Saturday, October 4, 2008

"கேயாஸ் தியரியும் இந்து தர்மமும்"


"கேயாஸ்" என்பது ஒரு கிரேக்க வார்த்தை.

'ஒழுங்கான ஒழுங்கற்ற தன்மை தான் கேயாஸ் என்பது. அதாவது ஒழுங்கற்றது போல் இருக்கும் ஒரு விஷயத்தில் ஒழுங்கைத் தேடும் இயல். உதாரணமாக வானிலை ஒருநாளைப் போல ஒரு நாள் இருப்பதில்லை. ஆனால் பருவ நிலை மாற்றங்கள் வருடம் முழுவதும் ஒரு சீராக குறிப்பிட்ட கால அளவுகளில் சொல்லி வைத்தாற்போல மாறி வருவதை நாம் காணமுடியும்.

இப்படியும் சொல்லலாம், ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத நிகழ்வுகள் ஒரே சீராக நிகழ்வது கேயாஸ் தியரி என சொல்லலாம். உதாரணமாக கச்சா எண்ணெய் இருக்கும் நாடுகளில் ஏதாவது பிரச்சனை என்றால் நமது ஊரில் காய்கறி விலை ஏறுவது போலதான். இந்த நிகழ்வு எப்படி நிகழ்கிறது. கச்சா எண்ணெய் நாடுகளில் எண்ணெய் விலை உயர்த்தப்பட்டாலோ அல்லது உற்ப்பத்திக்கு பாதிப்பு வந்தாலோ நமது நாடுகளில் எண்ணெய் தட்டுப்பாடு வந்து விடும். அதனால் லாரிகளின் விலை அதிகரித்து அதனால் காய்கறி விலை அதிகரித்து அதையும் வாங்காமல் போனால் வீட்டு அம்மனியிடம் திட்டு வாங்க நேர்கிறது. எங்கோ நடக்கும் ஒரு செயல் நம்மை ஒரு சீரில்லாத ஆனால் ஒரு சீரான தொடர்புகளின் மூலம் வந்தடைகிறதே இதை கேயாஸ் தியரி என்று சொல்லலாம்.


இப்படி ஒழுங்கற்ற நிகழ்வுகள் ஒழுங்கான ஒரு நிகழ்வை ஏற்படுத்துவதை வைத்து கமல்ஹாசன் "தசாவதாரம்" என்ற படம் எடுத்து அதை நீங்க‌ள் கண்டுகளித்திருப்பீர்கள். சரி அதற்கும் நமது இந்து தர்மத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை இப்போது பார்கலாமா!



இந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' என்ற‌ விதியை ந‌ம் இந்து த‌ர்ம‌த்திலே ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளாக‌வே மிக‌ச்ச‌றியாக‌ புரிந்து வைத்திருப்ப‌தை இங்கே பார்க்க‌லாம். உதார‌ண‌மாக‌ ப‌ருவ நிலை மாற்ற‌த்தைப்ப‌ற்றி மேலே பார்த்தோம் அல்ல‌வா. அப்ப‌டிப்ப‌ட்ட ப‌‌ருவ‌ மாற்றத்தின் அதாவ‌து 'ஒழுங்கான ஒழுங்கற்ற 'த‌ன்மையை ந‌ன்றாக‌ க‌னித்து அதை வ‌ரிசைப்ப‌டுத்தி ஒவ்வொரு மாத‌த்திற்கும் பெய‌ர் வைத்து ஒழுங்கற்ற மாற்ற‌ங்க‌ளின் ஒழுங்கு த‌ன்மையை க‌ண்கானித்திருக்கிறார்க‌ள். சித்திரை, வைகாசி என‌ தொட‌ங்கி ப‌ங்குனி வ‌ரை ப‌ருவ‌ கால‌ங்க‌ளுக்கு பெய‌ரிட்டு 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' தன்மையை உண‌ர்ந்த்து உப‌யோகப்ப‌டுத்தி இருக்கிறார்க‌ள்.



மேலும், இவ்விசயம் மனிதர்களுக்குள்ளும் எப்படிப்பட்ட நிகழ்வுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் நன்கு உணர்ந்து ' நீ பிற‌ருக்கு ந‌ன்மை செய்தால் உன‌க்கு யாரேனும் ந‌ன்மை செய்வார்க‌ள்' , ஊரார் பிள்ளையை ஊட்டி வ‌ள‌ர்த்தால் த‌ன் பிள்ளை தானே வ‌ள‌ரும் என்ப‌து போன்ற‌ ப‌ழமொழிக‌ள் இந்த‌ 'ஒழுங்கான ஒழுங்கற்ற ' த‌ன்மையின் போக்கை ந‌ன்கு புரிந்து கொண்டு அதை ந‌ல்ல‌ வ‌ழியில் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ இந்து த‌ர்ம‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் ஆகும்.

அதாவ‌து நாம் ஒருவ‌ருக்கு உத‌வினால் அந்த‌ உத‌வியின் விளைவு அதைப்பெற்றவரிடத்தில் ஒரு மகிழ்ச்சியான ந‌ல்ல‌ அலையைத் தோற்றுவித்து அந்த நபர் பிற‌ரிட‌மும் அதே அலையைத் தோற்றுவிப்பார். இது ஒரு தொட‌ர் நிக‌ழ்வாயின் அத‌ன் ப‌ல‌ன் வேறு யாரேனும் ஒருவ‌ர் மூல‌மாக‌ ந‌ம்மை வ‌ந்த‌டையும் என்ப‌து தான் 'கேயாஸ்'.

இது ம‌ட்டும் அல்லாம‌ல் ந‌ம‌து இந்து ச‌ம்பிர‌தாய‌த்தின் ப‌டி காக்காய்கு சோறு ப‌டைத்த‌ல், எறும்புக்காக‌ மாக்கோல‌ம் போடுத‌ல் போன்ற‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளும் சார்புயிரிக‌ளின் வாழ்க்கைக்கும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கைக்கும் உள்ள‌ ச‌ங்கிலித் தொட‌ர்பை ந‌ன்றாக‌ புரிந்து வைத்து உருவாக்கிய‌ ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளே.


"ப‌ல்லுயிர் வ‌ள‌ம் காப்போம்" என்று மேலை நாடுக‌ளும் ந‌ம‌து நாடும் அறிவிய‌ல் ரீதியான‌ பிர‌சார‌ங்க‌ளை அடுக்கி வைக்கின்ற‌ன‌. ஆனால் இந்து த‌ர்ம‌த்திலே இத‌ற்க்காக‌வே சொல்ல‌ப்ப‌டும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை மூட‌ந‌ம்பிக்கை என்று தூற்றுகின்ற‌ன‌ர்.


மேலை நாட்டுக்கார‌ன் சுமார் முப்ப‌து வ‌ருட‌ம் முன்னாலே எடுத்துச் சொன்ன‌ "கேயாஸ் திய‌ரியை" க‌ட்டிக்கொண்டு அழுப‌வ‌ர்க‌ள் ந‌ம்நாட்டில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லப்பட்டிருக்கும் ச‌ம்பிர‌தாய‌ங்க‌ளை புரிந்து கொள்வ‌தில் அக்கறை காட்டுவ‌தில்லை என்ப‌து ந‌கைப்புக்குறிய‌ வேத‌னை.


"கேயாஸ் திய‌ரி", "குவ‌ன்ட‌ம் திய‌ரி", "ரிலேட்டிவிட்டி திய‌ரி" இப்ப‌டி எதை எடுத்தாலும் அத‌ற்கு இந்து த‌ர்ம‌த்தில் உதார‌ண‌ம் காட்ட‌ முடுயும். அவைக‌ளைப் ப‌ற்றி அடுத்த‌ ப‌திப்பில் பார்ப்போம்.