'செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத் தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை.
குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை" இது நடிகர் கமல்ஹாஸனின் சமீபத்திய மேடைப் பேச்சு.
குடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை" இது நடிகர் கமல்ஹாஸனின் சமீபத்திய மேடைப் பேச்சு.
ஆதீத பகுத்தறிவாளராக பேசுவதில் கமலுக்கு நிகர் அவர் மட்டுமே. தமிழ் திரைப்படங்களில் இது குழந்தைகள் படம் இது எல்லோரும் பார்க்கும் படம், இது வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் படம் என்று தரம் பிரித்து காமக்களியாட்ட திரைப்படங்களையும் வெளியிடலாம் என்பது இவரது நீண்டகால கருத்து.
நமக்கு ஏற்படும் சந்தேகம் எல்லாம், இப்பொழுது சமூகத்தில் காமத்திற்க்கு அப்படி என்ன பஞ்சம் வந்து விட்டது? சரி அப்படியே அதற்க்கென்று தனி சான்றிதழ்களோடு படம் வெளியிட்டால் உடல் ரீதியான எந்த பயனும் இல்லாமல் வெறும் கண்களால் பார்த்து மனத்தில் காமப்பித்தேறி வீட்டுக்குச் செல்லும் ஒரு இளைஞன் திருமணமாகாதவனாக இருந்தால் அவனது காமத்தீயைத் தனிக்க என்ன செய்வான். சொந்த வீட்டில் வடிகால் இல்லாதவன் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தால் பரவாயில்லையா? கமல் இதையும் நாகரீகம் என்று சொல்வாரா?
ஒரு மனிதன் காதல் முதல் முதலாய், காம உனர்ச்சிகளை புரிந்து கொண்டு அல்லது அனுபவிக்க நினைக்கும் வயது 15 வயதிலிருந்து 19 வயது வரை. இந்த வயதிற்குள் பாலினச்சேர்க்கை இயற்க்கையாகவே தேவைப்படும். இதைப் புரிந்து தான் நமது முன்னோர்கள் இந்த பதின் வயதில் திருமணம் செய்வதை தேவையான வழக்கமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது இதை குழந்தை திருமணம் என்றும் சட்ட விரோதம் என்றும் கூறி தள்ளி விட்டார்கள். பணத்தேவை திருமண வயதை 30 வரை கொண்டு சென்று விட்டது. இதனால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன? பாலுணர்ச்சியின் சமநிலையற்ற வெளிப்பாடு, கள்ளத்தொடர்பு, பாலியல் ரீதியான குற்றங்கள் என்று பட்டியல் நீள்கிறது.
ஏற்கனவே தொலைக்காட்சியைத் திறந்தால் தொப்புள் நடனங்களும், மார்புக்குலுக்கல்களும் நடன நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சமூகச் சீரழிவை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றன. இன்டர்நெட்டில் இளைஞர்களுக்கு கிடைக்காத பாலியல் காட்சிகள் உண்டா? கையளவு செல்பேசியில், கால் இன்ச் சிப்பில் கப்ளிங்ஸ் விளையாடி களைத்துப் போகின்றனர் இன்றைய சிறார்கள். பள்ளிகூடத்திலேயே பத்திக்கொள்ளும் காமம் ஏன் எதற்கு என்று புரிவதற்க்குள் அவை பாலியல் வக்கிரங்களுக்கும், குற்றங்களுக்கும் சென்று முடிந்து விடுகிறது. பள்ளிக்கூட படிப்பின் போதே அக்கம்பக்கத்து பெண்களை அரைக்கண்ணால் பார்த்து விட்டு "ஆண்டி" சூப்பர் டா என்று நாகரீக உறவு முறைகள் எல்லாம் "ஆன்டி க்ளைமாக்ஸில்" முடியும் கதை நமக்கு தெரியாததா?
இவை எல்லாம் தெரிந்தும் அடுத்த தலைமுறையை, தர்மங்களைப் புரிந்து கொண்டவர்களாகவும் , கலாச்சாரத்தை புரிந்து கொண்டார்வர்களாகவும் எப்படி உருவாக்குவது என்று பார்ப்பதை விட்டு விட்டு காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல் காமத்திற்கும் கடைவிரியுங்கள் என்று பேசுவது சமூக பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
கஜுராஹோ கோவிலில் பாலியல் சிற்பங்கள் இல்லையா? என்று கேட்கும் அறிவு ஜீவிகள் அந்த காலத்தில் நமது பூமியில் வாழ்ந்த மக்கள் தொகை என்ன? அவர்கள் கடைபிடித்த தர்மங்கள் என்ன? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். காமத்திற்கு ஆசைப்படும் போதே முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்ததால் அனைவருக்கும் வீட்டுக்குள்ளேயே வடிகால்கள் இருந்ததையும் மறுக்க முடியாது. முறையற்ற உறவுக்கு அவசியமே இல்லாத காலம் அது. ஆனால் தற்காலத்தில் அப்படியா? வாழும் முறையில் இருக்கும் வடிகால்களை எல்லாம் அடைத்து விட்டு சினிமாவில் அதை கட்டவிழ்த்து விட்டால் கற்பனை வாழ்க்கையிலேயே இன்றைய இளைய சமூகம் திருப்தி அடைந்து விடுமா? என்பதையும் கமல் தனது அறிவு ஜீவித்தனம் மூலமாக சிந்திக்க வேண்டும்.
கமலஹாசன் அவர்கள் காப்பி, டீ போன்ற வஸ்த்துக்களை குடிப்பதில்லை. அதற்கு அவர் சொல்லும் காரணம் எந்த ஒரு மிருகமும் இன்னொரு மிருகத்தின் பாலை குடிப்பதில்லை, நாம் ஏன் குடிக்க வேண்டும் என்பதாகும். இதையே அவருக்கு திருப்பி கேட்கலாம். எந்த ஒரு மிருகமும் சக மிருகங்கள் செய்யும் உடலுறவை கூட்டமாக உட்கார்ந்து பார்ப்பதில்லை. எந்த மிருகமும் தங்கள் பாலியல் உறவை வியாபாரமாக்குவதில்லை. இதை மட்டும் மனிதன் செய்தால் நாகரீகம் என்று இவரது பகுத்தறிவுக்கு எப்படி தோன்றியது என்பது விளங்கவில்லை.
பெண்ணாசையால் சாகதே என்று கூறும் இராமாயணத்தையும், மன்னாசையால் சாகாதே என்று கூறும் மஹாபாரதத்தையும் மூடநம்பிக்கை என்று முடக்கியாகி விட்டது. எனவே நாழிதழ்களை திறந்தால் தினம் இரண்டு கற்பழிப்பு பாலியல் குற்றங்கள் ஏற்கனவே கட்டுப்படுத்த முடியாமல் உள்ளன. இவற்றில் பாலியல் திரைப்படங்களை தாரை தப்பட்டையுடன் வரவேற்க்க வேண்டுமாம்.
கொக்கு கொண்டு வந்து போடாமலே இத்தனை ஜனத்தொகை என்றால் இனி தமிழ் சினிமாவில் தமிழ் கலைஞர்களே எடுத்து நடித்து வெளிவரும் பாலியல் படங்களால் கொக்கு வாழ கூட இந்தியாவில் இடம் இல்லாமல் போகுமோ? ஈஸ்வரோ ரக்ஷது:!
18 comments:
"எந்த ஒரு மிருகமும் இன்னொரு மிருகத்தின் பாலை குடிபதில்லை, அதேபோல் இரு மிருகங்கள் உறவு கொள்ளும்போது அவை குட்டமாய் நின்று பார்பதில்லை, மனிதன் மட்டும்தான் இதை செய்கிறான்" அடித்தீர்கள் ஐயா நெற்றியில்.
நன்றி Vijay,
அடிக்கடி வாங்க , நிறைய பேசுவோம்.
அன்புடன்
ராம்
ரொம்ப நல்லா சொன்னீங்க !
கமல் படத்தை பார்த்த உடனே, எனக்கு மிக்க கோபம் உங்கள் மேல்.. "உங்கள் பதிவில் கமலுக்கு என்ன வேலை?" என்று.
படித்தபின் புரிந்துகொண்டேன்.
//படித்தபின் புரிந்துகொண்டேன்//
நன்றி மேடி, கமல் போன்ற நாத்திக வியாதிகள் ஆத்திகர்களுக்கு புத்தி சொல்கிறேனென்றும், சமத்துவம் பேசுகிறேன் என்றும் சொறிந்து விடாமல் இருந்தாலே பாதி பிரச்சனை நாட்டில் தீர்ந்து விடும். வருகைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள். நிறைய பேசுவோம்.
நன்றி
அன்புடன்
ராம்
எந்த பிராமண சமுதாயம் கலாசாரம் சொல்லித் தர வேண்டுமோ, அங்கிருந்து கமல் போன்ற அறிவு ஜுவிகள் உலருவது மகா முட்டாள்த் தனமான செயல் என்பது மறுக்க முடியாத உண்மை.
///எந்த பிராமண சமுதாயம் கலாசாரம் சொல்லித் தர வேண்டுமோ/// பிராமணருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அந்த பொறுப்பிருக்கிறது. ஏனெனில் இந்து தர்மமும் கலாச்சாரமும் நம் எல்லோருக்குமே சொந்தம்.
///கமல் போன்ற அறிவு ஜுவிகள் ///
அவர் ஒரு போலி பகுத்தறிவு வாதி. தனிப்பட்ட சினிமா திறமைக்கு மட்டுமே புகழப்பட வேண்டியவர். மற்றபடி அவரால் சமூகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
நன்றி கார்த்திகேயன்.
முழு மனித சமுதாயமே மன நோய்வாய்பட்டிருக்கின்றது, இந்த நிலை மாற்ற முடியாது -சிக்மண்ட பிராய்டு
இவர் இப்படி சொல்ல கரணம் காமம் மீதான அடக்குமுறைகளும் அதனால் தனி மனிதன் தன்னுள்ளே பிளவு பட்டு நிற்பதாலும் ஆகும்.
ஆனல் அவர் கீழேத்தேயர்கள் பற்றிய அறிதல் போதமை.
பண்டைய காலத்தில் காமம் பற்றிய புரிந்துணர்வும் அதனை பாவமாகக்கருதாது இயல்பான வாழ்கை வாழ்ந்த எம்மையும் அவர் அறிந்திருக்கவில்லை .
கிறித்தவம் போன்ற மத நிறுவனங்களின் காமம் மீதான அடக்குமுறை அதன் விளைவையும் இப்போதே நம் கண்ணால் காணக்கூடிய நிதர்சனம்.
இந்துகளின் சாதியம் கிறித்தவம் ஊடுருவ நல்ல வாய்பை தந்தது.
பகுத்தறிவு தேவைதான் அது பொருள் உலகத்திட்கானது.சில மூடநம்பிக்கைகளை களையவும் உதவும்.அது மனதிற்கானது.
ஆத்மீக அனுபவங்கள் பகுத்தறிவு சார்ந்தவையல்ல.
எப்போது இந்து சமயம் பழமை, சாதியம் மறந்து தனது தன்னிகரில்லா சொத்துகளான தந்திரா,யோகா... போன்றவற்றுடன் மறுமலர்ச்சி அடையுமோ................
கோயிலில் தெரியா மொழியில் பூசை வைப்பதை விடவும் உபநிடத விளக்கமும்,தந்திரா,யோகா, பயிற்ச்சியும் வழங்கல் சிறப்பு.
மறுமலச்சி அடைய வேண்டும்.மெய் ஞானம் பெற உதவும் விஞ்ஞான பூர்வமான மதமாய் மாற வேண்டும்.
நம்புவர்களின் மதமாக இல்லாமல், தேடுவோரினதும் , உள் அறிவு பெற விரும்புவோரினதும் மதமாய் உருவாக வேண்டும்.
very super sir
super sir, உங்களை நான் பாராட்டுகிரேன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விக்னேஷ்.
This kamal always speak some crappy things. Since his acting is good he things what ever he says will reach the people.He is one of the best comedian when he is talking about the Pagutharivu. According to him Pagathu arithal means, prithu meithal allathu puratti yeduthal, that is was he is doing in all his films heroines.
கமல் சொன்னதில் தவறென்ன கண்டீர்கள் என்று புரியவில்லை.. கமல் தரம்பிரித்து படம் வெளியிட வேண்டும் என்பதில் என்ன தவறு?? கோவில் சிற்பங்களின் வெளிப்படையாய் தெரியும் அனைத்தும் நமது சமூகத்தில் இலைமறைவாய் நடந்துகொண்டுதானே இருக்கிறது.. பாலியலை பேசக்கூடாததாகவே வைத்துதானே பாலியல் குற்றங்களை வீடுத்தோறும் வைத்திருக்கிறோம்.. இன்னும் எதற்கு இந்த வேஷம்..??
மதன்செந்தில் வருகைக்கு நன்றி. கமல் சமீபத்திய தீபாவளிப் பேட்டியின் போது உளரியதை நீங்கள் பார்க்கவில்லையா! "மதம் என்பது ஒரு அருமையான மனோவைத்திய முறை. அதை செக்ஸ் மாதிரி அவங்க அவங்க வீட்டுக்குள்ள வெச்சிக்கோங்க. வெளியே காட்டாதீங்கன்னாரு." ஒருபக்கம் தரம் பிரிச்சு செக்ஸை சினிமால காட்டுங்கன்னும் சொல்றாரு. வெளியே செக்ஸ் காட்டலாம் , மதத்தை காட்டக் கூடாதா? கமல் ஒரு அதிபுத்திசாலி அச்சுப்பிச்சு.
கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி. இது அவரது அறிவு ஜீவி பிம்பத்துக்கு கிடைக்கும் சுலபமான விளம்பரம். அவரது பேச்சு ஏற்புடையதாய் இல்லை என்றால் அதை தவிர்த்து விட்டாலே போதும். அதற்கு எதிர் விமர்சனம் வருவதால் ஊடகங்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக விஜையில் வந்த தீபாவளி நிகழ்ச்சி. அவரது நாத்திகப் பேச்சை திரும்பத் திரும்ப விளம்பரப் படுத்திக் கொண்டே இருந்தார்கள். அன்றைய நாள் தீபாவளி என்பதும் அது இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகை என்பதும் விஜய் தொ.கா. க்கு தெரியாதா என்ன. அதற்க்கு முந்தைய வாரங்களில் தனி தீபாவளி நிகழ்சிகள் நடத்தியவர்கள் அவர்கள். வியாபாரிகள் விற்பதைத் தான் வியாபாரம் செய்வார்கள். அதனால் எதை வாங்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நமக்குத் தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?
//கமலின் பேச்சுக்கு கிடைக்கும் அதிகமான முக்கியத்துவம் தான் அவரது வெற்றி//அதற்கு காரணம் கமல் என்கிற மனிதர் ஏறக்குறைய 35 வருடமாக மிகவும் பிரபலமான அநேக மக்களால் விரும்பப்படுபவர் என்பதால் தானே ஒழிய அவர் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகிறது என்பதாலேயே அதற்கு விளம்பரம் கிடைப்பதில்லை. ஆனால் இப்படி இந்து எதிப்பாக பேசுவதும் அதிபுத்திசாலிபோல உளருவதும் அவரது சிறுபிள்ளைத்தனத்தை காண்பிக்கிறது. அதை அவர் பிடிவாதமாகவே செய்கிறார் என்பதும் தெரிகிறது. அவர் மதி மயங்கி வளர்ந்த பாசறை அப்படி. //தேவையில்லாத பொருளை தெரிந்தே வாங்கி விட்டு திட்டி என்ன பயன் ?// ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். மதமாற்றுப் பேர்வழிகளின் மோசடிகளை அம்பலப்படுத்தி அதன் மீது விழிப்புணர்வு உண்டாக அதைப்பற்றி எழுதுகிறோமென்றால் அதை நாம் வாங்கிவிட்டோம் என்று அர்த்தம் இல்லையே. அடுத்த முறை அது நடக்கும் போது மக்கள் அதன் மீதான சூழ்ச்சிகளை புரிந்து கொள்வார்கள் என்பதால் தான். அது போல தான் கமல் பற்றிய விஷயங்களை விமர்சித்து எழுதுவதும். கிருஷ்ணசாமி சொன்னால் தான் கமல் கேட்பார் போலிருக்கிறது. நாமென்ன செய்ய.. இப்படி எழுதிக்கொண்டிருப்பதை தவிற?
நீங்க கொஞ்சம் கூர்ந்து கவனிச்சீங்கன்னா அவர் விளம்பர உத்தியா பயன்படுத்துவது தெரியும். அவர் படங்கள் வெளி வரும் முன் இப்படிப் பேசி ஒரு பரபரப்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். மன்மத அம்பு படப் பாடல் வெளியீட்டிற்கு முன் விஜய் தொ.கா யில் பேசியது அதற்க்கு நேர் எதிராக அவர் எழுதி இருக்கும் கவிதைக்கு கிடைக்கும் விமர்சனம் என்ற விளம்பரம். இது மாதிரி அவர் அதிகம் பேச ஆரம்பித்து இருப்பது கடந்த ஐந்து ஆண்டு காலமாக. இந்தப் பரபரப்பு அவருக்கு பல மேடைகளை கொடுத்து உதவும். பலர் வழக்கு போடுவார்கள். ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு இரு தரப்புகளின் கருத்துக்களை வெளியிடும். இந்தக் கவிதையை காட்சிக்கு ஏற்றார் போல் படத்தில் சரியாக பொருத்தி இருப்பார். படம் பார்த்து விட்டு பலரும் கருத்து சொல்லுவார்கள். இந்த sensation அவருக்கு சாதகமாகவே அமையும்.
உண்மையில் திருஞான சம்பந்தர் ஆன்மிகத்தின் உயர் நிலையில் இருந்து பாடியதை கொச்சையாக் மாற்றி தன் சொந்தக் கருத்து போல் அவர் விஜய்யில் சொன்ன போதே இது புரிந்து கொள்ள முடிந்தது
This actor should be renamed and his first letter in tamil is to be dropped from his name to be in consonance with his views.He is so much obsessed with the organ between his thighs and all his views on matters hovers only around that.He needs to look up for other things
மதவாத மிருகங்களுக்கு கமலை பிடிக்க வாய்ப்பில்லை
Post a Comment