Wednesday, June 20, 2012

அம்பேத்கார் ஒரு தீர்க்க தரிசி - சில வரலாற்று நினைவுகள்!


Mr. B. R. Haran, Senior Journalist, Chennai
ஹிந்துஸ்தானம்! இந்த பெயரை உச்சரிப்பதையே செக்யூலரிசம் என்ற பெயரால் நிறுத்திவிட்டார்கள்.இங்கே ஹிந்துக்கள் பெரும்பான்மையினர். ஆனால் என்ன பயன்? பெரும்பாலும் திட்டமிட்டுத் தாக்கப்படுவது ஹிந்துக்களும் அவர்களது பாரம்பரியங்களும் நம்பிக்கைகளும் தான்! ஹிந்துக்களின் குடும்ப முறை திட்டமிட்டு அழிக்கப்பட்டும் வருகிறது. இவற்றை எல்லாம் செம்மையாகச் செய்வது ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் மீடியாக்கள். "அதான் தெரியுமே! இப்போ என்ன அதுக்கு" என்கிறீர்களா?

அது பற்றிய ஒரு செய்தியை மூத்த பத்திரிக்கையாளர் பி ஆர் ஹரன் கோவாவில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் பேசியிருக்கிறார்:

செய்தி: ஹிந்துஜாக்ருதி!


Ramnathi, Ponda (Goa) : Hindu unity that is going to result from the All India Hindu Convention is going to be an achievement to be proud of. To be able to do that Hindu organisations should put in spirited efforts. The Indian media, under the pretext of Secularism, repeatedly attacked the religious customs, traditions, Temples etc. which are the conservators of the Indian culture. The media has become eager to destroy the Hindu line of thinking from India. These views were expressed by Mr. B.R. Haran on the last day of the All India Hindu Convention. He was speaking on the topic of ‘Hindus and the Media’ !   

During the speech, he gave some examples to prove the point as followed :

1. Repeatedly defaming Shankaracharya, Dharmacharyas, Chiefs of sects, Saints, Mahants    along with Sabarimala, Amarnath Temple, Kanchi Kamkoti Peeth, Jagannath Puri etc.
2. Organising debate sessions during festivals-celebrations such as Deepavali, Durgapuja, Janmashtami, Kumbhamela, Ganesh immersion, Ayyappa Makar Jyoti etc.
3. Purposefully avoid topics such as ‘Abolishing Article 370 of the Constitution’, ‘Hanging Mahammad Afzal’, ‘Bringing Common Civil Code’, ‘Passing a law to ban religious conversions’ etc.
4. Glorifying the western culture

How should the code of conduct for the media be ?
1. Do not give entry to Political parties or the Politicians in the media
2. Ban reality shows.
3. Do not publish the investigative articles without proofs.
4. There should be a selection committee for advertises.
5. Those news items that disturb the communal harmony should be banned.
6. The educational organisations being run by the Hindu sects should include course in  journalism in the curriculum.


மேற்கண்ட செய்தியைப் படிக்கும்கால் சில விஷயங்களை யோசிக்கத் தோன்றுகிறது. ஹிந்துக்களின் நம்பிக்கைகளும் நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் தொடர்ந்து திறந்த முறையில் தடையில்லாமல் தாக்கப்பட்டு வருகிறது. இந்நாட்டின் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாமல் இந்த தாக்குதல்கள் தான் சாத்தியமாஇந்த தலைவர்கள் அனைவருமே ஹிந்துக்களின் மீதான தொடர்ந்த தாக்குதலை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

அதற்கு மூலக்காரணம்இந்நாடு சுதந்திரம் அடையும் காலகட்டத்திலேயே தெளிவான மக்கள் சார்ந்த உரிமைக் கொள்கைகள் வகுக்கப்படாமல் ஒரு குழம்பியக் குட்டையாகவே ஆட்சிக் கொள்கைகளை வரையறுத்து ஒரு மாபெரும் நாட்டின் பெரும்பான்மை மக்களை வாழ்வுரிமை இழந்து நிற்கும் அளவிற்கு இட்டுச் சென்றனர்  இந்த நாட்டை வழிநடத்துவதாக தம்மைக் காட்டிக் கொண்ட தலைவர்கள் என்றே தோன்றுகிறது.

பல்வேறு வரலாற்று விஷயங்கள் மூலம் இந்த தேசத்தின் பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் வாழ்க்கையும் அவர்தம் சூழ்நிலைகள் பற்றிய எண்ணங்களையும் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் முழுமனதுடன் புறக்கனித்திருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்து கொள்ளமுடிகிறது. உதாரணமாக காஷ்மீர் பண்டிட்டுக்கள் இன்றும் சொந்த நாட்டின் அகதிகளாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பரிக்கப்பட்ட உடமைகள் எதுவும் அவர்களுக்கு திருப்பி வழங்கப்படவில்லை. அவர்கள் உற்றார் உறவினர்களின் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு இது வரை ஞாயம் வழங்கப்படவில்லை. ஆனால் இவை எல்லாம் தெரிந்தே புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது வாழும் வரலாறு.

இப்படிப்பட்ட புறக்கனிப்பு இன்று தான் புதிதாக நடக்கிறாதா என்றால் இல்லை! ஹிந்துக்களையும் அவர்தம் உணர்வுகளையும் புறக்கனிப்பது என்பது காங்கிரஸின் வியாதி. ஆனால் காங்கிரஸின் இந்த வியாதியைத் தெரிந்து கொண்டு நாட்டுப் பிரிவினையின் போது தெளிவான அறிவுரை வழங்கியவர் திரு. அம்பேத்கார் அவர்கள்! 

சில வரலாற்று நினைவுகளைப் பார்ப்போம்:- 

1932 ஏப்ரல் 16ந் தேதி பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டனால்டு தலைமையில் அரசாங்கமே 'வகுப்பு வாரித் திட்டம்' ஒன்றை அறிவித்தது. அப்பொழுதே சிறுபான்மை ஜால்ராவையும் அதன் மூலமாக உருவாகியிருக்கும் பாரபட்சத்தையும் சுட்டிக்காட்டியவர் டாக்டர் அம்பேத்கார் :-

"இந்த வகுப்புவாரி திட்டம் முஸ்லிம் மற்றும் ஹிந்து சிறுபான்மையினரை பாரபட்சமில்லாமல் நடத்தத் தவறிவிட்டது.  இது ஹிந்து மாகானங்களில் வாழும் முஸ்லிம் சிறுபான்மையினர் தொகுதிக்கு சுய நிர்ணய உரிமை தருகிறது. ஆனால் அதே உரிமையை முஸ்லிம் மாகாணங்களில் வாழும் ஹிந்து சிறுபான்மையினருக்குத் தரவில்லை. ஹிந்து மாகானங்களில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினர் தாங்கள் விரும்பியபடி தொகுதி அமைத்துக் கொள்ள உரிமை உள்ளது. ஆனால் முஸ்லிம் மாகாணங்களில் தொகுதிகளை நிச்சயிக்க முஸ்லிம்களுகு மட்டுமே உரிமை உண்டு. ஹிந்து சிறுபான்மையினருக்கு இதில் உரிமையே கிடையாது. அதாவது இந்தத் திட்டம் ஹிந்து சிறுபான்மையினர் மீது முஸ்லிம் ஆட்சியைத் திணிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்."  என்று கண்டித்திருக்கிறார்.

-  தேசப்பிரிவினையின் சோக வரலாறு,  ஹொ வெ சேஷாத்ரி


பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கார்


"1940 வது வருடமே டாக்டர் அம்பேத்கார் பிரிவினைப் பற்றிய பெரும் எச்சரிக்கைகளைச் செய்திருந்தார். ஆனால் அதையெல்லாம் ஏற்காது கண் மூடித்தனமாக நாடு பிரிக்கப்படது. அதன் விளைவு - 10 லக்ஷம் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கடத்தல், கற்பழிப்பு, கட்டாய மதமாற்றம் என எல்லாம் நடந்தன. ஹிந்து சமுதாயத்தின் அனுமதி, ஆலோசனைகளை பெறாது நடந்த கொடூரம் பாகப்பிரிவினை. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நேருவும் காங்கிரஸ் தலைவர்களும் இல்லை. முஸ்லீம் லீக் தலைவர்களும் இல்லை. அப்பாவி ஹிந்துக்கள் தான்.

பிரிவினையின் போது நடந்த கோர நிகழ்ச்சிகள் வெளி வராமல் தடுக்கப்பட்டன. கோடிக்கணக்கான ஹிந்துக்கள் வட இந்தியத் தெருக்களில் அகதிகளாகத் திரிந்தனர். 10 லக்ஷம் ஹிந்துக்களின் உயிர் பறிக்கப்பட்டது யாருடைய தவறால், 2 லக்ஷம் பெண்கள் கடத்தப்பட்டது யாருடைய தவறான கொள்கையால்? தங்கள் தவறை இவர்கள் ஒப்புக் கொண்டார்களா? ஹிந்துக்களிடம் மன்னிப்பு கேட்டார்களா? இல்லை.

எதுவும் நடக்காதது போல உடனே பிரிக்கப்பட்ட இந்தியாவின் பிரதம மந்திரியாக வெட்கமில்லாமல் எந்த வருத்தமும் இல்லாமல் தன்னை ஆக்கிக் கொண்டு, இந்த ஹிந்துப் படுகொலைகள் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார் நேரு! அவரைப் பிரதமராக்கி அழகு பார்த்தார் காந்தி."

பிரிவினை நடந்த பிறகும், இந்தியா 'எல்லோருக்கும் சொந்தமான' நாடாகுமா? டாக்டர் அம்பேத்காரைத் தவிர யார் இதைப் பற்றி நினைத்துப் பார்த்தார்கள்? இந்தியா "ஹிந்து நாடு" என்று அறிவிக்க விரும்பினார். ஹிந்துக்கள் மாத்திரம் குடிமகன்களாகக் கொண்ட நாடு என்று அறிவிக்க அம்பேத்கார் விரும்பினார். பிரிவினையைத் தடுக்க இயலாத பட்சத்தில் மக்கள் பரிமாற்றமும் நடக்க வேண்டும் என்றார். பாகிஸ்தான் பகுதியில் உள்ள ஹிந்துக்கள் இந்தியாவிற்கும், இந்தியப் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் மாற்றப்பட வேண்டும் என்று சொன்னார். அதை மூதறிஞர் ராஜாஜியும் ஆதரித்தார். ஆனால் அவ்வாறு நடக்க விடவில்லை நேருவும் காங்கிரஸ் தலைவர்களும்.

சரி, 'ஹிந்து நாடு' என்பதுதான் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஹிந்து கலாச்சாரம், பழம்பெரும் ஹிந்துபாரம்பர்யம் முதலானவற்றை முன் நிறுத்தி, பெரும்பான்மையான ஹிந்துக்களின் உரிமையை வலியுறுத்தியாவது அரசியல் சாசனம் இயற்றப்பட்டதா? இல்லையே!

இந்தியா "ஒரு மதச்சார்பற்ற நாடு" என்று அரசியல் சாசனம் கூறிவிட்டது. எல்லோருக்கும் சொந்தம். ரத்தம் சிந்தி கிடைத்த பிறகு கூட எல்லோருக்கும் சொந்தம்! ரத்தம் சிந்த வைத்தவர்களுக்கும் நாட்டை பிரித்தவர்களுக்கும் கூட சொந்தம்! இந்தக் கேவலம் எந்த நாட்டிலும் நடவாதது.

ஆனால் நாட்டைப் பிரித்துக் கொண்டு போனவர்கள் தங்கள் பகுதியை "இஸ்லாமிய நாடு" என்று அறிவித்தனர்! ஆனால் இங்கே "வெள்ளைக்காரனை வெளியே போ" என்று தீர்மானம் போட்டுவிட்டு வெள்ளைக்காரனையே சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜனரலாக வைத்துக் கொண்ட கேவலம் நடந்தேறியது!

 - ஹிந்து மித்ரன், மாத இதழ்

மேற்கண்ட வரலாற்றுச் செய்திகளைப் படித்துப் பார்க்கும் போது ஒரு விஷயத்தை நன்றாக ஊகிக்க முடிகிறது. காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை ஹிந்துக்களின் வாழ்வின் மீது அலட்சியப் போக்கும் வெள்ளை அடிமைத்தனத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும் தெரியவருகிறது. அதே நேரத்தில் பிரிவினையின் போது என்ன செய்யவேண்டும் என்றும் அதனைச் செய்யாவிட்டால் பாரதத்தின் தலையெழுத்து என்னாவாக இருக்கும் என்கிற தீர்க்கதரிசனம் பாபா சாகேப் டாக்டர்.அம்பேத்காரிடம் தெளிவாக இருந்தது என்பதையும் நாம் உணர முடிகிறது.

அம்பேத்கார் சொன்னதைப் போல பிரிவினையின் போது முழுமையான மக்கள் பரிமாற்றம் நடந்திருந்தால் காங்கிரஸின் செக்யூலரிச போர்வைக்கு வேலை இருந்திருக்காது. காஷ்மீரத்து பண்டிட்டுகள் சொந்த நாட்டின் அகதிகளாக விரட்டியடிக்கப்படிருக்க மாட்டார்கள்.  இந்தியா முழுவதும் இத்தனை முறை தடையில்லாமல் குண்டுகள் வெடித்திருக்காது. அவ்வகையில் டாக்டர்.அம்பேத்கார் எதிர் வரும் பிரச்சனைகள் பற்றி தெளிவு கொண்டிருந்த தீர்க்கதரிசியே ஆகிறார்!

டாக்டர். அம்பேத்கார்

No comments: