Wednesday, December 9, 2009

தேங்காய்க்குள்ளே பாம்!


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட தடை செய்துள்ளார்களாம்! அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று எச்சரிக்கை உணர்வாம்.

கவுண்டமணி காமெடியை ஒரு அரசாங்கமே செய்கிறது என்றால் இத்தனை கேவலமான அரசாங்கத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. தேங்காய் உடைப்பதே ப்ரார்த்தனையாகக் கொண்டு தேங்காயை மூட்டை மூட்டையாக கொண்டு போகும் சபரிமலைக்கே கேரள அரசு தேங்காய் உடைக்க தடை விதிக்கவில்லை. ஆனால் தமிழக அரசோ கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்துங்கள் என்கிறது.

அதாவது தேங்காயில் பாம் வைப்பார்கள் என்று தேங்காய் உடைக்கத் தடை விதிக்கிறார்கள். பின்னர் கோவிலுக்குப் போனால் தானே குண்டு வைப்பார்கள் என்று கோவிலை மூடச் சொல்லுவார்கள். பின் தெருவில் குண்டு வைப்பார்கள் என்பதால் யாரும் தெருவில் நடக்ககூடாது என்பார்களோ!

அப்புறம் வீட்டுக்குள்ளே இருந்தாலும் வீடு புகுந்து தாக்குவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டு விடுங்கள் என்றும் சொல்லுவார்கள் போலிருக்கிறது.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தைரியமாக அவர்கள் வாழ வழிசெய்யாத அரசாங்கம் என்ன அரசாங்கமோ!

ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஊறு விளைவிப்பதே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரிகிறது.

நண்பர் பி. ஆர். ஹரண் என்பவர் ஒரு ஆன்லைன் பெட்டிஷன் போட்டிருக்கிறார். முடிந்தால் என்னோடு சேர்ந்து நீங்களும் அவருக்கு ஆதரவு கொடுங்கள்.


இந்து தர்மம் என்ற தேரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் எல்லோருடைய கடமையும் ஆகும்.

7 comments:

thiruchchikkaaran said...

Ram,

If one is keen to follow this practice,

Instead of making pettion, the right way is to ask for stay order from the court.

Now what is the chance that this petition is going to be heard.

Petition is another comedy.

Thiruchchi

hayyram said...

///Now what is the chance that this petition is going to be heard.

Petition is another comedy./// இது அலுவல் ரீதியான பெட்டிஷன் இல்லாவிட்டாலும், இன்றைக்கு இனையத்தில் என்னவெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் என்று அரசே உளவு பார்க்கும் அளவுற்கு இணையத்தின் பலம் அதிகரித்திருக்கிறது. அதனால் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள் என்பதை குறைந்த பட்சம் காட்டலாமே! இணையம் பற்றி தெரியாதவர்களுக்கு அதற்க்கான அமைப்புகள் நேரடியாக கூட்டங்கள் கூட்டி மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன. ஏதாவது செய்யனும் தானே சாமி!

thiruchchikkaaran said...

But if they move for a stay in court it can yield a conclusive result.

வால்பையன் said...

தேங்காய் உடைக்கலைனா சாமி கோவிச்சுகுமா!?

தேங்காய் உடைக்கனும்னு எந்த சாமி கேட்டுச்சு!?

thiruchchikkaaran said...

வால் பையன் சூப்பரா கேட்டார். இதுதான் பகுத்தறிவு.

ஒருத்தர் வீட்டுக்குப் போகும்போது பழம், பிஸ்கோத்து வாங்கிகினு போறோம். வாங்கிட்டு போகாட்டி ஏன் வாங்கிட்டு போகலைன்னு கேக்கவா போறாங்க? ஆனாலும் வாங்கிகினு போகிறோம்.

"வாங்கிகினு போறதை அவங்க தின்னுராங்க. நீ உடைக்கிற தேங்காயை சாமி தின்னவா போதுன்னு" கேட்டா சூப்பரா இருக்கும்ல.

ஆனால் "உடைக்கிற தேங்காயை நாலு பேரு எடுத்து துன்றான். அதான் சாமி எல்லார் மனசிலையும் இருக்கும்னு சொலறாங்க இல்ல" னு சொல்லிடுவாங்க.

அதனுனால் உஷாரா கேக்கணும்னா "சாமி இருக்கா, எங்க காட்டுனு" கேட்டுடுங்க.

பிரச்சினை இல்லாத பகுத்தறிவு அதுதான்.

வால்பையன் said...

திருச்சி!

யார் வீட்டுக்கும் போகும் போது எதும் வாங்கிட்டு போகனும்னு அவசியமில்லை,

தேங்காய் உடைத்தால் பத்து பேர் சாப்பிடுறான்னா, உங்க மனசுல சாமிக்கு தேங்காய் உதைத்தேன் என்பதை விட பத்து பேருக்கு பிச்சை போட்டேன் என்ற எண்ணம் தான் அதிகமா இருக்கு! இதுக்கு நேரடியா பிச்சை போட்டு போயிரலாமே, எதுக்கு இடையில் சாமி!?

தேங்காய் உடைப்பது இது தான் நன்மையா? அப்படினா இனிமேல் ஏன் தேங்காயை மட்டும் உடைக்கனும், எல்லா பழவகைகளும் சேர்ந்த்து உடைக்கலாமே மக்கள் நல்லா சாப்பிடட்டும்!

thiruchchikkaaran said...

நண்பர் வால் பையன் அவர்களே,
யார் வீட்டுக்கு போகும் போதும் வாங்கி கிட்டு போகணும்னு கட்டாயம் இல்லை. ஆனால் வெறுமனே போனால், "வெறுங்கையை வீசி கிட்டு வந்தான்" அப்படின்னு பேசிக்குவாங்க. அந்த வீட்டுல இருக்குற சிறுவர்களும், "அந்த மாமா ஒண்ணுமே வாங்கி கிட்டு வர மாட்டாரு" அப்பிடிம்பாங்க.

கடவுளைக் கும்பிடுறவன் நம்பிக்கை அடிப்படியில தான் கும்பிடுறான். கடவுள் அப்பிடின்னு ஒருத்தர் இருந்து நமக்கு ஏதாவது நல்லது நடந்தா நடக்கட்டுமே , அதுல என்ன தவறு என்று நினைப்பதுவும் ஒரு குவாலிபைடு பகுத்தறிவு தான் (Qualified rationalism). பைனான்ஸ் கம்பனியை நம்பி, பணம் போடுறான். பணத்தை திருப்பி தராம பட்டையா நாம‌த்தை போட்டு, துட்டை எடுத்துகினு எடுத்துகிட்டு கம்பெனியை பூட்டை போட்டு மூடி விட்டு ஓடிர்ராங்க‌.

ஆனாலும் சளைக்கமா ஜனங்க லட்சக் கணக்கிலே பணத்தைப் போட்டு ஏமாறுறாங்க.

இதுல பார்த்தா லட்சக் கணக்கில பணத்தைப் பைனான்ஸ் கம்பனில போட்டு அப்பால வாயில வயித்துல அடிச்சிகிரவனை விட, பத்து ரூபாய்க்கு தேங்காய் வாங்கி உடைச்சு விட்டு, கன்னத்துல போட்டுக்கிரவன் அதிக அறிவு உடையவன் அப்பிடின்னு ஒரு கருத்து உண்டு.

க‌ட‌வுளுக்கு ப‌டைக்க‌குள்ள‌ நாலு ச‌ன‌மும் சாப்பிட‌ட்டும்னு தான் கூழ் வூத்த‌ர‌து, பொங்க‌லு வைக்கிர‌து எல்லாம். நீங்க‌ சொல்ர‌து -எல்லா பழவகைகளும் சேர்ந்த்து உடைக்கலாமே- ந‌ல்ல‌ ஐடியா தான். அந்த‌க் கால‌த்துல‌
ப‌ழ‌மும் சேர்த்து ப‌டைச்சு, அந்த‌ப் ப‌ழ‌த்தை வ‌ச்சு தான் ப‌ஞ்சாமிர்த‌ம் செய்து எல்லொருக்கும் குடுத்தாங்க‌.