Showing posts with label secularism. Show all posts
Showing posts with label secularism. Show all posts

Monday, August 13, 2012

செக்யூலரிச பீடைகள்!



இந்தியாவைப் பிடித்த பீடை இந்த செக்யூலரிசம். திரு எம்.கே.காந்தி துவங்கி வைத்த நாடகம் இது. அரசியல் வாதிகளும் மீடியாக்களும் மாறி மாறி நீரூற்றி வளர்க்கும் விஷச் செடி இந்த செக்யூலரிசம்.

இந்த செக்யூலரிசமும் அதனால் உண்டான செக்யூலரிச மனப்பான்மை என்பதும் அடிக்குருத்தில் வெண்ணீர் ஊற்றி ஆளுயரச் செடியை காயச்செய்யும் கொடூரச் செயல். வேருக்குள் அமிலம் ஊற்றி மரத்தை மெதுவாகப் பட்டுப் போகச் செய்யும் மோசமானக் கொலைச் செயல்.

இந்த செக்யூலரிச மனம் படைத்தவர்கள் எங்கெல்லாம் வியாபித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்வதும் அவர்களை அடையாளம் கண்டு களை பிடுங்க வேண்டியதும் ஆகப் பெரிய வேலையெனத் தோன்றும். ஆனால் வேறு வழியில்லை. செய்து தான் ஆக வேண்டும். அது பாரதத்தின் தலையெழுத்து.

சரி எதற்கு இப்போது இந்த வெறுப்பு என்கிறீர்களா?

இரண்டு பேர் தினசரி அடிக்கும் அரட்டைக் கச்சேரியில் அவ்வப்போது எழும் இந்த செக்யூலரிச மனப்பாங்கு ஒரு உறுத்தலாகவே இருக்கிறது. அதைப் பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைத்ததால் தான் இந்த அங்கலாய்ப்பு.

அரட்டை அடிக்க எல்லோருக்குமே பிடிக்கும்.அதுவும் பிறர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தால் கண் கொட்டாமல் வாய் பார்த்துக் கொண்டே இருக்க நமக்கு எப்போதுமே பிடிக்கும் தான். ஆனால் அவர்கள் ஹிந்து விரோத தொலைக்காட்சியில் அமர்ந்து கொண்டு செக்யூலரிச மனப்பாங்குடன் தினசரி உளரிக் கொட்டுவது கொஞ்சம் கடுப்படிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வேறாருமல்ல. தினசரி காலையில் எட்டு மணி முதல் ஒரு பத்து நிமிஷம் பேசிவிட்டுச் செல்லும் பட்டிமன்ற ராஜாவும், பாரதி பாஸ்கரும் தான். பேசுவது சன் டிவியில்.

பொதுவாக சமூக விஷயங்கள் அல்லது ஏதாவது புதிய செய்தியைக் கொண்டு தான் பேசுவார்கள். சாதாரணமாக நல்ல உரையாடல்களாகவே இருதாலும் சில நேரங்களில் உறுத்தும்.
காரணம் கூர்ந்து கவனித்தால் சில விஷயங்கள் புரியவரும்.

1. இவர்கள் தங்களது பேச்சில் ஹிந்து கடவுளர் அல்லது புராணக் கதைகளிலிருந்து உதாரணங்கள் அல்லது மேற்கோள் காட்டுவதை கவனமாகத் தவிர்ப்பார்கள்.

2. எந்த விஷயம் பற்றிப் பேசினாலும் பெரும்பாலும் பைபிளில் இப்படி ஒரு வசனம் இருக்கிறது என்பார்கள் அல்லது குரானில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறுவார்கள்.

3. ஹிந்து நம்பிக்கைகளைப் பற்றிய பேச்சு வந்தால் அது மக்களின் அறியாமை சார்ந்தது என்றும் அதீத நம்பிக்கை என்றும் பேசுவதில் உற்சாகம் கொள்வார்கள்.

4. கதைகளுக்கு உதாரணம் வேண்டுமென்றாலும் கூட அரபு நாட்டுக் கதைகள் பற்றிப் பேசுவதில் ஒரு அறிவுஜீவித்தனம் இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்கள்.

மேற் சொன்ன இவைகள் எல்லாம் நான் சில மாதங்களாகப் பார்க்க நேர்கையில் கவனித்தவை. அதையே வருடக்கணக்காக யாரேனும் பார்த்திருந்தால் வேறு ஏதானும் செய்து சொல்லலாம்.

சரி இப்படி இவர்கள் பேசுவதால் என்ன ஆகி விட்டது என்று நினைக்கலாம். இவ்வாறு பேசுவது தவறில்லை. ஆனால் சொந்த நாட்டின் புராணங்களையும் பாரம்பரியக் கதைகளையும் இவர்கள் வேண்டுமென்றே ஒதுக்கி வைத்து பைபிள் வசனங்களையும், குரான் மேற்கொள்களையும் வலியத் திணித்து அவ்வாறு பேசுவது ஒரு வித அறிவுஜீவித்தனம் என்றும் காட்ட நினைக்கிறார்கள். இது ஒரு தவறான போக்கு.

ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் குழந்தைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேச்சு வருகையில் பாரதி பாஸ்கர் உடனே "பைபிளில் கூட, 'குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்காதீர்கள். நான் அவர்களுக்கு பிரியமானவனாக இருக்கிறேன்', என்று ஏசு சொல்வதாக வசனம் இருக்கிறது" என்று சிலாகித்துக் கொண்டார்.

ஆனால் அவருக்கு இறைவனையே குழந்தையாகக் கொஞ்சும் நம் புராணக் கதைகளைப் பற்றி சொல்லத் தோன்றவில்லை. ஸ்ரீ க்ருஷ்ணரை குழந்தையாக்கி வீடு தோறும் அவரவர் வீட்டுக் குழந்தைகளையெல்லாம் க்ருஷ்ணராகவே பாவித்து மகிழும் நம் பாரம்பரியத்தைப் பற்றிப் பேசத் தோன்றவில்லை. அல்லது கவனமாகத் தவிர்க்கிறார்.

இது செக்யூலரிச முகமூடியா? அல்லது ஹிந்து சாமிகளை பற்றி பேசிவிட்டால் மூட நம்பிக்கை என்ற நினைப்பா? அல்லது பைபிள் குரான் பற்றிய மேற்கோள்களுடன் பேசுவது தான் அறிவு ஜீவித்தனம் என்று காட்ட நினைக்கிறார்களா? அல்லது இவர்களை ஒளிபரப்பும் டிவி சேனல் அவ்வாறு கவனமாகப் பேசச் சொல்கிறதா?

இன்னொன்று, ஒரு நிகழ்ச்சியில் வழிவழியாக மக்களிடம் புழங்கும் கதைகள் பற்றி பேசினார்கள். சரி, நம்மூரில் தான் அம்புலி மாமா, தெனாலிராமன், மரியாதை ராமன், விக்ரமாதித்தன் கதைகளெல்லாம் நிறைய இருக்கிறதே, அது பற்றி பேசுவார்கள் என்று பார்த்தால் உடனே அரபு நாட்டு 'ஆயிரத்தி ஓரு இரவுகள்' கதைக்குள்ளே போய் நம்மை அரபுக்கு அழைத்துச் சென்று விட்டனர் இருவரும். அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பின்னர் வேறு கதைகளைப் பற்றிப் பேசியும் சிலாகித்து விட்டுப் பின் நேரம் முடியும் தருவாயில் நம்மூரில் கூட தெனாலிராமன், மரியாதைராமன் போன்ற கதைகளெல்லாம் இருக்கிறதே என்று ஒரு வரியில் பேசி முடித்து விட்டார்கள்.

இதில் எனக்கு என்ன வருத்தமென்றால் மரியாதை ராமன் கதைகளும் தெனாலி ராமன் கதைகளுமே இக்காலத்தில் நம் பிள்ளைகளுக்குத் தெரியவில்லை. வீடியோ கேம் கதாபாத்திரத்தை ஞாபகமாகக் கூறும் குழந்தைகளுக்கு தெனாலிராமன் தெரிவதில்லை. அது போன்ற கதைகளைப் பற்றி பேசி நம் மக்களுக்கு அதன் மீது ஆர்வம் உண்டாகும் படிச் செய்யாமல் அரபுநாட்டுக் கதைகளுக்குச் சென்று விட்டார்களே என்று தோன்றியது.

இத்தனைக்கும் ஒரு விஷயத்தை எப்படியெல்லாம் அலசி ஆராய்ந்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும் என்கிற அறிவைச் சொல்லித் தருவது மரியாதை ராமன் கதை. இக்கட்டான சூழலில் எப்படி சமையோசிதமாகச் சமாளிப்பது எனச் சொல்லித் தருவது தெனாலி ராமன் கதை. இவைகளைப் பற்றிப் பேச பாரதி பாஸ்கருக்கும் ராஜாவுக்கும் நேரம் கிடைக்கவில்லை.

அது மட்டுமா, ஒரு நாள் "நாய்ஸ் பொல்யூஷன்" பற்றிப் பேசினார்கள். நகரங்களில் எப்படியெல்லலம் சப்தம் அதிகரித்திருக்கிறது என்று பேசிக்கொண்டார்கள். நான் நினைத்தது போலவே மறக்காமல் மாரியம்மன் கோவில் திருவிழா பற்றிப் பேச்சு வந்தது. அப்போது பாரதி பாஸ்கர் "அம்மன் கோவில் திருவிழா வந்தா போதும், தெருவில் இந்த மைக் செட் வைத்து கத்த விடுவார்களே, அப்பப்பா" என்று கண்ணத்தைப் பிடித்துக் கொண்டு கரித்துக் கொட்டினார்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன், மாரியம்மன் கோவில் திருவிழாவோ அல்லது விநாயகர் சதுர்த்தியோ எதுவும் வருடம் ஒரு முறை சில நாட்கள் சப்தமிட்டு ஓய்ந்து போகும். ஆனால் நாள் தவறாமல் தினசரி ஐந்து வேளை தங்கள் கட்டிடத்தைத் தாண்டி இரண்டு மூன்று தெருவிற்கு கேட்குமளவுக்கு மைக் செட் வைத்து "அல்லா ஹு அக்பர் அல்லாஆஆஆஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்" என்று தொடர்ந்து கத்துகிறார்களே இது "நாய்ஸ் பொல்யூஷனில் அடங்காதா? அது பற்றி பேசவேண்டும் என்று பாரதி பாஸ்கருக்கோ ராஜாவுக்கோ ஏன் தோன்றவில்லை? 365 நாளில் பத்து நாள் அம்மன் கோவிலில் பாட்டு வைப்பது இவர்களுக்கு "நாய்ஸ் பொல்யூஷனாம்" , 365 நாட்களும் ஐந்து வேளையும் கத்தவிடும் மசூதிகளின் ஒலிபெருக்கிச் சத்தம் இவர்களின் காதுகளுக்கு தேனாம்!

என்ன ஒரு செக்யூலரிச மாயை, ஹிந்து விரோதம் மனப்பான்மை!

அதோடு விடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை. இன்றைய நிகழ்ச்சியில் கோவில்களில் மக்கள் அறியாமையோடு சாமி கும்பிடுகிறார்கள் என்று கோவில்களில் சாமி கும்பிடும் பழக்கத்தை ஒரு பத்து நிமிடம் நையாண்டி செய்தார்களே பார்க்கலாம்.

"மக்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று பல பரிகாரக் கோவில்களுக்குப் போய் அந்தக் கோவிலின் மூலக் கடவுளை விட்டு விட்டு நவக்கிரகங்களையும் பரிகாரக் கடவுளையும் கும்பிடுகிறார்கள். மக்களின் அறியாமை, பாவம்" என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் பாரதி பாஸ்கர்.

ஏன், இவர்களுக்கு அறியாமை கொண்ட கிறிஸ்தவ மக்கள் பற்றி அங்கலாய்க்கத் தெரியவில்லை. ஜபம் செய்தால் கண் வந்துவிட்டது என்றும், கர்த்தரைக் கூப்பிட்டவுடன் காது கேட்டு விட்டது என்றும் கூவிக்கூவி ஜப வியாபாரம் செய்பவர்களிடம் ஏமாந்து நிற்கும் அப்பாவிகள் பற்றியும் அப்படி அறியாமை கொண்டவர்களை ஏமாற்றுபவர்கள் பற்றியும் ஏன் பேசத்தெரியவில்லை?

எல்லாம் செக்யூலரிச மாயை. அவர்கள் அமர்ந்திருக்கும் டிவி சேனலில் லீலை.

ஹிந்து புராணங்களை கவனமாக ஒதுக்கி, பைபிள் குரானைப் பற்றி பேசுவதை அறிவு ஜீவித்தனம் என்ற தோற்றத்தை முன்னிருத்தி, ஹிந்து சம்பிரதாயங்களை எள்ளி நகையாடிப் பேசுவதை ஒரு சிந்தனை என்றும் காட்டிக் கொள்கிறார்கள்.

இவர்கள்...

செக்யூலரிசப் பீடைகள்.

Friday, December 24, 2010

மதவாதசார்பு அரசியல் ஆபத்து நிறைந்த சமூகச் சூழல்!


இது மதச்சார்பற்ற நாடு. ஆனால் அரசாங்கம் என்னவோ மதம் சார்ந்தது. ஆனால் இஸ்லாம் சார்ந்ததா அல்லது கிறிஸ்தவம் சார்ந்ததா என்பதை அரசியல் வாதிகள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இந்துக்களுக்கு எதிரானது என்பது மட்டும் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்கிற தோற்றத்தை உண்டாக்க அரசாங்கம் தவறவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது மகள் "அப்பா என்னை ஏன் நீ கிறிஸ்டியன் என்று பள்ளியில் சொல்லக்கூடாது. என் நண்பர்கள் எல்லாருக்கும் பணக் கொடுக்கிறார்கள். நானும் கிறிஸ்டியனாக இருந்தால் வாங்குவேன் இல்லையா?" என்றாளாம். சிறுபான்மையின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் பணம் கொடுத்து இந்துப்பிள்ளைகளின் மனதில் ஏக்கத்தை விளைவிப்பதன் மூலம் அரசே மதம் மாற்றத்திற்கு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. பல ஊடகங்களில் இப்படி நடக்கிறது என்ற செய்தி படிக்கும் போது மனதில் உண்டான பாதிப்பை விட அருகிலேயே இருக்கும் நண்பர் கூறும் போது மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் கால்களில் விழாத குறையாக பேசியிருப்பதை கொஞ்சம் பார்க்கலாம்.



நீங்கள் சொல்லும்படி நடப்போம் என்பதற்கு இந்த அரசு சான்றாக உள்ளது.
சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நாங்கள் அலட்சியப்படுத்த மாட்டோம்.
ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள், உரிமைகள், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. பார்லிமென்டில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க., ஏற்றுக்கொள்ளும். காங்., துணையுடன் நிறைவேற்றி வைக்கப்படும். கோரிக்கையை நிறைவேற்ற போராடவும் தயங்க மாட்டேன். இதற்காக எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன். (கடவுளே இல்லை என்பாராம், ஏசு பிறந்தநாளை கொண்டாடுவாராம்!)

- மு.க



நான் கிறிஸ்தவ பள்ளியிலேயே படித்தேன். உலகம் முழுவதும் கல்வி, மருத்துவப்பணியை இறைப்பணியாக ஏற்று மக்களின் வாழ்க்கøயில் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் வழங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளையும் (அப்படியா?!), அதில் பணியாற்றியவர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன். கல்லூரியில் படிக்கும் போது அங்குள்ள வழிபாட்டு கூடத்துக்கு செல்வேன். பைபிள் படிப்பேன். அது இன்றும் எனது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் பல தொண்டுப்பணிகள் செய்கின்றன. இதைதான் நான் கிறிஸ்துமஸ் செய்தியாக சொல்ல விரும்புகிறேன் (என்ன ஒரு செய்தி!!). அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால் ஹஜ் யாத்திரை செல்ல அரசு உதவி செய்வது போல, ஜெருசலம் யாத்திரை செல்ல அரசு உதவிகள் செய்யும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலத்தில் சர்ச் கட்டுவதற்கு உள்ள தடையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். (ஏற்கனவே அந்தப் பகுதிகளில் இந்துக்களை வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கும்பிடக்கூடாது என்று கிறிஸ்தவர்கள் தொல்லை தருகிறார்கள் என்று கேள்வி...!) அதுபோல ஆதிதிராவிடர் கிறிஸ்வதர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள் கிடைக்க, அதற்குரிய கமிஷனில் அதற்குரிய ஆணையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்

- ஜெயா

என்னவோ ஏசு பிறந்த ஜெருசலேமுக்குச் செல்லமுடியவில்லை என்று அத்தனை கிறிஸ்தவர்களும் ஒப்பாரி வைப்பது போல தாமாகவே முன்வந்து இப்படி காலில் விழும் ஜெயாவும் சரி மதம் மாறினாலும் ஒதுக்கீடு வேண்டும் என்று நீங்கள் கேட்பது ஞாயம் தான் என்று காலில் விழும் மு.க வும் சரி இந்துக்களின் எதிர்காலத்தை பாரத தேசத்தில் குழி தோண்டி புதைத்தே தீருவோம் என்று சூளுரைத்தாற்போல் தான் இருக்கிறது. இந்துக்களின் புனித க்ஷேத்திரமான காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் சென்று வழிபாடு நடத்த முடியாத இந்துக்கள் பற்றி இவர்கள் கவலை கொள்ளவில்லை. 108 திவ்ய தேசங்களின் பல கோவில்களுக்குச் செல்ல சரியான பேருந்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் விமான கட்டனம் இலவசமாக கொடுத்து சிறுபான்மையினரின் வழிபாட்டிற்கு உதவுகிறோம் என்று சூளுரைப்பது பெரும்பான்மை ஓட்டுக்களைக் கொடுத்து தங்களை ஜெயிக்க வைக்கும் இந்து சமூகத்தினருக்கு செய்யும் துரோகம் எனபதே நிஜம்.

கொசுறு: தட்ஸ்தமிழ் இணைய செய்தி தளத்தில் புக்மார்க்ஸ் பகுதியில் வலைப்பூக்களை புக்மார்க் செய்து வைக்கும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியும். சமீபகாலமாக அந்த புக்மார்க் பகுதியில் இந்துக்களை அவமதித்தும் அசிங்கப்படுத்தியும் எழுதும் பதிவுகளை முன்பக்கத்தில் எப்போதும் தெரியும் படி வைக்கிறார்கள். இந்து மதத்தைப் பற்றிய விளக்கங்களுடன் வரும் பதிவுகள் கவனத்துடன் நீக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அதை பதிவுட உதவும் யூஸர் ஐடியையும் நீக்கி விடுகிறார்கள். புதிது புதிதாக யூஸர் ஐடி பதிவு செய்து புக்மார்க் செய்தாலும் அவற்றையும் நீக்கி விடுகிறார்கள். இப்படி எனது 15 வெவ்வேறு யூஸர் ஐடிக்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதை இங்கே எடுத்துரைப்பதன் காரணம் அந்த தளத்தில் நமது சுட்டியை பதிவிட முடியவில்லை என்கிற வருத்தத்தால் அல்ல. அதனால் நெல்முனையளவும் நஷ்டம் இல்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஊடகங்கள் எப்படி மிகவும் வெளிப்படையாக இந்துக்களுக்கு எதிராக செயல்பட துணிந்திருக்கின்றன என்பதை தான்.

இந்த சூழலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக அடகு வைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்தால் இந்துக்களின் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சங்கடங்களை அனுபவிக்க நேரிடுமோ என்கிற அச்சம் எழுவதை தவிர்க்க முடியாமல் போகிறது.

அரசியல்வாதிகள், ஊடகங்கள், மிஷனரிகள், இஸ்லாமிய அடிப்படை வாதிகள், அந்நியசக்திகளின் தூண்டுதல்கள் இவை அனைத்தையும் மீறி இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம் பாரதத்தில் இருக்கும் என்பது நம்பமுடியாத விஷயமாகவே தோன்றுகிறது.

இந்துக்களே! விழிப்படையுங்கள்! இந்துக்களைப் புறக்கனிக்கும் விதமான மதச்சார்பு அரசியலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு குரல் கொடுங்கள். இல்லையேல் தமிழகத்திற்கு ஒரீசா பக்கமாகிவிடும்!


Friday, September 24, 2010

காங்கிரஸின் பலவீனங்களும் போலி செக்யூலரிஸமும் - பேசும் படங்கள்!






ஆந்திராவில் தெலுங்கானாவை தனியாக பிரித்துத் தருவோம் என்று உறுதி கூறியது காங்கிரஸ்! அதனை எதிர்த்து 120 எம் எல் ஏக்கள் ராஜினாமா செய்ததை காரணம் காட்டி பல்டி அடித்த காங்கிரஸ்!


ரயில்களைக் கவிழ்க்கும் நக்ஸலைட் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இழுபறி செய்யும் காங்கிரஸ்!


காஷ்மீர் பிரச்சனையில் கலவரக்காரர்கள் மீது பாவப்பட்டு ராணுவத்தின் அதிகாரத்தை குறைக்கும் காமெடி பீஸ் காங்கிரஸ்!


காமன்வெல்த் ஊழல்களில் யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ்!


ஸ்பெக்ட்ரம் ஊழலில் மௌனம் சாதிக்கும் காங்கிரஸ்!


தீவிரவாதிகளை தூக்கிலிடாமல் மத விளையாட்டு விளையாடும் காங்கிரஸ்!


மேலும் ஒரு மத விளையாட்டை பாபர் மசூதி தீர்ப்பை தள்ளிப்போட வைத்து நடத்துகிறதோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் பிரச்சனை தான். இந்நிலையில் அயோத்தி வழக்கை விசாரித்து விட்டு தீர்ப்பு கூற காத்திருக்கும் மூன்று நீதிபதிகளில் ஒருவர் அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளாராம். எனவே செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்தத் தீர்ப்பை அளித்தாக வேண்டியுள்ளது.


அப்படி சொல்ல முடியாமல் போனால், இந்த தீர்ப்பை வெளியிட முடியாது என்கிறது செய்திகள். மாறாக புதிதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதை விட முக்கியமாக, இந்த வழக்கையே மொத்தமாக முதலிலிருந்து விசாரிக்க வேண்டி வரும் என்றும் கூறுகிறார்கள். எனவே இச்சூழ்நிலையை பயன்படுத்தி இன்னும் பல வருடங்கள் வழக்கை இழுத்தால் நமக்கு பிரச்சனை இல்லை என்று காங்கிரஸ் நினைக்கிறதோ என்னமோ! 28ம் தேதி தெரியும் சேதி!


மொத்தத்தில் யாரும் எப்படி வேண்டுமானாலும் நாட்டைக் கெடுக்கட்டும். நமக்கு ஆட்சியும் அதிகாரமும் முக்கியம். அது தான் இத்தாலி காங்கிரஸ்!