Sunday, May 12, 2013

சோனியா உளவாளியா?


ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்தி என முகநூலில் இதனை Tamilarasu Subramaniam என்பார் எல்லோருக்கும் பகிரப்பட வேண்டி பதிந்து வைத்திருந்தார். திரு Tamilarasu Subramaniam அவர்களுக்கு என் நன்றி! நண்பர்களுக்காக இங்கேயும்..


ஜனதா கட்சியின் தலைவரான ஜெபமணி மோகன்ராஜிடம் இலங்கை தொடர்பான சோனியாவின் நிலைபாட்டை கேட்ட பொழுது மனுஷன் சோனியாவை வெளிநாட்டு உளவாளி என்று கூறி நம்மையே அதிரவைத்தார். அவரின் அதிரடி இதோ..

கேள்வி: சோனியாவை வெளிநாட்டு ஏஜென்ட் என்று நீங்கள் சொல்வது ஏன் ?

பதில் : நேரு குடும்பத்தில் மூன்று கொடூர மரணங்கள் நடந்தன. முதலில் சஞ்சய் காந்தி மரணமடைந்தார். இதை விபத்து என்றார்கள். அடுத்ததாக இந்திராகாந்தி துப்பாகியால் சுடப்பட்டு இறந்தார். கடைசியாக காந்தி மனித வெடிகுண்டால் மரணமடைந்தார். இந்த மூன்று மரணங்களுமே ராஜிவை சோனியா திருமணம் செய்துகொண்ட பிறகுதான் நடந்தது. இதன் பின்னணியில் சோனியா இருக்கிறார் என்பதே என் ஊகம்.

கேள்வி: ராஜிவை மனம் முடித்த பிறகே இந்த மரணங்கள் நடந்தன என்பதற்காக சோனியாவை சந்தேகிப்பது சரியாக இருக்குமா?

பதில் : மூன்று மரணங்கள் நடந்த சூழ்நிலைகளை பார்த்தால் இதை உணர முடியும். முதலில் சஞ்சய் காந்தியின் மரணத்தை எடுத்துக் கொள்வோம். இந்திரா பிரதமராக இருந்த சமயம். அவர் தன்னுடைய யோகா குரு திரேந்திர பிரமசாரியுடன் இரவு மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருகிறார். அப்போது அவருக்கும் சஞ்ஜய் காந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தாயை தனயன் அடித்துவிடுகிறார்.

கேள்வி: குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். இந்திராவை அவரது மகன் சஞ்சய் காந்தி அடித்தார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?.

பதில்: இருக்கிறது. அந்த சமயத்தில் இந்திராவின் பாதுகாவலராக அவரது வீட்டில் பணிபுரிந்த எனது நண்பர் சொன்னார். இது பற்றி விசாரணை வரும் பட்சத்தில் இன்னும் விளக்கமாக சொல்ல தயாராக இருக்கிறேன்.. இந்த அடிதடி சம்பவம் நடந்த சில நாட்களில் சஞ்சய் காந்தி விமான விபத்தில் மரமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எந்த தாய்க்கும் தன் மகனை கொல்ல மனசு வராது. அதே நேரம் இந்த சம்பவத்தை யாரோ தன் சுயநலத்துக்காக பயன்படுத்தி இருக்கலாம்.

கேள்வி: அது ஏன் விபத்தாகவே இருந்திருக்க கூடாது?

பதில்: இதை விபத்து என்றுதான் அறிவித்தார்கள் இது பற்றி விசாரணை நடக்கும் என்று அறிவிக்கவும் செய்தார்கள். ஆனால் எந்த ஒரு முடிவும் எடுக்கபடாமலேயே அந்த விசாரணை கைவிடப்பட்டது. பிரதமரின் மகன் அடுத்த பிரதமர் என்று கருதப்பட்ட சஞ்சய் மரணத்தை விசாரிக்காமல் போனது நெருடவில்லையா?. விசாரணை முழுமையாக நேர்மையாக நடந்திருந்தால் முக்கியமானவர்கள் சிக்குவார்கள் என்பதாலேயே கைவிடப்பட்டது.

கேள்வி: இந்திரா கொலையிலும் சோனியாவை சந்தேகபடுகிறீர்களே?

பதில்: ஆமாம். பிரதமராக இந்திரா கொல்லப்பட்டது எவ்வளவு வேதனையான விஷயம். ஆனால் அதையும் சரியாக விசாரிக்கவில்லை. இந்த கொலை குறித்து தக்கர் கமிசன் அமைக்கப்பட்டது. அந்த விசாரனையின்போது இந்திராவின் தனி செயலாளராக இருந்த ஆர் கே தவான் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும்படி இருந்ததால் அவரையும் நீதிபதி விசாரித்தார். ஆனால் அந்த விசாரணையின் பொது தனக்கு தெரிந்த எந்த ஒரு தகவலையும் ஆர் கே தவான் சொல்லவில்லை. " நான் பேச ஆரம்பித்தால் ஒரு பெரிய குடும்பத்தின் மானம் கப்பல் ஏறும் ஆகவே விசாரணைக்கு இதனால் ஒத்திழைப்பு கொடுக்க முடியாது" என்று வெளிப்படையாகவே சொன்னார். ஆனாலும் நீதிபதி தக்கர் விசாரனை அறிக்கையில் அவரை புலனாய்வு விசாரணை பிரிவு விசாரிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தார். ஆனால் தவானிடம் கண் துடைப்பு விசாரணை நடத்திவிட்டு விட்டு விட்டார்கள். இந்திரா கொலைக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் ராஜீவ் தவானை விலக்கியே வைத்திருந்தார்.. அதன் பின்னர் என்ன நடந்ததோ?. ஆர் கே தவானை காங்கிரஸ் கட்சியின் நிரந்தர பொது செயலாளர் ஆகினார் சமீபத்தில் தச்வானை பதவி எதுவும் கொடுக்காமல் விட்டு விட்டார்கள். உடனே அவர் என் வாழ்கை வரலாற்றை எழுத போஹிறேன் என்று அறிவித்தார். உடனே அவருக்கு கட்சியில் பதவி கொடுத்தார் சோனியா. ஆக ராஜீவ் சோனியாவை மிரட்டி பதவி வாங்குகிறார் என்றால் அவரிடம் இருக்கும் ரகசியம் என்ன வென்று யோசிக்க வேண்டாமா?.

கேள்வி: ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் சோனியாவை விசாரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது அதிர்சிகரமாக இருகிறதே..

பதில்: தெளிவாக யோசித்தால் நான் சொல்வதை யாரும் ஏற்றுகொள்வார்கள். விடுதலைபுலிகள் கொன்றார்கள் என்பதோடு இந்த கொலை விவகாரம் மூடப்பட்டது. ஆனால் விசாரணை சரிவர நடக்கவில்லை என்று விசாரணை அதிகாரியே புத்தகம் எழுதுகிறார். அப்போது மிக முக்கிய பொறுப்பில் இருந்த ஆர் கே நாராயணன் கொலை நடந்த இடத்தில எடுக்கப்பட்ட வீடியோவை எடுத்து கொண்டு போகிறார். அதை கோர்டில் ஒப்படைக்கவே இல்லை. சுபிரமணிசாமிக்கு இந்த கொலை பற்றிய தகவல் முன்கூட்டியே தெரியும் என்று திருச்சி வேலுசாமி சொல்கிறார் புத்தகமும் எழுதிவிட்ட ஆர். எதற்கெடுத்தாலும் எகிறி குதிக்கும் சாமி இந்த விவகாரத்தில் வாயை திறக்க மறுக்கிறார். இதையெலாம் ஏன் சோனியா கண்டு கொள்ளவில்லை இதில் தான் இருக்கிறது சூட்சமம்.

கேள்வி: இப்படி தொடர் கொலைகள் நடபதால் சோனியாவுக்கு என்ன லாபம்..?

பதில்: இந்தியா மிகபெரியநாடு. இயற்கை வளம் மனித வளம் நிரம்பிய நாடு. நிச்சயம் வல்லரசாகும். அதனை தகுதியும் இந்தியாவுக்கு உண்டு. இதகண்டு மற்ற
நாடுகள் பயபடுகின்றன. ஆகவே இந்தியாவை பலவீனபடுத்த பலவித ரகசிய வேலைகள் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாக சோனியாவை அனுப்பி ராஜீவுடன் காதல் நாடகம் நடத்த ஏவிவிட்டு இருக்கிறார்கள்.

கேள்வி: இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளவராக இருக்கும் அவர் மீது  இப்படி அபாண்டமாகச் சொல்லலாமா?.

பதில்: இந்தியாவின் பிரதமரைத் தீர்மானிக்கும் சோனியாவுக்கு இந்தியாவின் மீது கடுகளவும் பாசம் கிடையாது. அவர் ராஜிவை மணந்த பிறகு பல வருடங்கள் இந்திய குடியுரிமை பெறவே இல்லை. தவிர தேசத்தின் முக்கிய பாதுகாப்பு விசயங்களிலும் தலைட்டார். அப்போது அவர் எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லை. அதாவது எம். பி ஆகக்கூட இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.  இந்திரா பிரதமாராக இருந்த என்பதுகளில் பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. அப்போது இந்திராவின் பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத வாகனம் வாங்க தீர்மானிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் இந்த தொழில் நுட்பம் இல்லை என்பதால் ஜெர்மனி நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த வாகன காண்ட்ராக்ட்டில் ஈடுபட்டு கமிஷன் வாங்கியவர் சோனியாவின் சகோதரியின் கணவர். இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக வாகனம் வாங்குவதை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் செய்தால் தான் அதில் அடங்கியிருக்கும் பாதுகாப்பு விஷயங்கள் கவனிக்கப்படும். ஆனால் இந்த காண்ட்ராக்ட்டை சோனியா தலையிட்டு தனது இத்தாலி கூட்டாளிக்கு வாங்கித் தருகிறார்.

கேள்வி: இதற்கான ஆதாரம்?

பதில்: அத்தனையும் இருக்கிறது. உதாரணம் சொல்கிறேன்..ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட அதிரடிப்படைக்கு வெளிநாட்டு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போதும் தனது நாட்டு விசுவாசத்தை காண்பித்தார் சோனியா. இத்தாலிய பாதுகாப்பு படையினர் மூலம் இந்திய படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இத்தாலிய பாதுகாப்புப் படை பயிற்சி அளிக்கும் அளவுக்கு பெயர் பெற்றதல்ல.  ஆனாலும் தனது வற்புறுத்தலால் இப்படி நடக்கச் செய்தார் சோனியா.  இத்தாலிய அதிகாரிகள் , இந்திய அதிகாரிகளை அவமானப்படுத்தும் விதமாக தொடர்ந்து நடந்து வந்ததால் இந்த பயிற்சி முழுமை பெறாமலேயே நிறுத்தப்பட்டது. பத்திரிக்கையாளர் குருமூர்த்தியும் இந்த விஷயங்களை விபரமாக எழுதியிருக்கிறார். தவிர ராஜிவ்காந்தி இருந்த போதும் சரி இறந்த பிறகும் சரி குடும்பத்தினருடன் சோனியா வெளிநாடு சென்றால் இந்திய உளவு அதிகாரிகளிடம் சொல்லாமல் மறைத்துவிடுவார். ஆக சோனியா, நல்ல நோக்கத்துடன் ராஜிவை திருமணம் முடிக்கவில்லை அவரை விசாரித்தால், குறிப்பாக சஞ்சய், இந்திரா, ராஜீவ் மரண வழக்குகளை விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரும்.

கேள்வி: அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில்: "இன்னொரு விஷயம் வெளிநாட்டு இதழ் ஒன்றில் குறிப்பிட்ட நோக்கத்துக்காகவே சோனியா இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. தவிர சோனியாவை விசாரிக்க வாய்ப்பு இருக்கிறதா என்கிறீர்கள். ஏன் விசாரிக்க கூடாது?. எந்த தனி மனிதரையும் விட என் இந்தியா மேலானது" என்று தீர்மானமாக சொல்லி முடிக்கிறார் ஜெபமணி மோகன்ராஜ்.



ஆத்தி.. பல நாட்களாக பலருக்கு ஊகமாக இருந்த சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிறது போலத் தெரிகிறதே...!

Wednesday, May 1, 2013

நான் தப்பு செஞ்சிட்டேன்..! ஒத்துக்கொண்ட ஈ வெ ரா


பி டி ராஜன்

முதலியார்கள் மீது கடும் வெறுப்பு கொண்டிருந்தார் வெ ரா என்பதைப் பற்றி பார்த்தோம். தி மு வைத் தோற்றுவித்த அண்ணாதுரை வெ ரா வை எப்படியெல்லாம் புறக்கனித்தார் என்பதையும் பார்ப்போம்.

பொன்னம்பல தியாக ராஜன் பி டி ராஜன் என்று அழைக்கப்பட்டார். நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்களுள் இவரும் ஒருவர். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தன் ஆளுகைக்குள் நீதிக்கட்சி வரவேண்டும் என்று விரும்பினார்ஆனால் பி டி ராஜன் இதனை விரும்பவில்லை

வெ ரா பி டி ராஜனுடன் முரன்பட்டார். காரணம் பி டி ராஜன் ஒரு முதலியார்அதனால் வெ ரா வின் திராவிடர் கழகத்தில் இணைந்திருக்க அவர் விரும்பவில்லை.  தனியாக நீதிக் கட்சியை பதிவு செய்து கொண்டு அதிலேயே நீடித்தார்

சில வருஷங்களுக்குப் பின்னர் திமுக மாபெரும் அரசியல் கட்சியாக உருவெடுத்து தேர்தலில் வென்றது. அண்ணாதுரை முதல்வரானார். அப்போது அண்ணாதுரையை நீதிக்கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பி டி ராஜன் அழைப்பு விடுத்தார். அந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை கலந்து கொள்ளக் கூடாது என வெ ரா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் வெ ரா முதலியார்களை ஒழிக்க வேண்டும் என்கிற பிரச்சாரத்தில் இருந்ததால் அண்ணாதுரை வெ ராவை புறக்கனித்தார். பி டி ராஜனின் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். காரணம் அண்ணாதுரையும் முதலியார்.

ஆக முதலியார்களை வெறுத்த வெ ரா வை முதலியார்கள் ஒதுக்கினார்கள் என்பது வரலாறு.

காங்கிரஸில் தனது செல்வாக்கு செல்லாக்காசானவுடன் பிராமணர்களை ஒழிக்க வேண்டுமென கிளம்பிவிட்டார் ராமசாமி நாயக்கர். காரணம் அக்கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருந்தார்கள் என்பதே! அது போலவே சில முதலியார்கள் மீது கொண்ட கோபத்தால் முதலியார் ஒழிப்பு போராட்டமும் நடத்திக் கொண்டிருந்தார்

ஆனால் அத்தகைய ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமாக தவறு செய்துவிட்டோம் என்பதை வெ ரா உணர்ந்தே இருந்திருக்கிறார்.

அது பற்றி 'சிலம்புச் செல்வர் பொ சி யுடன்' புத்தகத்தில் திரு மு மாரியப்பன் அதனைப் பதிவு செய்கிறார். அதிலிருந்து சில வரிகள்...

ஒரு முறை கும்பகோனம் பயனியர் விடுதியில் பொ சி மற்றும் அவருடன் மு மாரியப்பனும் தங்கி இருந்தார்கள். அங்கே பக்கத்து அரையில் ராமசாமி நாயக்கரும் தங்கியிருக்கிறார் என்ற விபரம் பொ சி க்கு தெரியவரவே இருவரும் சென்று வெ ரா வை அவரது அரையில் சந்திர்க்கிறார்கள்.

முதலியார்களின் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டிருந்த வெ ரா தான் எழுதிய முதலியார் ஒழிப்பு தலையங்கம் பற்றி பொ சி இடம் கேட்கிறார்.

" வெ ரா: 'முதலியார் ஒழிப்பு தலையங்கம் படிச்சீங்களா'

பொ சி: 'நாங்கள் இருவரும் படித்தோம்'

வெ ரா: 'தங்கள் அபிப்பிராயம் என்ன?'

'இதற்கு நான் என்ன அபிப்பிராயம் சொல்ல இருக்கிறது, உங்களுடைய பிராமண எதிர்ப்பு இயக்கம் இப்படித்தான் வந்து முடியும் என்று எனக்குத் தெரியும், இதோடு இது நிற்கப் போவதில்லை. இன்னும் பலபடி இறங்கி இவ்வியக்கம் தொடரும்' என்றார் பொ சிவஞானம் அவர்கள்.

உடனே ராமசாமி நாயக்கர் 'ஏதோ நல்லது என்று தான் செய்யப் போய் இவ்வாறு முடிந்து விட்டதே, தங்களைப் போன்றவர்கள் தான் இதனை சரிப்படுத்த வேண்டும்' எனக் கூறுகிறார்.

அதற்கு ஐயா பொ சி அவர்கள் "நான் மட்டுமல்ல யாராலும் எதுவும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு இப்பிரச்சனை செப்டிக் ஆகிவிட்டது" எனக் கூறினார்.

வெ ரா ஐயா சொன்னதை ஆழ்ந்த சிந்தனையுடன் கேட்டுக் கொண்டார்."

இவ்வாறு வெ ரா மற்றும் பொ சி அவர்களுடன் இருந்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் திரு மு மாரியப்பன் அவர்கள்.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ராமசாமி நாயக்கர் பிராமண எதிர்ப்பு என்று துவங்கியது தவறாகப் போய்விட்டது என்று தன்னளவில் உணர்ந்திருந்தார் என்பதே! "நான் தவறு செய்து விட்டேன், யாராவது தடுத்து நிறுத்துங்கள்" என்று மன்றாடி இருக்கிறார். தானாக முன்வந்து வெளிப்படையாகத் தன் தவறை ஒத்துக் கொள்ள அவரது 'கோ' இடம் கொடுக்கவும் இல்லை. அதைப் பற்றி நெருங்கியவர்களிடம் மட்டுமே கூறியிருக்கிறார். ஆனால் திட்டமிட்டு அதனை திராவிடக்காரர்கள் மக்களிடம் வெளிப்படுத்தாமல் மறைத்து வருகின்றனர். ராமசாமி நாயக்கரின் தனிப்பட்ட காழ்ப்புகளை சித்தாந்தமாக்கி தமிழகத்தை இன ஒழிப்பு என்கிற ஆழ்ந்த சைக்கோத்தனமான மனநோய்க்குள் தள்ளி விட்டுவிட்டனர் என்பது புலனாகிறது.

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்...! ஜாதி ஒழிப்பு என்று துவங்குவோரால் தான் ஜாதித்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற திராவிடம் பேசுவோர்களை நம்பாமல் விலகி வாருங்கள்

ஆன்மீகமும் மனிதமும் மட்டுமே அடுத்த கட்ட சந்ததியினரை வாழ வைக்கும் என்பதை புரிந்து கொண்டு ஹிந்து என்கிற மனநிலையில் ஒன்று கூடுங்கள்.

ஒற்றுமையாய் இருப்போம்! பாரதம் காப்போம்!