Friday, October 23, 2009

சும்மா தெரிஞ்சுக்கங்க - டைப்பாஸ் நொருக்ஸ்




1. பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 6 மடங்கு அதிகமாக மின்னலால் பாதிக்கப்படுகின்றனர். 

- மின்னலே நீயுமா ஜொல்லுப்பார்ட்டி!

2. மாடுகளின் உரிமைக்காக சட்டம் கொண்டுள்ள நாடு இந்தியா 

     -  ஆம்பளைங்களுக்கு தான் இல்லை. மாடுகளுக்காவது இருந்திட்டுப் போட்டும்.

3. மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா 

     -  கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டீ...

4. மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ).

     -  பத்தாக்கொறைக்கு இந்தியாவும் வேணுமாமே!

5.  கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.

     -  பொம்பளைங்க அறிவியல் அறிவோட தான்யா அழறாங்க.

6.  ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.

    -  ஆகா! இது தெரியாமல்ல பசங்க ஏமாந்து போறாங்க.

7.  விலங்குகளில் அதிக பற்கள் உடையது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்கும்.

    -  ஆகா! கவ்வினா அரைக்கிலோ போய்டுதே இதான் காரணமா??

8. பல் குத்தும் குச்சியை உலகிலேயே அமெரிக்கர்கள் தான் அதிகமாக 
பயன்படுத்துகின்றனர்.

     -  பின்ன, திங்கிறது தானெ அவங்க வேலை. உழைக்கிறது நம்மாளுங்க தானே!

9. வரிக்குதிரையின் நிறம் வெள்ளை தான். அதன் மீது கறுப்பு கோடுகள் 
உள்ளன.

    -  உலகத்திலேயே பழைய மிருகம். ஏன்னா அதுதானே ப்ளாக் அண்டு வைட்.

10. காலண்டர் முறையைக் முதன் முதலில் கண்டுபிடித்த நாடு எகிப்து.

     -  மவனே திங்கக்கிழமைய அவன் தான் கண்டுபிடிச்சானா?? அவன் மட்டும் கையில கிடைச்சான்.......

அவ்ளோதான்...மிச்சம் அப்பாலிக்கா...வர்ட்டா!

5 comments:

வால்பையன் said...

இம்மாதிரியான பதிவுகளுகெல்லாம் காப்பி பண்ணி பின்னூட்டம் போட்டாத்தான் நல்லாயிருக்கும்!

ரெண்டாவது நீங்களே காப்பி பேஸ்ட்!, பின்ன எதுக்கு காப்பிக்கு தடை!

hayyram said...

நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன், உங்க பின்னூட்டம் இந்த மாதிரி விஷயத்துல நல்லாவே இருக்கும். இத ஒரு புத்தகத்துல படிச்சிட்டிருந்தேன். அதை அப்படியே டைப் பண்ணிட்டேன். இந்த மாதிரி குட்டி குட்டி விஷயங்கள் கிடைக்காத இடமே இல்லயே. ஏதோ நம்மாள முடிஞ்சது. அதான்.
மத்தபடி ஒரு இதிகாசத்தில இருந்து ஒரு பகுதியை எடுத்து என் கருத்தை சொந்தமாக பதிவு எழுதும் போது அதை மொதல்ல கலெக்ட் பன்னி அப்பறம் டைப் பண்ணி தான் போடறேன். பல இடங்கள்ள வெவ்வேறு தளங்கள்ள அத மத்தவங்க அவங்களோட பேர்லேயே போட்டுக்கிறாங்க. அதுக்கு அவங்களே யோசிச்சி எழுதின மாதிரி பாராட்டு பின்னூட்டங்கள் வேற வாங்கிகிறாங்க. அதனால தான் வேற வழியில்லாம இப்படி பண்ணிட்டேன். கோச்சுக்காதீங்க. உங்களுக்காக...இதோ...

1. பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 6 மடங்கு அதிகமாக மின்னலால் பாதிக்கப்படுகின்றனர்
2. மாடுகளின் உரிமைக்காக சட்டம் கொண்டுள்ள நாடு இந்தியா
3. மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா
4. மிக நீளமான எல்லையைக் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ).
5. கண்ணீர் ஒரு கிருமி நாசினியாகும்.
6. ஆண்களை விட பெண்களே அதிகமாக கண் சிமிட்டுகிறார்கள்.
7. விலங்குகளில் அதிக பற்கள் உடையவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்கும்.
8.பல் குத்தும் குச்சியை உலகிலேயே அமெரிக்கார்கள் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
9.வரிக்குதிரையின் நிறம் வெள்ளைதான் அதன் மீது கருப்புக் கோடுகள் உள்ளன.
10.காலண்டர் முறையை முதன்முதலில் கண்டுபிடித்த நாடு எகிப்து

வால்பையன் said...

//விலங்குகளில் அதிக பற்கள் உடையவது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்கும்.//

முதலைக்கு 64 பற்கள்!
அது ஊர்வன இனத்தில் சேருவதால் நாய் ஒகே தான்!

வால்பையன் said...

எல்லா செய்திகளுக்கும் உங்கள் கமெண்டும் சூப்பர்!

hayyram said...

ஆஹா புதுசா வால் கமென்ட்ஸ் எதிர் பாத்தேனே!