Thursday, February 26, 2009

சிறுகதை

ஒரு அரசாங்க உத்தியோக நேர்காணலில் நடக்கும் உரையாடல்:

அதிகாரி: தேவையான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு. இந்த வேலைக்கான பரீட்சையிலயும் நல்ல மார்க் வாங்கியிருக்கீங்க..தம்பி எல்லம் சொன்னீங்க உங்க ஜாதி என்னன்னு சொல்லவே இல்லையே?

வேலை தேடுப‌வ‌ர்: நான் சில‌ விஷ‌ய‌ங்க‌ள் சொல்றேன். அத‌ வெச்சு நீங்க‌ளே சொல்லுங்க‌ளேன்! பாக்கலாம் .

அதிகாரி: அட‌ என‌க்கே புதிர் போடுறியா! அப்ப‌டி என்ன‌ய்யா ஜாதி. சொல்லு கேக்க‌றேன்.

வேலை தேடுப‌வ‌ர்: சார்! இந்த இனம் அடியோட அழிஞ்சிடனும்னு நினைக்கிற பெரிய கூட்டமே தமிழ் நாட்டுல இருக்கு சார்!

அதிகாரி: எல்லாரும் யாரையாவது அழிக்க நினைக்கிறான் தான்! மேல சொல்லு பாக்கலாம்.

வேலை தேடுப‌வ‌ர்:சார் எங்கள சேர்ந்தவங்களுக்கு பெரிய மரியாதை இல்லைன்னாலும் அவமானப்படுத்த நிறயபேர் வரிசையில நிப்பாங்க சார்!

அதிகாரி: அட என்னப்பா வினோதமா சொல்ற...அப்பறம்?!

வேலை தேடுப‌வர்: காந்தி தாத்தா சுதந்திரத்திற்காக போராடினப்போ..காந்தி தாத்தா கூடவே சரிசமமா போராட்டத்துல ஈடுபட்டு, நாட்டுக்காக அரும்பாடு பட்டவங்கள்ள‌ எங்க முன்னோர்கள் ரொம்ப அதிகம் சார்!

அதிகாரி: அட்டே ! சுவாரஸ்யமா இருக்கே! மேல சொல்லு..

வேலை தேடுப‌வ‌ர்: சார்! அழிஞ்சு போற நிலைமையில இருந்த தமிழ் இலக்கியங்களை எல்லாம் தேடிக்கண்டு பிடிச்சு, புத்த‌க‌த்துல‌ அச்சேத்தி தமிழ் நாட்டுக்கு எட்டுத்தொகை, பத்துப்பாட்டுன்னு இலக்கியங்கள காப்பத்தி தமிழ் வீரத்த உலகிற்க்கே எடுத்து சொல்ல பாடுபட்டவர்கள் எங்க தாத்தா மார்கள் சார்.

அதிகாரி: என்னப்பா விட்டா ரொம்ப புருடா விடுவ போல இருக்கே..??!!

வேலை தேடுப‌வ‌ர்: இல்ல சார்..உண்மைய தான் சொல்றேன்!

அதிகாரி: சரி சொல்லு!

வேலை தேடுப‌வ‌ர்: ஆன்மீக‌த்தில் ச‌மூக‌த்தில‌ உள்ள‌ எல்லோருக்குமே உதார‌ண‌மா இருக்குற‌வ‌ங்க‌ சார்.

அதிகாரி: இப்ப‌ தான் எல்லாருக்குமே ப‌க்தி முத்தி போச்சே!!..வேற‌ என்ன‌ சொல்ல‌ப்போற‌

வேலை தேடுப‌வ‌ர்: சார்..த‌மிழ் சினிமால‌ கேலி ப‌ண்ணி, கோமாளி மாதிரி காமிச்சு, பயந்தாக்கொல்லியா காமிச்சு காமெடி ப‌ண்ண‌ எங்க‌ ஜாதிக்கார‌ங்க‌ளை தான் சார் அதிக‌மா காமிப்பாங்க‌.

அதிகாரி: அட‌ப்ப‌ரிதாப‌மே?? அப்ப‌ற‌ம்!!

வேலை தேடுப‌வ‌ர்: சார் ..ம‌த்த‌வ‌ங்க‌ ப‌ய‌ப்ப‌டுற‌மாதிரி சோடா பாட்டில் எரிஞ்சு , ரோட்டுல‌ க‌த்தி, அருவாதூக்கி யாரையாவ‌து வெட்டி, ஓடுற‌ ப‌ஸ்ச‌ உட‌ச்சு அந்த‌ மாதிரி எந்த‌ காரிய‌த்திலும் ஈடுப‌டாத‌வ‌ங்க‌ சார்..

அதிகாரி: அட‌..ந‌ல்ல‌ குடும்ப‌த்துல‌ பொற‌ந்த‌ யாருமே அந்த‌ மாதிரி ப‌ண்ண‌மாட்ட‌ங்க‌ப்பா...இதெல்லாம் எல்லாருக்கும் உள்ள‌து தான் த‌ம்பி. நல்லா சொன்ன‌ ஒட‌னே புரிய‌ற‌ மாதிரி உங்க‌ ஜாதிய‌ப்ப‌த்தி ஏதாவ‌து சொல்லு பாக்க‌லாம். அப்ப‌ க‌ண்டுபிடிக்க‌ முடியுதான்னு பாக்க‌றேன்...என்ன‌?

வேலை தேடுப‌வ‌ர்: சார்! க‌டைசியா ஒன்னு சொல்றேன்.. இப்பவாவ‌து க‌ண்டுபிடிக்கிறீங்க‌ளான்னு பாக்க‌லாம்!...

எங்க‌ ஜாதிப்பொண்ணுங்க‌ யாருமே எங்க‌ ஜாதிப்பைய‌னைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ற‌தே கிடையாது.. இப்ப‌ சொல்லுங்க‌ பாக்க‌லாம்.

அதிகாரி: அட்டே...!!!!!! நீ பிராமணப் பையனா...இதத்தான் இப்படி சுத்தி வளைச்சு சொன்னியா!! சாரி தம்பி இந்த சீட் ஒதுக்கீட்டின் பேர்ல வேற ஆளுக்கு குடுக்க வேண்டியது. உன்ன தப்பா கூப்பிட்டுட்டாங்க போல இருக்கு. நீ வேற ஏதாவது வேலை தேடிக்க தம்பி சரியா!? தவறுக்கு மன்னிக்கனும். பெட்ட‌ர் ல‌க் நெக்ஸ்ட் டைம். பை.

இங்கே பிராம‌ண‌ன்!

Tuesday, February 17, 2009

புத்தகத் திரட்டு


சும்மா கொரிக்க!
1. சந்திரன் பூமியை 27 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.
2. வைரம் என்பது 'கிரிஸ்டலைஸ்' ஆகியிருக்கும் கரி.
3. தந்தி என்கிற சங்கேத பரிமாற்ற முறையை கண்டுபிடித்தவர் ஸாம்யுவெல் மோர்ஸ் என்கிற அமெரிக்கர். 1843ல் அமெரிக்க அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
4. ரேடியோ அலையில் எஃப்.எம் என்பதன் விரிவாக்கம் ஃப்ரீகுவன்ஸி மாடுலேஷன்.

5. 1883ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமி அலை சுமார் 100 அடி உயரம் வரை உண்டானது.
6. மணலும், சோடாவும்ம்,பொட்டாஷும், சுண்ணாம்புச்சத்தையும் ஒன்று சேத்து உரிக்கினால் கிடைப்பது கண்ணாடி.
7. கொசுக்களில் 2700 வகைகள் உள்ளன. மழைபெய்யும் போது நனையாமல் இடுக்குகள் வழியாக கூட‌ பறக்கும் ஆற்றல் கொண்டவை.
8. பாம்புகளுக்கு கிட்டப்பார்வை பிரச்சனை உண்டு.
9. வவ்வால்கள் மொத்தம் 2000 வகைகள் உண்டு.
10. நத்தைக்கு கால்கள் கிடையாது.

ஒளியின் வேகம் என்ன?

விடை: வினாடிக்கு 186282 மைல்

Sunday, February 8, 2009

வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?


துளசி மாடம்:


தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.


அதிகாலை மூன்று ம‌ணிமுத‌ல் ஐந்து ம‌ணிவ‌ரை பிர‌ம்ம‌ முஹூர்த்த‌ம் என்று சொல்லுவார்க‌ள். அதாவ‌து இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையின் அத்த‌னை அம்ச‌ங்க‌ளும் மிக‌வும் புதிதாதக‌ச் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ இருக்கும். அதாவ‌து இந்த‌ நேர‌த்தை தான் ஓசோன் அதிக‌மிருக்கும் நேர‌ம் என்று இன்றைய அறிவிய‌லாள‌ர்க‌ள் கூறிகிறார்க‌ள். அதாவ‌து இய‌ற்கைய‌க‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் நேர‌மான‌ அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால் அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம் என்ப‌து இத‌ன் சாராம்ச‌ம். அதாவ‌து எல்லா ஜீவ‌ராசிக‌ளும் சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசித்து ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ தாத்ப‌ரிய‌த்திலேயே இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

தற்போது தாஜ்மஹாலைக் காப்பாற்ற அதைச்சுற்றி லட்சக்கணக்கில் துளசிச் செடியை நட்டு வைக்கப் போகிறார்கள். ஏனெனில் தாஜ்மஹாலைச் சுற்றி காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதால் அந்த பழம்பெருமை வாய்ந்த கட்டடம் வேகமாக அழிவதிலிருந்து காப்பாற்றப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு கல்லால் கட்டிய கட்டிடத்தையே துளசிச் செடி காக்குமென்றால் இரத்தமும் சதையும் கொண்ட மனிதனையும் காக்கும் என்பது உண்மைதானே. இந்துக்கள் வழிபடும் துளசியை தாஜ்மஹால் முன்பு நடக்கூடாது என்று எந்த முஸ்லீமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனேனில் இது அறிவியல் ரீதியான விளக்கத்துடன் நட்டு வைக்கப்படப்போகிறது. இந்து தர்மத்தில் இது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நட்டுவைக்கிறோம் என்று சொல்லியிருந்தால் பெரிய பிரளயமே வந்திருக்கும் என்பது வேற விஷயம்.அது மட்டும் அல்ல, ம‌ருத்துவ‌த்திலும் துள‌சிக்கு மிக‌ முக்கிய‌மான‌ இட‌ம் உண்டு. துள‌சி இல்லாத‌ ஆயுர்வேத‌ ம‌ற்றும் சித்த‌ ம‌ருத்துவ‌மே கிடையாது. இப்ப‌டியான‌ அற்புத‌ச் செடியை க‌ண்ட‌றிந்து அத‌ன் ப‌ல‌னையும் அனைத்து ம‌க்க‌ளும் ஆழ‌மாக‌ அனுப‌விக்க‌ வேண்டும் என்ப‌ற்க்காக‌ அதை ஒரு வ‌ழிபாட்டுச் ச‌ம்பிர‌தாய‌மாக‌வே ந‌ம் இந்து த‌ர்ம‌த்தில் வைத்துள்ளார்க‌ள். வேறு எந்த‌ ம‌த‌த்திலும் இவ்வாறு செடி கொடிக‌ளை கூட‌ பூஜிக்கும் உண்ண‌த‌ப்ப‌ழ‌க்க‌ம் கிடையாது என்ப‌தை எல்லோரும் யோசிக்க‌ வேண்டும்.


எந்தப் பெருமாள் கொயிலுக்கு போனாலும் ம‌ன நலனுக்கு பெருமாளைக் கும்பிட்டால் உட‌ல் ந‌ல‌த்திற்கு துள‌சி தீர்த்த‌த்தையும் பிர‌சாத‌மாக‌ வாயில் போட்டு சுவைக்க‌ துள‌சியும் கையில் கொடுப்ப‌துண்டு. ஆக‌ ம‌னோவிய‌லும் அறிவிய‌லும் ஒருங்கே சேர்ந்து தான் இந்து த‌ர்ம‌ம் ந‌ம் எல்லோரையும் வ‌ழி நட‌த்திவ‌ருகிற‌து என்ப‌தை ந‌ன்றாக‌ப் புரிந்து கொள்ள‌ வேண்டும். பெருமாள் கோவிலுக்கு வார‌ம் ஒரு முறை போங்கள். துளசிப்பிரசாதம் சாப்பிடாமல் வராதீர்கள் சரியா!.


த‌ற்கால‌த்தில் வீட்டில் ம‌ணிபிளான்ட் வைத்தால் ப‌ண‌ம் வ‌ரும் என்று ந‌ம்புகிறார்க‌ள், காசு குடுத்து ம‌ணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து ப‌ண‌ம் கூரையைப்பிய்த்துக் கொண்டு கொட்டாதா என்று வான‌த்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்க‌ள். ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம், மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள். இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால் ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து. என்ன‌ செய்வீர்க‌ளா?










Friday, February 6, 2009

வள்ளுவர் வாக்கு


2. பொருட்பால் (2. Wealth)
2.1 அரசியல் (2.1 Royalty)
2.1.1 இறைமாட்சி (2.1.1 The Grandeur of Monarchy)

_____________________________________________________________

386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

(That land prospers where the king is to see, not harsh of words.)

_____________________________________________________________

ஒரு நாட்டை ஆளும் அரசனாக இருப்பவர் காட்சிக்கு எளிமையானவனவராக‌வும் மக்களிடம் கடும் சொல் பேசாதவராக‌வும் இருக்கவேண்டியது அவசியம். அவ்வாறு இருக்கும் அரசரை இந்த உலகம் போற்றி புகழும் என்பது வள்ளுவர் வாக்கு. நடைமுறை வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட மன்னர்கள் கிடையாது எனினும் தலைவர்களாக இருப்பவர்களை மன்னர் என்ற இடத்தில் ஒப்பிட்டு நோக்கலாம்.

உதாரணமாக தமிழக சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற‌ நடிகராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காட்சிக்கு எளிமையானவராகவும் யாரிடமும் கடுஞ்சொல் பேசாதவராகவும், மிக எளிமையாக‌ எல்லோரிடமும் பழகுபவராக இருப்பதாலேயே உலகம் முழுவதும் அவருக்கு தனி மரியாதையும் புகழும் பரவியிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறு குறளின் ஒவ்வொரு பாடலும் அதன் பொருளும் எக்காலத்திற்கும் ஏற்புடையதாக இருப்பதாலேயே வள்ளுவர் வாக்கு மிக உயர்ந்து நிற்கிறது.

Tuesday, February 3, 2009

சித‌ம்ப‌ர‌த்தில் ஓர் அராஜ‌க‌ம்


சித‌ம்ப‌ர‌ம் ந‌ட‌ராஜ‌ர் கோவிலை இந்து அற‌நிலைய‌த்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள‌து. இந்து அறநிலையத் துறை என்ற பெயரில் இந்து கோவில்களில் மட்டும் அரசாங்கம் செய்யும் அட்டூழியத்திற்கு அளவே கிடையாது. இவர்களுக்கு இந்து கோவில்களில் வரும் வருமானத்தை பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். பிராமணர்களை அடியோடு இந்த‌ ச‌மூக‌த்திலிருந்து ஒழிக்க வேண்டும். இந்த இரண்டும் அடிப்படை தாரக மந்திரம். அதுவும் கருணாநிதியின் ஆத்மா சந்தியடைய இவையெல்லாம் முக்கிய வழிமுறைகள் என்று ஏதாவது ஜோசியர் சொன்னாரா என்பது தெரியவில்லை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்துக்களை அவமானப்படுத்துவது, இந்து தெய்வங்களைப்பழித்து பேசுவது இவை மட்டுமே அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.


மிகத்தொன்மை வாய்ந்த கோவில்கள் மற்றும் பண்டைய கலாச்சாரத்தையும், மன்னாராட்சியையும் பிரதிபலிக்கும் நினைவுச்சின்னங்கள் போன்றவை தனி ஒரு மனிதர் அல்லது தனி ஒரு குழுவிற்கு மட்டும் சொந்தமானதாக இருக்க கூடாது என்பது ஏற்புடையதே. அவ்வாறான மிகப்பழங்கால கட்டிடங்கள் தனியாள் கையில் இருந்தால் அது நாளடைவில் தனிப்பட்டவர் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படும் அல்லது அழிக்கப்பட்டுவிடும். எனவே அவற்றைப்பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் அந்த அதீத அக்கறை இந்து மத கோவில்களில் மட்டும் காட்டப்படுவது அநீதி.


இந்து அறநிலையத்துறை என்ற பெயர் மாற்றப்பட்டு அனைத்து சமய அறநிலையத்துறை என்று அமைக்க வேண்டும். வருமானம் வரும் மற்றும் போதிய வருமானம் இல்லாத அனைத்து மத கோவில்களும் அரசாங்க கட்டுப்பட்டிற்கு வரவேண்டும். மசூதிகளின் வருமானங்களும், தேவலயங்களின் வருமானங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதைச் செய்வதற்கு இந்த அரசிற்கு எவ்வளவு தைரியம் உள்ளது என்பது என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக தேவலயங்களுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம் பெரும்பாலும் உள்நாட்டு மக்களை மதம்மாற்றம் செய்ய மட்ட்டுமே பயன்படுகிறது. இதை அரசாங்கம் தட்டிக்கேட்கவோ கட்டுப்படுத்தவோ, ஏன் அந்த வருமானம் எங்கிருந்து வந்தது என்று கணக்கு கேட்பது கூட கிடையாது. ஆனால் இந்து ஆலயங்களின் மீது மட்டும் கட்டவிழ்து விடப்பட்ட அரசாங்க அராஜகங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.


பிராம‌ண‌ர்க‌ள் உரிமைக‌ள் அடியோடு ப‌றிக்க‌ப்ப‌டுவ‌தும் அவ‌ர்களின் வாழ்க்கை ம‌ற்றும் க‌லாச்சார‌ அடையாள‌ங்க‌ளை அடியோடு அழித்து ச‌மூக‌த்திலிருந்து இவ‌ர்க‌ளை முழுவ‌துமாக‌ அப்புற‌ப்ப‌டுத்த‌ த‌மிழ‌க‌ அர‌சு எடுத்து வ‌ரும் இன‌துவேஷ‌ ந‌ட‌வ‌டிக்கை மிக‌வும் அராஜ‌க‌மான‌து. த‌மிழ்நாட்டில் பிராம‌ண‌ இன‌த்தை அடியோடு அழிக்க‌ நினைப்ப‌வ‌ர்களுக்கு இல‌ங்கையில் த‌மிழின‌த்தை அழிக்கிறார்க‌ளே என்று கூச்சல் போட‌‌ என்ன‌ யோக்கிய‌தை இருக்கிற‌து என்று இன்னும் விள‌ங்க‌வில்லை.