Saturday, January 10, 2009

இந்து தர்மத்தில் எல்லாமே மூடநம்பிக்கை என்று பகுத்தறிவாளர்கள் தொடர்ந்து விஷம் பரப்பிவருகிறார்களே அது உண்மையா?


இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் சேர்ந்ததுதானே ஒழிய அது வெறும் பொய்க்கதைகளோ அல்லது மூட நம்பிக்கைகளோ கிடையாது. இந்து தர்மத்தில் பல கதைகளும் புராணங்களும் உள்ளன. பல விந்தையான நிகழ்வுகள் சில நம்பமுடியத சம்பவங்கள் என்று பலவகைக் கதைகளும் சொல்லப்படுகின்றன. மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களும் இருக்கும். ஆனால் இவை யாவும் சமூக‌த்தையும் மக்களையும் ஏமாற்றும் நோக்கத்திற்காக அல்ல. மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் மூலமாக அல்லது சம்பவங்கள் மூலமாக மக்கள் மனதில் தர்மத்தின் சாரத்தை அழுத்தமாகப் பதியச்செய்யவே கையாளப்பட்டன. ஆனால் அவ்வாறு கையாளப்பட்ட எவையும் இந்த உலக நிகழ்வுகளிலிருந்தோ அல்லது பிரபஞ்ச விந்தைகளிலிருந்தோ வேறுபட்டு நிற்பதில்லை என்பது அவ்வாறு சொல்லப்படும் புராணங்களையும் இதிகாசங்களையும் ஆழ்ந்து படித்துணர்ந்தால் நன்றாகப்புரியும்.


உதாரணமாக இராமாயணத்தில் இரு வேறு மனித ரூபங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று முழுமையான மனிதனாக விளங்கும் உருவம் மற்றொன்று குரங்கும் மனிதனும் கலந்தாற்போன்ற ஒரு உருவம். இவற்றை இந்த கால மனித வாழ்க்கையிலிருந்து பார்க்கும் போது அது மிகைப்படுத்தப்பட்ட கதையாக, ஜோடனை கதாபாத்திரங்களாகத் தான் தெரியும். ஆனால் மனித குல பரிணாம வளர்ச்சி பற்றிய அறிவியளாலர்களின் கூற்றைப்படித்துப் பார்த்தால் இந்த கதாபாத்திரத்தின் கூற்றுக்கள் பொய் இல்லை என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.
அறிவியளாலர்களின் கூற்றுப்படி பார்த்தால் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் நியாண்டர்தால் மனிதர்கள் என்று ஒரு மனித இனம் இருந்ததாகவும், அத்தகைய மனிதர்கள் மிகவும் பலசாலிகளாக இருந்தனர் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் சாய்ந்த நெற்றியுடன் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ரூபத்தில் இருந்ததாக கூறுகிறார்கள். அவர்களின் உருவம் தற்கால மனிதனை விட சுமார் நான்கு மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. பாறைப்படிவங்களில் கிடைக்கப்பெற்ற ஒரு காலடித்தடத்தை ஒரு பெண்ணின் காலடித்தடத்தடம் என்று கண்டுனர்ந்து அதை தற்கால பெண்ணின் காலடித்தடத்தோடு ஒப்பிட்டு பார்த்ததில், நவீன காலப்பெண்ணின் காலடித்தடத்தைவிட‌ அது மூன்று மடங்கு பெரிதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அத்தகைய மனிதர்களின் பலத்தை நிகழ்கால மனிதர்களோடு ஒப்பிட்டால் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வாஸ்னெகர் அவர்களின் ஒரு குழந்தைக்கு சமம் என்றும் கூறுகிறார்கள். இப்போது நம் இதிகாசத்துக்கு வருவோம்.


இராமாயணத்தில் கூறப்பட்ட வாணரப்படைகள் இந்த மனிதர்களை ஒத்ததாகவே அமைந்துள்ளனர். அனுமாரும் வாலியும் மற்றும் சுக்ரீவனும் மிகபலசாலிகளாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காண‌லாம். மலையை கைகளால் கொண்டுவரும் அனுமாரும்,பாறைகளை தூக்கிப்போட்டு வான‌ர சேனைகள் பாலம் கட்டுவதும், மரங்களை பெயர்த்து சண்டைபோடுவதும் எந்த விதத்திலும் மிகப்படுத்தப்பட்டதாக கூறமுடியாது. இப்படி வானர மனிதர்கள் வாழ்ந்திருக்க சாத்தியமே இல்லை இது முழுமையான மூடநம்பிக்கை என்று சொல்வார்களேயானால், அத்தகைய பகுத்தறிவாளர்கள், மேற்சொன்ன அறிவியளாலர்களின் பரினாம வளர்ச்சி பற்றிய கூற்றையும் பொய்தான் என்று தைரியமாக வாதாடுவார்களா?



பகுத்தறிவாளர்கள் பிறப்பதற்கு முன் வாழ்ந்த மனிதர்களை அவர்கள் பார்த்ததில்லை. அவர்கள் காலத்திற்குப் பின் வரப்போகும் மனிதகுலம் பற்றி அவர்கள் அறியப்போவது இல்லை. ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்வார்களேயானால் இவர்களின் அறிவின் ஆழம் என்ன என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.



கதாபாத்திரங்களின் தன்மையை நம்பாமல் போனாலும், இப்படி ஒரு கதை நடக்கவே இல்லை என்று வாதிட்டாலும் இவை மனிதர்களுக்கு சொல்ல வந்த தர்மம் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இராமாயணத்தில் சொல்லப்பட்ட தர்மம் என்ன? மாற்றான் மனைவி மீது ஆசைப்படாதே என்பது ராமன் மூலமாகவும், என்ன துன்பம் வந்தாலும் கற்பை கைவிடமாட்டேன் என்ற தர்மத்தை சீதையின் மூலமாகவும் வலியுறுத்தினார்கள். மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் இந்த தர்மத்தை போதிப்பதும், அந்த கதாபாத்திரங்கள் மனதில் ஆழப்பதிந்து விடுவதன் மூலம் தர்மமும் பதியப்படுகிறது என்ற மனோவியல் தத்துவப்படியே இத்தகைய கதைகள் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று சொல்லும் இந்த நாகரீக சமூகத்தில் இன்று நடப்பது என்ன? தினசரியில் தினசரி குறைந்தது நான்கு கொலைகள் பற்றிய செய்தி. யாவும் கள்ளத்தொடர்பு, மாற்றான் மனைவி மீது காமுற்றவனால் அல்லது கற்பு என்ற படியைத் தாண்டிய பெண்களால் நடக்கும் கொலைகள் என்பது பெருமளவு காணத்துவங்கியுள்ள சீரழிவு. ஆக இந்து தர்மத்தைப்பற்றி அனாவசியமாக விதன்டாவாதம் செய்வதை விட இந்த தர்மம் என்ன சொல்கிறது என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் தானே ஒழிய மூடநம்பிக்கை அறவே கிடையாது. இந்து தர்மத்தின் சாரத்தை யார் அழிக்க முயற்சித்தாலும் அது நுனிக்கிளையில் அமர்ந்து அடிக்கிளையை வெட்டுவதற்குச் சமமாகும்.

அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு பரந்து வருவது கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி தியரியுடன் ஒத்துப்போடக்கூடியதே! அது பற்றி அடுத்த இடுக்கையில் பார்ப்போம்.