷனரி அமைப்புகளும் வெளிப்புறச் சக்திகளாகச் செயல்படுகின்றனர். அவை அந்தந்த பிராந்திய / வட்டாரச் சமுதாயங்களின் சமூக அமைப்பையோ அல்லது மதப் பண்பாட்டையோ மதித்து அவற்றுக்காக உழைப்பதில்லை.

வேர்ல்ட் விஷன் உள்ளூர் சர்ச்சுகளை ஆதரிக்கிறாது. பாஸ்டர்களுக்குத் தலைமைப் பண்புப்
பயிற்சிகளை அளிக்கின்றது.

- அரவிந்தன் நீலகண்டன், உடையும் இந்தியா

இப்படி பல தகவல்கள்."

"அடேங்கப்பா" என்று ஆச்சரியப்பட்டார்.

"சார், நான் ரெண்டொரு வரிகளை ஒரு சாம்பிளுக்குத் தான் எடுத்துச் சொன்னேன். அந்த புத்தகத்தை வாங்கிப் படிச்சீங்கன்னா உங்களைச் சுத்தி இன்னொரு உலகம் தனியா இயங்கிக்கிட்டிருக்கறமாதிரி ஃபீல் பண்ணுவீங்க" என்றேன்.

கண்களை அகல விரித்துப் பெருமூச்சு விட்டார். அதுவரை கையில் வைத்திருந்த வேர்ல்ட் விஷன் நோட்டீஸை சுக்கு நூறாக கிழித்து காலடியில் இருந்த குப்பைக் கூடையில் போட்டார்.

இன்று ஒரு நல்லகாரியம் என நினைத்து என் இருக்கைக்குப் போனேன்!


* * * * * * * * * 
ஒரிசாவில் மிஷனரிகளின் கைக்கூலிகளான மாவோயிஸ்டுகளின் அட்டகாசம்!           80 வயதான சுவாமி லக்ஷ்மனானந்தாவின் கொடூரக் கொலை! 

மீடியாக்கள் இவற்றை மறைத்து விட்டு கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்தது என்றே விளம்பரம் செய்யும்!

மிஷநரிகள்! ஜாக்கிரதை!