பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை தங்கள் வியாபாரத்திற்குச் சந்தையாக உபயோகித்தனர். அதே காலனி ஆதிக்கவழியில் தான் இத்தாலிகாங்கிரஸும் நம் நாட்டை தன் சொந்த நாடான இத்தாலிக்கு வியாபாரச்சந்தையாக ஆக்கியிருக்கிறார். இதனை உணர்ந்து கொள்ளும் எந்த ஒரு இந்தியனும் இத்தாலி காங்கிரஸ்க்கும் அதனது கூட்டனிக்கும் எந்த ஜென்மத்திலும் வாக்களிக்க மாட்டார்கள். அவர்களை நாட்டை விட்டே விரட்டுவார்கள்.
ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம்:
சில மாதங்களுக்க்கு முன்னால் மின் மீட்டர்களுக்கு மீட்டர் பாக்ஸ்களுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டது நினைவிருக்கலாம். பொதுவாக இது போன்ற மின் மீட்டர்கள் மற்றும் மீட்டர் பாக்ஸ்களெல்லாம் மும்பை மற்றும் டெல்லி என வட இந்திய மாநிலங்களில் இருந்தே அரசாங்கத்திற்கு அதாவது மின்வாரியத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். ஆனால் இந்த முறை தட்டுப்பாடு ஏற்பட்ட பிறகு வந்த மின் மீட்டர் பாக்ஸ்களிலெல்லாம் ஒரு வித்தியாசம் தென்பட்டது. அதாவது அந்த மின் மீட்டர்கள் பொருத்தப்பட்ட எல்லா டப்பாக்களிலுமே 'SEI' அல்லது 'OTTO' என்று எழுதியிருக்கும். இவையெல்லாம் இத்தாலிய வார்த்தைகள். 'SEI' என்றால் 'ஆறு' , ஆங்கிலத்தில் 'SIX' என்ற எண்ணைக் குறிக்கும். 'OTTO' என்றால் தமிழில்' எட்டு', ஆங்கிலத்தில் 'EIGHT' என்ற எண்ணைக் குறிக்கும். இப்படி இத்தாலிய மொழிகளடங்கிய இத்தாலிய பொருட்களை இந்தியாவில் வாங்கச் செய்து மக்களிக்கு அரசு நிறுவனங்கள் மூலமாகவே விற்பனை செய்விக்கப்படுகிறது. இத்தாலி நாட்டுப் பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்வதர்காகவே உள்நாட்டுக் கொள்முதல்களை நிறுத்திவைத்து மெதுமெதுவாக இத்தாலிப்பொருட்களை இங்கே கொன்டுவந்து விற்கிறார்கள். இதனால் சில தற்காலிக தட்டுப்பாடுகளும் உண்டாகின்றன. இது போன்ற பல பொருட்கள் இத்தாலிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா இத்தாலியின் காலனி ஆதிக்கத்தில் இருக்கிறது நாமெல்லாம் இத்தாலிக்காரியின் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை மறக்காதீர்கள். இத்தாலி காங்கிரஸை நாட்டைவிட்டே துரத்துங்கள். காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுங்கள்.
அதுமட்டுமல்ல, சமீபத்தில் ஜெயலலிதாவிற்கு பொருளாதாரம் தெரியாது என சிதம்பரம் செட்டியார் கூறுகிறார். சரி இவருக்கு பொருளாதாரம் என்ன தெரியும்?? மூலை முடுக்கென்று ஒரு இடம் விடாமல் உழைப்பவர்களின் பணத்தை வரி என்ற பெயரில் மொத்தமாகப் பிடுங்குவதைத்தவிர?? ஒரு காலத்தில் 'டியூயல் கரன்ஸி ஸிஸ்ட்டம்' அதாவது ஒரு நாட்டில் உள்நாட்டு கரன்ஸியுடன் டாலரையும் சேர்த்து புழங்க வேண்டுமென அமெரிக்கா வளரும் நாடுகளைக் கட்டாயப்படுத்திய போது அதனை ஏற்ற பல நாடுங்கள் தங்கள் உள்நாட்டு கரன்ஸி மதிப்பு சரிந்து அரசாங்கமே திவாலாயின. பின்னர் அதனை ஏற்ற அனைத்து நாடுகளும் டாலர் புழக்கத்திற்கு அதாவது 'டியூயல் கரன்ஸி ஸிஸ்ட்டம்' த்தை தடை செய்தன. அந்த சமயத்தில் இத்திட்டத்தை இந்தியாவில் புகுத்தியே ஆக வேண்டும் என பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்றவர் தான் இந்த சிதம்பரம். நல்ல வேளையாக நாட்டுப்பற்றுள்ள ரிசர்வ் பேங்க் கவர்னர் உறுதியாக திட்டத்தை ஏற்கக்கூடாது என மறுத்ததாலும் பல எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பாலும் நம் நாடு திவாலாகாமல் தப்பித்தது. அப்படிப்பட்டவர் ஜெயலலிதாவிற்கு பொருளாதாரம் தெரியாது என விமர்சிக்கிறார்.
இப்போது ஜெயலலிதாவிற்கு பொருளாதாரம் தெரியுமா தெரியாதா என்பதல்ல விஷயம். ஆனால் சிதம்பரம் செட்டியார் அந்நியர்களின் கால்களைக் கழுவி நக்குவதற்காக நாட்டுப்பொருளாதாரத்தை எப்படி எல்லாம் அடகு வைக்கத்துணிந்தவர் என்பதுதான் முக்கியம்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிளைநாடாக பாரதத்தை மாற்றவும் இத்தாலிய கிறிஸ்தவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாக பாரதத்தை மாற்றவும் இத்தாலி காங்கிரஸ் கடந்த பத்து வருஷங்களாக பெருமுயற்சி எடுத்து வருகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை எந்த ஒரு அத்தியாவசியத்தேவையும் வியாபாரமாக இருக்கவேண்டும் என்பதுதான். அரசு நிவாரணமாக அதாவது 'ஸப்ஸிடி'யாக இலவசமாக, மக்கள் நலனுக்காக என அரசாங்கம் எந்த பொறுப்பையும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே. அதற்கு காரணம் உண்டு. ஒரு நாட்டின் அரசாங்கம் அத்தியாவசியப்பொருளின் உற்பத்தி அல்லது விநியோகத்தை தன் கையிலேயே வைத்திருந்தால் அந்தப் பொருளில் வெளி ஆட்கள் அதாவது வெளி நாடுகள் வியாபாரம் செய்ய முடியாது. அப்படி சுதந்திரமாக அத்தகைய பொருளில் வியாபாரம் செய்ய வேண்டுமெனில் ஒரு நாட்டரசாங்கம் அத்தியாவசிய பொருள்களின் உற்பத்தி அல்லது விநியோகத்திலிருந்து வெளியேற வேன்டும். அப்போது தான் அமெரிக்கா மற்றும் அந்நிய நாட்டரசாங்கங்கள் பாரத மக்களின் அத்தியாவசிய பொருள்களை பாரதத்தில் வியாபாரம் செய்து அதன் மீது தனது ஆதிக்கத்தைத் தினித்து ஒரு காலத்தில் அப்பொருள்களுக்கு அந்நியநாடுகளையே சார்ந்திருக்கச் செய்து நிரந்தர அடிமைகளாக மாற்ற முடியும். அதனால் உலக வங்கி என்னும் தரகனை கையில் வைத்துக் கொண்டு அமெரிக்கா வளரும் நாடுகளையெல்லாம் மிரட்டி அந்நாடுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு அவர்கள் வரிப்பணத்திலேயே செய்யும் உதவிகளை நிறுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுகொண்டிருக்கிறது.
அதற்கு முக்கியமான ஏறக்குறைய அனைத்து மக்களும் ஒருங்கே பாதிக்கப்பட்ட விஷயம் சமயல் எரிவாயு. சமயல் எரிவாயு விஷயத்தில் மிகவும் கேவலமான ஒரு திட்டத்தை இத்தாலி காங்கிரஸ் நடைமுறைப்படுத்த முயன்றது. மக்களுக்குக் விநியோகம் செய்யப்ப்படும் சமயல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசாங்கம் நம்முடைய வரிப்பணத்திலிருந்தே நமக்கு விலையில் சலுகை கொடுக்கிறது. அப்படி 'ஸப்ஸிடியில்' விநியோகிக்கப்படும் சிலிண்டர்களுக்கான வித்தியாசத் தொகையை அரசாங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாகக் கொடுத்துவிடும். அதுவும் நமது வரிப்பணம் தான் அன்றி வேறில்லை என்பதையும் நினைவில் கொள்க. அப்படிப்பட்ட சலுகையைக் கூட ஏன் கொடுக்கிறாய்? எல்லாவற்றையும் மக்கள் தலையில் கட்டு என உலகவங்கி மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் கூறுவதால் அந்த சலுகைகளை நிறுத்தப்பார்க்கிறது இத்தாலி காங்கிரஸ். அதை உடனடியாக நிறுத்தினால் மக்கள் கொதித்துப் போவார்களே என்ன செய்யலாம் என யோசித்த அயோக்கியர்கள் அதற்கான மாற்று வழி ஒன்றை கண்டுபிடித்தனர். 'உங்கள் பணம் உங்களுக்கே' என ஒரு கோஷத்தைப் போடத்துவங்கினர்.
அரசாங்கம் நேரடியாக எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்தும் 'சப்ஸிடி' தொகையை மக்களுக்க்கு நேரடியாக அவரவர் வாங்கும் சிலிண்டர்களுக்கு கொடுத்துவிடுவது இத்திட்டத்தின் முதல்படியாக தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் ''உங்கள் பணம் உங்களுக்கே' என்று சொல்லி மக்களுக்கு அரசாங்கம் நேரடியாக காசு கொடுத்தால் கையில் பணத்தைப் பார்பவர்கள் ஏதோ காங்கிரஸ் அரசு நமக்கு பணம் கொடுத்து உதவுகிறது என மயங்கி சந்தோஷப்பட்டு அவர்களுக்கே அதிக ஓட்டும் போட்டு விடுவார்கள் என்றும் எண்ணியது. இந்த அயோக்கியத்தனத்தை முறைப்படுத்த ஆதார் அட்டை என்கிற திட்டத்தையும் கொண்டு வந்தது.
இந்த ஆதார் அட்டை திட்டமே மிகப்பெரிய தேசத்துரோகத் திட்டம். காரணம் இத்திட்டத்தின் படி சேகரிக்கப்படும் ஒவ்வொரு தனிமனிதரின் விபரங்களும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது. ஒரு நாட்டு மக்களின் அடிப்படை அடையாளங்கள் பற்றிய விபரங்களை மானமுள்ள எந்த நாடும் அடுத்த நாட்டிற்கு அனுப்பாது. ஆனால் பாரதத்தை ஆளும் இத்தாலி அரசோ தன் நாட்டின் நூறு கோடி மக்களின் வாழிட மற்றும் உடற்கூறு விபரங்கள் அடங்கிய அத்தனை விபரங்களையும் அமெரிக்காவிற்கு தாரை வார்க்கிறது என்றால் உங்களுக்கெல்லாம் அது ஏற்புடையதாக இருக்கிறதா? உங்கள் பெயர், தாய் தந்தையர் பெயர்,மனைவி குழந்தைகள் பெயர், வாழும் இடம் முகவரியுடன், மற்றும் உங்கள் கைரேகை அமைப்பு சகிதம் அமெரிக்காக்காரன்னுக்கு தெரியப்போகிறது என்றால் உள்நாட்டில் உங்கள் பாதுகாப்பு என்ன நிலையில் இருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள்?,
இந்த திட்டப்படி பொதுமக்களின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கைரேகை போன்ற வாழிடம் மற்றும் உடல்கூறு ரீதியான அனைத்து விபரங்களும் அமெரிக்க நிறுவனம் ஒன்றிக்கு அனுப்பபடுகிறது. அந்த நிறுவனம் அமெரிக்க உளவு அமைப்பான சி ஐ ஏ வின் சகோதர நிறுவனம் போன்ற ஒரு நிறுவனமாகும். இச்செயல் ஏறக்குறைய அமெரிக்காவின் உளவு நிறுவனத்திற்கு நேரடியாக பாரத மக்களைக் காட்டிக்கொடுத்த செயலைப்போன்றதாகும். இத்தகைய நிறுவனங்கள் ஒரு நாட்டின் விபரங்களில் எதையெல்லாம் தெரிந்து கொள்ளக்கூடாதோ அவை அத்தனையையும் இத்தாலி காங்கிரஸ் அமெரிக்காவின் உளவு அமைப்புக்கு நேரடியாக தாரை வார்க்கிறது. இந்த விபரங்கள் தெரியாமல் நாமும் நமது அனைத்து விபரங்களையும் கொடுத்து போட்டோவுக்கு போஸும் கொடுத்து ஆதார் அட்டை என்று ஒன்றை வாங்கி வைத்து விடுகிறோம். இது பாரத மக்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் அல்லவா? இதையெல்லாம் அமெரிக்காவின் ஏஜன்டாகவே மாறி இந்நாட்டு மக்களை அமெரிக்காவிடம் அடமானம் வைக்கத்துணிந்த இத்தாலி காங்கிரஸாலும் இத்தாலிக்காரியாலும் மட்டுமே முடியும் என்பது தானே உண்மை!
இப்படிப்பட்ட துரோகத்தையும் மக்களுக்குச் செய்துவிட்டு எரிவாயு சிலிண்டரையும் மக்களுக்கு ஒழுங்காக வழங்காமல் அலைக்கழித்து இந்நாட்டு மக்களை ஆட்டுமந்தைகளாக நடத்தும் இத்தாலி காங்கிரஸ் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, பாரத மக்களையெல்லாம் அடிமைப்படுத்தி அடமானம் வைக்கும் இத்தாலிக்காரிக்காரியை இந்த நாட்டை விட்டே துரத்த வேண்டும்.
இப்படியாக அரசாங்கம் மக்களுக்கென வழங்கும் சலுகைகளை படிப்படியாக குறைப்பது , அரசு ஆஸ்பத்திரிகள் கட்டாமல் தனியார் ஆஸ்பத்திரிகள் பெருக ஊக்குவிப்பது, அரசு பள்ளிகள் , கல்லூரிகள் கட்டப்படாமல் அவைகளும் தனியார்களின் வியாபரமாக மாறுவதற்கு ஊக்குவிப்பது என நாட்டு மக்களை எவ்வளவுக்கெவ்வளவு ஏழைகளாக உணரவைக்க முடியுமோ அவ்வளவு வேலைகளையும் இத்தாலி காங்கிரஸ் செய்கிறது. இவற்றிற்கெல்லாம் திட்டம் வகுத்து நாட்டை அடமானம் வைக்கக்கைத்தடியாக இருந்து துணைபோவது சிதம்பரம் செட்டியார். இன்றைக்கு தன் சொந்த தொகுதியில் தான் தோற்றுவிடுவோம் என பயந்து தனது தத்புத்திரனை நிறுத்தி தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறார். நம்மக்களை அமெரிக்காவிற்கும் இத்தாலிக்கும் அடிமைகளாக்கி விட்டு கௌரவமாக வெட்கமின்றி வெளியே தலைகாட்டும் இவர்களையெல்லாம் நாட்டை விட்டே ஓட ஓட துரத்த வேண்டும்
செய்வீர்களா?? செய்வீர்களா?? நீங்கள் செய்வீர்களா?