Saturday, April 5, 2014

இந்தியாவுக்கு வாக்களிப்பீர்!


- ச திருமலைஅருமை நண்பர் ச திருமலை தனது முகநூல் பக்கத்தில் எழுதி பகிர்ந்து கொண்டது. நண்பருகளுக்காக இங்கேயும்..! - Thirumalai Sa

நரேந்திர மோதியின் தலமையிலான பி ஜே பி கட்சி ஓரளவுக்கு போதுமான இடங்களைப் பெற்று சில கூட்டணிகள் மூலமாகவோ அல்லது தனியாகவோ வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்தக் கருத்துக் கணிப்புகளை அப்படியே நம்ப வேண்டியதோ எடுத்துக் கொள்ள வேண்டியதோ அவசியம் கிடையாது. இருந்தாலும் அவை அனைத்துமே ஒரே விதமான கணிப்புகளை முன் வைக்கின்றன. இவற்றை ஒரு விதமான அறிகுறியாக கருதிக் கொண்டு மோதிக்குச் செல்லும் இடமில்லமெல்லாம் வரலாறு காணாத கூட்டம் கூடுவதையும் மக்களிடம் பரவலாக இருக்கும் எதிர்பாப்புக்களையும் சேர்த்து நோக்கும் பொழுது இந்தக் கணிப்புகள் அனேகமாக சாத்தியமாகி விடும் என்று நம்புவதற்கான முகாந்திரங்கள் உள்ளன.

மோதியின் வெற்றி அனேகமாக உறுதி செய்யப் பட்டு விட்டாலும் கூட இரண்டு பெரும் அச்சுறுத்தல்களை நம்மால் ஒதுக்கி விட முடியாது. அவை இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் அவர் உயிருக்கு இருக்கும் அபாயம். இரண்டாவது எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின். 

இந்த எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் ரிமோட்டாக ஊடுருவி அதில் இடப் பட்டுள்ள ஓட்டுக்களை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மாற்றி விடலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இதை இந்திய கோர்ட்டுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த சூழ்நிலையில் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கின் பேரில் ஓட்டுப் பதியும் பொழுது ஒரு அச்சிட்ட ரசீதையும் அளிக்கும் விதமாக அந்த இயந்திரத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் வழக்கம் போலவே இந்தியக் கோர்ட்டுகளின் வழ வழா கொழ கொழா தீர்ப்புகளைப் போலவே அதை இந்தத் தேர்தலுக்குள்ளாகவே செய்ய வேண்டும் என்று உறுதியாக எந்தத் தீர்ப்பையும் வழங்காதபடியால் அதையே சாக்காகக் கொண்டு காங்கிரஸ் அரசாங்கம் ஓட்டுப் பெட்டியில் மாற்றம் செய்வதற்கான நிதியை ஒதுக்காமல் இருந்து கொண்டது. அதனால் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் அதே சந்தேகத்துக்குரிய இயந்திரங்களே மீண்டும் பயன் படுத்தப் படப் போகின்றன. அந்த மெஷின்களில் சில தொகுதிகளில் மாறுதல் செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து விடக் கூடிய அபாயகரமான சூழ்நிலையும் நிலவி வருகிறது. அப்படி நடந்து விடாது என்பதை எவரும் உறுதியாகச் சொல்லி விட முடியாது. 

மோடியின் வெற்றியை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று காங்கிரஸ் கம்னியுஸ்டு கட்சிகள் முதல் வெளிநாடுகள் வரை முயற்சி செய்து வருகின்றன. அவரை கொலை செய்தாவது அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கரண் தப்பார், ஞாநி சங்கரன் போன்ற பத்திரிகையாளர் முதல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வரை ஒரே குரலில் சொல்கிறார்கள். இதை இந்தியாவின் அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் மவுனமாக ஆதரித்தும் வருகிறார்கள். இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் வோட்டிங் மெஷின்கள் மூலமாக இந்தத் தேர்தலின் முடிவுகள் மாற்றப் படுவதற்கும் பெருத்த வாய்ப்புகள் உள்ளன.

இந்த இரு அச்சுறுத்தல்களையும் மீறி இந்தியாவில் உண்மையான தேர்தல் நடந்து ஆண்டவன் அருளால் மோடியின் உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்கும் பட்சத்தில் பி ஜே பி மத்தியில் மோடியின் தலைமையில் ஆட்சிக்கு வருவதை எவரும் தடுத்து விட முடியாது.

காங்கிரஸ், கம்னிய்ஸ்டு, இஸ்லாமிய பயங்கரவாதிகள், மதமாற்ற சக்திகள், பாக்கிஸ்தான், சீனா, இந்திய மீடியாக்கள், முற்போக்கு சூடோ செக்குலார் அறிவு ஜீவிகள் போன்ற அனைத்து விதமான இந்திய விரோத நாசகார சக்திகளும் ஒற்றுமையாக எப்பாடு பட்டாவது மோடியை நிறுத்தி விட வேண்டும் என்று முயன்று வருகிறார்கள். அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இந்தியாவின் மக்கள் செய்யக் கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அனைவரும் ஜாதி மத வேறுபாடுகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்தில் மட்டுமே அக்கறை கொண்டு இத்தாலியக் கொள்ளைக் கும்பலின் பிடியில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்க மோடி தலமையிலான பி ஜே பி க்கு தாமரைச் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமே இந்திய விரோதிகளின் சதியை முறியடிக்கும். அதை இந்திய வாக்காளர்கள் செய்வார்களா? செய்வார்களா?

இந்தத் தொடரில் நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்பதைச் சொல்லவிருக்கிறேன். அதற்கு முன்னால் நரேந்திர மோடி மீது அளவற்ற காழ்ப்புடனும் ஆழ்ந்த வெறுப்புடனும் இடதுசாரி அறிவு ஜீவிகளினாலும், மீடியாக்களீனாலும், இந்திய தேச விரோதிகளினாலும் வைக்கப் படும் சில விமர்சனங்களையும் விரிவாக அலசவிருக்கிறேன். நேரம் இருக்கும் பொழுதெல்லாம் தொடர்வேன். 

தொடரும்.......No comments: