Showing posts with label ஜாதிகள். Show all posts
Showing posts with label ஜாதிகள். Show all posts

Sunday, December 9, 2012

ஜாதிகள் ஒரு சக்கர வியூகம்!


ஒரு பத்திரிக்கை இரண்டு செய்திகள்:

*** கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும், மரியாதையும், கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனா, காதல் மற்றும் கலப்புத் திருமணத்தால் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கும் அழிஞ்சுபோகுது. 'கவுண்டச்சியைக் கட்டுவோம், கவுண்டனை வெட்டுவோம்' னு சூளுரையோட செயல்படுறாங்க குறிப்பிட்ட சில சமூகப் பசங்க. காதல், சாதி மறுப்புத் திருமணம்னு தடம் மாறிப் போயி சீரழிஞ்ச எங்க பொண்ணுங்களோட எண்ணிக்கை கொத்துக்கொத்தாக் கிடக்குதுங்க. எதையும் ஆதாரம் இல்லாம நான் சொல்லலை. இந்த வருஷத்தில் (2012) இதுவரை 936 கவுண்டர் சமுதாயப் பெண்கள், தலித் பையன்களைத் திருமணம் செய்து இருக்காங்க. அதில், 716 திருமணங்கள் மணமுறிவை சந்திச்சிருக்குது. 12 பொண்ணுங்க தற்கொலை செய்திருக்காங்க, 36 பெற்றோர் தற்கொலை செய்திருக்காங்க" - கொங்கு வேளாளக் கௌண்டர்கள் பேரவை அமைப்பின் மாநிலத்தலைவர் மணிகண்டன்.

*** "தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது இல்லை. எந்தப் பார்ப்பனரும் 'தீண்டாமைச் சுவர்' எழுப்புவது இல்லை. எல்லா இழிவுகலையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள் 'பார்ப்பன ஆதிக்கம்' என்ற பழைய பஞ்சாங்கத்தையே புரட்டுகின்றனர்". - தமிழருவி மணியன்

ஜூனியர் விகடன் - 28.11.2012

ஜாதிகள் அழிந்தால் என்ன ஆகும்? ஒரு அலசல்!




'ஜாதி முழுதாக அழிந்தாலொழிய, கிறிஸ்தவ மதமாற்றாத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை' - ராபர்ட் கால்டுவெல் சொன்னது!

கால்டுவெல்லின் மதமாற்ற முயற்சியும் அதன் பொருட்டு உண்டான பல புரட்டுக்கள் பற்றியும் 'உடையும் இந்தியா' புத்தகத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பல்வேறு தரவுகளுடன் விளக்கி இருக்கிறார்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் என்பது விருக்ஷம், அதன் ஆணிவேர் மதம், அடிவேர்களாக மன்னோடு மன்னாக ஒட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருப்பது ஜாதிகள். மதங்கள் கூறும் தத்துவங்களை, காலச் சூழல் மற்றும் புவியியல் சார்ந்த வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறையையும் உள்ளடக்கியது தான் இந்த ஜாதீய வாழ்க்கை முறை.

இந்த ஜாதிகளும் அந்த ஜாதியினருக்குள்ளே இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும், அந்த மக்களின் வாழ்க்கைச் சூழலை உடைத்து பிறர் உள்ளே வந்துவிடாத ஒரு சக்கர வியூகமாக செயல்பட்டு வருகின்றது. அப்படி இறுக்கமாக இருக்கும் தனித்தனிக் குழுக்களை உடைத்து உதிரிகள் ஆக்காமல் அவர்களை ஆளுக்கொரு மதத்திற்கு மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டான் கால்டுவெல் என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது. லட்டுவை உடைத்து பூந்தியாக்கினால் தானே பலரும் பகிர்ந்து கொள்ள முடியும். அதனடிப்படையில் எழுந்தது தான் ஜாதி ஒழிப்பு கோஷங்கள். ஆனால் வரட்டுத் தனமாக திராவிடம் பேசும் சமூகப் போலிகள் ஜாதி ஒழிப்பு என்பதை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சமூகத்தின் அடித்தட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு சிதைக்க முயற்சிக்கின்றனர். 

வெளிநாடுகளிலெல்லாம் கூட ஜாதிகள் இருக்கின்றன. பல்வேறு பெயர்களில் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவைகளெல்லாம் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தவும் ஒருவர் செல்வங்களை பிறர் அபகரித்துக் கொள்வதற்குமே உருவானவையாக இருக்கும். ஆனால் பாரதத்தைப் பொருத்தவரை இங்கே இருக்கும் ஜாதிச் சமூகங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்காக உருவானவை. ஒரு இனத்தவர் இல்லாமல் போனால் பிரிதொருவர் வாழ்க்கை முறையை அது பாதிக்கும் என்னுமளவிற்கு நெருக்கமான சார்பு நிலை கொண்ட ஒரு சங்கிலிப் பிணைப்புள்ள சமூகமாக இருந்திருக்கிறது. அத்தகைய சமூகம் இந்த பெரிய சமுதாயத்தின் அடிவேர். அடிவேரான ஜாதிகள் பிடுங்கி எறியப்பட்டால், ஆணிவேராகிய மதம் தனியாக சமூகம் என்கிற விருக்ஷத்தை தாங்காமல் ஒடிந்து விடும். அப்படியே சாயும் சமூகத்தை கிறிஸ்தவம் என்கிற மாயையால் முட்டுக் கொடுத்து மதம் மாற்றிவிடலாம் என்பது தான் ராபர்ட் கால்டுவெல்லின் கணிப்பு.



அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் ஜாதியினை ஒழிப்போம் என்று மிஷனரிகளுடன் கைகோர்த்து சமூகச் சங்கிலிப் பிணைப்பை உடைத்தெரிந்து சமூகத்தின் போக்கை மூர்கத்தனமாக சீர்குலைக்க விளைகின்றனர் முற்போக்குவாதிகள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள்.

ஜாதியத்தில் இவர்கள் கூறும் ஒரே குற்றச்சாட்டு அவற்றில் அடுக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதைத் தான். அப்படிப்பட்ட அடுக்குமுறைகள் இல்லாத அமைப்புகளே உலகில் கிடையாது. கம்யூனிஸ கட்சி என்றாலும் ஒருவர் மட்டும் தான் தலைவராக இருப்பார். அதுவே அடுக்குமுறையின் உச்சம் தானே! மனிதச் சமூகமும் அப்படித்தான். ஆனால் அது காலத்தேவைகளுக்குத் தகுந்தவாறு இடம் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அத்தகைய மாற்றங்கள் சமூக அழுத்தத்தின் அகக்காரணங்களைக் கொண்டு தானாக நடந்துவிடும். நாம் பொருளாதார ரீதியான சமத்துவத்தை அனைவருக்குமாக வழிவகுக்க வேண்டுமே அன்றி சமூக வாழ்க்கையின் பாரம்பரிய முறைகளை சீர்குலைக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் கீழாக நினைக்கும் போக்கு மாற வேண்டும் என்றெண்ண வேண்டுமே ஒழிய ஒருவரின் வாழ்க்கை முறையை ஒழித்து இன்னொன்றைப் புகுத்துவோம் என்று எண்ணுதல் கூடாது.

நாம் சீண்டாமல் இருந்தால் காலம் அதனைச் சத்தமில்லாமல் செய்யும்!

அடுக்குமுறைகளைக் காலம் மாற்றியமைத்திருப்பதைப் பாருங்கள்! 

சமூக அடுக்கில் மேலாக கருதப்படுபவர்கள் பொருளாதார அடுக்கிலும் மேலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! இன்றைய பணப்பொருளாதாரக் காலச்சூழலில் இது நிதர்சனம்!

கொசுறு:

"உண்மையான கடவுள் குறித்த அறிவை, புராதன இந்தியர்கள் கொண்டிருந்தனர். அதை உன்னதமான தெளிவான, ஆடம்பரமான மொழியில் அறிவித்தனர். அதிக ஒளியுடன் திகழும் இந்த தத்துவங்களின் முன் ஐரோப்பியர்களின் உயர்ந்த தத்துவங்களும், கிரேக்கர்களின் தர்க்கங்களும், மதிய நேரத்து சூரிய ஒளியின் முன் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக உள்ளன."

- ஜெர்மன் எழுத்தாளர், பிரெடெரிக் வான் ஷ்லீகல் (1772-1829) ; - நன்றி: தினமலர்

Sunday, January 23, 2011

ஆர்ய - திராவிட என்பது இனமல்ல!



வேத சாஸ்திரங்களில் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு இனங்கள் இருந்தன என்பதர்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் வெள்ளைக்காரர்கள் பிரித்தாளும் கொள்கைப்படி, அவன் ஆரியர் திராவிடர் என்ற இனவாத தியரியை நம்மிடையே புகுத்திவிட்டான்.

சாஸ்திரப் பிரகாரம் அந்த காலத்தில் அர்ய என்றால் 'மதிப்புக்குரிய' என்று அர்த்தம். அவ்வளவுதான். இன்றைய பிரிவினைவாத கொள்கைப்படி ஆரியனான அர்ஜுனனைப் பார்த்தே பகவான் கண்ணன் கீதையில் 'நீ என்ன இப்படி மனத்தளர்ச்சி அடைந்த அநார்யனாகி விட்டாயே!' என்கிறார். 'அநார்யன்' என்றால் 'ஆர்யன் அல்லாதவன்' என்று பொருள். (வார்த்தைக்கு முன்னே 'அன்' சேர்த்தால் அது எதிர்ப்பதமாகக் கொள்ளப்படும். ஆங்கிலேயன் இதைத்தான் காப்பியடித்தான். ('ஹாப்பிக்கு எதிர்ப்பதம் 'அன்-ஹாப்பி')

விஷயத்திற்கு வருவோம். அர்ஜுனனை 'அநார்யனாக ஆகிவிட்டாயே' என்று பகவான் குறிப்பிட்டதர்கு அர்த்தம் 'மதிப்பிற்குரியவனாக அல்லாமற் போய்விட்டாயே!' என்பது தான். ஆக ஆர்யன் என்பது இனத்தை குறிக்கும் சொல் அல்ல. உயர்ந்த அரசரை மதிப்பிற்குரிய புதல்வரே என்றழைப்பதற்கு 'ஆர்ய புத்திரரே!' என்று அழைப்பார்கள். உடனே வெள்ளைக்காரன் அவனை ஆர்யனின் புத்திரன் என்று மட்டமாகபுரிந்து கொண்டு இவர்கள் வடக்கே 'அரசாண்டவர்கள் ஆர்யர்கள்' என்று கதையாகவும் கட்டிவிட்டனர். பரப்பிவிட்டனர்.

அதே போல திராவிட என்பதும் இனப்பெயர் அல்ல. சாஸ்திரங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த பாரத மக்களைத்தான் விந்திய மலைக்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும், தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் கூறியிருக்கிறது. அப்படியே திராவிடர்கள் என்று தெற்கே உள்ளவர்களை அழைத்தாலும் அது இனப்பிரிவு ஆகாது. ஒரு பிரதேசத்தின் மக்களைக் குறிக்கும் சொல் அவ்வளவே!

ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுவதும் கௌட தேசம்
என்றும் அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்றும் தான்
இருந்தது. ஆரியதேசம் என்று கூட எதுவும் இல்லை. ஒரு பிரதேசத்திலிருந்து
இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே
குறிப்பிடுவார்கள். அந்த முறையில் பார்த்தால் காசி முதலான அநேக வட
இந்தியப் பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் பலருக்கு 'திரவிட்' என்று பெயர்
இருக்கும் (sur name). ஆக தமிழ் தேசத்திலிருந்து வடநாட்டில் குடிபோனவர்கள்
பிராமணர்களானாலும் அவர்களை திராவிடர்கள் என்றே அக்காலத்தில்
அழைத்தனர்.

வெள்ளையர்களின் இனப்பிரிவினை தியரிப்படி பிராமணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் 'த்ரவிட்' அடைமொழி இருக்கிறது.
(உதாரணம்:: ராகுல் த்ரவிட்).

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆக திராவிடம் என்பது பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லே அன்றி இனத்தை குறிக்கும் சொல் அல்ல. விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள் இன்றும் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்தாலும் அவர்கள் திராவிடர்களே!

மேலும் விரிவாக

ஆரியர்கள், திராவிடர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் * வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் கருத்து

மதுரை: "ஆரியர்கள், திராவிடர்கள் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என
கூறுவது தவறு. இருவருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டி.என்.திரிபாதி கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலை வரலாற்று துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:

எந்த நாட்டின் வரலாற்றையும் தொல்பொருள் துறை மற்றும் பாரம் பரியத்தையும் சேர்த்து ஆய்வு செய்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். வரலாற்றின் நோக்கமே உண்மையை அறிவது தான். வரலாற்று ஆய்வுகள் விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும். வரலாறு, திருத்தி எழுதப்படாத நாடுகளே கிடையாது. எகிப்து, கிரேக்கம், சீனா, இந்தியா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

அலெக்சாண்டர் படையெடுத்த பிறகு தான் இந்தியாவுக்கு என தனி வரலாறு தோன்றியது என்ற கருத்து முன்பு இருந்தது. பிரிட்டிஷார் தான் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களை தோண்டி ஆராய்ச்சி செய்து, இந்தியாவின் பழமையான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தனர். எகிப்து, கிரீஸ் நாடுகளுக்கு இணையாக இந்திய வரலாறும் பழமையானது. "தமிழ் பிராமி' எழுத்துக்கள் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைக் காலத்திலேயே ரோமானியர்களுடன் தமிழர்கள் கடல் வாணிபம் செய்தனர்.

வட மாநிலத்தவர் ஆரியர்கள் என்பதும், தென்மாநிலத்தவர் திராவிடர்கள் என்பதும் தவறான கருத்து. மனிதர்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய இப்போது "ஜெனீட்டிக்ஸ்' பயன்படுத்தப்படுகிறது. "ஆர்க்கியாலஜி', "ஜெனீட்டிக்ஸ்' ஆகிய வார்த்தைகளை இணைத்து "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' என அழைக்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து ஒரு மனித இனம் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதர்களின் படிவங்களை (பாசில்) ஆய்வு செய்தால் இந்த உண்மை புலப்படுகிறது.

வட மாநிலத்தவர் மற்றும் தென்மாநிலத்தவர் "ஜீன்'கள் ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, ஆரியர்கள், திராவிடர்கள் என பிரிப்பது தவறு. தோலின் நிறம், உருவ அமைப்பை வைத்து மனிதர்களை வேறுபடுத்தக் கூடாது. "ஜீன்'களை வைத்து தான் பிரிக்க வேண்டும். "ஜீன்'கள் ஒரே மாதிரியாக இருந்தால் அது ஒரே இனம். தமிழும், சமஸ்கிருதமும் ஒரே குழுவில் இருந்து தோன்றிய மொழிகள். ஆனால், தனித்தனியாக வளர்ந்தன.

"மைட்டோகான்ட்ரியல் டெஸ்ட்' என்ற "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' முறையில் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதர்களின் "செல்'லில் உள்ள "ஒய்' குரோமோசோம்களை ஆய்வு செய்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் படிவங்களில் உள்ள "ஜீன்'களுடன் இவற்றை ஒப்பிடுகின்றனர். இந்தியர்களின் "ஜீன்'கள், 60 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன. எனவே, ஆரியர்கள் படையெடுத்து திராவிடர்களை தென்னிந்தியாவுக்கு தள்ளி விட்டனர் என்ற கருத்து இதில் அடிபட்டுப் போகிறது. மொழிகள் வேண்டுமானால்
இவர்களுக்குள் வேறுபட்டிருக்கலாம். இனம் ஒன்று தான்.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

தகவல் : தினமலர்!

வெள்ளைக்காரனின் இந்த அர்ய திராவிட இனப்பிரிவினை கட்டுக்கதைகளை தூண்டி விட்டு இன்றும் அவற்றை பற்றிய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள விடாமல் இந்துக்களிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து வரும் அரசியல் வாதிகள் அம்பேத்கர் கூறும் மற்ற பிரிவினைகளைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லையே ஏன்?

டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்.

1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

- டாக்டர் அம்பேத்கர்.
நன்றி:- தமிழ் ஹிந்து.காம்-பெரியாரின் மறுபக்கம்!