Showing posts with label ஜெனரல் டையர். Show all posts
Showing posts with label ஜெனரல் டையர். Show all posts

Thursday, September 3, 2009

தன்வினை தன்னைச் சுடும் - 2


தன்வினை தன்னைச் சுடும் - 1




இனி உதம் சிங் பற்றி பார்ப்போம்.

1899ல் தாஹல் சிங் என்ற ரயில்வே தொழிலாயின் மகனாகப் பிறந்த உதம் சிங் தனது ஏழாவது வயதிலேயே பெற்றோரை இழந்தார். அனாதை இல்லத்தில் வளர்ந்த இவர் தனது பதினேழாவது வயதில் ஒரே சகோதரரான சாது சிங்கையும் இழந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார்.

இளம் பருவமில்லையா? சமூகத்தில் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த இவரை புரட்சி இயக்கங்கள் ஈர்த்தன.

பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு பெற்றார் உதம்சிங்.

லாலா ஹர்தயாள் எனும் சிந்தனையாளர் அமெரிக்காவில் பாரத தேசியவாத இளைஞர்களை அரசியல் சித்தாந்தங்களில் பயிற்றுவித்து

புரட்சியாளர்களாக்கிடச் செயல்பட்டு வந்தார். இவரது கதர் (புரட்சி) எனும் இயக்கத்துடன் உதம் சிங் இணைந்தார். 1927ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள் கடத்தி வந்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த காலத்தில் (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1931ல் உதம் சிங் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் போலிஸ் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத் தமது பெயரை முகமது சிங் என மாற்றிக்கொண்டார். பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்.

அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய ஜெனரல் டையரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டையரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.



அன்று 1940 மார்ச் 13 ஏறக்குறைய இருபது ஆண்டுகள் - சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் மைக்கேல் டையர். பேசுவதற்கு எழுந்தான். ஒலிவாங்கியைப் பிடித்தான். தனது பேச்சை துவங்கினான்.

"லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்"

அப்போது டையரின் முகத்திற்கு முன்னே எழுந்து நின்றான் உதம் சிங். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கியுடன்.

பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டையர் குறிப்பிட்டான். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை டையர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார்.

உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட ஜெனரல் டையர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது.

சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங்.



சரி, யாரிந்த உதம் சிங். 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையின்
போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்கள் பேச்சை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த இருபது வயது இளைஞர். கல்லூரிப்பருவம். பெரியவர்களது கூட்டத்தில் தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்த படி அவர்களுடன் தேச பக்தியில் பங்கேற்றவர்.

சரி இவரது பெற்றோர் அந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா? இல்லை. சரி இவரது சகோதரர்கள் வேறு யாரேனும் இறந்தனரா? இல்லை. சரி இவரது மனைவி அல்லது காதலி யாரேனும் இறந்தார்களா? அதுவும் இல்லை. குழந்தைகள்? இல்லவே இல்லை. தனக்கென்று இழப்பதற்க்கு சொந்தம் ஏதும் அவருக்கு இருந்ததில்லை.

ஆயினும் மைக்கேல் டையர் உயிருக்கு அவரே நாள் குறித்தவரானார். இங்கே தான் நமது தத்துவம் வேலை செய்கிறது. நேரடியாக நாம் ஒருவருக்கு தீங்கு இழைக்காவிடிலும் நாம் இழைத்த தீமையின் அதிர்வு உண்டாக்கும் அலையில் சிக்கி நாமே மாண்டுபோவோம் என்கிற அலை பரவல் தத்துவம் இங்கே தான் தன் வேலையைத் துவங்கியது.

நேரடியாக உதம் சிங்கோ அவனது சொந்தங்களோ ஜாலியன் வாலாபக் என்னுமிடத்தில் காயப்படாத போதும், டையர் இழைத்த அநீதியின் அதிர்வு உத்தம் சிங்கின் மனதில் ஆத்திர அலையை உண்டு செய்தது.

அந்த அலை நாடெல்லாம் சுற்றி இறுதியில் டையர் வாழ்ந்துவந்த அவனது சொந்த பூமியான இங்கிலாந்திலேயே சுனாமியாய்ப் பாய்ந்து சுட்டெரித்தது. தன் வினை தன்னைச் சுட்டது.

அன்பர்களே! நம் கண் முன்னே நமக்கோ அல்லது மற்றவருக்கோ தீங்கிழைக்கும் நிறைய மனிதர்களைப் பார்த்திருப்போம். இவர்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா? என்று புலம்பியிருபோம். பாவம் செய்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள், நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்று அங்கலாய்த்திருப்போம். ஆனால் நண்பர்களே அலை வடிவான இந்த உலகில் ஒரு தவறு செய்து விட்டு அந்த அதிர்வலையிலிருந்து தப்பி யாரும் வாழ முடியாது.

ஒருவன் பாவம் செய்யும் போது அது செய்தியாகும். அவன் அதிலிருந்து தப்பிக்கக் கூடும். ஆனால் அவனுக்கு தண்டனை நம் கண்ணுக்கு, ஏன் உலகத்தின் கண்ணுக்கே தெரியாமல் கூட கிடைக்கக் கூடும் என்பதே மேற்கண்ட செய்தியின் சாரம்.

ஆக தீயவன் மட்டும் தான் வாழ்கிறான் என்ற 'நம்பிக்கையை' விட்டு விட்டு, நல்லவர்கள் தான் கைடைசி வரை நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொள்ளுங்கள்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதை நன்றாக ஆழ்மனதில் பதியச்செய்யுங்கள். முடிந்தவரை அடுத்தவர்களுக்கும் விளக்குங்கள். அதுவே இச்சமூகத்திற்கு நாம் செய்யும் சிறந்த ஆன்மீகப் பணியாகும்.

இந்தக் கட்டுரை துப்பாக்கி ஏந்திய உதம் சிங்கின் புகழ்பாட என்று எண்ணுபவர்களுக்கு ஒரு விளக்கம். தலைப்பின் படியே உத்தம் சிங்கிற்கும் தன் வினை தன்னைச் சுட்டது என்பதை மறக்க வேண்டாம். உதம் சிங் தூக்கிலிடப்பட்டார். வன்முறையாளர்களில் கொடுமைக்காரனும், கொடுமைக்காரனை தண்டிக்கும் வீரனும் ஒரே தராசில் தான் வைக்கப்படுவார்கள்.

"ஆனால் வன்முறையை யார் முதலில் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே காலம் இவ்விருவரையும் தீர்மானிக்கிறது."

எனவே அன்பைப் பரப்புவோம். ஆனந்தமாய் வாழ்வோம்.

ஜெய்ஹிந்த்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
கொசுறு: தூக்குக் கயிற்றை முத்தமிடும் முன் நீதிபதியின் முன் உத்தம் சிங் பேசிய கடைசி வார்த்தைகள் இவை:

"பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”

"Machine guns on the streets of India mow down thousands of poor women and children wherever your so-called flag of democracy and Christianity flies"

Wednesday, September 2, 2009

தன்வினை தன்னைச் சுடும் - 1


"நல்லது செய்தால் நல்லது நடக்கும்" என்று சென்ற பதிவில் பார்த்தோம். நல்லதே செய்யுங்கள், அவை அலையாகப் பரவி உங்களையே வந்து சேரும் என்பதை வலியுறுத்தும் ஒற்றை வாசகம் அது. அதே நேரத்தில் தீயது செய்யாதீர்கள் என்பதற்கும் நமது கலாச்சாரத்தில் சொல்லப்படும் ஒற்றை வரி தான் "தன்வினை தன்னைச் சுடும்".

ஆம் நாம் செய்யும் நன்மையும் தீமையும் நேரடியாக இல்லாவிட்டாலும் யார் மூலமாகவோ கூட நமக்கே திரும்பி வந்து சேரும் என்பதை நமது தர்மம் மிகவும் வலியுறுத்துகிறது. உணர்வுகள் அலைவடிவாக ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவும் கண்ணுக்குத் தெரியாத அந்த இயக்கத்தை இதைவிட யாரும் எளிமையாகச் சொல்லி விட முடியாது.

பட்டினத்தார் வசனத்திலும் முக்கியத்துவம் பெரும் வசனம் "தன் வினை தன்னைச் சுடும்".

எந்த தத்துவமும் நிஜ வாழ்க்கையில் கண்முன்னே நிரூபனம் ஆகும் போது தான் அந்தத் தத்துவத்தின் மீது நம்பிக்கை உண்டாகிறது. அப்படி நிஜ வாழ்க்கையில் இந்தத் தத்துவம் நிரூபனம் ஆனதை சற்றே திரும்பிப் பார்ப்போம்.

ஒருவரது வினை அவரைச் சுட்டது. அவரது பெயர் " மைக்கேல் ஓ டையர்". ஆம், 1919 ஆம் ஆண்டு வாக்கில் பஞ்சாபின் கவர்னராக பணியாற்றி வந்தவர் மைக்கேல் ஓ டையர்.

வழக்கமாக இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் கொண்டிருக்கும் வெறுப்புணர்ச்சியை விட அதிகமாகவே வெறுப்பையும் அடக்குமுறை மனோபாவத்தையும் கொண்டிருந்தான் இந்த மைக்கேல் ஓ டையர். ஜெனெரல் ஓ டையர் என்ற கொலைகாரனுக்கு அப்பாவி மக்களை கொன்று குவிக்க ஊக்கம் அளித்தும் அவன் செய்தது சரிதான் என்றும் அவனுக்கு வக்காலத்து வாங்கியதும் தான் இவன் செய்த வினை. அவனது வினை அவனைச் சுட்டது.

அன்று 1919 ஏப்ரல் 13, ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் அப்பாவி பொதுமக்கள் கையில் ஆயுதங்கள் இல்லாதவர்களாய் நாம் அமர்ந்திருக்கும் இந்த பூமி நமக்கே சொந்தம் என்பதை வெள்ளையர்களிடம் உறுதியாகச் சொல்ல கூடியிருந்த இடம்.

இறுதியான கூட்டமாக அவர்களுக்கு அது மாறப்போவதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சட்ட விரோதமாக கூட்டத்தைக் கூட்டி அரசுக்கெதிரான புரட்சி நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுடனும் கூடியிருப்பவர்கள் மனிதர்கள் அல்ல ஆட்டு மந்தைகள் என்ற மமதையுடனும் உள்ளே வந்தான் ஜெனரல் டையர்.

பீரங்கி நுழைய முடியாத குறுகிய பாதையாதலால் துப்பாக்கியும் தோட்டாக்களையும் தொங்கவிட்டபடி 90 பேர் உள்ளே நுழைந்தார்கள். மிருக வெறியுடன் கூட்டத்தைப் பார்த்த டையர் மான் கூட்டமென அமர்ந்திருந்த அமைதியான மக்களைத் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைத்தெடுக்கச் சொன்னன்.

துப்பாக்கி வாயிலிருந்து துப்பப்பட்ட தோட்டாக்கள் அப்பாவி மக்களைத் தப்பவிடாமல் தாக்கிக் கொன்றது. ஆயிரக்கணக்கானோர் அங்கேயே மடிந்தனர். குண்டுகளுக்கு பயந்தோடிய பலர் பாழும் கினற்றில் பாய்ந்து குதித்தனர். சிலர் மடிந்தார்கள், சிலர் பிழைத்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கானவர்களை ரத்தச் சகதியில் புரட்டி எடுத்தவன், இனியும் கூட்டம் கூடுவது பற்றி யோசித்தீர்களானால் எஞ்சியவர்களும் மடிவீர்கள் என்று மிரட்டி சென்றான்.


பிறகு நடந்தது என்ன? பஞ்சாப் மாகானத்தின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டையர், "ஜெனெரல் ரெஜினால்ட் டையர் செய்தது சரியே!" என்று அவனுக்கு ஆதரவு அளித்தான். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மைக்கேல் டையரை கண்டித்தது. தவறாக படைகளை வழிநடத்தி பெருமளவு கொலை நிகழக்காரணாக இருந்தாய் என்று கூறி அவனை கவர்னர் பதவியில் இருந்து நீக்கி இந்தியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த அவனுக்கு தண்டனை?

நாடு திரும்பிய மைக்கேல் ஓ டையருக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அவன் மகிழ்ச்சியாக இருந்தான். சொந்த நாட்டில் மதிப்பும் மரியாதையும் கொண்டு சுதந்திரமாக நடமாடினான். தனது ஆசா பாசங்களுடன் அற்புதமாக வாழ்ந்து வந்தான். பெரிய மனிதர்களுடன் கூடிக் குலாவுவதும், மேடையில் கெளரவமாக நின்று பேசுவதும் என்று காலங்கள் சென்றன.

அன்றும் அப்படித்தான் 1940 மார்ச் 13 ஏறக்குறைய இருபது ஆண்டுகள் - சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் மைக்கேல் டையர்.

பேசுவதற்கு எழுந்தான். ஒலிவாங்கியைப் பிடித்தான்.

தனது பேச்சை துவங்கினான்.

"லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்"

அப்போது டையரின் முகத்திற்கு முன்னே உயர்ந்தெழுந்தது 40 வயது மதிக்கத்தக்க இளைஞனின் உருவம். தனது கைத்துப்பாக்கியை நீட்டி ஜனரல் டையரை நோக்கி சுட்டது அந்த உருவம்.

தோட்டாவால் பாதகம் செய்தவன் தோட்டாவாலேயே மடிந்தான். ஆம் டையர் கிழிந்தது.

கிழித்தவன் பெயர் "உதம் சிங்". தெய்வம் நின்று கொல்லும்.



தெய்வத்தை பற்றி நாளை...

தன்வினை தன்னைச் சுடும்-2