Showing posts with label மதமாற்றம். Show all posts
Showing posts with label மதமாற்றம். Show all posts

Saturday, November 30, 2013

மதமாற்றத்தை எதிர்க்க வேண்டும், ஏன் ?

- ஆனந்த்கனேஷ்


எதனால் மத மாற்றம் நடக்கிறது?

மதமாற்றத்தால் அப்படி என்ன பெரிய கெட்ட விளைவு ஏற்பட்டுவிடும்?

சாதி உயர்வு தாழ்வு காரணமாக நடக்கும் கொடூரங்கள் மத மாற்றத்துக்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன.

மதம் மாறியவர்களும் தங்களுடைய மத மாற்றத்தை நியாயப்படுத்த இந்தக் காரணத்தை முன்வைக்கிறார்கள்.

கற்பழிப்பு செய்பவர்களும்கூட ஒரு நியாயமான காரணத்தை வைத்து தங்களது செயல் சரியானது என்று வாதிடுவார்கள். அதே போல, மதமாறியவர்களுக்கு சாதியக் கொடுமைகள் ஒரு சாக்காக அமைகிறது.

உண்மையில், நம் ஹிந்து சமூகத்தில் நிலவும் வறுமையும், ஆதரவற்ற நிலையும்தான் ஹிந்துக்கள் மதம்மாற காரணம்.

அந்தக் காலத்தில் அனைத்து ஹிந்துக்களும் ஒருவருக்கொருவர் உதவி ஒருவரை ஒருவர் பாதுகாத்து வந்தார்கள். வறுமையும், வளமையும் அனைவருக்கும் பங்கிடப்பட்டன.

அந்த சமூக அமைப்பை ஆங்கிலேய ஆட்சியானது உடைத்து எறிந்தது.

அப்படி உடைத்து எறிந்தபின்னர், நம்மை ஆக்கிரமிக்க அடிமையாக்க அவர்களால் முடிந்தது.

உடைக்கப்பட்ட அந்த சமூக ஆதரவு அமைப்பை மீண்டும் கொண்டு வந்தால் மட்டுமே மதமாற்றத்தை தடுக்க முடியும்.

அந்த சமூக ஆதரவு அமைப்பை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கடைசியாக சொன்னவர் மகாத்மா காந்தி.

அதற்கு அவர் கிராம ராஜ்யம் என்று பெயரிட்டார்.

மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாகவே எழுதினார்.

மதமாற்றத்தால் அப்படி என்ன பெரிய கெட்ட விளைவு ஏற்பட்டுவிடும்?

மதம் மாறிய அனைத்து நாடுகளும் மதம் மாற்றிய நாடுகளின் அடிமை நாடுகளாகவே இருக்கின்றன. வறுமையும், ஊழலும், வன்முறையும் மட்டுமே அந்த நாடுகளில் பிழைக்க வழிகளாகக இருக்கின்றன. ஒரு உதாரணம் பார்ப்போம்.

இருப்பதிலேயே மோசமான நாடு என்றவுடன் நம் மனத்தில் பளிச்சிடும் நாட்டின் பெயர்: சோமாலியா.

அந்த நாட்டு குழந்தைகள் பட்டினியால் சாகிற படங்களை செய்தித்தாள்களில் பார்த்திருப்போம். ஆனால், அந்த நாடு ஏன் வறிய நாடாக மாறியது ?

ஏனெனில், அந்த நாடு இசுலாமிய நாடாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறியது. அதாவது அரேபியரின் அடிமை நாடாக மாறியது.

மத மாற்றத்தின் பின்னால், அரேபியா போன்ற பாலைவனத்து நாடுகளினால் தொடர்ந்து சுரண்டப்பட்டது. அதன் விளைவுதான் சோமாலியாவில் இப்போது நிலவும் கொடூர பஞ்சம். வறுமை.
வன்முறைகள்.

அங்கு தீவிரவாதிகளை உருவாக்கியதன்மூலம் அந்த நாட்டு வளங்களை இன்றும் சுரண்டி வருகின்றன அரேபிய இசுலாமிய நாடுகள்.

இந்தக் கட்டுரையில் அது குறித்து சிறிய அளவு தகவல்கள் கிடைக்கும்: மேலும் படிக்க!

அதேபோல, இந்தியாவில் நிலவிய பஞ்சங்களில் பெரும்பாலானவை ஆங்கிலேய காலனிய ஆதிக்கத்தின்போது அவர்களால் உருவாக்கப்பட்டவையே.

இந்தியாவின் வளத்தை கொள்ளை அடிக்க முகமதியர்கள் வந்தபோது அவர்களை எதிர்த்து நின்று விரட்டிய பேராண்மை மிக்க நாடுகள் எவை தெரியுமா? ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான்.

அப்போது அவை வளம் கொழிக்கும் நாடுகள். மதம் மாறிய பின்னர் அவற்றின் நிலை என்ன?

அரேபிய ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாக பயங்கரவாதிகளை உருவாக்குவது மட்டுமே அந்த நாடுகளின் பிழைக்கும் வழியாக இருக்கிறது.

இதுதான் மதமாற்றத்தின் விளைவு.

உலகிலேயே அதிக இயற்கை வளங்களை கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏன் உலகிலேயே மிகுந்த வறுமை கொண்ட நாடுகளாக இருக்கின்றன ?

மதமாற்றம் மூலம் நடக்கும் பொருளாதார சுரண்டல்களாலேயே.

மத மாற்றம் என்பது, தனிமனிதர்கள் அவர்கள் வணங்கும் தெய்வத்தை மாற்றிக் கொள்வதாக மட்டுமே இருந்தால் பிரச்சினையே கிடையாது. ஆனால், மதமாற்றம் என்பது நம்மை, நம் குடும்பத்தை பல தலைமுறைகளுக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலியாக்குவதாக இருக்கிறது.

அந்த வகையில் மதமாற்றம் என்பது முற்றிலும் ஒரு சமூக-பொருளாதார பிரச்சினை. மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரின் ஆன்மிகப் பிரச்சினை இல்லை.


குறிப்பு: 1994 ல் இப்படம் சிறந்த புகைப்படத்திற்கான புலிட்சர் விருது பெற்றது. சூடானில் - குழந்தையின் இறப்பிற்குப்பின் அதனைத் தின்னக்காத்திருக்கும் கழுகு. கெவின் கார்ட்டர் என்பவர் இப்படத்தை எடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். அப்புறம் போட்டு பார்த்த அவர் மனதில் பெரிய கேள்வி. அந்தக் கழுகு என்ன செய்திருக்கும் குழந்தை என்ன ஆகியிருகும்? இந்த நினைப்பு மேலும் மேலும் உந்தித்தள்ள மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

நம்முடைய, நம் சந்ததியினருடைய, நம் நாட்டினுடைய அடிப்படை வாழ்வாதார உரிமைகளை இழப்பதற்கு போடும் அஸ்திவாரமாக மதமாற்றம் இருக்கிறது.

எனவே, மதமாற்றம் என்பது ஆன்மிகவாதிகளின், ஆத்திகர்களின் பிரச்சினை இல்லை.

முக்கியமாக அது ஆன்மீக பிரச்சினை இல்லை. முழுக்க முழுக்க ஒரு சமூக பொருளாதார பிரச்சினை.

சோமாலியக் குழந்தையாக தன்னுடைய குழந்தை ஆகக் கூடாது என்று நினைக்கும் ஒவ்வொரு தந்தையின் பிரச்சினை அது.

தன் மகன் தற்கொலை வெடிகுண்டாக நடுத் தெருவில் உடல் சிதறி செத்தால்தான், எனக்கு ஒரு வாய் சோறு கிடைக்கும் என்ற நிலையை வெறுக்கிற ஒவ்வொரு தாயின் பிரச்சினை அது.

இது அந்தக்காலத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும். காந்தி ஜியே மிகத் தெளிவாக அவருடைய யங் இந்தியாபத்திரிக்கையில் எழுதி இருக்கிறார்.

அவர் சொன்னது:

கடந்த 150 வருட பிரிட்டிஷ் ஆட்சியோடு பிரிக்க முடியாதமுறையில் கிரிஸ்தவ மதம் இந்தியாவில் இணைந்துள்ளது. இது லெளகீக (materialistic) சமுதாயத்தோடும், வலிமையான வெள்ளை இனம் தனது சாம்ராஜ்ய சுரண்டலை வலிமையற்ற இனங்கள் மீது செலுத்தும் வகையில்தான் காணப்படுகிறது. ஆகவே இந்தியாவுக்கான இதன் பங்கு எதிர்மறையானதுதான். (Young India: March 21, 1929)”

இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு ?

கிராமங்களிலும் நகரங்களிலும் இருக்கிற சமூகப் பிரிவுகள் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாகவும், ஆதரவாகவும், இணக்கமாகவும் இருக்கிற பண்டைய சுயராஜ்ஜிய ஆட்சி முறையை மீண்டும் கொண்டு வருவது மட்டுமே இதற்குத் தீர்வு.

அந்த சமூக அமைப்பைத்தான் காந்தி ஜி கிராம சுயராஜ்ஜியம் என்று அழைத்தார். லோகமான்ய திலகர் சுயராஜ்ஜியம் எங்கள் பிறப்புரிமைஎன்றார்.

வேதகாலத்து சமூக-அரசியல் அமைப்பை சுயராஜ்ஜியம்என்று முதன் முதலில் பெயரிட்டவர் யார் தெரியுமா ?

நம் அரசர் சத்திரபதி சிவாஜி.

தொடர்புடைய பதிவுகள்:  

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் 1! 

சூடானைக் கடித்த டிராகுலாக்கள்! - 2

சூடானைக் கடித்த டிராகுலாக்கள் 3! 

Saturday, June 1, 2013

மக்களின் நம்பிக்கைகளும் சிதைக்கும் மதமாற்றமும் - காசியில் மதமாற்றம்!



இந்தியாவின் பாரத அடையாளங்கள் அத்தனையையும் அழிக்கும் வேலை மிக வேகமாக நடந்து வருகிறதுஅதற்கான மூல ஆயுதம் மதமாற்றம். இம்மதமாற்றம் மூலமாக இந்திய மக்களின் அடிப்படை நம்பிக்கைகளை சிதைப்பது மற்றும் அவர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிப்பதுஅவர்களை அப்படியே மதம் மாற்றி இத்தாலிய  அடிமைகளாக மாற்றிவிடுதலில் முடிகிறது இந்த மதப்படையெடுப்பு. ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களிலெல்லாம் திட்டமிட்டு மதம் மாற்றுவதை மிஷனரிகள் ஒரு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக திருவண்ணாமலையில் வேகமாக நடந்து வரும் மதமாற்றம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல இந்தியாவின் பல பகுதிகளில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசிமாநகரத்தில் மதமாற்றம் கங்கைக்கரையிலேயே நடந்து வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உத்திரப்பிரதேசம் மக்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் அதிகம் பின் தங்கி இருக்கும் மாநிலம். அதனாலேயே தானோ என்னவோ அங்கே இன்னும் பக்தியும் பாரம்பரியமும் அழியாமல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வரப்படுகிறதுப்ரயாக் , வாரனாசி போன்ற புன்னியஸ்தலங்கள் இருக்கும் இம்மாநிலத்தில் முக்கியநகரங்களிலெல்லாம் கிறிஸ்தவ மிஷனரிக்கூட்டங்களின் அட்டகாசம் அதிகாமாகி வருகிறது.

முதலில் இம்மாநில மக்களின் நம்பிக்கைகள் எந்தளவிற்கு இன்னும் சிறு சிறு விஷயங்களில் கூட உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அன்று அயோத்தியாப்பட்டனம் சென்று ஸ்ரீ ராமரை தரிசனம் செய்துவிட்டு காரில் காசிக்குச் சென்று கொண்டிருந்தோம். மாலை நேரம் ஒளி மங்கிக்கொண்டிருந்த சமயம், நெடுஞ்சாலையில் சடேரென வண்டியை ப்ரேக் போட்டு நிறுத்தி ஓரங்கட்டி விட்டார் எங்களது ஓட்டுனர். அவருக்கு அதிகபட்சம் 25 முதல் 30 வயதுக்குள் தான் இருக்கும்.
ஏனப்பா வண்டியை நிறுத்தினாய் என்னா ஆச்சு என்று விசாரித்தால், ஓட்டுனர் ஹிந்டியில் கூறினார் "பில்லி ரோட் காட் கே கயா" , அதாவது, "பூனை ரோட்டுக்கு குறுக்கே போனது" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, "என்ன சொல்ற" என்றேன் ஹிந்தியில். "ஹரே சாப், பூனை ரோட்டுக்கு குறுக்கே போய்டிச்சி சார், கொஞ்சம் நின்னு தான் போகனும்" என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தொடர்ந்து ஹிந்தியில் உரையாடினேன்..."அதற்காக நெடுஞ்சாலையில் இப்படி சடேரென வாகனத்தை நிறுத்துவதா?" என்றேன். உடனே அவர்
"சார் இங்கே அதெல்லாம் நம்புவோம் சார், நீங்க அதெல்லாம் பாக்கமாட்டீங்களா?"
"பாப்போம் தான், அதுக்காக இப்படி நடு ரோட்ல எல்லாம்...."

"சார், அதெல்லாம் பாக்கனும் சார், நீங்க கூட வெளியே போகும் போது பூனை குறுக்கே போச்சுன்னா ஒரு அஞ்சி நிமிஷம் உக்காந்துட்டு போங்க"

"நடு ரோட்லயா?"

"ஆமாம் சார், நம்பலியே பின்னாடி பாருங்க, ஒரு கார் நிக்குதா, எதித்தாப்புல பாருங்க ஒரு கார் நிக்குதா?.. அவங்களும் பூனை குறுக்கே போனதை பாத்துட்டாங்க... அதான் நிக்கிறாங்க..
பாத்தீங்கல்ல.." என்றார்.

நானும் முன்னே பின்னே திரும்பிப் பார்த்தேன், காலியான சாலையில் அவர்களும் நகராமல் சில நிமிஷங்கள் அப்படியே நின்றார்கள். பின்னர் எங்கள் ஓட்டுனர் வண்டியை எடுத்தவுடன் மற்றவர்களும் சதாரனமாக வண்டியை நகர்த்தி செல்லத் துவங்கினார்கள்.

பூனை குறுக்கே போவது அபசகுனம் என்று நினைப்பதெல்லாம் சரியா தவறா என்பதெல்லாம் அப்புறம். ஆனால், இப்படி பூனை குறுக்கே போனால் சகுனக்கேடு என்பதை நெடுஞ்சாலையில் கூட நம்பும் மக்கள் இருக்கும் மாநிலத்தில் அம்மக்களின் வழிவழியான பல்வேறு நம்பிக்கைகளை சிதைத்து மதம் மாற்றுகிறார்கள்.

மிகச்சாதாரண நம்பிக்கைகளில் தொடங்கி இறை நம்பிக்கை வழுவாத பக்தி என அனைத்தும் கொண்ட மக்களின் நம்பிக்கைகள் புனித ஸ்தலங்களில் கூட கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. அயோத்தியா அகாடமி என்று அயோத்தியாவின் பெயரை பள்ளிக்கு வைத்துக் கொண்டு கிறிஸ்தவ நிறுவனங்களே பள்ளிகளை நடத்துகின்றன. படிக்கும் எந்தப் பிள்ளையின் நெற்றியிலும் விபூதியோஅல்லது குங்குமமோ இருப்பதில்லை.

இப்போது காசிக்குப் போவோம், கங்கைக்கரையில் ஒவ்வொரு பெயரில் படித்துரை இருக்கும். எல்லாப்படித்துரைகளிலும் மக்கள் இறங்கி நீராடுவார்கள். குறிப்பிட்ட ஒரு படித்துரை மாடுகள் இறங்கி குளிப்பதற்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கே பசு வளர்ப்பவர்கள் எல்லோரும் தங்கள் மாடுகளை அந்த படித்துரை வழியாக இறக்கி குளிப்பாட்டி கூட்டிச் செல்வார்கள். அங்கே ஆட்கள் அதிகம் குளிக்க இறங்க மாட்டார்கள்.

இப்படி ஆட்கள் அதிகம் வந்து போகாத படித்துரை அருகே சத்தமில்லாமல் முளைகிற்து மிஷனரிகளின் சேவை மையம். ..... என்ற பெயரில் மிஷனரி அமைப்பு சேவை மையத்தை துவங்கி நாங்கள் ஆதரவற்றவர்கலையும் நோயாளிகளையும் பாதுகாக்கிறோம் என்று கூறி அடித்தட்டு மக்களை மூளை சலவை செய்து மதம் மாற்றிவிடுகிறது. இவர்கள் எப்படியெல்லாம் ஹிந்துக்களின் புனிதச்சடங்குகளின் ஆணிவேரை ஆட்டுவிக்கிறார்கள் என்று பார்ப்போம்.


ஹிந்துக்களின் புனிதத்தலமான காசியில் பித்ருக்களுக்கு ஸ்ரார்தங்கள் செய்து தங்கள் பிறவிக்கடனை தீர்க்கும் புனிதமான பணியைச் செய்ய லட்சக்கணக்கில் வந்து செல்கிறார்கள் நம் மக்கள். இங்கே ஓடும் புண்ணிய நதியான கங்கை கரையில் 64 படித்துறைகள் உள்ளன. இவற்றுள்ளும் மணிகர்ணிகா காட், தசாதச்மேத காட்பஞ்சகர்நிகா காட், வருனா காட், அஸ்ஸி காட் என்று ஐந்து கட்டங்கள் உள்ளன். இந்த கட்டங்களில் ஸ்நானம் செய்வது அல்லது நீரைத் தலையில் தெளிதுக்கொள்வது பஞ்ச தீர்த்த ஸ்நானம் என்று அழைக்கப்படுகிறது.

மணிகர்ணிகா கட்டத்தில் தினமும் உச்சிப்பொழுதில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நீராட வருவதாக ஐதீகம் அதனால் உச்சி வேளையில் நீராடுவது நல்லது.

இத்தகைய கங்கைக்கரையில் பித்ருக்களுக்கு பிண்டம் வைத்து ஸ்ரார்தம் செய்வது புன்னியகாரியமாக கருதப்படுகிறது. இக்கரையில் உள்ள மேலே சொன்ன ஐந்து கட்டங்களிலும் உட்கார்ந்து பித்ருக்களின் பெயர்களைச் சொல்லி பிண்டம் வைக்க வேண்டும். இதற்காக நூற்றுக்கணக்கில் படகுகள் இயங்குகின்றன. இந்தப் படகுகளில் அமர்ந்து பக்தர்கள் ஐந்து கட்டங்களுக்கும் செல்வார்கள்.

பிண்டம் வைப்பதற்கான சோறும் படகுகளில் செல்லும் போதே சமைக்கப்படும். சிறிய அடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு கொஞ்சம் அரிசியை கொதி நீர் அடங்கிய சிறிய பாத்திரத்தில் போட்டால் போதும், அடுத்த கட்டம் வருவதற்குள் அரிசி வெந்து விடும். இப்படி படகுலேயே பிண்டத்திற்கான அரிசியை வேகவைத்து அடுத்தடுத்த கட்டங்களில் பிண்டம் வைத்து செல்வது மக்களின் வழக்கம்.இப்படி ப்த்ரு காரியம் செய்யும் மக்களுக்காக படகு ஓட்டுபவர்கள் இந்த கங்கைக்கரையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள்

ஸ்ரார்தம் செய்ய வரும் மக்களுக்கு தெரியாததைச் சொல்லிக் கொடுத்து அவர்களின் நோக்கம் கெடாமல் நிறைவேறவும் அவர்கள் மிகவும் முக்கியானவர்கள். ஐயர் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் கூட படகு ஓட்டுபவர்களே சொல்லி விடுவார்கள். அந்தளவுக்கு அவர்கள் ஹிந்து சம்பிரதாயங்களை உள்வாங்கி அவற்றோடு ஊரிப்போய் மக்களுடன் ஒன்றாகப் பழகுபவர்களாக இருக்கிறார்கள்.


மிஷனரிகளின் முக்கிய வேலையே இந்த படகு ஓட்டிகளை மதம் மாற்றுவது தான். இவர்களது நோக்கமே இந்த படகு ஓட்டிகளை மதம் மாற்றிவிட்டால் அவர்களை தங்கள் கைகளுக்குள் போட்டுக் கொண்டால் புனித காரியம் செய்ய வருபவர்களின் பணிகளுக்கு வேண்டுமட்டும் இடையூறு செய்யலாம். ஒரு நாளில் எந்தப் படகும் போகாது என்று வேலை நிறுத்தம் அறிவிக்கச் செய்யலாம். புனித காரியம் செய்ய வரும் ஹிந்துக்களிடம் படகில் சண்டை போட்டு அவர்கள் மனம் நோகச் செய்து அல்லது அவர்களின் காரியம் கெடுமாறு நடந்து கொள்ளச் செய்யலாம்.

மதம் மாறிய படகோட்டிகள் எல்லாரும் பேசி வைத்துக் கொண்டு ஒரிரவில் அநியாய கட்டணம் வசூலிக்கவும் செய்யலாம். இப்படி பல வகைகளில் ஹிந்துக்களின் புனிதத்தலத்தில் அவர்களது காரியங்கள் எதுவும் நடக்கச் செய்யாமல் நாளடைவில் காசிக்குச் செல்வதில் பிரயோஜனம் இல்லை என்கிற மனப்பாங்கை உண்டாக்க வேண்டும் என்றும் புனிதத்தலத்தின் மகிமையை குலைத்திட வேண்டும் என்பதும் மிஷனரிகளின் நோக்கம். அப்படி சிலரை மதமாற்றம் செய்தும் இருக்கிறது என்பதும் அவர்களால் புனித காரியம் செய்யப் போனவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் அதிர்ச்சித் தகவல்.

இது மட்டுமல்லாமல் கொவில் நகரமான காசியில் மையப்பகுதியில் ரிக்ஷா ஓட்டுபவர்கள், கூலி வேலை செய்பவர்கள் மற்றும் ஏழை குடும்பப் பெண்கள் என திட்டமிட்டு பலரை அணுகி மதம் மாற்றி வருகின்றனர்.

இதற்காக கங்கைக்கரையிலேயே பெரிய கட்டடம் பிடித்து 200 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஆஸ்பத்தரி ஒன்றை நடத்தி வருகிறது. காசியில் பல மடங்கள் ஆதரவற்றோரையும் வயோதிகர்களையும் அவர்களது கடைசி காலம் வரை உணவளித்தும் தங்கும் இடம் கொடுத்தும் காக்கும் பணிகளை ஏற்கனவே செய்து வருகின்றன.

அப்படி இருக்கையில் தாங்கள் தான் கருணையின் சிகரம் என நாடகம் நடத்தி காசியில் தனது மதமாற்றக் கைங்கரியத்தை நடத்தி வருகின்றன மிஷனரிகள். ஆனால் மிஷனரீஸ் ஆப் ச்சாரிட்டி எப்படி நோயாளிகளை நடத்தியது என்றும் ஜபம் செய்து குணப்படுத்துகிறேன் என்று நோயாளிகள் சாவுக்குக் காரணமாக இருந்தது என்றும் இந்தப் பதிவின் மூலம் பார்த்திருக்கிறோம்.

ஹிந்துக்களின் புனிதத்தலங்களில் குறிப்பிட்ட தூரம் வரை பிறமதத்தினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு தடைசெய்யப்பட வேண்டும். குறைந்த பட்சம் ஹிந்துக்களாவது ஒரு குழுவினராக செயல்பட்டு இது போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டும். இல்லையேல் காசி மட்டுமல்ல, இருக்கும் எல்லா புனிதத்தலங்களும் நாளை பாரத மக்களுக்குச் சொந்தமாக இருக்காது என்பது நிச்சயம்.

ஹிந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!





படங்கள்: திரு.பி ஆர். ஹரண்