Friday, December 24, 2010

மதவாதசார்பு அரசியல் ஆபத்து நிறைந்த சமூகச் சூழல்!


இது மதச்சார்பற்ற நாடு. ஆனால் அரசாங்கம் என்னவோ மதம் சார்ந்தது. ஆனால் இஸ்லாம் சார்ந்ததா அல்லது கிறிஸ்தவம் சார்ந்ததா என்பதை அரசியல் வாதிகள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. இந்துக்களுக்கு எதிரானது என்பது மட்டும் நிச்சயிக்கப்பட்டு விட்டது என்கிற தோற்றத்தை உண்டாக்க அரசாங்கம் தவறவில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது மகள் "அப்பா என்னை ஏன் நீ கிறிஸ்டியன் என்று பள்ளியில் சொல்லக்கூடாது. என் நண்பர்கள் எல்லாருக்கும் பணக் கொடுக்கிறார்கள். நானும் கிறிஸ்டியனாக இருந்தால் வாங்குவேன் இல்லையா?" என்றாளாம். சிறுபான்மையின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் பணம் கொடுத்து இந்துப்பிள்ளைகளின் மனதில் ஏக்கத்தை விளைவிப்பதன் மூலம் அரசே மதம் மாற்றத்திற்கு தூண்டுதலை ஏற்படுத்துகிறது. பல ஊடகங்களில் இப்படி நடக்கிறது என்ற செய்தி படிக்கும் போது மனதில் உண்டான பாதிப்பை விட அருகிலேயே இருக்கும் நண்பர் கூறும் போது மிகவும் வேதனையாக இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள் கால்களில் விழாத குறையாக பேசியிருப்பதை கொஞ்சம் பார்க்கலாம்.



நீங்கள் சொல்லும்படி நடப்போம் என்பதற்கு இந்த அரசு சான்றாக உள்ளது.
சிறுபான்மை மக்களின் கோரிக்கையை நாங்கள் அலட்சியப்படுத்த மாட்டோம்.
ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள், உரிமைகள், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானது. பார்லிமென்டில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் பொறுப்பை தி.மு.க., ஏற்றுக்கொள்ளும். காங்., துணையுடன் நிறைவேற்றி வைக்கப்படும். கோரிக்கையை நிறைவேற்ற போராடவும் தயங்க மாட்டேன். இதற்காக எந்த தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறேன். (கடவுளே இல்லை என்பாராம், ஏசு பிறந்தநாளை கொண்டாடுவாராம்!)

- மு.க



நான் கிறிஸ்தவ பள்ளியிலேயே படித்தேன். உலகம் முழுவதும் கல்வி, மருத்துவப்பணியை இறைப்பணியாக ஏற்று மக்களின் வாழ்க்கøயில் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் வழங்கிய கிறிஸ்தவ மிஷனரிகளையும் (அப்படியா?!), அதில் பணியாற்றியவர்களையும் வாழ்த்தி வணங்குகிறேன். கல்லூரியில் படிக்கும் போது அங்குள்ள வழிபாட்டு கூடத்துக்கு செல்வேன். பைபிள் படிப்பேன். அது இன்றும் எனது மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் பல தொண்டுப்பணிகள் செய்கின்றன. இதைதான் நான் கிறிஸ்துமஸ் செய்தியாக சொல்ல விரும்புகிறேன் (என்ன ஒரு செய்தி!!). அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தால் ஹஜ் யாத்திரை செல்ல அரசு உதவி செய்வது போல, ஜெருசலம் யாத்திரை செல்ல அரசு உதவிகள் செய்யும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா நிலத்தில் சர்ச் கட்டுவதற்கு உள்ள தடையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். (ஏற்கனவே அந்தப் பகுதிகளில் இந்துக்களை வீட்டு வாசலில் பொங்கல் வைத்து கும்பிடக்கூடாது என்று கிறிஸ்தவர்கள் தொல்லை தருகிறார்கள் என்று கேள்வி...!) அதுபோல ஆதிதிராவிடர் கிறிஸ்வதர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான சலுகைகள் கிடைக்க, அதற்குரிய கமிஷனில் அதற்குரிய ஆணையை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்

- ஜெயா

என்னவோ ஏசு பிறந்த ஜெருசலேமுக்குச் செல்லமுடியவில்லை என்று அத்தனை கிறிஸ்தவர்களும் ஒப்பாரி வைப்பது போல தாமாகவே முன்வந்து இப்படி காலில் விழும் ஜெயாவும் சரி மதம் மாறினாலும் ஒதுக்கீடு வேண்டும் என்று நீங்கள் கேட்பது ஞாயம் தான் என்று காலில் விழும் மு.க வும் சரி இந்துக்களின் எதிர்காலத்தை பாரத தேசத்தில் குழி தோண்டி புதைத்தே தீருவோம் என்று சூளுரைத்தாற்போல் தான் இருக்கிறது. இந்துக்களின் புனித க்ஷேத்திரமான காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் சென்று வழிபாடு நடத்த முடியாத இந்துக்கள் பற்றி இவர்கள் கவலை கொள்ளவில்லை. 108 திவ்ய தேசங்களின் பல கோவில்களுக்குச் செல்ல சரியான பேருந்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் விமான கட்டனம் இலவசமாக கொடுத்து சிறுபான்மையினரின் வழிபாட்டிற்கு உதவுகிறோம் என்று சூளுரைப்பது பெரும்பான்மை ஓட்டுக்களைக் கொடுத்து தங்களை ஜெயிக்க வைக்கும் இந்து சமூகத்தினருக்கு செய்யும் துரோகம் எனபதே நிஜம்.

கொசுறு: தட்ஸ்தமிழ் இணைய செய்தி தளத்தில் புக்மார்க்ஸ் பகுதியில் வலைப்பூக்களை புக்மார்க் செய்து வைக்கும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியும். சமீபகாலமாக அந்த புக்மார்க் பகுதியில் இந்துக்களை அவமதித்தும் அசிங்கப்படுத்தியும் எழுதும் பதிவுகளை முன்பக்கத்தில் எப்போதும் தெரியும் படி வைக்கிறார்கள். இந்து மதத்தைப் பற்றிய விளக்கங்களுடன் வரும் பதிவுகள் கவனத்துடன் நீக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அதை பதிவுட உதவும் யூஸர் ஐடியையும் நீக்கி விடுகிறார்கள். புதிது புதிதாக யூஸர் ஐடி பதிவு செய்து புக்மார்க் செய்தாலும் அவற்றையும் நீக்கி விடுகிறார்கள். இப்படி எனது 15 வெவ்வேறு யூஸர் ஐடிக்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதை இங்கே எடுத்துரைப்பதன் காரணம் அந்த தளத்தில் நமது சுட்டியை பதிவிட முடியவில்லை என்கிற வருத்தத்தால் அல்ல. அதனால் நெல்முனையளவும் நஷ்டம் இல்லை. இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஊடகங்கள் எப்படி மிகவும் வெளிப்படையாக இந்துக்களுக்கு எதிராக செயல்பட துணிந்திருக்கின்றன என்பதை தான்.

இந்த சூழலில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்துக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக அடகு வைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்தால் இந்துக்களின் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சங்கடங்களை அனுபவிக்க நேரிடுமோ என்கிற அச்சம் எழுவதை தவிர்க்க முடியாமல் போகிறது.

அரசியல்வாதிகள், ஊடகங்கள், மிஷனரிகள், இஸ்லாமிய அடிப்படை வாதிகள், அந்நியசக்திகளின் தூண்டுதல்கள் இவை அனைத்தையும் மீறி இந்துக்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம் பாரதத்தில் இருக்கும் என்பது நம்பமுடியாத விஷயமாகவே தோன்றுகிறது.

இந்துக்களே! விழிப்படையுங்கள்! இந்துக்களைப் புறக்கனிக்கும் விதமான மதச்சார்பு அரசியலுக்கு வெளிப்படையாக எதிர்ப்பு குரல் கொடுங்கள். இல்லையேல் தமிழகத்திற்கு ஒரீசா பக்கமாகிவிடும்!


3 comments:

KrishnaDeverayar said...

The thing is most of the Hindus are not even aware what is happening. They just want to watch TV and go cinemas watch movies. I am worried about Hindus future.

Perunthuraiyaan said...

இன்றைய முதவராகட்டும் நேற்றைய முதல்வராகட்டும்.

அவர்களுக்கு ஹிந்து சமயத்தினரின் வாக்குகள், "ஹிந்து சமயத்தை வளர்த்து நிலை நிறுத்துவதால்தான் கிடைக்கும்" என்கிற நிலை இருந்தால், வேறு மாதிரி நடந்துகொள்வார்கள்.

கிறிஸ்துவர்கள் நிறைந்த கூட்டத்தில் பைபிள் பற்றியும் இயேசு நாதர் பற்றியும் பேசினால் அவர்களுக்கு திருப்தி உண்டாவதைக் காணலாம்.

ஆனால், ஹிந்துக்கள் நிறைந்த கூட்டத்தில், பகவானைப் பற்றியும் மறை மொழிகள், கதைகள் பற்றியும் பேசினால், ஓட்டுக்கும் உத்தரவாதமில்லை; வரவேற்புக்கும் உத்தரவாதமில்லை.

ஒரு ஹிந்துவுக்கு, 'ஹிந்து என்கிற அளவில், இன்னின்ன வசதிகள் செய்வதாக அறிவிக்க வேண்டும்' என்று இவர்கள் (பெரும்பாலோர்) எதிர்பார்ப்பதே இல்லை.

கேட்டால் தரப்படும். தட்டினால் திறக்கப்படும். தவறு (ஹிந்து) விழிப்புணர்வு இல்லாத ஹிந்துக்களிடையே இருக்கிறதேயன்றி, நேற்றைய, இன்றைய, முதல்வர்களிடம் இல்லை.

hayyram said...

உண்மை சமீபத்திய கிறுஸ்துமஸ் கூட்டத்தில் கூட கிறிஸ்தவர்களின் கால்களில் விழுந்து நக்குகிறார்கள் இந்த முதல்வர்களும் முன்னால்களும். என்ன கேவலம்.