Sunday, February 17, 2013

கருக் முருக் நொறுக்ஸ்!

படத்தின் பெயர்: மடிசார் மாமியும் மதன மாமாவும்

விஸ்வரூபம் படத்தில் பிராமணர்களின் பொதுவான உணவுப்பழக்கத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கமல் படமாக்கினார் என்று பிராமணர்கள் புகார் கொடுத்தார்கள். இப்போது அதே பாணியில் பிராமணர்களின் உணர்வுகளை திட்டமிட்டு புண்படுத்தும் ஒரு சாடிஸ மனோபாவத்தில் வெளிவந்திருக்கிறது இந்த விளம்பரம்.

Tide -  Soap விளம்பரம். இதில் துணியை வெளுப்பது பற்றி தானே காட்ட வேண்டும் . ஆனால் காட்டியதெல்லாம் பிராமண பாஷை பேசும் பெண் சிக்கன் சமைப்பதைத்தான். பிராமண பாஷையில் இந்தப் பெண் 'நானே சிக்கன் சமைக்க கஷ்டப்பட்டுண்டு இருக்கேன், இதுல கரை வேற' என்று மசலா கரையை சேலையில் காட்டுகிறாள். கடைசியில் 'இவ்ளவு கஷ்டத்துக்கு நடுவுல Non Veg சமைக்க கத்துண்டேன்னா பாருங்கோளேன்' என்று முடிக்கிறாள். டைட் விளம்பரம் என்ன சொல்ல வருகிறது? பிராமணர்களிடம் சிக்கனை பிரபலப்படுத்த வருகிறதா? அல்லது சோப்பு விற்க வருகிறதா? இதற்கெதிராக புகார் கொடுத்தால் சோப்பு கம்பெனிக்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பது இவர்களது கணக்கு என தோன்றுகிறது.

முஸ்லீம்கள் பற்றி படம் எடுத்தவரை ஓட ஓட விரட்டியதைப் பார்த்த பிறகும் கூட, ஏன் என்றும் கேட்காமல் ஒதுங்கிப் போக்கும் பிராமணர்களை மீண்டும் மீண்டும்  வம்புக்கிழுக்கும்   இந்த மீடியா வீரர்களை நினைத்தால் அவர்கள் மீது பரிதாபம் உண்டாகிறது.  பிராமணர்கள் மீதும் தான்!

இதே ரீதியில் பிராமணர்களின் கலாச்சார உடையணிந்து கொண்டு ஆபாசமாக ஒரு படம் வெளியாகப் போகிறது. படத்தின் பெயர் மடிசார் மாமியும் மதன மாமாவும். என்ன செய்வார்கள் பிராமணர்கள்?

வெஸ்ட் மாம்பலம் பக்கம் மதமாற்றம் சுடச்சுட நடந்து வருகிறதாம். அதிலும் பிராமணர்களை மாற்றுவது தான் முதல் இலக்காம். வெளியில் பெரிதும் தெரியாத பெரிதும் பேசப்படாமல் வறுமையில் தத்தளித்துவரும் பெரிய பிராமணர் கூட்டம் பெரிய அளவில் மதம்மாறிடும் அபாயம் தென்படுகிறது. கிறிஸ்தவர்களையும் முஸ்லீம்களையும் ஊட்டி வளர்க்கும் திராபை திராவிட கட்சி முதல்வர்கள் ஹிந்துக்கள் மீது நடந்து வரும் திட்டமிட்ட தாக்குதலை கண்டிக்காவிட்டால் ஹிந்துக்கள் திராவிடக் கட்சிகளை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அடியோடு புறக்கணித்து தோற்கடிக்க வேண்டும். இதனை ஒவ்வொருவரும் சத்தியப்பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


விஸ்வரூபம் பட விவகாரத்தில் பாரதமே மூழ்கிவிட்ட போது, ஒன்னரை லட்சம் கோடிக்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க விண்ணப்பம் கொடுத்த கடலை வியாபாரியை தமிழகம் மறந்தே விட்டது! எங்கெங்கே எப்படி செட்டில் மெண்ட் ஆச்சோ! ஆனாலும் மறதி ஜாஸ்திப்பா நம்மாளுங்களுக்கு!


மேலே காணும் படத்தைப் பாருங்கள். தீண்டாமை ஒழிப்புத் திருமணமாம். இதற்காக இவர்கள் ஒரு வன்னியர் பையனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் நிக்காஹ் செய்து வைத்திருக்கிறார்கள். 

இணையத்தில் உலவிய செய்தி இது: 

"கடந்த 5ம் தேதி செவ்வாய்க்கிழமை திராவிட விடுதலைக் கழகத்தினரால் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீண்டாமையை ஒழிக்கும் விதமாக ஒரு வண்ணிய இளைஞரான மாணிக்கத்திற்கும் இசுலாமிய சமயத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் யுவதிக்கும் நடந்த புரட்சி திருமணத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் திராவிட விடுதலைக்கழகத்தின் கொளத்தூர் மணி ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். இந்நிலையில் மணமகன் மாணிக்கம் கடவுள் மறுப்பை துறந்து இஸ்லாத்தை தழுவி மாலிக் ஆக மாறியுள்ளார். "

இணையத்தில் உலவிய இந்த செய்தி உண்மையெனில், இந்த செய்தியில் ரெண்டு கேவலங்கள் அடங்கியுள்ளது. முதல் கேவலம் கடவுள் மறுப்புபைத் துறந்து ஒருவர் இஸுலாத்துக்கு மாறினார் என்பது. இதில் கருப்புச்சட்டையின் வெற்றி என்ன என்பது முதல் கேள்வி. மனுஸ்மிருதியை எரிக்க வேண்டுமென்றால் எல்லோரும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என இந்த திராபை திராவிட பகுத்தறிவு சிங்கங்கள் சொல்கிறதா என்று தெரியவில்லை. ஆக கடவுள் மறுப்பு செத்துப் போனது. ஹிந்து மனுஸ்மிரிதிக்குப் பதிலாக அரபி மனுஸ்மிரிதியை ஆதரிக்கும் அவலமும் நடந்துவிட்டது. இதற்குப் பெயர் தான் பகுத்தறிவாமாம். இப்படி ஹிந்துக்களை மதம் மாற்றும் வேலையைச் செய்யுங்கள் என்று தான் ராமசாமி நாயக்கர் வழிகாட்டினாரா?

இதை விட இன்னொரு கேவலம் கலப்புத் திருமணம் என்ற பெயரில் நடைபெற்ற முஸ்லீம் நிக்காஹ். வன்னியர் பையனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் திருமணம் நடந்தால் அது கலப்புத் திருமணம். ஆனால் வன்னியர் பையனை முஸ்லீமாக மாற்றி ஒரு முஸ்லீம் பையனுகும் அதே மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்க்கும் மணம் முடிப்பது எந்த விதத்தில் கலப்புத் திருமணம் ஆகிறது

ஒரு வேளை பிரியானிக்கு ஆசைப்பட்டு ஹிந்துப் பையனை முஸ்லீமாக மதம் மாற்றி முஸ்லீம்களுக்கு மதம் மாற்ற ப்ரோக்கராக வேலை செய்வதற்குப் பெயர் தான் கலப்புத் திருமணமா அல்லது பகுத்தறிவா? இது தான் ராமசாமி நாயக்கரின் வழிகாட்டுதலா?

பகுத்தறிவுக் குஞ்சுமணிகள் தான் பதில் சொல்ல வேண்டும்!முக நூலில் உலவிய ஒரு படம். இதனை ஸ்கேன் செய்து போட்ட அந்த முகம் தெரியாத முதல் நபருக்கு நன்றி! பிரச்சனை என்னன்னா, இதோட அடுத்த பக்கத்தைக் கானோம்! யாருக்காவது கெடச்சா கொஞ்சம் ஷேர் பண்ணுங்கப்பு!

கஸ்ட்டு 15 பாரதம் இந்தியாவாக மாறி சுதந்திரம் பெற்ற அன்று அந்த கொண்டாட்டத்தில் காந்தி கலந்து கொள்ள வில்லை என்பது தெரியுமா? காந்தியார் கல்கத்தாவில் ஏற்பட்டிருந்த மதக்கலவரத்தின் சூட்டைத் தணித்து அமைதியைத் திணிக்க அங்கே யாத்திரை மேற்கொண்டிருந்தார். காங்கிரஸ்காரர்கள் முதலில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் , பிறகு கல்கத்தா போகலாம் என்று வற்புறுத்தியதைக் கூட புறக்கனித்து, சுதந்திரத்திற்கான வாழ்த்துச் செய்தியை கூட வெளியிடாமல்  கல்கத்தாவில் அமைதி முயற்சியை ஏற்படுத்த சென்றுவிட்டார். மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டார் என்பது செய்தி.
                  
திரு. மலர் மன்னன்

காந்தியின் கல்கத்தா யாத்திரை பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை திரு. மலர்மன்னன் (சமீபத்தில் மறைந்த அவருக்கு எமது அஞ்சலிகள்) அவர்களது கட்டுரையில் இதுவரை படித்திராதவர்கள் கொஞ்சம் படிக்கலாம். காந்தி எப்படி ஹிந்துக்களை மட்டும் அமைதிகாக்கச் செய்து முஸ்லீம்களை கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் விட்டார் என்கிற மறுபக்கத்தை எடுத்துச் சொல்லும் கட்டுரையாக இதனை பார்க்கமுடிகிறது.

சில வரிகள்:


"நவகாளியில் ஹிந்துக்கள் மீதான படுகொலைத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவில்தான் இருந்தார். அங்கு அவர் சமரசப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது நவகாளியில் ஐம்பதாயிரத்திலிரிருந்து எழுபதாயிரம் வரையில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்று நவகாளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை இருபது முதல் இருபத்தைந்து லட்சம் வரை. அக்டோபர் மாதம் முழுவதும் முகமதியரின் தாக்குதலுக்குப் பலியான பிறகு வெளி மாவட்ட ஹிந்துக்களின் துணையோடு நவகாளி மாவட்ட ஹிந்துக்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கத் தயாரானபோது, பிரதமர் சுரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நவகாளி வந்து சேர்ந்தார், காந்திஜி. கிராமம் கிராமமாகப் பாத யாத்திரை சென்று ஹிந்துக்களை சமாதானப் படுத்தலானார். முகமதியர் தாக்கினாலும் ஹிந்துக்கள் திருப்பித் தாக்கலாகாது. அஹிம்சையே ஹிந்துக்களின் ஆயுதம். முகமதியரால் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்களை ஹிந்து இளைஞர்கள் மணம் செய்துகொள்ளவேண்டும். வலுக்கட்டாயமாக முகமதியராக மதம் மாற்றப்பட்டவர்கள் விரும்பினால் திரும்பவும் ஹிந்துக்களாகிவிடலாம். அவர்களை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் காந்திஜி மக்களுக்குச் சொன்ன அறிவுரைகள். தினமும் மாலையில் பிரார்த்தனை கூட்டம் நடத்தி சர்வ சமய வேதங்களை ஓதச் செய்வார். குறிப்பாகக் குரானிலிருந்து அதிக வரிகள் படிக்கச் செய்து முகமதியரை அமைதி வழிக்குத் திருப்ப முயற்சி செய்வார்."
மேலும் படிக்க...!

No comments: