Thursday, October 2, 2008

விவாஹம் என்றால் என்ன?


மனிதகுலத்தின் நாகரீகம் மனிதன் ஆண் பெண் உறவை திருமணம் என்ற சடங்கின் மூலம் முறைப்படுத்துதலில் துவங்கியது என்று சொல்லலாம். காடுகளில் வாழும் மிருகங்கள் போலவே மனிதன் விரும்பிய ஆண் விரும்பிய பெண்ணுடன் கூடுவதாகவே நடந்து வந்தது. மனிதனுக்கு எதையும் தனது என்று சொந்தம் கொண்டாடும் இயற்கையான குணம் காரணமாக உறவுகளையும் உறுதிப்படுத்தி பாதுகாக்க நினைத்தான். அதன் பொருட்டு உருவான சடங்கு திருமணம்.

'விவாஹம்' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு "சிறப்பாக வாழ்வது" என்று பொருள். தர்மங்களை தம்பதிகள் ஒன்றாக கடைபிடித்து வாழ்வது என்றும் பொருள்.

பகவான் ராம‌பிரானுக்கு சீதையை திருமணம் செய்து கொடுக்கிற போது ஜனகர் "என் மகளான சீதை இனி உன்னோடு சேர்ந்து தர்மத்தை கடைபிடிப்பாள்" என்று கூறுகிறார். அவ்வாறே விவாஹம் செய்யும் தம்பதிகள் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் விவாஹத்தின் தாத்பரியம்.