.jpg)
இவர்கள் எல்லோர் பற்றியும் போட்டுவிட்டு கடைசியில் சூப்பர்ஸ்ட்டார் ரஜினி பற்றியும் குறிப்பை மறக்காமல் சேர்த்து வம்புக்கு இழுத்துள்ளது. "சூப்பர் ஸ்ட்டார் ரஜினி அதிக ரசிகர்களைக் கொண்டவர். இவர் சமீபத்தில் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. இவர் ஏதாவது வாய் திறக்க வேண்டும் தமிழக கட்சிகள் காத்திருக்கின்றன" என்றெல்லாம் தேவையில்லாமல் வெறும் வாயை மென்று தனது வியாபார குள்ளநரி புத்தியை வெளியிட்டுள்ளது. தமிழக கட்சிகள் சூப்பர்ஸ்டார் வாய் திறக்காமல் இருப்பதையே விரும்புகின்றன என்பதே உண்மை. ரஜினி வாய் திறந்து ஏதாவது பேசி வைத்தால் நமது தொழில் கெட்டுவிடப்போகிறதே என்று தான் தமிழக அரசியல் கட்சிகள் கவலையில் உள்ளன. அதனால் தான், முடிந்த வரை அவரை அவமானப்படுத்தி அவர் வாயை மூட வைக்கும் வேலையில் பல விதங்களில் காய் நகர்த்தினார்கள் என்பதும் உண்மை. அதில் ஒன்றுதான் ரஜினி கன்னடர் என்ற பிரிவினை வாதப் பேச்சும் கூட.
உண்மை இப்படி இருக்கும் போது தினமலரில் தமிழக கட்சிகள் ரஜினி குரலை எதிர்பார்ப்பதை போன்று வெளியிட்டுள்ளது சுத்த அயோக்கியத்தனம். உண்மையைச் சொல்லப்போனால் இது போன்ற பத்திரிக்கைகளுக்கு தான் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் சூப்பர்ஸ்டார் வாய் திறந்தால் அவரை திட்டி பேசுபவர்களையும், ஆதரித்து பேசுபவர்களையும் பற்றி மாறி மாறி எழுதி காசு பார்க்கலாமே! ஆனால் பழி மட்டும் சூப்பர்ஸ்ட்டாருக்கு.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழியைப்போல சூப்பர்ஸ்டாரை புகழ்ந்தாலும் காசு, இகழ்ந்தாலும் காசு. அதனால் அவரைப் பகடைக்காயாய் பயன்படுத்தி குளிர்காய எத்தனைப் பேர். அரசியல் கட்சிகள் நேரடியாக அவமதிப்பது ஒரு புறம், அவர் கூடவே பணியாற்றி அவரையே முதுகில் குத்தும் ஒரு சில திரைத்துறைப் பிரகஸ்பதிகள் ஒரு புறம், போதாக்குறைக்கு இந்த மீடியாக்கள்.

இன்னும் எத்தனை பேர் சூப்பர்ஸ்ட்டார் ரஜினியை மிதித்து முன்னேற காத்திருக்கிறார்களோ?. சிகரத்தை மிதித்தவர்கள் உயரத்துக்கு போவதுண்டு. ஆனால் மிதிபட்ட காரணத்தால் சிகரத்தின் உயரம் குறைந்ததில்லை. சூப்பர்ஸ்ட்டார் என்றும் சிகரமே!
இறைவா! மீடியாக்களில் இருந்து தலைவரைக் காப்பாற்று. எதிரிகளை அவர் பார்த்துக் கொள்வார்.
இறைவா! மீடியாக்களில் இருந்து தலைவரைக் காப்பாற்று. எதிரிகளை அவர் பார்த்துக் கொள்வார்.
No comments:
Post a Comment