Sunday, January 23, 2011

ஆர்ய - திராவிட என்பது இனமல்ல!



வேத சாஸ்திரங்களில் ஆரிய, திராவிட என்று இரண்டு வேறு இனங்கள் இருந்தன என்பதர்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் வெள்ளைக்காரர்கள் பிரித்தாளும் கொள்கைப்படி, அவன் ஆரியர் திராவிடர் என்ற இனவாத தியரியை நம்மிடையே புகுத்திவிட்டான்.

சாஸ்திரப் பிரகாரம் அந்த காலத்தில் அர்ய என்றால் 'மதிப்புக்குரிய' என்று அர்த்தம். அவ்வளவுதான். இன்றைய பிரிவினைவாத கொள்கைப்படி ஆரியனான அர்ஜுனனைப் பார்த்தே பகவான் கண்ணன் கீதையில் 'நீ என்ன இப்படி மனத்தளர்ச்சி அடைந்த அநார்யனாகி விட்டாயே!' என்கிறார். 'அநார்யன்' என்றால் 'ஆர்யன் அல்லாதவன்' என்று பொருள். (வார்த்தைக்கு முன்னே 'அன்' சேர்த்தால் அது எதிர்ப்பதமாகக் கொள்ளப்படும். ஆங்கிலேயன் இதைத்தான் காப்பியடித்தான். ('ஹாப்பிக்கு எதிர்ப்பதம் 'அன்-ஹாப்பி')

விஷயத்திற்கு வருவோம். அர்ஜுனனை 'அநார்யனாக ஆகிவிட்டாயே' என்று பகவான் குறிப்பிட்டதர்கு அர்த்தம் 'மதிப்பிற்குரியவனாக அல்லாமற் போய்விட்டாயே!' என்பது தான். ஆக ஆர்யன் என்பது இனத்தை குறிக்கும் சொல் அல்ல. உயர்ந்த அரசரை மதிப்பிற்குரிய புதல்வரே என்றழைப்பதற்கு 'ஆர்ய புத்திரரே!' என்று அழைப்பார்கள். உடனே வெள்ளைக்காரன் அவனை ஆர்யனின் புத்திரன் என்று மட்டமாகபுரிந்து கொண்டு இவர்கள் வடக்கே 'அரசாண்டவர்கள் ஆர்யர்கள்' என்று கதையாகவும் கட்டிவிட்டனர். பரப்பிவிட்டனர்.

அதே போல திராவிட என்பதும் இனப்பெயர் அல்ல. சாஸ்திரங்களில் ஒரே இனத்தைச் சேர்ந்த பாரத மக்களைத்தான் விந்திய மலைக்கு வடக்கே உள்ளவர்களை கௌடர்கள் என்றும், தெற்கே உள்ளவர்களை திராவிடர்கள் என்றும் கூறியிருக்கிறது. அப்படியே திராவிடர்கள் என்று தெற்கே உள்ளவர்களை அழைத்தாலும் அது இனப்பிரிவு ஆகாது. ஒரு பிரதேசத்தின் மக்களைக் குறிக்கும் சொல் அவ்வளவே!

ஆதியில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள தேசம் முழுவதும் கௌட தேசம்
என்றும் அதற்குத் தெற்கில் உள்ளது முழுவதும் திராவிட தேசம் என்றும் தான்
இருந்தது. ஆரியதேசம் என்று கூட எதுவும் இல்லை. ஒரு பிரதேசத்திலிருந்து
இன்னொன்றுக்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பேரை வைத்தே
குறிப்பிடுவார்கள். அந்த முறையில் பார்த்தால் காசி முதலான அநேக வட
இந்தியப் பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் பலருக்கு 'திரவிட்' என்று பெயர்
இருக்கும் (sur name). ஆக தமிழ் தேசத்திலிருந்து வடநாட்டில் குடிபோனவர்கள்
பிராமணர்களானாலும் அவர்களை திராவிடர்கள் என்றே அக்காலத்தில்
அழைத்தனர்.

வெள்ளையர்களின் இனப்பிரிவினை தியரிப்படி பிராமணர்கள் திராவிடர்களுக்கு மாறானவர்கள், விரோதிகள், எதிரிகள் என்று கூடச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இன்றைக்கு வடதேசத்தில் தமிழ் நாட்டுப் பிராமண வம்சத்தவர்களுக்கே தான் 'த்ரவிட்' அடைமொழி இருக்கிறது.
(உதாரணம்:: ராகுல் த்ரவிட்).

- ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆக திராவிடம் என்பது பிரதேசத்தைக் குறிக்கும் சொல்லே அன்றி இனத்தை குறிக்கும் சொல் அல்ல. விந்திய மலைக்கு தெற்கே வாழ்ந்தவர்கள் இன்றும் வாழ்பவர்கள் பிராமணர்களாக இருந்தாலும் அவர்கள் திராவிடர்களே!

மேலும் விரிவாக

ஆரியர்கள், திராவிடர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் * வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் கருத்து

மதுரை: "ஆரியர்கள், திராவிடர்கள் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என
கூறுவது தவறு. இருவருமே ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டி.என்.திரிபாதி கூறினார்.

மதுரை காமராஜர் பல்கலை வரலாற்று துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் நமது நிருபரிடம் கூறியதாவது:

எந்த நாட்டின் வரலாற்றையும் தொல்பொருள் துறை மற்றும் பாரம் பரியத்தையும் சேர்த்து ஆய்வு செய்தால் தான் தெரிந்து கொள்ள முடியும். வரலாற்றின் நோக்கமே உண்மையை அறிவது தான். வரலாற்று ஆய்வுகள் விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும். வரலாறு, திருத்தி எழுதப்படாத நாடுகளே கிடையாது. எகிப்து, கிரேக்கம், சீனா, இந்தியா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

அலெக்சாண்டர் படையெடுத்த பிறகு தான் இந்தியாவுக்கு என தனி வரலாறு தோன்றியது என்ற கருத்து முன்பு இருந்தது. பிரிட்டிஷார் தான் மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களை தோண்டி ஆராய்ச்சி செய்து, இந்தியாவின் பழமையான வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்ந்தனர். எகிப்து, கிரீஸ் நாடுகளுக்கு இணையாக இந்திய வரலாறும் பழமையானது. "தமிழ் பிராமி' எழுத்துக்கள் மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டன. பண்டைக் காலத்திலேயே ரோமானியர்களுடன் தமிழர்கள் கடல் வாணிபம் செய்தனர்.

வட மாநிலத்தவர் ஆரியர்கள் என்பதும், தென்மாநிலத்தவர் திராவிடர்கள் என்பதும் தவறான கருத்து. மனிதர்களின் தோற்றம் பற்றி ஆய்வு செய்ய இப்போது "ஜெனீட்டிக்ஸ்' பயன்படுத்தப்படுகிறது. "ஆர்க்கியாலஜி', "ஜெனீட்டிக்ஸ்' ஆகிய வார்த்தைகளை இணைத்து "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' என அழைக்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து ஒரு மனித இனம் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதர்களின் படிவங்களை (பாசில்) ஆய்வு செய்தால் இந்த உண்மை புலப்படுகிறது.

வட மாநிலத்தவர் மற்றும் தென்மாநிலத்தவர் "ஜீன்'கள் ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, ஆரியர்கள், திராவிடர்கள் என பிரிப்பது தவறு. தோலின் நிறம், உருவ அமைப்பை வைத்து மனிதர்களை வேறுபடுத்தக் கூடாது. "ஜீன்'களை வைத்து தான் பிரிக்க வேண்டும். "ஜீன்'கள் ஒரே மாதிரியாக இருந்தால் அது ஒரே இனம். தமிழும், சமஸ்கிருதமும் ஒரே குழுவில் இருந்து தோன்றிய மொழிகள். ஆனால், தனித்தனியாக வளர்ந்தன.

"மைட்டோகான்ட்ரியல் டெஸ்ட்' என்ற "ஆர்க்கியோ ஜெனீட்டிக்ஸ்' முறையில் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மனிதர்களின் "செல்'லில் உள்ள "ஒய்' குரோமோசோம்களை ஆய்வு செய்கின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களின் படிவங்களில் உள்ள "ஜீன்'களுடன் இவற்றை ஒப்பிடுகின்றனர். இந்தியர்களின் "ஜீன்'கள், 60 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன. எனவே, ஆரியர்கள் படையெடுத்து திராவிடர்களை தென்னிந்தியாவுக்கு தள்ளி விட்டனர் என்ற கருத்து இதில் அடிபட்டுப் போகிறது. மொழிகள் வேண்டுமானால்
இவர்களுக்குள் வேறுபட்டிருக்கலாம். இனம் ஒன்று தான்.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

தகவல் : தினமலர்!

வெள்ளைக்காரனின் இந்த அர்ய திராவிட இனப்பிரிவினை கட்டுக்கதைகளை தூண்டி விட்டு இன்றும் அவற்றை பற்றிய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள விடாமல் இந்துக்களிடையே பிரிவினை வாதத்தை வளர்த்து வரும் அரசியல் வாதிகள் அம்பேத்கர் கூறும் மற்ற பிரிவினைகளைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லையே ஏன்?

டாக்டர் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் கூறுகிறார்:-

”பொதுவாக, முகமதியர்கள் ஷேக்குகள், சையத்துகள், மொகலாயர்கள், பட்டாணியர்கள் என நான்கு இன மரபுக் குழுக்களாகப் பிரிந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் இது வங்க மகாணத்துக்குச் சிறிதும் பொருந்தாது. முகமதியர்கள் இரண்டு பிரதான சமூகப் பிரிவினைகளை ஒப்புக்கொள்கின்றனர்.

1. அஷ்ராஃப் அல்லது ஷராஃப், 2. அஜ்லாஃப் ஆகியவையே அவை.

அஷ்ராஃப் என்பதற்கு ”உயர் குடிமகன்” என்று பொருள். ஐயத்துக்கிடமற்ற அயல்நாட்டு வழித்தோன்றல்களும், மேல்சாதி இந்துக்களிலிருந்து மதம் மாறியவர்களும் இப்பிரிவில் அடங்குவர். தொழில் புரிவோர் உள்பட இதர எல்லா முகமதியர்களும், கீழ்ச் சாதிகளிலிருந்து மதம் மாறியவர்களும் அஜ்லாஃபுகள், ஈனர்கள், இழிந்தவர்கள், கடைகெட்டவர்கள் என்பன போன்ற மிகவும் வெறுக்கத்தக்க பதங்களில் அழைக்கப்படுகின்றனர்.

மேலும், காமினாக்கள், இதார்கள், கீழ்த்தரமானவர்கள் எத்தகைய தகுதியுமில்லாதவர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. ரசில் என்றும் இவர்களைக் கூறுவார்கள். ரிஸால் என்னும் பதத்தின் மொழிச் சிதைவே ரசில் என்பது.

சில இடங்களில் மூன்றாவது ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். இவர்கள் அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அர்ஸால் எனப்படுகிறார்கள். ‘அனைவரிலும் மிகத் தாழ்ந்தவர்கள்’ என்று இதற்குப் பொருள். இவர்களுடன் எந்த முகமதியர்களும் சேர்ந்து பழகமாட்டார்கள். இவர்கள் முசூதிகளில் நுழையவோ, பொது கல்லறைகளை அல்லது இடுகாடுகளை பயன்படுத்திக் கொள்ளவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்துக்களைப் போன்றே முஸ்லிம்களிடையேயும் சமுதாயத்தில் அவரவர் வகிக்கும் அந்தஸ்தைப் பொறுத்து சாதிப்பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன.

I. அஷ்ராஃப்கள்-உயர்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் வருமாறு:

1. சையத்துக்கள். 2. ஷேக்குகள் 3.பட்டாணியர்கள் 4.மொகலாயர்கள் 5.மாலிக்குகள் 6.மிர்ஜாக்கள்

II. அஜ்லாஃப்-என்பவர்கள் கீழ்மட்டத்திலுள்ள முகமதியர்கள். இவர்களில் பின்வரும் பிரிவினர் அடங்குவர்.

1. பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள ஷேக்குகளும் மற்றும் பூர்வீகத்தில் இந்துக்களாக இருந்து மதம்மாறி அஷ்ராஃப் சமூகத்தில் இடம் பெறாத பிராலி, தக்ராய் போன்றவர்களும்.

2. தார்ஜி, ஜொலாஹா, பக்கீர், ரங்ரெஸ்

3. பர்ஹி, பாதியரா, சிக், சுரிஹார், தய், தவா, துனியா, காத்தி, கலால், கசய், குலா குஞ்சரா, லாஹரி, மஹிஃப்ரோஷ், மல்லா, நலியா, நிகாரி

4. அப்தல், பாகோ, பெதியா, பாட், சாம்பா, தஃபாலி, தோபி, ஹஜ்ஜம், முச்சோ, நகர்ச்சி, நாத், பன்வாரியா, மதாரியா, துந்தியா

III. அர்ஸால் அல்லது மிகவும் கீழ்ப்படியில் இருக்கும் பிரிவினர்.
பனார், ஹலால்கோர், ஹிஜ்ரா, கஸ்பி, லால்பெகி, மெளக்தா, மெஹ்தார்.”

- டாக்டர் அம்பேத்கர்.
நன்றி:- தமிழ் ஹிந்து.காம்-பெரியாரின் மறுபக்கம்!

21 comments:

dondu(#11168674346665545885) said...

திருஞான சம்பந்தர் திராவிடசிசு என்றே அழைக்கப் பெற்றார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//dondu(#11168674346665545885) said...
திருஞான சம்பந்தர் திராவிடசிசு என்றே அழைக்கப் பெற்றார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

repeatu

Madhusudhanan D said...

Yes. There are evidences to show that there has no war taken place for the people in North to travel to South.

The people who lived at the banks of River Saraswati migrated towards south as the river got dried up around 1900 BC. Indus culture is not centered around River Indus, but Saraswati. Hence the name Indus Valley Civilization is also incorrect.

The divide and rule policy followed by the British is inherited by present day political leaders, foremost is the DMK. As this is a sensitive issue, even other party leaders like. AIADMK, BJP never talks about this.

Based on this only DMK, removed Hindi from Tamil Nadu. I would like to appreciate Vijayakanth who stressed the importance of Hindi in his speech recently. I feel, he is the first politician to speak on this issue. Hats off to him.

DMK is making us fools through the language. Not now, since long back.

கல்லக்குடிகாக ரயிலே வராத தண்டவாளத்தில் படுத்ததிலிருந்து செம்மொழி மாநாடு வரை பல உண்டு.

As Cho told he is writing more letters like LIFCO letter writing, for the problems in TN. But for minister post he will go to Delhi and stay till he gets.

Please check for the speech of Cho in Youtube. The full speech is available in 15 parts.

hayyram said...

தகவலுக்கு நன்றி டோண்டு சார்.

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.jaisankar jaganathan

hayyram said...

//As Cho told he is writing more letters like LIFCO letter writing, // மிகவும் நகைச்சுவையாக சோவின் உரையாடல் அனைவரையும் கவர்ந்தது. //Please check for the speech of Cho in Youtube. The full speech is available in 15 parts.// தகவலுக்கு நன்றி திரு.மது.

hayyram said...

madhu, //Please check for the speech of Cho in Youtube. The full speech is available in 15 parts.// can u giv me the any one of the link?

Madhusudhanan D said...

http://www.youtube.com/watch?v=QofDOILZQ4s&feature=player_embedded#at=41

http://www.youtube.com/watch?v=YI6R0_pByT0


These are the first two parts. I think you can navigate from here. I got these from your blog only.

hayyram said...

thanks madhu

Madhusudhanan D said...

Hi Ram,

You are welcome. I have doubts on Partition of India/Pakistan.

All the books I read, mention that the Hindus considered Muslims as untouchables. I mean, that Muslims are not treated equally to Hindus, and that was the main reason for the asking separate land for Muslims.

Is this true? Can you share the details of it if you know?

A documentary on it, has a Hindu who was born and brought up in Lahore, saying the same. He says that his mother will not allow other Muslim women, or food from their house into her kitchen.

Even now, there are some people who does it.

hayyram said...

// Hindus considered Muslims as untouchables.// தீண்டாமை இருந்ததாக வரலாற்றில் படித்ததில்லை. கேள்விப்படவுமில்லை. ஏனெனில் முகலாயர் காலத்தியேலே முஸ்லீம்களை திருமணம் செய்து கொண்ட இந்துப் பெண்கள் இருக்கிறார்கள். இந்துவாக இருந்து முஸ்லீமாக பீர்பால் போன்ற அமைச்சர்கள் மதம் மாறியும் இருக்கிறார்கள். அந்த காலத்திலிருந்தே அரசியல் தலையீடுகள் குறுக்கிடாத வட இந்திய கிராமங்களில் இந்துக்கள் பண்டிகைகளில் முஸ்லீகள் கலந்து கொண்டும் இருக்கிறார்கள். இன்றும் அது தொடர்கிறது. எனவே தீண்டாமை இருக்க சாத்தியமில்லை. வெறுப்புணர்ச்சி இருந்திருக்கலாம். காரணம் முகலாயர்களின் ஆளுமையை இந்து உணர்வு தான் முழுக்க முழுக்க எதிர்த்தது. அதனாலேயே அன்றிலிருந்து இன்று வரை இந்து முஸ்லீம் என்கிற உணர்வு தொடர்ந்து அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறது. மேலும் தீண்டாமை என்றளவில் பார்த்தால் அந்தகாலத்தில் இந்துக்களின் உட்பிரிவிலேயே கூட இருந்திருக்கிறது. தீண்டாமையில் ஆட்பட்ட எல்லோரும் தனி நாடு கேட்கவில்லை. தீண்டப்படாதவர்கள் என்கிற நிலையில் இருந்து மீண்டுவரவே அவர்கள் விரும்பினார்கள். ஆனால் முஸ்லீம்கள் அடிப்படையிலேயே பிரிவினை சிந்தனை கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியத்தலைவர்களுக்கு சுதந்திர இந்தியாவில் இந்துக்களுடன் சரிசமமாக வாழ்வது என்பது ஆளும் வர்கமாக தங்கள் கௌரவத்திற்கு ஏற்பட்ட இழப்பு என்றே கருதினார்கள் என்பது வரலாறு. ஆகவே வெள்ளைக்காரனிடம் மத ரீதியாக தனி நாடு கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் முஸ்லீம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் முஸ்லீமாக மட்டுமே வாழ்வார்கள். தங்கள் மதத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அளவிற்கு தன் நாட்டோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் கூட தமிழர்களோடு தமிழர்களாக வாழ்ந்த முஸ்லீம்கள் கடைசியில் தமிழர்களுக்கு துரோகம் செய்து மதரீதியாக பிரிந்து இலங்கை அரசோடு இணைந்து கொண்டார்கள் என்பதும் வரலாறு. அதனால் இயல்பிலேயே அவர்கள் பெரும்பான்மை ஆகிவிடும் போது பிரிவினை வாதமும் வந்துவிடுகிறது. இன்றைய நவீன காலத்தில் கூட தமிழகத்திலேயே காயல்பட்டினம், கீழ் விசாரம் போன்ற பகுதிகள் முஸ்லீம் பெரும்பான்மையினரால் ஒரு தனி நாடு போலவே நடத்தப்படுகிறது. காவல் நிலையம், சினிமா தியேட்டர் என அவர்களை மீறி அங்கே எதுவும் அரசால் கூட வைக்க முடியாது. உருதுவில் எழுதாமல் வங்கியின் பெயர்பலகை கூட இருக்க முடியாது. இப்படிப்பட்ட பிரிவினைவாதிகள் இந்துக்கள் தங்களை நடத்திய விதம் தான் தனிநாடு கோரிக்கைக்குக் காரணம் என்று கூறுவது ஒரு சாக்கு தான். அடிப்படையில் பிரிவினை மற்றும் இஸ்லாமிய நாடு என்பது மட்டுமே அவர்களது தாரக மந்திரம். அது இன்னும் தொடர்கிறது.

Madhusudhanan D said...

//முஸ்லீம்களை திருமணம் செய்து கொண்ட இந்துப் பெண்கள் இருக்கிறார்கள். இந்துவாக இருந்து முஸ்லீமாக பீர்பால் போன்ற அமைச்சர்கள் மதம் மாறியும் இருக்கிறார்கள்.//

The feel of difference between Hindus and Muslims might have come after the British begin to rule. Even British might have encouraged that for their advantage. Shall this be a cause to such untouchability?

//ஆனால் முஸ்லீம்கள் அடிப்படையிலேயே பிரிவினை சிந்தனை கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியத்தலைவர்களுக்கு சுதந்திர இந்தியாவில் இந்துக்களுடன் சரிசமமாக வாழ்வது என்பது ஆளும் வர்கமாக தங்கள் கௌரவத்திற்கு ஏற்பட்ட இழப்பு என்றே கருதினார்கள் என்பது வரலாறு.//
British might have created such difference in the minds of Muslims. Similarly, they might have created enemity about Muslims in minds of Hindus too.

I feel this because, the Muslims in India and Pakistan are basically Hindus. They are converted to Muslims either recently or during past. They are not the actual descendants from Arabia. Won't they have the Indian traditional feeling?

hayyram said...

//Won't they have the Indian traditional feeling?// who knows, if they think indian tradition is non other than hindu tradition then what type of tradition they will follow? Arab!!??

Madhusudhanan D said...

//முஸ்லீம்களை திருமணம் செய்து கொண்ட இந்துப் பெண்கள் இருக்கிறார்கள்.//

Without being converted to Muslim, a Hindu cannot marry a Muslim.

//who knows, if they think indian tradition is non other than hindu tradition then what type of tradition they will follow? Arab!!??//

I do not mean in culture. I meant in characters, like tolerance, etc. Since past to till date, we see that Hindus are tolerant to other religions.

But the fate is we are not tolerance within ourselves. To bring unity among us only, people like Tilak, transformed celebrations of Ganesh Chathurthi, etc as a grand public event.

hayyram said...

//I do not mean in culture. I meant in characters, like tolerance// //Without being converted to Muslim, a Hindu cannot marry a Muslim// is it
tolerance?

//December 27, 2010 Karnataka: Muslims pelt stones at marriage procession of Hindus. As per the information given by the local residents, a marriage procession was going in a truck playing some music. As the truck came near a mosque, some fault was developed. The Muslims who were reading ‘namaz’ in the mosque were irritated due to the sound of the music and threatened Hindus to stop the music as also pelted stones at them// is it tolerance?

you see thatstamil.com which is governed by muslims, they show only antihindu articles in their pages. they are purposely deleting pro hindu articles from their pages. is it tolerance?

// In Kerala - Gods Own Country ..........Professor TJ Joseph was attacked by eight people on Sunday and his hand was cut off accused of insulting Islam in an exam paper// is it tolerance?

muslims opposed to give land for hindus to stay while amarnath yathra. That too only for stay? is it tolerance?

lots of things going on like this...

Madhusudhanan D said...

Yes. You are right Ram.

I do not say that they have tolerance.

Basically being same origin, they are not having some basic necessary qualities. I'm wondering so.

hayyram said...

Madhu, see this video

http://www.youtube.com/watch?v=-gMaG369mV0

Madhusudhanan D said...

Ram, As I said, without being converted to Muslim, a Hindu cannot marry a Muslim. Similar case for Christians too.

Even in TN, anti-forcible conversion law was brought. All Christians and Muslims opposed it. Jayalalitha argued that it is Anti-Forcible conversion law and not Anti conversion law. But it was removed for her to get minority votes, in the last year of her period(2004). Politics plays a role over here.

As I said already, Hindus do not have unity as compared to others. To bring unity among us only, people like Tilak, transformed celebrations of Ganesh Chathurthi, etc as a grand public event, rather than an annual festival in houses.

Muslims here are only converted Muslims and not actual descendants from Arabia. But they speak as if so, they came directly from Mecca or Madina.

The main reason for all these is that the youngsters do not understand the importance and good features of our religion. The root cause is the impact of Western culture which gives more freedom, which is dangerous. The impact of having more freedom will be understood once they suffer from problems.

Love marriage is considered as a style today. The sexual attraction is the reason of it. To avoid this only our ancestors have made marriages in young age itself. But we did not understand the concept behind it and removed off the society.

Reservation on communal basis is another cause of it.

Those who argue that no caste and love marriages will eliminate caste may take this question:
If no caste, are they ready to forsake the benefits they get through reservations? If caste should be abolished, communities and reservations also should be abolished.

Here comes again the politics. This is a sensitive issue, related to vote banks.

In near future Veeramani can ask reservation for atheist also. Then it will lead to dalit atheist, naadaar athesit, etc.

To avoid such situations, our culture and its importance should be imparted in minds of youngsters. More than a good government is needed, a bad government(like DMK/Congress) should be moved off.

Jaihind

Madhusudhanan D said...

Ram, Besides, I saw in Wikipedia regarding Love Jihad, that in Kerela, the police documented unconfirmed reports of a foreign-funded network of groups encouraging conversion through the subterfuge, but noted that no organizations conducting such campaigns had been confirmed and no evidence had been located to support foreign financial aid.

The Karnataka CID (Criminal Investigation Department) reported that although it was continuing to investigate, it had found no evidence that a "Love Jihad" existed.

But we have to note that the High Court stayed further police investigation.

In the video also, Rahul says that the High Court later accepted that there is a suspicion on existence of such an activity.

hayyram said...

// main reason for all these is that the youngsters do not understand the importance and good features of our religion. // ya, and they donwant to spend time to hear about it too.

//Love marriage is considered as a style today.// exactly.

// a bad government(like DMK/Congress) should be moved off.// yes people should get aware of this. you left a nice comment here. thanks.

Madhusudhanan D said...

Ram, Thanks for the acknowledgement. I have started my blog recently. If you have time visit that:

http://www.madhusudhanand.blogspot.com/