
இந்த வார விடுமுறையில் ஏனோ கொஞ்சம் மனசு அமைதியா இருந்துச்சு. சரி நம்ம குருவுக்கு வணக்கம் வெச்சு நாளாச்சேன்னு பகவத் கீதை புக்கை கையில் எடுத்தேன். ஆம் கண்ணன் தான் என் குரு. உலகத்தின் முதல் தத்துவ ஞானி.
சொல்வாங்களே ஃப்ரெண்ட் பிலாசபர் எல்லாமே ன்னு அப்படி ஒரு குரு. ஐ லவ் ஹிம் சொ மச்.
இப்படி கண்ணனைப் பத்தி நினைச்சுக்கிட்டே கீதையை அமைதியா புரட்டும் போது குறும்புக்கண்ணனான இவன் உள்ளே வந்தான்.
அதாங்க போன தடவை கூட மொக்கை தாங்க முடியாம ஓடிப்போனானே அந்த வாண்டுப்பையனே தான். டிவியும் சினிமாவும் பசங்கள எவ்வளவு தூரம் பாதிக்கிதுங்கறதுக்கு இவனே அடையாளம்.
"ன்னா, என்ன புக்ன்னா இது?"
"பகவத் கீதை டா"
"ஓ, ன்னா க்ருஷ்ணர் பயங்கர வாலாமே, என்னை மாதிரி!!!" சொல்லிட்டு ஓரக்கண்ணால பாத்தான்.
"ஆமாண்டா, என்ன இப்போ"
"ன்னா க்ருஷ்ணர் கூட லவ் பண்ணினார்ல?"
"அதானே! பயிண்டுக்கு வந்துருவியே"
"அத விடுங்கன்னா, நீங்க இதுவரைக்கு யாருக்காவது ப்ரபோஸ் பண்ணிருக்கீங்களான்னா?"
"இல்லடா"
"அய்ய நீங்க வேஸ்ட் ன்னா"
"டேய்! என்னடா வேணும் உனக்கு?"
"பின்னென்னன்னா, மனிசனாப் பொறந்தா லவ் பண்ணனும்னா.."
"ஏண்டா உங்க அப்பா அம்மா திட்ட மாட்டாங்களா?"
"ஏன் திட்டனும்? வி ஹாவ் ரைட்ஸ்ன்னா"
ஆகா ஓவராப் போறானே...இவனுக்கு போனதடவை மாதிரி சீரியஸா மொக்க போட்டா தான் சரியாகும்ன்னு சொல்ல ஆரம்பிச்சேன்..
"ஏண்டா இதுக்கெல்லாமாடா ரைட்ஸ் பேசுவீங்க. ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! வெள்ளைக்காரன் தனக்கு உரிமை இருக்குன்னு பேசினா அவன் கதையே வேற. பதினைஞ்சு வயசானா அவனுங்க ஒருத்தனும் வீட்ல இருக்க மாட்டாங்க. அப்பா அம்மாவ விட்டு தனியா போயிறுவாங்க. அவன் எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை. அவங்க எப்டி போனாலும் அவனுக்கும் கவலையில்லை. யாரு கூடவாவது தங்கிக்கிட்டு ஏதாவது வேலை செஞ்சு, தன் காசுலேயே மேற்படிப்பு படிச்சு தானே தான் உருப்படுவானுங்க. அப்பறம் அவனுக்கு அவனே ஜோடியைத்தேடிப்பான். அதுக்கு அவனுக்கு ரைட்ஸ் இருக்கும்பான்.
ஆனா நம்ம நாட்ல அப்படியா வளக்கறாங்க. குழந்தையா பொறந்தவுடனே பூச்சி பொட்டு அண்டீரக்கூடாதேன்னு பொத்திப் பொத்தி பாதுகாத்து, மத்த பசங்கள விட நம்ம பசங்கதான் சொசைட்டில முன்னாடி வரணும்னு கடனவுடன வாங்கி பெரிய ஸ்கூல்ல சேத்து, பதினைஞ்சு வர்ஷம் கழிச்சு வரப்போற உன் காலேஜ் செலவுக்கு இப்பருந்தே இன்ஸூரன்ஸ்ல பணம் கட்டி, காலேஜ்ல படிக்க வெச்சு, பின்னாடி வெளிநாட்ல பசங்களுக்கு வேலை கிடச்சா கண்ட கண்ட கான்ஸ்லேட் வாசல்ல ராப்பூரா காவலுக்கு இருந்து உங்கள வெளிநாட்டுக்கும் அனுப்பி எவ்வளவு தூரம் பிள்ளைங்களுக்காக கஷ்டப்படனுமோ அவ்வளவும் செஞ்சு உங்கள பெரிய மனுஷனாக்கினா, உங்கள மாதிரி பசங்கல்லாம் அவங்களுக்கு யார் மருமகனா வந்தா இல்ல மருமகளா வந்தா பிடிக்கும்ன்னு ஒரு ப்ரசண்ட் கூட யோசிக்காம ஜோடியை சேத்துக்க எனக்கு ரைட்ஸ் இருக்குன்னு
சொன்னா உங்களெல்லாம் கருவாடு தொங்க விடற மாதிரி உரிச்சு உப்புக்கண்டம் போட வேனாம்?'
மூச்சு வாங்க இவ்வளவு லென்தா டையலாக் பேசி முடிச்சா வாண்டு மூஞ்சிக்கு முன்னாடி வந்து என்னையே உத்துப் பாத்தான்!
"உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெய்லியரான்னா?"
"ஏண்டா?"
"இல்ல இவ்வளவு சீரியஸா நீங்க மொக்க போட்டு நான் பாத்ததேயில்லை அதான் கேட்டேன்!" ன்னு சொல்லிட்டு ஓடியே போய்ட்டான்.
இந்தகாலத்துப் பசங்க அடங்கவே மாட்றானுங்கப்பா.
அடுத்த முறை வரட்டும். அவனா கேள்வி கேக்காட்டாலும் அவனுக்க்காகவே கலைஞர் மாதிரி நானே கேள்விபதில் தயாரிச்சு வலுக்கட்டாயமா அவன் காதுக்குள்ள ஒப்பிக்கலாம்ன்னு இருக்கேன்.
வருவானா பாக்கலாம்.
