Sunday, October 4, 2015

தமிழக சிறைச்சாலை முஸ்லீம் பயங்கரவாதத்தின் சர்வகலாசாலை

- பால. கௌதமன்

ஆம்பூரில் படிந்த இரத்தக்கறைகள் காய்வதற்க்கு முன் சென்னை புழல் சிறையில் 4 போலீசார் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் 26.09.2015 தேதி அன்று தாக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் தமிழகம் காஷ்மீராக மாறி வருவதை உறுதி செய்கிறது.    

பக்ரீத் அன்று காலை, வெளியிலிருந்து கொண்டு வந்த பிரியாணியை புழல் மத்தியச்சிறையில், அடைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு கொடுப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் ஒரு காவலர் முஸ்லீம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் காவல் துறையினரால் மூடிமறைக்கப்பட்டது.

இருப்பினும் புதிய தலைமுறை இந்தச் சம்பவத்தை செய்தியாக ஒளிபரப்பியது. பின்னர் இந்த தொலைக்காட்சி கூட இந்த செய்தியை மறு ஒளிபரப்பு செய்யவில்லை காரணம் என்னவோ? இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மாலையில் பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், மண்ணடி அப்துல்லா மற்றும் பலர் சிறைக்காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். மாலை 6:00 மணிக்கு தொடங்கிய இந்த வன்முறையில் இரண்டு சிறைக்காவலர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.   

சிறைக்காவலர்களை விடுவிக்கப் பேச்சுவார்த்தை நடத்தவந்த கூடுதல் டி.ஜி.பி திரு.திரிபாதி, சிறையில் வன்முறை, கலவரம் என்று எதுவும் நடக்கவில்லை ஒரு போராட்டம் நடந்தது, அதுவும் சில நிமிடங்களில் முடிந்து விட்டது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

ஆனால் தொலைக்காட்சியிலும், செய்தித்தாளிலும் நாம் கண்ட காட்சி என்ன? ரத்தம் சொட்டச் சொட்ட போலீசாரை தூக்கிச் சென்றனர். முத்துமணி என்ற போலீஸ்காரர், ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து, தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டன. ஏதோ சாதாரண போராட்டம் என்று கூடுதல் டிஜிபி சொல்கிறார், ஆனால் பிணைக்கைதிகளை DIG ராஜேந்திரன் தலைமையிலான போலீஸ் படை சிறை சுவற்றின் மீது ஏறும் படத்தை செப்டம்பர் 30 தேதியிட்ட நக்கீரன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

சிறை வளாகத்திற்குள் கொடூரத் தாக்குதல் நடத்தும் அளவிற்கான கருவிகள் எப்படி வந்தன? ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டிஜிபி சுவர் ஏறினாரா? கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைகளிலும், பிற மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டார்களா? சிவப்பாகத் தெரிவதுதக்காளிச் சட்னி, என்று கூடுதல் டிஜிபி அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கு இல்லை. சுமார் 2 மணிநேரம் நடந்த வன்முறை வெறியாட்டத்தை சில நிமிடங்களில் முடிந்து விட்டது என்று சொல்லி, வன்முறையாளர்களை தப்பவைக்க அரசு அச்சாரம் போட்டுவிட்டது

வன்முறை, பயங்கரவாத தேசவிரோத செயல்களை திட்டமிடவும், இயக்கவும் மையமாக இன்று தமிழக சிறைகளை இஸ்லாமிய பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதே புழல் சிறையில் ஒராண்டுக்கு முன் மொபைல் போன் பூத் நடத்தி வந்த ராஜா உசேன் என்ற பயங்கரவாதியின் கொட்டத்தை அடக்கினார் வார்டன் முத்துமணி. இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ராஜா உசேனை சென்னையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றியது சிறைத்துறை. முஸ்லீம் பயங்கரவாதிகளின் சட்ட விரோத நடவடிக்கையை தடுத்த வார்டன் முத்துமணியை கொலை செய்ய முஸ்லீம் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக 30.09.2015 தேதியிட்ட தினமலர் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.   

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைகள் அனைத்தும் இன்று சிறைத்துறையின் கட்டுபாட்டிலோ சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலோ செயல்படுவதில்லை முஸ்லீம்கள் வைத்ததே சட்டம் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது. புழல் சிறை வன்முறைக்கு பின் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட போலீஸ் பக்ருதீன் இரண்டு நாட்களாக வேலூர் சிறையில் பிரச்சினை செய்து வருகிறாராம். சாப்பாட்டு தட்டை போலீசார் மீது எறிந்தும் கடுமையான வார்த்தைகள் பேசியும் தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறார். உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளும், அரசும் முஸ்லீம்களுக்கு சாதகமாக இருப்பதால் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர் சிறை அதிகாரிகள்.

இந்நிலை தொடர்ந்தால் இது பேராபத்தாக முடியும் என்று புலம்புகின்றனர் சிறைத்துறையினர்சிறையிலும் வன்முறையாலும் பயங்கரவாதத்தாலும் சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக முஸ்லீம் அமைப்புக்கள் களமிறங்கி செயல்படுகின்றன. புழல் சிறையில் வன்முறை நடக்கும் போது கூட்டமாக வந்த முஸ்லீம் அமைப்பினர் சிறை வளாகத்திற்கு வெளியே காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறைக்குள் நடக்கும் சம்பவம் வெளியே இருக்கும் முஸ்லீம்களுக்கு எப்படி தெரியவந்தது?

இந்த சம்பவம் முன்னரே திட்டமிட்டு நடத்தப்பட்டதா? எங்கிருந்து இவ்வளவு முஸ்லீம்கள் குறித்த நேரத்தில் சிறைவளாகத்திற்க்கு வெளியே வந்து கூடினர்? இந்தக் கேள்விகளுக்கு அரசின் பதில் என்ன ? தமிழகத்து ஊடகங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் என்ற போர்வையில் சிலரும் மனுஷ்யபுத்திரன் என்று தன் பெயரை மாற்றி இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஊதுகுழலாக செயல்படும் அப்துல் ஹமீது போன்றவர்களும் கலவரத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை அப்பாவிகள் போல் சித்தரித்து சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருக்கும் காவல்துறையை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்த செயலின் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு வலு சேர்க்கின்றனர். முஸ்லீம் பயங்கரவாதிகளையும், அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை காவல்துறையினர் சோதனை இடக்கூடாது என்பது சட்டமாக்கப்படவேண்டும். முஸ்லீம் பயங்கரவாதிகள் நினைப்பது போல் சிறைவளாகம் செயல்படவேண்டும் என்ற நிலை உருவாக இந்த கலவரத்தை பயன்படுத்துகிறார்கள் முஸ்லீம் பயங்கரவாதிகள். அருவருக்கதக்க விதத்தில் காவல்துறையினர் சோதனை நடத்துகிறார்கள், உணவு வழங்குகிறார்கள், முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்றெல்லாம் சிறைதுறையினர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அனுதாபத்தையும், காவல்துறையினர் மீது சட்ட விதிமீறல் புகாரையும் சுமத்துகின்றனர் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர்.

இந்த திட்டமிட்ட செயல்பாடுகள் அனைத்தும் முஸ்லீம் பயங்கரவாதிகள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியேஇந்த முயற்சிக்கு தமிழக அரசும், கண்ணியமற்ற அதிகாரிகளும், முஸ்லீம் ஓட்டுக்காக மண்டியிடும் அரசியல்வாதிகளும், தேசத்துரோக கும்பல்களும் துணை நிற்கிறார்கள். காவலர்கள் மீது தாக்குதல், காவல்நிலையங்கள் முற்றுகை, சிறைக்கலவரம் என்று முஸ்லீம்கள் நிகழ்த்தும் வன்முறையை உரிமை போராட்டம் என்று நியாயப்படுத்திக்கொண்டு, இடை இடையே அப்பாவி இந்துக்களையும் தாக்கி வருகிறார்கள். முஸ்லீம்களின் கோரிக்கையை ஏற்கிறோம், உரிமையை நிலை நாட்டுகிறோம் என்று கூறிக்கொண்டு தாக்குதல்களில் ஈடுபடும் முஸ்லீம்களின் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு போலீசாரின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் விளைவுகள் என்ன?

1. போலீஸாரின் மன உறுதி (morale) அழிக்கப்பட்டுவிட்டது. முஸ்லீம்களின் மீது நடவடிக்கை எடுக்க அச்சப்படுகின்றனர் போலீசார்.

2. காவல்துறையினரையே தாக்குகிறார்கள் முஸ்லீம்கள். அதனால் முஸ்லீம்கள் வலுவானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பயங்கரவாத இயக்கங்களின்பால் முஸ்லீம் இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

3. பாதுகாப்புப் படையினரைத் தாக்கும்போது கிடைக்கும் விளம்பரம், முஸ்லீம்களை ஏதோ ஒரு பெரிய வீழ்த்தமுடியாத சக்தியாகக் காட்டி, அவர்களின் நியாயமற்ற கோரிக்கைகளை அரசும், அரசியல் கட்சிகளும் ஏற்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது. இந்த யுக்தியைத் தான் காஷ்மீரிலும், சிரியாவிலும், ஈராக்கிலும் முஸ்லீம்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

4. குல்லா அணிந்தால் ஹெல்மட் அணியத் தேவையில்லை! முஸ்லீம் யூனியனில் இருந்தால் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டலாம்! மசூதி சாலையில் இருந்தால் ஹைவே கூட வளைந்து செல்லும்! என்று நம் நாட்டின் சட்டங்கள் எதுவும் முஸ்லீம்களை கட்டுப்படுத்தாத நிலை உருவாகியுள்ளது.

5. இப்படி, இஸ்லாமிய பயங்கரவாதம் தமிழகத்தில் கோலோச்சுவதால், பல குற்றவாளிகளும் குற்றப் பின்னணி கொண்டவர்களும் புகலிடம் தேடி அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளில் சேர்ந்து வருகின்றனர். இந்த கிரிமினல்களை முஸ்லீம்கள் தாக்குதல்கள் தொடுக்க பயன்படுத்தி வருகின்றனர். இன்று இஸ்லாமிய பயங்கரவாதமும், ஓட்டுக்காக அதை ஆதரிக்கும் அரசும், அமைதிப் பூங்காவான தமிழகத்தை, வன்முறைக் களமாக மாற்றிவிட்டது.

இந்த நாட்டின் நல்வாழ்வையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், நிலைநாட்ட தேசபக்தர்கள் அனைவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு சாவுமணி அடிக்கவும், ஓட்டுவங்கி அரசியலை வேரறுக்கவும், ஆதாயத்திற்காக சட்டத்தை மீறும் அதிகாரிகளை களையெடுக்க, களமிறங்க வேண்டும். தேசத்தைப் பாதுகாக்கும் நேர்மையான, நிர்பந்தங்களுக்கு அடிபணியாத காவல்துறையினரை ஆதரிக்க வேண்டும்.

நன்றி: www.vsrc.in.