எவன் துன்பமும் எதிர்ப்பும் கண்டு வருந்துவதில்லையோ, எவன் தேடிச்சென்று கவனமாகவும், கடுமையாகவும் உழைக்கிறானோ, சூழ்நிலை கருதித் துன்பங்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே மனிதர்களில் முதன்மையானவன். அவன் எல்லா எதிரிகளையும் வென்று விடுவான்.
எவன் காரணமின்றித் தன் வீட்டை விட்டு வெளியே சென்று வசிப்பதில்லையோ, தீயவர்களுடன் பழகுவதில்லையோ, பிறர் மனைவிக்குக் கெடுதல் செய்வதில்லையோ, கர்வப்படுவது கபடமாக நடந்து கொள்வது என்பதில்லையோ, பிறரை நிந்திப்பதில்லையோ, குடிப்பழக்கம் வைத்துக் கொள்ளவில்லையோ அவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக விளங்குவான்.
எவன் வாழ்க்கையின் குறிக்கோள்களாகிய அறம் பொருள் இன்பத்தை அடைய அவசரப்பட்டுச் செயல்படுவது இல்லையோ, எப்பொழுதும் உண்மை பேசுகிறானோ, தன் நண்பனுக்காகக் கூட யாருடனும் தகராறு செய்வதை விரும்புவதில்லையோ, மற்றவர்கள் மதிக்காவிடிலும் கோப்ப்படுவது இல்லையோ அவனே அறிவாளி!
எவன் யாரிடமும் பொறாமை கொள்வதில்லையோ, எல்லோரிடமும் கனிவாக இருக்கிறானோ, தனது பலக்குரைவை உணர்ந்து யாரையும் எதிர்க்காமல் உள்ளானோ அவன் எங்கும் புகழ் பெருவான்.
எவன் பிறரை இகழ்ந்து தன்னை மெச்சிக்கொள்வதில்லையோ, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தன்னை மறந்து பிறரைக் கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவன் எல்லோராலும் விரும்ப்பப்படுகிறான்.
நடுத்தரமான மனிதன் வாக்குறுதிகள் கொடுப்பான். அவற்ரை நிறைவேற்றியும் தருவான். எதுவும் கொடுப்பதாக வாக்களித்தால் அவ்வாறே கொடுட்தும் விடுவான். பிறரிடம் குற்றம் கண்டுபிடித்த வண்ணம் இருப்பான். மனிதர்களில் கீழானவர்கள் யாருக்கும் அடங்க மாட்டார்கள். எப்போதும் ஆவேசமாக இருப்பார்கள். பாவச் செயல்களில் ஈடுபடுவார்கள். பயங்கரமாகக் கோபப்படுவார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்லர். சில சமயம் நல்லவர்கள் போல் பழகினாலும் அவர்கள் கொடிய மனம் உடையவர்களே.
கீழ்தரமானவன் பெரியவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளின் படி நடந்து கொள்ள மாட்டான். அந்த ஆலோசனைகளால் நன்மை விளையுமென அவன் நம்புவதில்லை. அவன் தன்னையே சந்தேகப்படுபவனாக இருப்பான். தன்னுடைய நண்பர்களைக் கூடக் காட்டிக்கொடுத்துவிடுவான்.
பொறாமை கொள்ளாதிருத்தல், நேர்மையான பேச்சு, உள்ளத் தூய்மை, போதுமென்ற மனத்திருப்தி, எரிச்சலூட்டாத இனிய பேச்சு, மனக்கட்டுப்பாடு, வாய்மை, மனவுறுதி இம்மாதிரியான நற்பண்புகளைத் தீயவர்களிடம் எதிர்பாக்க முடியாது.
வாழ்க்கையில் வளம் பெற்று முன்னேற விரும்புகிறவன் மேற்கூறிய மூவகை மனிதர்களில் உத்தமமான மனிதர்களை மட்டும் அணுக வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் நடுத்தரமான மனிதர்களை அணுகலாம். ஆனால் ஒரு போதும் கீழ்த்தரமான மனிதர்களைச் சார்ந்திருக்கக் கூடாது.
3 comments:
where from you got this?
Thank you.
I read your reply to Jeyamohan.
You reply is SHARP and correct.
God Bless.
Regards,
Sri.
My dear sir, This article is superb.please don't mistake me. Sometimes you seems to be missing to follow these points in your thinking and writings. from now onwards let both of us try to follow this advice. as said one of our friends told not to go to politics and only write matters related to GOD and how to reach his feet.
Post a Comment