Saturday, September 5, 2009

சப்பைக் கேள்வியும் மொக்கை பதிலும் - 2

இந்த வார விடுமுறையில் ஏனோ கொஞ்சம் மனசு அமைதியா இருந்துச்சு. சரி நம்ம குருவுக்கு வணக்கம் வெச்சு நாளாச்சேன்னு பகவத் கீதை புக்கை கையில் எடுத்தேன். ஆம் கண்ணன் தான் என் குரு. உலகத்தின் முதல் தத்துவ ஞானி.

சொல்வாங்களே ஃப்ரெண்ட் பிலாசபர் எல்லாமே ன்னு அப்படி ஒரு குரு. ஐ லவ் ஹிம் சொ மச்.

இப்படி கண்ணனைப் பத்தி நினைச்சுக்கிட்டே கீதையை அமைதியா புரட்டும் போது குறும்புக்கண்ணனான இவன் உள்ளே வந்தான்.

அதாங்க போன தடவை கூட மொக்கை தாங்க முடியாம ஓடிப்போனானே அந்த வாண்டுப்பையனே தான். டிவியும் சினிமாவும் பசங்கள எவ்வளவு தூரம் பாதிக்கிதுங்கறதுக்கு இவனே அடையாளம்.

"ன்னா, என்ன புக்ன்னா இது?"

"பகவத் கீதை டா"

"ஓ, ன்னா க்ருஷ்ணர் பயங்கர வாலாமே, என்னை மாதிரி!!!" சொல்லிட்டு ஓரக்கண்ணால பாத்தான்.

"ஆமாண்டா, என்ன இப்போ"

"ன்னா க்ருஷ்ணர் கூட லவ் பண்ணினார்ல?"

"அதானே! பயிண்டுக்கு வந்துருவியே"

"அத விடுங்கன்னா, நீங்க இதுவரைக்கு யாருக்காவது ப்ரபோஸ் பண்ணிருக்கீங்களான்னா?"

"இல்லடா"

"அய்ய நீங்க வேஸ்ட் ன்னா"

"டேய்! என்னடா வேணும் உனக்கு?"

"பின்னென்னன்னா, மனிசனாப் பொறந்தா லவ் பண்ணனும்னா.."

"ஏண்டா உங்க அப்பா அம்மா திட்ட மாட்டாங்களா?"

"ஏன் திட்டனும்? வி ஹாவ் ரைட்ஸ்ன்னா"

ஆகா ஓவராப் போறானே...இவனுக்கு போனதடவை மாதிரி சீரியஸா மொக்க போட்டா தான் சரியாகும்ன்னு சொல்ல ஆரம்பிச்சேன்..

"ஏண்டா இதுக்கெல்லாமாடா ரைட்ஸ் பேசுவீங்க. ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ! வெள்ளைக்காரன் தனக்கு உரிமை இருக்குன்னு பேசினா அவன் கதையே வேற. பதினைஞ்சு வயசானா அவனுங்க ஒருத்தனும் வீட்ல இருக்க மாட்டாங்க. அப்பா அம்மாவ விட்டு தனியா போயிறுவாங்க. அவன் எக்கேடு கெட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லை. அவங்க எப்டி போனாலும் அவனுக்கும் கவலையில்லை. யாரு கூடவாவது தங்கிக்கிட்டு ஏதாவது வேலை செஞ்சு, தன் காசுலேயே மேற்படிப்பு படிச்சு தானே தான் உருப்படுவானுங்க. அப்பறம் அவனுக்கு அவனே ஜோடியைத்தேடிப்பான். அதுக்கு அவனுக்கு ரைட்ஸ் இருக்கும்பான்.

ஆனா நம்ம நாட்ல அப்படியா வளக்கறாங்க. குழந்தையா பொறந்தவுடனே பூச்சி பொட்டு அண்டீரக்கூடாதேன்னு பொத்திப் பொத்தி பாதுகாத்து, மத்த பசங்கள விட நம்ம பசங்கதான் சொசைட்டில முன்னாடி வரணும்னு கடனவுடன வாங்கி பெரிய ஸ்கூல்ல சேத்து, பதினைஞ்சு வர்ஷம் கழிச்சு வரப்போற உன் காலேஜ் செலவுக்கு இப்பருந்தே இன்ஸூரன்ஸ்ல பணம் கட்டி, காலேஜ்ல படிக்க வெச்சு, பின்னாடி வெளிநாட்ல பசங்களுக்கு வேலை கிடச்சா கண்ட கண்ட கான்ஸ்லேட் வாசல்ல ராப்பூரா காவலுக்கு இருந்து உங்கள வெளிநாட்டுக்கும் அனுப்பி எவ்வளவு தூரம் பிள்ளைங்களுக்காக கஷ்டப்படனுமோ அவ்வளவும் செஞ்சு உங்கள பெரிய மனுஷனாக்கினா, உங்கள மாதிரி பசங்கல்லாம் அவங்களுக்கு யார் மருமகனா வந்தா இல்ல மருமகளா வந்தா பிடிக்கும்ன்னு ஒரு ப்ரசண்ட் கூட யோசிக்காம ஜோடியை சேத்துக்க எனக்கு ரைட்ஸ் இருக்குன்னு
சொன்னா உங்களெல்லாம் கருவாடு தொங்க விடற மாதிரி உரிச்சு உப்புக்கண்டம் போட வேனாம்?'

மூச்சு வாங்க இவ்வளவு லென்தா டையலாக் பேசி முடிச்சா வாண்டு மூஞ்சிக்கு முன்னாடி வந்து என்னையே உத்துப் பாத்தான்!

"உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெய்லியரான்னா?"

"ஏண்டா?"

"இல்ல இவ்வளவு சீரியஸா நீங்க மொக்க போட்டு நான் பாத்ததேயில்லை அதான் கேட்டேன்!" ன்னு சொல்லிட்டு ஓடியே போய்ட்டான்.

இந்தகாலத்துப் பசங்க அடங்கவே மாட்றானுங்கப்பா.

அடுத்த முறை வரட்டும். அவனா கேள்வி கேக்காட்டாலும் அவனுக்க்காகவே கலைஞர் மாதிரி நானே கேள்விபதில் தயாரிச்சு வலுக்கட்டாயமா அவன் காதுக்குள்ள ஒப்பிக்கலாம்ன்னு இருக்கேன்.

வருவானா பாக்கலாம்.

19 comments:

Kesavan said...

///"உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெய்லியரான்னா?"///

அவன் இனி வர மாட்டான்.

எது அவன் அவன் கேட்டான்னு ஆகா! புரிஞ்சு போச்சு உங்க மனசு தான் அவனா? நடக்கட்டும் நடக்கட்டும்.

hayyram said...

எல்லா ஜீவராசியிலும் நானே இருக்கிறேன்னு கேள்விபட்டதில்லையா தம்பி. அதுதான் இது.

வால்பையன் said...

பரவலாக காணப்படும் கீதாச்சாரம் என்பது கீதை புத்தகத்தில் இல்லையாமே!?

அப்படியானால் கீதை என்பது பலரால் புனைந்து எழுதப்பட்டதா!?

அப்படியே இருந்தாலும் போர் முனையில் கிருஷ்ணன் பண்ணிய அட்வைஸை யார் கூட இருந்து நோட்ஸ் எடுத்தது,

பயங்கரமா லாஜிக் இடிக்குதே!

மொத்த மகாபாரதமும் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட பெரிய நாவல்!

hayyram said...

அன்புள்ள வால்பையன் அவர்களுக்கு,

//பரவலாக காணப்படும் கீதாச்சாரம் என்பது கீதை புத்தகத்தில் இல்லையாமே!?//

கீதாச்சாரம் என்பது summary of the book என்று வைத்துக்கொள்ளுங்கள். சாரம் என்றாலே தொகுக்கப்பட்டது என்பது தான் பொருள். கீதையில் இருக்கும் மொத்தக்கருத்துக்களை வடிகட்டி அதன் அடிப்படை அம்சங்களை உபதேசிப்பவர்கள் சொல்லியிருக்கிறார்கள். உதாரனமாக அலுவலகத்தில் நீங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய ரிப்போர்டை சுருக்கமாக பார்த்தவுடன் புரியும்வகையில் சம்மரி தயாரித்து வெளிப்படுத்துவது இல்லையா. அப்படித்தான் கீதாச்சாரம் என்பதும். அது விளக்கமாகப் புரிய வேண்டுமானால் முழுகீதையையும் நீங்கள் படித்துப்பாருங்கள்.

//அப்படியானால் கீதை என்பது பலரால் புனைந்து எழுதப்பட்டதா!?//

கண்டிப்பாக புனைவு எதுவுக் இதில் கிடையாது என்பது உண்மை. ஏனென்றால் புனைவு என்றாலே பொய் புரட்டுக்களைச் சேர்த்தல் என்று பொருள் படுகிறது. அது நிஜ வாழ்கையில் பயனளிக்காமல் போகலாம். ஆனால் கீதையில் உள்ள யாவும் வாழ்க்கைத் தத்துவங்கள். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வயதிலும் வாழ்ந்து பார்க்கும் போது அதன் உண்மைகளைக் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியும். எனவே நாம் வாழும் வாழ்க்கையே கீதைக்கான நிரூபானம் ஆகும்.

கீதோபதேசம் என்பது ஸ்ரீக்ருஷ்னர் போதித்தது என்பதையும் அர்ஜுனனுக்கும் ஸ்ரீக்ருஷ்னருக்கும் நடந்த உரையாடலில் சிதறிய முத்துக்கள் என்றும் நான் மனதார நம்புகிறேன். நான் நிஜப் பகுத்தறிவாளன் ஆகையால் சொல்கிறேன் என் கொல்லுப்பாட்டன் யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனால் கண்டிப்பாக அவருக்கும் ஒரு பாட்டனார் இருந்தே இருப்பார். அந்தப் பாட்டனாருக்கும் ஒரு பாட்டனார் இருந்திருப்பார். இப்படி கண்டிப்பாக எல்லைகளை கற்பனை செய்ய முடியாத ஒரு மூலத்திலிருந்து தான் என் வரை தோற்றங்கள் நிகழ்ந்திருக்கும் இல்லையா. இப்படி கண்ணுக்குத் தெரியாத நம் பாட்டனார்களை எப்படி நாம் நம்புகிறோமோ அப்படித்தான் நான் ஸ்ரீ க்ருஷ்ணரையும் நம்புகிறேன். யார் கண்டார். நான் கூட ஸ்ரீ க்ருஷ்ணரின் பல தலைமுறை தாண்டிய கொல்லுப்பேரனாகக் கூட இருப்பேன். நீங்கள் கூட இருப்பீர்கள். (டாவின்சி கோட் மாதிரி ஏதாவது புதிர் இருந்தால் கண்டுபிடிக்கலாமோ?) நம்பிக்கை தான் என்று சொல்வதற்கு நான் வெட்கப்படப்போவதும் இல்லை. நல்லதை கேள்வி இல்லாமல் நம்புவதில் தவறில்லை என்பது என் கருத்து. எது நல்லது என்பதை புரிந்து கொள்ளத்தான் பகுத்தறிவை உபயோகிக்க வேண்டும். அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் தவறில்லை. ஆனால் எல்லாமே மூடநம்பிக்கை என்று பரிகாசிப்பதும் பகுத்தறிவிற்கு முரனானது என்பதையும் குறிப்பிட விரும்பிகிறேன். எனவே வால் அவர்களே, நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன் நீங்கள் தைரியமாக கீதையை நம்புங்கள். ஒன்றும் குறைந்து போகாது.

//அப்படியே இருந்தாலும் போர் முனையில் கிருஷ்ணன் பண்ணிய அட்வைஸை யார் கூட இருந்து நோட்ஸ் எடுத்தது,

பயங்கரமா லாஜிக் இடிக்குதே!//

கருனாநிதி பேசுவதை எல்லாம் நோட்ஸ் எடுக்க பின்னாடியே வருஷக்கனக்கா ஒருவர் இருக்கிறாரே பார்த்ததிலையா? அற்ப மானிடருக்கே இப்படி ஒருவர் இருப்பாரென்றால், சர்வவல்லமை பொருந்திய பகவானும், துவாரகாபுரி அரசனுமான ஸ்ரீ க்ருஷ்னர் பேசுவதை நோட்ஸ் எடுக்க போர் முனையானாலும் பரவாயில்லை நான் எழுதுகிறேன் என்று சொல்ல ஒரு விசுவாசி கூடவா இருந்திருக்க மாட்டார்? லாஜிக் இடிக்கவே இல்லையே!.

மேலும் விதுரர் தன் ஞான த்ருஷ்டி மூலமாக உட்கார்ந்த இடத்திலிருந்தே திருதிராஷ்டிரனுக்கு போர்முனையில் நடந்தவைகளை உரைக்கவில்லையா? அவரே கூட நோட்ஸ் எடுத்திருக்க முடியாதா என்ன. இதெல்லாம் ஜுஜுபி மேட்டரு. மேலும் வியாசர் இந்த நோட்ஸையெல்லாம் பிள்ளையாருக்கு டிக்டேட் பண்ண எழுதினவர் பிள்ளையார் என்பதும் மகாபாரத வரலாறு தானே. என்னவால் சப்ப கேள்வி கேட்டு என்னை மொக்க பதில போட வெச்சிருவீங்க போலிருக்கே!

//மொத்த மகாபாரதமும் யாரோ ஒருவரால் எழுதப்பட்ட பெரிய நாவல்!//

அதான் சொன்னேனே பிள்ளையாரால் எழுதப்பட்டது என்று. சமீபத்தில் நடந்த அரசியலை புத்தகமாக்கினால் அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் வரலாறு. மகாபாரதமும் வரலாறே. சுமார் ஐயாயிரத்தி நூறு வருடங்களுக்கு முன் நடந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதிகாசம் என்றால் என்றால் என்ன தெரியுமா? இது நடந்தது என்று பொருள். சமஸ்கிருதத்தில் சொன்னதால் உங்களுக்கு புரியவில்லை அவ்வளவுதான்.

நன்றி

வாழ்க வளமுடன்.

வால்பையன் said...

//நான் நிஜப் பகுத்தறிவாளன் ஆகையால் சொல்கிறேன்//

உங்களை பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்வதே ஓவரு!
இதுல நிஜ பகுத்தறிவாளன் வேறயா!?


//பிள்ளையாரால் எழுதப்பட்டது//

இங்கேயே தெரிஞ்சி போச்சே!
பகுத்தறிவு!

hayyram said...

//உங்களை பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்வதே ஓவரு!
இதுல நிஜ பகுத்தறிவாளன் வேறயா!?//

ஹலோ இதெல்லாம் ரொம்ப நக்கலு ஆமாம்!

எனக்கு கோவம் வந்திச்சு அழுது போடுவேன் அழுது!

thiruchchi said...

ப‌ல இட‌ங்க‌ளிலும் கீதாசார‌ம் என்ற‌ பெய‌ரில் வைக்க‌ப் ப‌ட்டு இருக்கும்
"எது ந‌ட‌ந்த‌தோ அது, ந‌ன்றாக‌வே....." என்ப‌தற்க்கும் கீதையின் சாரத்துக்கும் எந்த‌ ஒரு தொட‌ர்பும் இருப்ப‌தாக‌ என‌க்குத் தெரிந்த‌ வ‌கையில் இல்லை.

ந‌ண்ப‌ர் ராம், இந்த‌ வாக்கிய‌த்திற்க்கும் கீதைக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு உண்டு என்று க‌ருதினால் அதை விள‌க்க‌லாம்.

திருச்சிக் கார‌ன்

thiruchchi said...

//ஆனால் போர்க்க‌ள‌த்தில் அர்ஜுனனுக்கு உப‌தேசித்த‌தை நோட்ஸ் யார் எடுத்தார்க‌ள்.//

ஏன் அர்ஜுன‌னுக்கு தெரியுமே, அவ‌னே கூற‌லாமே?


மொத்த‌ ம‌ஹாபார‌த‌மும் யாரோ ஒருவ‌ரால் எழுத‌ப் ப‌ட்ட‌து என்ப‌து ச‌ரியே, ஆனால் அது க‌ற்ப‌னை தான் என்ப‌தை அடித்துச் சொல்ல‌ முடியாது.

அதை முத‌லில் எழுதிய‌வ‌ர் வியாச‌ர் என்ப‌வ‌ர், அத‌ன் ஆசிரிய‌ர் என்கிறார்க‌ள்.

அந்த‌ வியாச‌ரிட‌ம் உத‌வியாளராக‌ப் ப‌ணி செய்தவ‌ரிட‌ம் வியாச‌ர் "ஏம்பா, திர‌வுப‌தி புட‌வையை உருவுவ‌து துச்சாத‌ன‌ன் என்று வைக்க‌லாமா, இல்ல‌ துரியோத‌ன‌னே அதையும் செஞ்சானு எழுதலாமா" என்று கேட்ட‌து போல‌வும்,
அத‌ற்க்கு அந்த‌ உத‌வியாள‌ர் "துச்சாத‌ணே உரிச்சானு போட‌லாம்"ணு சொன்ன‌ மாறியும்,

அதை நாம‌ ப‌க்க‌த்தில‌ இருந்து கேட்ட‌து போல‌வும் இது ஒரு க‌தைதான் என்று அடித்து சொல்வ‌தும் ப‌குத்த‌றிவ‌ல்ல‌.


எப்ப‌டி ம‌ஹாபார‌த‌ம் ஒரு உண்மை நிக‌ழ்வு என்று அடித்துச் சொல்ல‌ முடியாதோ, அத‌ப் போல‌வே அது ஒரு க‌ற்பனை என்ப‌தாக‌வும் உறுதியாக‌க் கூற‌ முடியாது.

ஏன் எனில் இந்தியாவில் ப‌ல‌ உண்மை நிக‌ழ்வுக‌ளே காப்பிய‌ங்க‌ள் ஆக எழுத‌ப் ப‌டுகின்ற‌ன‌.


ச‌கோத‌ர‌ர் வாலுப் பைய‌னார், ஏதாவ‌து கார‌ண‌ம் சொல்லி விரைந்து கேசை முடித்து நாட்டாமை பாணியிலே க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பாக‌ இது ஒரு நாவ‌லே என்று கூறியுள்ள‌து போல‌ தோன்றுகிறது.

ச‌கோத‌ர‌ர் வாலுப் பைய‌னார் இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால் ச‌ரியான‌
ப‌குத்த‌றிவைப் பிடிக்க‌லாம்.

ச‌கோத‌ர‌ர் ராமும் இன்னும் ஆழ்ந்து சிந்திக்க‌ வாய்ப்பும், வ‌ய‌தும் உள்ளது.

வால்பையன் said...

//ச‌கோத‌ர‌ர் வாலுப் பைய‌னார், ஏதாவ‌து கார‌ண‌ம் சொல்லி விரைந்து கேசை முடித்து நாட்டாமை பாணியிலே க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பாக‌ இது ஒரு நாவ‌லே என்று கூறியுள்ள‌து போல‌ தோன்றுகிறது.//

முதல்ல பகுத்தறிவுங்குற வார்த்தையை உபயோகப்படுத்துவதுவதை நிறுத்துங்க எனக்கு கோபம் கோபமா வருது!

புத்தகத்துல இருக்குறதெல்லாம் நம்புறதுக்கு பேர் தான் பகுத்தறிவா?
போர் நடந்ததற்கு எதாவது அறிகுறி இருக்கா?

சூரியனுக்கு பிறந்தான் கர்ணன் என்பதை நம்புறிங்களா!?

கேக்குறவன் கேனயனா இருந்தா சொல்லிகிட்டே போகலாம்!
உங்கள் துரதிர்ஷ்டம் நான் கேனயன் அல்ல

hayyram said...

///முதல்ல பகுத்தறிவுங்குற வார்த்தையை உபயோகப்படுத்துவதுவதை நிறுத்துங்க எனக்கு கோபம் கோபமா வருது!
///

ஹா ஹா ஹா! ஏன் எதாவது காப்பி ரைட்ஸ் வாங்கி வெச்சிருக்கீங்களா! இருந்தா சர்டிபிகேட் காமிங்க!


//புத்தகத்துல இருக்குறதெல்லாம் நம்புறதுக்கு பேர் தான் பகுத்தறிவா?//

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் தான் என்று நம்புகிறேர்களா?

hayyram said...

//ச‌கோத‌ர‌ர் ராமும் இன்னும் ஆழ்ந்து சிந்திக்க‌ வாய்ப்பும், வ‌ய‌தும் உள்ளது.//

திருச்சி சார்,

எனக்கு ஊக்கமளித்ததற்கு நன்றி!

//ந‌ண்ப‌ர் ராம், இந்த‌ வாக்கிய‌த்திற்க்கும் கீதைக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு உண்டு என்று க‌ருதினால் அதை விள‌க்க‌லாம்.//


இவ்வறு விளக்கியுள்ளேன். கீதை புத்தகத்தில் கீதாச்சாரம் எங்கும் கிடையாது. எல்லாம் மாயை என்பதை ப்ராக்டிகலாக எல்லோருக்கும் புரியும் வகையில் இப்படி சொல்லியிருக்கிறார்கள்.அவ்வளவு தான்.

//கீதாச்சாரம் என்பது summary of the book என்று வைத்துக்கொள்ளுங்கள். சாரம் என்றாலே தொகுக்கப்பட்டது என்பது தான் பொருள்.//

வால்பையன் said...

//திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் தான் என்று நம்புகிறேர்களா? //

முதலில் நானே என்னை பகுத்தறிவாளன் என்று சொல்லி கொள்வதில்லை!
அதற்கு ரைட்ஸும் தேவையில்லை, ஆனால் அதற்கு அர்த்தமே தெரியாமல் நீங்கள் உபயோகப்படுத்தும் போது எரிச்சலாக தான் இருக்கிறது, ஆனால் நீங்கள் சொல்வதும் சரிதான்! நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லையே, நீங்கள் சொல்லி கொள்ளுங்கள்!

திருகுறள் எழுதியது ஒரே ஆளா என்பதே இன்று வரை தெரியாத உண்மை! மேலும் திருக்குறள் மேல் எனக்கு பெரிய அபிபிராயம் இல்லை!
அது நிலபிரபுத்துவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க அறிவுரைகள்!

hayyram said...

///முதலில் நானே என்னை பகுத்தறிவாளன் என்று சொல்லி கொள்வதில்லை!///

அதென்ன 'நானே' ? எல்லா ஜீவராசியிலும் நானே இருக்கிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொன்னாரே அந்த 'நானே' யா?

kumar said...

ராம் அண்ணே !! கலக்கிடீங்க இதே இதே தான் அப்பிடியே என்னோட எண்ணங்கள் ,,ரொம்ப சந்தோசமா இருக்கு ,எனக்கு கூட 25 வயசு ஆகுது,எனக்கு காதல் கத்தரிக்காய் உலகத்துலே புடிக்காத விஷயம் ,ஆறாவது படிக்கறவன் எல்லாம் ஆள பத்தி பேசுறான் ..இப்பிடித்தான் உங்கள மாதிரியே நானும் கிளம்பினேன் சின்ன பசங்களுக்கு ஏதாவது சொல்லி புரியவைக்கலாம்னு,சும்மா மொக்கை போடதிங்கங்கறான் 9,12,காலேஜ் படிக்கறவன் ,எல்லாம் டிவி ,இன்டர்நெட் பண்ணர வேல.எல்லாத்துக்கும் அப்பா அம்மா தான் காரணம் ,பணம்,பணம் பேயா அலையைரப்ப தங்களோட அடையாளாங்கள இழந்துடறாங்க..எதையும் சொல்லி குடுக்கறது இல்ல .அப்பறம் இன்னோர் விளக்கம் பூணுல பத்தி என் மனசுல இருந்தது அப்பிட்யே எழுதிடீங்க,அத அணிஞ்சுக்கிரப்ப நம்மளோட கோவம் குறையுது ,நாம சண்டைக்கு போகமட்டோம்ன்னு போட்டு விடுவாங்க,மானசீகமா நம்மள தடுக்கும் எந்த கெட்ட வழிக்கும் போகாம்ம தடுக்கும் நம்மளோட மத அடையாளங்கள் ..
இந்த காதல் கருமாந்திரம் பாருங்க , ஒரு குடும்ப அமைப்பையே கெடுத்துடும்,நாம எல்லோரும் மனிதர்களா வாழ தகுதி இல்லதவர்கள ஆக்கிடும்,சமுக மிருகம் மனிதன்கர அர்த்தமே இல்லாம அயிஞ்சு அறிவு மிருகமா ஆக்கிடும்,தானே பொன்னோ/பையனோ தேடிப்போறது நமக்கும் நாய்க்கும் வித்தியாசம் இல்லாம பண்ணிடும்,எவனோ /எவளோ தானே இன்னொருத்தர் கூட ஓடிப்போகறதுக்கு எதுக்கு ஒரு அப்பா அம்மா பெத்து ,பாராட்டி ,சீராட்டி வளர்க்கணும்,ஆம்பைகளுக்கு தான் அறிவு இல்ல.இந்த பெண்களுக்கு எங்க அறிவு போச்சு ,அடுத்த தலைமுறைய உருவாக்கறவங்க அவங்களுக்கு அறிவு வேணாம் ,தெருவுல மார்கழி மாசம் மிருகத்தனமா அலையுற ஆண் நாய் கிட்ட,தானே வலிய போய் சேந்துக்கற பெண் நாய்ங்க மாதிரி அது அது எவனையோ எழுத்துகிட்டு ஓடுதுங்க ஏமாந்து போய் கெட்ட சுதந்திரம் உயரிமை ,சம்பாதிக்கற திமிரு ..என்ன எழவ சொல்லிகொடுத்து வளக்கராங்களோ? வெள்ளைக்காரன் தாந்தோண்றி மாதிரி இருந்து வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லாம பண்ணிட்டான் ,அவனோட சமுகம் ஒரு விலங்கு கூட்டம் மாதிரி ,உணர்ச்சிகளே இல்லாத இயந்திரயங்களோட கூட்டம் மாதிரி ஆயிடிச்சு,பாரம்பரியம் இல்ல ,கலாச்சாரம் இல்ல ,மனிதநேயம் இல்ல ,பிறஉயரினங்களை மதிக்கறது இல்ல.. இது என்னோட இரண்டாவது கமெண்ட்,முதல் கமெண்ட் r நகர பேர்ல வந்தது இதுக்கு முன்னாடி ,ஏன்னா எனக்கு சரியாய் இன்டர்நெட் கையாள தெரியாது ,உங்களோட ப்ளாகளதான் முதல் முதலா பதில் எழுதினேன்,இது இரண்டாவது ,உங்களுக்கு எழுதணும்னே என் நண்பர்கள்கிட்ட எப்பிடி எழுதனும்னு கேட்டு தினமலர் தளத்துலேருந்து எழுதறேன் ,இனிமே கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன் ..இந்த தொழில்நுட்பம் நம்மள மனிதர்களா இருக்க விடாது,யந்திரமா மாத்திடும்,அதனால ரொம்ப நேரம் இண்டர்நெட்ல இருக்க மாட்டேன்,எனக்கு ஒருத்தர் ஒருதடவ தமிழ்ஹிந்து தளத்த பாக்க சொன்னார் ,அப்பிடியே உங்க பக்கத்துக்கும் வந்தேன்,என்கிட்டே கைபேசி கிடையாது.அப்பறம் உங்கள பத்தி தெரிஞ்சுக்கலாம? ரொம்ப நேரம் தமிழ்ல டைப் அடிக்க முடியல..கண்ண கட்டுது .. சும்மா விதண்டாவாதம் பண்றவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்ல ,புரிஞ்சுக்கறவங்க புரிஞ்சுக்கறாங்க,புரியலேன்னாலும் யாருக்கும் நஷ்டம் இல்ல, எல்லாம் சரியா இருந்தா சரி ,,உங்க கடமைய செய்ங்க -நன்றி ,வாழ்த்துக்கள்
could you able to view my email address? will it go public/private..i dont know how a blog functions,i am a beginner,if not rajeshh789@gmail.com.
if you found personal introduction/matters unnecessary in this forum please just edit it.
thanks & regards
kumar

hayyram said...

நன்றி குமார். நீங்கள் r என்ற பெயரில் எழுதியதையும் படித்திருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இ மெயில் ஐடி வெளியே தெரிவதால் ஒன்றும் ஆகாது. உங்களுக்கு தனி மடல் இடுகிறேன். நன்றி.

அன்புடன்
ராம்

Anonymous said...

Mr. hayyram for kumar
Please Don't publish Mail id. It can be a dangerous one. because 'நாத்திக தீவிரவாதம்' will also affect your supporters. Take care.


As of My influence in Vivekanada Kendra, we strongly belief geetha saram is not whole summary of Gita. It is a fractional part of Gita

smart said...

சார் உங்க அனுமதியில்லாம வால்பையனோட thirukkural விளக்கத்தை இங்க கொடுத்துட்டேன் மன்னிச்சிருங்க

http://valpaiyan.blogspot.com/2010/03/blog-post_16.html

hayyram said...

//'நாத்திக தீவிரவாதம்'// சரியான வார்த்தை அனானி. வருகைக்கு நன்றி. குமாருக்கு நல்லதே நடக்கும்.

hayyram said...

//சார் உங்க அனுமதியில்லாம வால்பையனோட thirukkural விளக்கத்தை இங்க கொடுத்துட்டேன் மன்னிச்சிருங்க// அது திருக்குறள் விளக்கமா. ஹா ஹா சும்மா என்ஜாய் பன்னுங்க.