
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட தடை செய்துள்ளார்களாம்! அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று எச்சரிக்கை உணர்வாம்.
கவுண்டமணி காமெடியை ஒரு அரசாங்கமே செய்கிறது என்றால் இத்தனை கேவலமான அரசாங்கத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. தேங்காய் உடைப்பதே ப்ரார்த்தனையாகக் கொண்டு தேங்காயை மூட்டை மூட்டையாக கொண்டு போகும் சபரிமலைக்கே கேரள அரசு தேங்காய் உடைக்க தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழக அரசோ கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்கிறது.
அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று தேங்காய் உடைக்கத் தடை விதிக்கிறார்கள். பின்னர் கோவிலுக்குப் போனால் தானே குண்டு வைப்பார்கள் என்று கோவிலை மூடச் சொல்லுவார்கள். பின் தெருவில் குண்டு வைப்பார்கள் என்பதால் யாரும் தெருவில் நடக்ககூடாது என்பார்களோ!
அப்புறம் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வீடு புகுந்து தாக்குவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டு விடுங்கள் என்றும் சொல்லுவார்கள் போலிருக்கிறது.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தைரியமாக அவர்கள் வாழ வழிசெய்யாத அரசாங்கம் என்ன அரசாங்கமோ!
ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஊறு விளைவிப்பதே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரிகிறது.
நண்பர் பி. ஆர். ஹரண் என்பவர் ஒரு ஆன்லைன் பெட்டிஷன் போட்டிருக்கிறார். முடிந்தால் என்னோடு சேர்ந்து நீங்களும் அவருக்கு ஆதரவு கொடுங்கள்.
இந்து தர்மம் என்ற தேரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் எல்லோருடைய கடமையும் ஆகும்.