Showing posts with label நாத்திகம். Show all posts
Showing posts with label நாத்திகம். Show all posts

Monday, September 13, 2010

நாத்திகத் தீவிரவாதம்!


நாத்திக சைக்கோகளின் அடாவடி

**** கோவை: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர்! நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு' என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர். இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்," முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்! ****

தமிழகத்தைப் நாத்திக சைக்கோக்களின் இந்து அவமதிப்புச் செயல்கள் சகிக்க முடியாத அளவிற்குத் தொடர்வது வேதனை. இந்துக்களின் மனதைப் புண்படுத்தி அவர்களின் உணர்வுகளை அவமதிப்பதில் மிக குரூரமான குணத்துடன் நடந்து கொள்வதில் நாத்திக தீவிரவாதிகள் முன்னனியில் இருக்கிறார்கள்! ப.சிதம்பரத்தின் வழியில் இவர்கள் செய்வதை கருப்புத் தீவிரவாதம் எனலாமா?

'நல்ல தாய்க்குப்' பிறந்தவர்கள் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்புவார்கள் என்று பெரியோர்கள் கூறுவார்கள். ஆனால் தமிழகத்தின் நாத்திகத் தீவிரவாதிகள் தங்கள் கருப்புத் தீவிரவாதத்தை வேளாங்கன்னி மாதா கோவில் வைபவத்தின் போது செய்யவில்லை! கிறிஸ்தவர்களிடம் நாத்திகத்தை அவர்கள் இது போல் அச்சடித்த காகிதத்தால் பரப்பவில்லை! நடந்து முடிந்த ரம்ஜான் நிகழ்ச்சியின் போது மசூதிகளின் வாசலில் நின்று இது போல் அச்சடித்த காகிதத்தால் நாத்திகத்தை முஸ்லீம் மதத்தினரிடம் பரப்பவில்லை. பெரியோர்கள் வாக்குப்படி பார்த்தால் நாத்திகத்தை எல்லா மதத்தினரிடமும் ஒரே மாதிரியாக பரப்பாதவர்கள்.

இறை உரு மீது கல்வீச்சு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே, நேற்று மாலை விநாயகர் ஊர்வலத்தின் மீது இரு இடங்களில் கற்கள் வீசப்பட்டதால், திடீர் பதட்டம் ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியில், சதுர்த்தியையொட்டி 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று மாலை ஐந்து மணியளவில் அந்த சிலைகள் அனைத்தும் உடன்குடி மெயின் பஜாருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டது. வழியில் பெரியதெரு, முகைதீன் புதுத்தெரு வழியாக ஊர்வலம் வந்தபோது மர்ம நபர்கள் கற்களை வீசினர். ****

மலேசியாவிலோ, அரபு நாட்டிலோ இந்து கடவுளை கொண்டு செல்லவில்லை! சொந்த நாட்டின் சொந்த மண்ணில் இறை வழிபாடை பாதுகாப்பாக செய்ய முடியவில்லை எனில் இந்நாட்டின் மதச்சார்பின்மையும் (என்ற போலித்தனம்) இறையான்மையும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது!

விநாயகரை வழிபட்டால் கைது?

****கோவை: செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, 20 ஆண்டுகளாக இங்கு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை பிரதிஷ்டை செய்யவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கோரினர். வேண்டு கோளை நிராகரித்த போலீசார், சிலையை வைக்கக்கூடாது என தடை விதித்தனர்.

இதை ஏற்றுக்கொள்ளாத இந்துமுன்னணியினர், பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்த போலீஸ் துணை கமிஷனர் நாகராஜன், உதவிகமிஷனர்கள் குமாரசாமி, பாலாஜிசரவணன் ஆகியோர், "சிலை வைக்கக்கூடாது' என எதிர்ப்புத்தெரிவித்தனர். போலீசாரோ, முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்றனர். இதை கவனித்த பெண்கள் விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப்படுத்தவிடாமல் தடுத்தனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்தவர்களை பாதுகாப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங்களை போலீசார் தேடி அலைந்தனர். விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்ததால் காலியாக எதுவும் இல்லை. கோவை அண்ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர்களை இறங்க அறிவுறுத்தினர். ஒருவரும் இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் கைது செய்தவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர் அங்கு விநாயகர் சிலையும் இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மதிய உணவு போலீசாரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் போலீஸ் பயிற்சி மைதானத்திலேயே வைக்கப்பட்டனர். இதனிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்குமிடையே சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக பேச்சு நடந்தது. இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்படவில்லை. *****

போலீஸ்காரர்கள் இப்படி பாடுபட்டு போராடி, பெண்களையும் குழந்தைகளையும்
கைது செய்து கொடுமைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள். பண்டிகை தினத்தில் இந்துக்கள் இறைவழிபாடு செய்வது தவறா? புறம்போக்கு நிலத்தில் கட்டம் கட்டினாலே பட்டா போட்டுக் கொடுத்து ஓட்டு வாங்கத் துடிக்கும் அரசியல்வாதிகள், ஓரிரு தினங்கள் தற்காலிகமாக இறையுரு வைத்து வழிபாடு செய்வது குற்றம் எனக்கூறுவதும் அதற்கு எதிராக கடுமையாக அடக்குமுறைகளைக் கையாள்வதும் கண்டிக்கத்தக்கது.

ரங்கநாதன் தெருவில் அனுமதியின்றி கட்டப்பட்ட பல முறையற்ற கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கின்றன. அத்தகைய முறைகேடுகளை அனுமதிப்பது பரவாயில்லையாம். ஆனால் விநாயகர் சிலையை ஒரு நாள் தற்காலிகமாக வைத்து வழிபட்டால் அனுமதி இல்லை எனக்கூறி கைது செய்வார்களாம்! இது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்பதைத் தவிர வேறில்லை! தமிழகத்தை ஆள்வது பாகிஸ்தானா?

தி மு க விற்கு இந்துக்கள் ஓட்டு போடும் வரை இந்த அவலத்தை தடுக்க முடியாது!


Tuesday, November 17, 2009

பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?

வலை தளங்கள் நிறைய கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி செய்யும். கருத்து மோதலுக்கும் குறைச்சல் இருக்காது. அவ்வாறு நிகழ்த்தப்படும் கருத்துப் பரிமாற்றங்களில் சிலருடைய கருத்துக்களால் ஈர்க்கப் படுவோம்.

அவ்வகையில் என்னை கருத்துக்களால் ஈர்த்தவர் திருச்சிக்காரன் (புனைப் பெயர் தான்). அன்பு நண்பர். அவர் சிறந்த ராம பக்தர் என்பது அவரது பதிவுகளிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

ஆன்மீக விவாதம் என்று வந்தால் ஆழமாகவும் நிதானமாகவும் பல கருத்துக்களை எடுத்து வைப்பவர். பைபிளை படித்து குடித்தவர். இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். நாத்திகம் பேசுபவர்களைக் கூட கண்மூடித்தனமான நாத்திகத்தை விட்டு நிஜத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள் என்று அழைப்பவர்.

தனியாக அமர்ந்து அவரது எழுத்துக்களை பற்றி அவதானித்துக் கொண்டிருந்தேன். சரி எல்லோருக்கும் சொன்னால் கும்பலாக சிந்திக்கலாமே என்று அவர் எழுதியதை இங்கே அளிக்கிறேன். கம்பைண்டு ஸ்டடி.

பகுத்தறிவு என்பது என்ன? பகுத்தறிவாளர் என்பவர் யார்?
எழுதியவர்: திருச்சிக்காரன்

“The Belief that opinions and actions should be based on reason and knowledge rather than on religious belif or emotion”!

“அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கையின் அடிப்படையில் செயல் படாமல் அறிவை , யுக்தியை, தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து உண்மை என்ன என்று அறிய முயல்வதுதான் பகுத்தறிவாகும்.

பகுத்தறிவாளர் என்பவர் யார்?

இப்படி பகுத்தறிவின் மூலம் உண்மையை விருப்பு வெறுப்பு இன்றி தேடுவதும், அப்படித் தான் அறிந்த மட்டில், தான் உண்மை என்று தேர்ந்து கொண்டதை எந்த அச்சமும் இல்லாமல் வெளிப்படையாகக் கூறுபவன், அப்படி கூறும்போது வரும் எந்த எதிர்ப்பையும் உறுதியாக எதிர்த்து நிற்ப்பவன் தான் உண்மையான பகுத்தறிவுவாதி.


சரிதானே ?

பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில்
உழல்வதாக கூறுகிறார்.

“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா?

மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

இந்தக் கேள்வியை ஆத்தீகவாதி, நாத்தீக அறிஞரிடம் முன் வைத்தாரா?

அப்படி முன் வைத்திருந்தால்- அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

“மனித உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்?

ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்? நான் ஏன் சூர்யாவாக (நடிகர் சூரியா, சிவகுமாரின் மகன்) பிறக்கவில்லை? நான் ஏன் முகேஷ் அம்பானியாகப் பிறக்கவில்லை? நான் அபிசேக் பச்சனாகவோ, ஹிரித்திக் ரோஷனாகவோ, ஸ்டாலினாகவோ, அழகிரியாகவோ பிறக்க முடியாமல் போனது ஏன்?

நான் ஏன் உயரமாக, சிவப்பாக, அழகாக, நல்ல உடல் கட்டுடன் பிறக்கவில்லை?

அதாவது “உடலோடு சேர்ந்துதான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும் – உயிர் தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியுடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை!

இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு!

மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்!

எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து “கடவுள் எங்கே? காட்டு!” என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்!

மெரீனா கடற் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது!

நான் கடவுளைப் பார்த்தது இல்லை! எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் தயார் இல்லை!!

கடவுள் இல்லை என்பது ஃபாரடேயின் மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை ஏற்றூக் கொள்ள நான் தயார்!!!

ஆனால் எதுவானாலும் அதை ஆராயாம‌ல், உண‌ராம‌ல், குருட்டுத் த‌ன‌மாக‌ ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

ஆனால் ந‌ண்ப‌ர்க‌ளே நாம் அபாய‌த்தில் இருக்கிறோம், எந்த‌ நோயோ அல்ல‌து துன்ப‌மோ ந‌ம்மையோ, ந‌ம‌து நெருங்கிய‌ உற‌வின‌ரையோ தாக்கினால் ‍அதைத் த‌டுத்து ந‌ம்மை காத்துக் கொள்ளும் திற‌ன் ந‌ம‌க்கு இருக்கிற‌தா?

ந‌ண்ப‌ர்க‌ளே, மிக‌ச் சிக்க‌லான‌ நிலையிலிருந்து விடுப‌ட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறோம். ஆனால் நாம் முழுவ‌தும் காமெடி பீசாக‌ ஆகி விட‌ நேர்ந்தால் அது இன்னும் அதிக‌ சிக்க‌லில் ந‌ம்மை சேர்க்கும். என‌வே நான் ந‌ம்முடைய ஆத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள், நாத்தீக‌ ந‌ண்ப‌ர்க‌ள் இரு த‌ரப்பாரையும் கேட்டுக் கொள்வ‌து என்ன‌ வென்றால் நாம் அனைவ‌ரும் உண்மையான‌ ஆன்மீக‌ ஆராய்சச்சியில் ஈடுப‌டுவோம்!

இறுதியில் கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ, கடவுள் இல்லை என்பது உண்மையோ-எது உண்மையானாலும் அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்! ஏன் எனில் உண்மை யாருக்காக‌வும் வ‌ளையாது. உண்மை அது மெஜாரிட்டி, மைனாரிட்டி அடிப் ப‌டையில் தேர்ந்து எடுக்க‌ப் ப‌டுவ‌தில்லை.

உல‌கில் எல்லொரும் உல‌க‌ம் த‌ட்டை என்று நினைத்தாலும், ஒருவ‌ன் ம‌ட்டும் உருண்டை என்று கூறினால், அது உண்மையாக இருக்கும் ப‌ட்ச‌த்தில் எல்லொரும் அதை ஏற்றுக் கொண்டே ஆக‌ வேண்டும்.

Because Truth can never be defeated- it is the property of the truth!

Truth shall prevail! No body can defeat the Truth.

Hence let us all strive to find the truth.

- திருச்சிக்காரன்
__________________________________________________________________________________________

ஆக ஆராய்ந்தறிவோம் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். அது தானே பகுத்தறிவு. ஒரேயடியாக கடவுள் இல்லை என்று சொல்வது, அல்லது ஒரு புள்ளியைக்காட்டி இது தான் கடவுள் என்று சொல்வது ரெண்டுமே ஒன்றுதான். அதைத் தாண்டி சிந்திக்கவேண்டும்.

பகவான் ஸ்ரீ க்ருஷ்னர் அர்ஜுனனிடம் சொல்கிறார் - 'அர்ஜுனா! நான் சொல்வதை எல்லாம் கேட்டு, அதில் எது சரியென்று நீ நினைக்கிறாயோ அதையே செய்!' என்கிறார். சொன்னவர் கடவுள். நான் தான் கடவுள், நான் சொல்வதை அப்படியே கேள் என்றாலும் அர்ஜுனன் சரி என்று கேட்டிருப்பான். ஆனாலும் அந்தக் கடவுளே அர்ஜுனனுக்கு போதித்துவிட்டு நீ சிந்தித்து முடிவெடு என்கிறார்.

அது தான் இந்து தர்மத்தின் சிறப்பம்சம். இந்து தர்மம் சிந்திக்கத்தூண்டும் மதம். கட்டளை பிறப்பிக்கும் மதம் அல்ல.

சிந்திப்போம். ஞானம் பெறுவோம்.

ஜெய் ஸ்ரீ க்ருஷ்னா!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் ஆகும்.