Thursday, September 3, 2009

தன்வினை தன்னைச் சுடும் - 2


தன்வினை தன்னைச் சுடும் - 1
இனி உதம் சிங் பற்றி பார்ப்போம்.

1899ல் தாஹல் சிங் என்ற ரயில்வே தொழிலாயின் மகனாகப் பிறந்த உதம் சிங் தனது ஏழாவது வயதிலேயே பெற்றோரை இழந்தார். அனாதை இல்லத்தில் வளர்ந்த இவர் தனது பதினேழாவது வயதில் ஒரே சகோதரரான சாது சிங்கையும் இழந்தார். 1918ல் அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றார்.

இளம் பருவமில்லையா? சமூகத்தில் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த இவரை புரட்சி இயக்கங்கள் ஈர்த்தன.

பலமுறை ஆப்பிரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கே இந்திய தேசிய நடவடிக்கைகளில் தீவிரப் பங்கு பெற்றார் உதம்சிங்.

லாலா ஹர்தயாள் எனும் சிந்தனையாளர் அமெரிக்காவில் பாரத தேசியவாத இளைஞர்களை அரசியல் சித்தாந்தங்களில் பயிற்றுவித்து

புரட்சியாளர்களாக்கிடச் செயல்பட்டு வந்தார். இவரது கதர் (புரட்சி) எனும் இயக்கத்துடன் உதம் சிங் இணைந்தார். 1927ல் பகத்சிங்கிற்காகத் துப்பாக்கிகளையும் தளவாடங்களையும் பாரதத்துக்குள் கடத்தி வந்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த காலத்தில் (1931) பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1931ல் உதம் சிங் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் போலிஸ் கெடுபிடிகளில் இருந்து தப்புவதற்காகத் தமது பெயரை முகமது சிங் என மாற்றிக்கொண்டார். பிரிட்டிஷ் சி.ஐ.டி.கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் அவர் 1933ல் காஷ்மீருக்குச் சென்று அங்கிருந்து பிரிட்டிஷ் உளவாளிகள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று அங்கிருந்து 1934ல் இங்கிலாந்துக்குள் நுழைந்தார்.

அங்கே ஒரு காரும் துப்பாக்கியும் வாங்கிவிட்டு ஜாலியன்வாலாபாக் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய ஜெனரல் டையரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அவருக்கு டையரைக் கொல்ல பல வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனால் அவர் அமைதியாக இருந்தார். ஏனெனில் தமக்கு எளிமையாக இருக்கும் என்பதைக் காட்டிலும் அச்செயல் உலக மக்களுக்கு ஒரு செய்தியாக அமைய வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார்.அன்று 1940 மார்ச் 13 ஏறக்குறைய இருபது ஆண்டுகள் - சரியாக ஒரு மாத காலகட்ட இடைவெளி. காக்ஸ்டன் ஹாலில் கிழக்கு இந்திய அசோசியேஷன் மற்றும் ராயல் சென்ட்ரல் ஏஷியன் சொசைட்டி ஆகியவற்றின் கூட்டத்தில் பங்கு பெற வந்திருந்த சீமான்களில் முக்கியமானவனாக வந்திருந்தான் மைக்கேல் டையர். பேசுவதற்கு எழுந்தான். ஒலிவாங்கியைப் பிடித்தான். தனது பேச்சை துவங்கினான்.

"லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்"

அப்போது டையரின் முகத்திற்கு முன்னே எழுந்து நின்றான் உதம் சிங். கூட்டத்தில் கையில் ஒரு புத்தகத்துடன் உதம் சிங். புத்தகத்துக்குள் கச்சிதமாக வெட்டப்பட்ட பக்கங்களுக்குள் 0.45 ஸ்மித் வெல்ஸன் கைத்துப்பாக்கியுடன்.

பஞ்சாபில் தாம் செய்த செயலுக்காகத் தாம் சிறிதளவும் வருத்தப்படவில்லை என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீடித்த வாழ்வுக்காக பஞ்சாபில் தாம் செய்ததை ஆப்பிரிக்காவிலும் தாம் வாய்ப்பு கிடைத்தால் அரங்கேற்றச் சித்தமாக இருப்பதாகவும் தன் பேச்சில் டையர் குறிப்பிட்டான். “அந்த வாய்ப்பு உமக்கு கிடைக்கப்போவதில்லை டையர் அவர்களே” எனக் கூறியபடி துப்பாக்கியை எடுத்தார்.

உதம் சிங்கின் குறி தவறவில்லை முதல் குண்டு அவன் மார்பையும் இரண்டாம் குண்டு அவனது சிறுநீரகத்தையும் சிதைக்க, தாக்கப்பட்ட ஜெனரல் டையர் அங்கேயே மரணம் அடைந்தான். இந்திய அரசு செக்ரட்டரியான செட்லாண்ட் காயமடைந்தார். லாமிங்டன் என்கிற பிரிட்டிஷ் பிரபுவின் கை சிதறிப் போனது.

சிரித்த முகத்துடன் கைதானார் உதம் சிங்.சரி, யாரிந்த உதம் சிங். 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையின்
போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைவர்கள் பேச்சை ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருந்த இருபது வயது இளைஞர். கல்லூரிப்பருவம். பெரியவர்களது கூட்டத்தில் தன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று சிந்தித்த படி அவர்களுடன் தேச பக்தியில் பங்கேற்றவர்.

சரி இவரது பெற்றோர் அந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்களா? இல்லை. சரி இவரது சகோதரர்கள் வேறு யாரேனும் இறந்தனரா? இல்லை. சரி இவரது மனைவி அல்லது காதலி யாரேனும் இறந்தார்களா? அதுவும் இல்லை. குழந்தைகள்? இல்லவே இல்லை. தனக்கென்று இழப்பதற்க்கு சொந்தம் ஏதும் அவருக்கு இருந்ததில்லை.

ஆயினும் மைக்கேல் டையர் உயிருக்கு அவரே நாள் குறித்தவரானார். இங்கே தான் நமது தத்துவம் வேலை செய்கிறது. நேரடியாக நாம் ஒருவருக்கு தீங்கு இழைக்காவிடிலும் நாம் இழைத்த தீமையின் அதிர்வு உண்டாக்கும் அலையில் சிக்கி நாமே மாண்டுபோவோம் என்கிற அலை பரவல் தத்துவம் இங்கே தான் தன் வேலையைத் துவங்கியது.

நேரடியாக உதம் சிங்கோ அவனது சொந்தங்களோ ஜாலியன் வாலாபக் என்னுமிடத்தில் காயப்படாத போதும், டையர் இழைத்த அநீதியின் அதிர்வு உத்தம் சிங்கின் மனதில் ஆத்திர அலையை உண்டு செய்தது.

அந்த அலை நாடெல்லாம் சுற்றி இறுதியில் டையர் வாழ்ந்துவந்த அவனது சொந்த பூமியான இங்கிலாந்திலேயே சுனாமியாய்ப் பாய்ந்து சுட்டெரித்தது. தன் வினை தன்னைச் சுட்டது.

அன்பர்களே! நம் கண் முன்னே நமக்கோ அல்லது மற்றவருக்கோ தீங்கிழைக்கும் நிறைய மனிதர்களைப் பார்த்திருப்போம். இவர்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா? என்று புலம்பியிருபோம். பாவம் செய்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள், நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்று அங்கலாய்த்திருப்போம். ஆனால் நண்பர்களே அலை வடிவான இந்த உலகில் ஒரு தவறு செய்து விட்டு அந்த அதிர்வலையிலிருந்து தப்பி யாரும் வாழ முடியாது.

ஒருவன் பாவம் செய்யும் போது அது செய்தியாகும். அவன் அதிலிருந்து தப்பிக்கக் கூடும். ஆனால் அவனுக்கு தண்டனை நம் கண்ணுக்கு, ஏன் உலகத்தின் கண்ணுக்கே தெரியாமல் கூட கிடைக்கக் கூடும் என்பதே மேற்கண்ட செய்தியின் சாரம்.

ஆக தீயவன் மட்டும் தான் வாழ்கிறான் என்ற 'நம்பிக்கையை' விட்டு விட்டு, நல்லவர்கள் தான் கைடைசி வரை நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொள்ளுங்கள்.

தன் வினை தன்னைச் சுடும் என்பதை நன்றாக ஆழ்மனதில் பதியச்செய்யுங்கள். முடிந்தவரை அடுத்தவர்களுக்கும் விளக்குங்கள். அதுவே இச்சமூகத்திற்கு நாம் செய்யும் சிறந்த ஆன்மீகப் பணியாகும்.

இந்தக் கட்டுரை துப்பாக்கி ஏந்திய உதம் சிங்கின் புகழ்பாட என்று எண்ணுபவர்களுக்கு ஒரு விளக்கம். தலைப்பின் படியே உத்தம் சிங்கிற்கும் தன் வினை தன்னைச் சுட்டது என்பதை மறக்க வேண்டாம். உதம் சிங் தூக்கிலிடப்பட்டார். வன்முறையாளர்களில் கொடுமைக்காரனும், கொடுமைக்காரனை தண்டிக்கும் வீரனும் ஒரே தராசில் தான் வைக்கப்படுவார்கள்.

"ஆனால் வன்முறையை யார் முதலில் செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே காலம் இவ்விருவரையும் தீர்மானிக்கிறது."

எனவே அன்பைப் பரப்புவோம். ஆனந்தமாய் வாழ்வோம்.

ஜெய்ஹிந்த்.

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
கொசுறு: தூக்குக் கயிற்றை முத்தமிடும் முன் நீதிபதியின் முன் உத்தம் சிங் பேசிய கடைசி வார்த்தைகள் இவை:

"பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”

"Machine guns on the streets of India mow down thousands of poor women and children wherever your so-called flag of democracy and Christianity flies"

10 comments:

வால்பையன் said...

//
"பாரதத்தின் வீதிகளில் எங்கெல்லாம் நீங்கள் சொல்லும் மேற்கத்திய ஜனநாயகத்தின் கொடியும் கிறிஸ்தவமும் ஆக்கிரமித்துள்ளதோ அங்கெல்லாம் இயந்திரத் துப்பாக்கிகள் குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவித்து வருகிறது.”//

அவர் அன்னைக்கு சொன்னாலும் இன்னைக்கு போடும் போது உங்க பகுத்தறிவு எங்க காணாம போச்சு!
கிருஸ்தவர்கள் இருக்குமிடமெல்லாம் எல்லாம் சாகுறாங்களாக்கும்!?

சரி விடுங்க உத்தம்சிங் மாதிரி யாரும் ஏன் ராஜபக்‌ஷேவை கொல்லவில்லை!?
அதிகமான பகுத்தறிவோ!?

hayyram said...

அன்புள்ள வால்பையனுக்கு!

நீங்கள் படிக்கவே இல்லையோ

//தலைப்பின் படியே உத்தம் சிங்கிற்கும் தன் வினை தன்னைச் சுட்டது என்பதை மறக்க வேண்டாம். உத்தம் சிங் தூக்கிலிடப்பட்டார். வன்முறையாளர்களில் கொடுமைக்காரனும்,
கொடுமைக்காரனை தண்டிக்கும் வீரனும் ஒரே தராசில் தான் வைக்கப்படுவார்கள்//

வன்முறை எந்த ரூபத்திலும் தவறு என்பதே கட்டுரையின் சாரம்.


சரி ராஜபக்ஷே மீது அவ்வளவு கோபம் உள்ள நீங்கள் ஏன் உத்தம் சிங் ஆகவில்லை? உட்கார்ந்த இடத்திலிருந்து சொகுசாக வன்முறையைப் பரப்பினால் போதும். நமக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்ற சுயநலம் தானே!

வால்பையன் said...

இம்மாதிரியான கதைகள் தான் மக்களின் பகுத்தறிவை மழுங்கடிக்கும் என்பது என் கருத்து!,

அக்காலத்தில் நம் சொல்லை கேட்க யாருமில்லை, இன்று உலக நாடுகள் இருக்கிறது, வன்முறைக்கு வன்முறை சரியல்ல!

நான் நானகவே இருக்க விரும்புகிறேன்!

hayyram said...

//நான் நானகவே இருக்க விரும்புகிறேன்// வாழ்த்துக்கள்.

ஆனால் நீங்கள் இப்போது எதுவாக இருக்கிறீர்கள் என்று விளக்கிச் சொல்ல முடியுமா?

//இம்மாதிரியான கதைகள் தான் மக்களின் பகுத்தறிவை மழுங்கடிக்கும் என்பது என் கருத்து!//

கடவுள் நம்பிக்கைப் பற்றியது தான் நீங்கள் குறிப்பிடும் பகுத்தறிவென்றால் ஆதைப்பற்றி நீங்களும் ஒரு மூலையில் பேசிக்கொண்டே இருங்கள். மக்களுக்கு தெரியும் எது பகுத்தறிவு என்று. சரிதானே.

Meens said...

You articles has an answer for any situation.. On seeing your posts, anyone can be relaxed..Do write more...

hayyram said...

thanks Meens

தமிழ். சரவணன் said...

நண்பரே தங்கள் வலைபூ பக்கத்தை இன்று தான் படிக்க எனக்கு வாய்பு கிடைத்து... கருத்துகள் அனைத்தும் மிக அருமை மற்றும் உண்மை..

//ஆயினும் ஜெனரல் டையர் உயிருக்கு அவரே நாள் குறித்தவரானார். இங்கே தான் நமது தத்துவம் வேலை செய்கிறது. நேரடியாக நாம் ஒருவருக்கு தீங்கு இழைக்காவிடிலும் நாம் இழைத்த தீமையின் அதிர்வு உண்டாக்கும் அலையில் சிக்கி நாமே மாண்டுபோவோம் என்கிற அலை பரவல் தத்துவம் இங்கே தான் தன் வேலையைத் துவங்கியது.//

//அன்பர்களே! நம் கண் முன்னே நமக்கோ அல்லது மற்றவருக்கோ தீங்கிழைக்கும் நிறைய மனிதர்களைப் பார்த்திருப்போம். இவர்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா? என்று புலம்பியிருபோம். பாவம் செய்பவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள், நாம் தான் கஷ்டப்படுகிறோம் என்று அங்கலாய்த்திருப்போம். ஆனால் நண்பர்களே அலை வடிவான இந்த உலகில் ஒரு தவறு செய்து விட்டு அந்த அதிர்வலையிலிருந்து தப்பி யாரும் வாழ முடியாது. //

இந்த கருத்துகளை படித்தபொழுது மனம் மிக மகிழ்ந்தது.. ஒரு வண்முறைகூட்டத்தில் எனது இரக்க குணத்தால் சிக்கி புழுவாக நசுக்கப்பட்டவன் நான் சட்டமும் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றது... இந்த கருத்துக்களை படித்தபொழுது என்மனம் எல்லையில்ல அனந்தம் அடைந்தது... தன்வினை தன்னைச்சுடும்.. சட்டத்தின் ஒட்டைகளில் இருந்து தப்பிக்கலாம் ஆனால் அதிர்வலைகளில் இருந்து யாரும் தப்பமுடியாது என்பது அப்பட்டமான உண்மை... மிகுந்த மகிழ்வுற்றேன்..

//ஆக தீயவன் மட்டும் தான் வாழ்கிறான் என்ற 'நம்பிக்கையை' விட்டு விட்டு, நல்லவர்கள் தான் கைடைசி வரை நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கையைக் கொள்ளுங்கள்//

ஆம் இதுவும் உண்மை இந்த நம்பிக்கையில்தான் எனது வாழ்வை முன்பை விட மிகமிக ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

தங்கள் கட்டுரைகளும் கருத்துக்களும் பெருகட்டும் - வாழ்க வளமுடன் என்று வாழ்தி மகிழ்கின்றேன்..

தங்கள் அன்புள்ள,

தமிழ். சரவணன்

hayyram said...

நன்றி தமிழ். சரவணன்,

//இந்த கருத்துகளை படித்தபொழுது மனம் மிக மகிழ்ந்தது//

உண்மை என்றும் மகிழ்ச்சியையே கொடுக்கும்.

//இந்த நம்பிக்கையில்தான் எனது வாழ்வை முன்பை விட மிகமிக ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்//

இன்னும் ஆனந்தமாக வாழ்வீர்கள் கவலைப்படாதீர்கள். நல்லவர்களுக்கு பஞ்சமில்லை. உங்கள் ஆனந்தம் அதிகரிக்க மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறேன்.

Madhusudhanan D said...

Further adding about Udham Singh:

He was asked by the judge for his last wish before hanging. His reply was:
"Bury me in England, not in India"

He was asked for reason. He replied that, the Britishers ruled his motherland for 200 years. But India cannot rule England. So, he wished to acquire at least a 6 feet land of their country.

What a patriotism!!!

hayyram said...

//he wished to acquire at least a 6 feet land of their country.// touching.