
அரசன் முதல் ஆண்டி வரையில் எல்லோருக்கும் முடிவு ஒன்று தான். அது தான் சாம்பல், கடைசியில் சாம்பலாகப் போகும் நமது மாய வாழ்க்கையை, விபூதி நமக்கு உணர்த்துகிறது. வைஷ்ணவர்கள் இதையே திருமண் என்று இட்டுக்கொள்வார்கள்.மண்ணிலே பிறந்த நாம், மண்ணிலேதான் மடியப்போகிறோம் என்பதை நமக்கு நாமே நினைவு படுத்திக் கொள்வது தான் இதன் நோக்கம்.!
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தீயில் இடப்படும் பொருள்கள் யாவும் கருகிப்போகின்றன. அதன் பின்னும் இன்னும் தீயிட்டால், அது நீற்றுப் போய் வெளுத்து விடுகிறது. அதுவே இந்த பூமியில் உள்ள எல்லாப்பொருட்களுக்கும் இறுதி நிலை, மாறாத நிலையாகும்.
எல்லாம் அழிந்த பின்னும், அழியாத சத்தியமாக நிற்க்கக் கூடிய நிரந்தரமான உருக்கொண்டவன் இறைவன் என்பதை ஆத்மார்த்தமாக உணர்ந்து அவனை நினைக்க வேண்டும் என்பதாகும். மெய்யான ஆத்மாவுக்கு அடையாளமாக இதை பெரியோர்கள் கூறுகின்றனர். இந்த உடல் பொய்யானது என்பதையும் நிரந்தரமான அமைதி எதுவோ அது தான் உண்மை என்பதும் நம்மை அறியாமலே நம் மனதில் பதியவும் இந்த விபூதி பூசும் பழக்கம் மனோவியல் ரீதியாக உதவுகிறது.

இதற்கும் மேலாக விபூதி என்பது ஏற்கனவே சொன்னது போல் பசுவின் சாணத்தை நெருப்பிலிட்டு, சாம்பலாக்கிச் செய்யப்படுகிறது. பசுவின் சாணம் தரையில் காயும் போது துர்நாற்றம் வீசுமே ஒழுய எரித்தால் அதற்கு மாறான வினையைக்கொடுக்கும் ஒரு அற்புதப் பொருள்.இது எரித்து சாம்பலாக உபயோகப்படுத்தினால் பல துர்நாற்றங்களப் போக்கும் தன்மையை அடைகிறது. இது ஒரு 'ஆன்டி செப்டிக்' என்று கூடச் சொல்லலாம். அதாவது ஒரு கிருமினாசினி.
கிராமங்களில் பெண்கள் அதிகாலை வாசற் தெளிக்கும் போது பசுவின் சாணத்தை தண்ணீரில் கரைத்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்!. இது ஒரு கிருமினாசினி என்பதை உணர்ந்து நாம் அதை ஒரு வாழ்க்கை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். இதை எரித்து சாம்பலாக்கும் போது உடலைச் சுத்தப்படுத்துவது போல உள்ளத்தையும் சுத்தப்படுத்துகிறது. மேலும் நெற்றியில் பூசிக்கொள்ளும் போது அதிகமாக தலை நீர் தங்குவதையும் தடுக்கிறது.
இப்படி உடலையும் மனதையும் ஒருசேர சுத்தமாக வைத்திருப்பதற்க்காகவே நம் முன்னோர்கள் விபூதி பூசும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். நாமும் அதை கடை பிடிப்போமாக.
2 comments:
அப்புறம் ஏன் சார் வீட்டு கதவு ஜன்னலுக்கெல்லாம் விபூதி பூசுறீங்க?
vibuthi is a very good adsorbent. so it can adsorbe the waste created in our head.
gopal
Post a Comment