Monday, October 25, 2010

விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்!


இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், கடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள். ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.

எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது.

இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல். உனக்கும் சொல்லிக்கொள். அப்போது உன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாமும் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல். அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு.

உன்னைப் போன்ற மக்களிடம் தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என் சொற்களின்
உண்மையான கருத்தைப் புரிந்து கொண்டு அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள். உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா. என் அரிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றியைப் பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

- சுவாமி விவேகானந்தர்.

ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் "வேதங்களின் சிறப்பு என்ன?" என்று கேட்கப்பட்டது.

"'தங்கள் போதனையையும் கடந்து செல்ல வேண்டும் என்று திரும்பத் திரும்ப வற்புறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே. தாங்கள் போதிப்பவை எல்லாம் வெரும் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்" என்று பதிலளித்தார். வேதங்கள் இறைவாக்காகவே கருதப்பட்டாலும் இறைநிலையை அடைவதே அதனினும் சிறந்தது என்பதை மிக எளிமையாக விளக்கினார் சுவாமி விவேகானந்தர்.

மனதில் நிறுத்த சில பெரியோர் வாக்கு:-

அகந்தை கொள்ளாதீர்கள் அது தீமையில் முடியும்.

நல்லோர்களின் நட்பைப் பெறுங்கள். அது மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மனதில் வஞ்சம் வைக்காதீர்கள். அது மரணத்தைக் காட்டிலும் கொடிய துன்பம் தரும்.

தகுந்த நேரத்தில் உதவுங்கள். அத்தகைய உதவி விலைமதிப்பிட முடியாததாகிறது.

தீயோர் நட்பு, பிறர் உடைமை, மாற்றான் மனைவி இவற்றில் ஆசை வந்தால் அதை அலட்சியம் செய்யுங்கள். அது அழிவைக் கொடுக்கும்.

தீய செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவனே உண்மையான நண்பனாவான்.

நற்சிந்தனையும் நல்லொழுக்கமுமே வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய குணங்களாகும்.

ஆசைகளைத் துறக்கத் தெரிந்தவனே துயரங்களை வெல்ல முடிந்தவன்.

சத்தியமும் பொறுமையும் கொண்டவனே உலகை வெல்லக்கூடியவன்.

பிற ஜீவன்களின் மீது கருணையோடு நடந்து கொள்பவன் முன்னால் இறைவனே பணிந்து நிற்பான்.

.

20 comments:

mubarak kuwait said...

மற்ற ஜாதி காரர்கள் அர்ச்சகராவதை பற்றி உங்கள் கறுத்து என்ன? மற்ற ஜாதினர் முறையாக படித்து பட்டம் வாங்கிய பின்பும் அவர்களை பனி செய்ய விடாமல் நீதி மன்றத்தில் தடை வாங்குவதை பற்றி உங்கள் கறுத்து என்ன? நாம் எல்லோரும் ஹிந்துக்கள் என்றால் ஏன் அவர்களை பனி நிரந்தரம் செய்ய இந்து முன்னணி தடைகளை ஏற்படுத்துகிறது. இதில் நீங்கள் உடன் படுகிறீர்கள இல்லை முரண்படுகிறீர்கள? முரண் பட்டாள் இந்து முன்னணிக்கு பகிரங்கமாக கண்டன குரல் எழுப்புவீர்கள?

hayyram said...

முன்பு கலைஞர் கருனாநிதி ஸ்ரீ ராமரை மிகவும் அவமதித்து பேசிய போது ப்ரபல வாரப்பத்திரிகை முஸ்லீம் தலைமை இமாம் ஒருவரிடம் இந்த சம்பவம்பற்றி கருத்து கேட்டது. அப்போது அவர் கூறியது "உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு, இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" என்பதே. அதாவது உங்களைப் போன்றவர்களை மகிழ்விப்பதற்காகவே ஒரு அரசியல் வாதி இந்துக்களின் உணர்வுகளை அவமதிக்கிறார் என்று தெரிந்தும் அதை பற்றி கருத்து கூறாமல் ஒதுங்கிக்கொண்டார் உங்கள் இமாம். அதையே உங்களுக்கும் இப்போது சொல்கிறேன். உங்கள் மதம் உங்களுக்கு, எங்கள் மதம் எங்களுக்கு. இந்து மக்களுடைய விஷயங்களை இந்துக்களே பார்த்துக் கொள்வார்கள். அதில் தலையிட்டு தூபம் போட்டு நீங்கள் குளிர்காய வேண்டாம். எல்லா மதத்திலும் காலங்களுக்கேற்ப மாற்றங்கள் தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் மதத்தில் தேவைப்படும் மாற்றங்களைப் பற்றி கவலைப்படுங்கள்! அதுவே சமூக அமைதிக்கு வழிவகுக்கும்.

நீச்சல்காரன் said...

out of the post.
ஹிந்தி தெரியலைனா உங்க தப்புன்னு எப்படி சார் சொல்லமுடியும்?
தமிழ் தெரியாதவுங்க எல்லாம் தப்பு செஞ்சவுங்களா?

hayyram said...

தமிழ் தெரியாதவங்க தமிழ் படிக்ககூடாது ன்னு முடிவு பண்ணி படிக்காம போகறதில்லை. ஆனால் தமிழ் நாட்டுல தான் இந்தி படிச்சாலே தப்புங்கற மாதிரி படம் போட்டு மக்களை பகுத்தறிவு முட்டாளாக்கி வெச்சிருக்காங்க. அத உணர்த்த வேண்டி சும்மா ஒரு வரி. அவ்ளோதான்!

mubarak kuwait said...

"உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு" பிறகு ஏன் இஸ்லாத்தை பற்றி உங்கள் கட்டுரைகளில் விமர்சனம் செய்கிறீர்கள்? நீங்கள் தலை இடுவதால்தான் நாங்களும் தலை இட வேண்டி இருக்கிறது.
மேலும் அந்த இமாம் ஹிந்துகளை பற்றி எந்த கருத்தும் சொல்ல வில்லை அதனால் விலகி கொண்டார், நீங்கள்தான் எப்போதும் முஸ்லிம்களை பற்றி குறை கூறி கொண்டு இருக்கிறீர்களே அதனால்தான் உங்களிடம் இந்த கேள்வி, ஹிந்து முன்னணி செய்த தவறை சுட்டி காட்ட உங்களுக்கு மனம் இல்லை காரணம் நீங்கள் இருவரும் ஒரே ஜாதி.
ஒருவர் முஸ்லிமானால் அந்த நிமிடமே அவர் பள்ளிவாசலில் மற்ற முஸ்லிம்களுடன் ஒன்றாக நின்று தொழுகை நடத்த முடியும், மேலும் அவர் குரான் ஓத தெரிந்தது இருந்தால் அவரும் தலைமை தாங்கி தொழுகை நடத்த முடியும்.
பிறந்தது முதல் ஹிந்துவாக இருந்தும் அவரெல்லாம் அர்ச்சகராக கூடாது காரணம் ஆகம் விதி அப்படி!
இப்போது தெரிந்து கொள்ளுங்கள் இஸ்லாம் சகோதரத்துவத்தை எப்படி போதிகின்றதேன்று?

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

மற்ற ஜாதி காரர்கள் அர்ச்சகராவதை பற்றி உங்கள் கறுத்து என்ன? மற்ற ஜாதினர் முறையாக படித்து பட்டம் வாங்கிய பின்பும் அவர்களை பனி செய்ய விடாமல் நீதி மன்றத்தில் தடை வாங்குவதை பற்றி உங்கள் கறுத்து என்ன? நாம் எல்லோரும் ஹிந்துக்கள் என்றால் ஏன் அவர்களை பனி நிரந்தரம் செய்ய இந்து முன்னணி தடைகளை ஏற்படுத்துகிறது. இதில் நீங்கள் உடன் படுகிறீர்கள இல்லை முரண்படுகிறீர்கள? முரண் பட்டாள் இந்து முன்னணிக்கு பகிரங்கமாக கண்டன குரல் எழுப்புவீர்கள?

hayyram said...

//உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு" பிறகு ஏன் இஸ்லாத்தை பற்றி உங்கள் கட்டுரைகளில் விமர்சனம் செய்கிறீர்கள்?// முபாரக், நீங்கள் இந்து மதத்தைப் பற்றி விமர்சித்துக் கூறாதவரை, இல்லாத மனுவைப் பற்றி இழுக்காதவரை நானும் இஸ்லாத்தைப் பற்றி எதுவும் விமர்சித்து விடவில்லை. ஒரு விஷயத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் காந்தி துவங்கி நேருவிலிருந்து இன்றைய புற்றீசல் அரசியல் கோஷ்டிகள் வரை அனைவரும் ஓட்டு அரசியலுக்காக மைனாரிட்டி துதி பாடி இந்துக்களை அவமதித்தும் அவர்களைப் பிளவுபடுத்தி அந்த மோதல்களில் குளிர்காய்வதையுமே தொழிலாகச் செய்து வருகிறார்கள். இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இருக்கிறதா என்று நாம் எழுதியது இந்துக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாகவே அது பிற மத விமர்சனமாக அமைய வேண்டும் என்பதற்காக அல்ல. அங்கிருந்து தான் நமது விவாதம் துவங்கியது என நினைவு. எல்லா மதங்களிலும் ஜாதிகள் இருந்தும் அரசியல் வாதிகள் இந்துக்கள் மட்டுமே ஜாதி பார்ப்பது போலவும் அவர்களை அவமதித்து மட்டுமே பேசியும் எழுதியும் வருகிறார்கள். ஓட்டு அரசியலுக்காக அரசியல் வாதிகளால் இந்துக்கள் பிளவுபடுத்தப்படுகிறார்கள் எனப்தை இது போன்ற விஷயங்களைச் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டி இருக்கிறது. அவற்றை இந்துக்களுக்கான செய்தியாகத் தான் பார்த்திருக்க வேண்டுமே தவிற உங்கள் மதத்தை விமர்சித்ததாக நீங்கள் எடுத்துக் கொண்டது குற்றமுள்ள மனது குறுகுறுத்த கதை தான். அப்படியானாலும் அதைப் பற்றிய உங்கள் மதம் சார்ந்த விளக்கத்தை கூறுவதுடன் நிறுத்தியிருக்கலாமே. மேலும் இந்துக் கோவிலில் யார் பூஜை செய்யவேண்டும் என்று நீங்கள் கவலைப்படுவது ஆடு நனைவதைப் பார்த்து ஓநாய் அழும் கதையாக இருந்ததால் உங்களுக்கு உங்கள் இமாம் பற்றி எழுதினேனே ஒழிய உங்களுக்கு பதில் சொல்வதால் எமக்கு ஒன்றும் குறையப் போவதில்லை. தமிழகத்து நாத்திகர்களை விட நீங்கள் ஒன்றும் மோசமாக இந்து மதம் பற்றி பேசிவிடவில்லை. ஆனால் நீங்களும் அவர்கள் வழியில் நின்று தான் இந்து மதத்தை விமர்சிக்கிறீர்கள். அவர்களுக்கே பதில் சொல்லும் போது உங்களுக்கு பதில் கூறுவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் உங்கள் இமாம்களின் கொள்கை தான் உங்களுடையதும் என்றால் உங்களுக்கு அது தேவையில்லை என்பது என் கருத்து.

//பிறந்தது முதல் ஹிந்துவாக இருந்தும் அவரெல்லாம் அர்ச்சகராக கூடாது காரணம் ஆகம் விதி அப்படி!
இப்போது தெரிந்து கொள்ளுங்கள் இஸ்லாம் சகோதரத்துவத்தை எப்படி போதிகின்றதேன்று?// நீங்கள் இப்படிக் கூறியதால் உங்கள் சகோதரத்துவம் பற்றி அறிய விழைகிறேன். ஒரு மசூதி எந்த ஜாமாத்துக்கு சொந்தம் என்ற சண்டையில் ஒருவருக்கொருவர் தென்காசி கடையநல்லூர் போன்ற மாவட்டங்களில் வெட்டு குத்து லெவலுக்கு இறங்குவது தான் சகோதரத்துவமா? எல்லாரும் முஸ்லீமென்றால் ஒரே கடவுள் என்றால் மசூதிக்கு சண்டையேன்? ஈராக்கில் உண்டான மோசமான சாவுகளும் சதாம் உசேனின் வீழ்ச்சியும் ஷியா மற்றும் சுன்னி முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் அழிக்க நினைத்த விடாமுயற்சியின் விஸ்வரூப வெற்றி தானே! உலகம் முழுவதும் முஸ்லீம்கள் ஒன்று என்றால், ஒரே கடவுள்ல், ஒரே குரானின் ஒரே மாதிரியான போதனைகள் என்றால் எல்லோரும் ஒன்று என்றால் ஏன் ஷியா, சுன்னி மற்றும் கோரப்படுகொலைகள்? எனக்குத் தெரிந்து முக்கியமான பண்டிகை தினத்தைத் தவிர முஸ்லீம்கள் அந்தந்த பிரிவு மசூதிகளில் தான் தொழ வேண்டும் என்ற நியதி பேசிக்கொள்ளாத வாடிக்கையாக தான் இருக்கிறது.

//அல்-திமானி குடும்பம் இவ்வாறு ஜாதி வெறி காரணமாக ஷரியா கோர்ட்டில் விவாகரத்து கொடுக்கப்பட்டது செய்தியாக எழுதியிருந்தேன். அந்த திருமணத்தில் அல்-திமானி குடும்பத்தில் கணவன் கீழ் ஜாதியாக இருந்ததால், மேல்ஜாதியை சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினர் ஷரியா கோர்ட்டில் சென்று கட்டாயவிவாகரத்து வாங்கி பிரித்துவிட்டனர். வெளியே இருந்தால் கணவனிடம் போய்விடுவாள் என்று பெண்மணியை சிறையில் வைத்திருக்கின்றனர் சவுதி அரேபிய அரசாங்கம்.

இது போலவே நிறைய கட்டாய விவாகரத்துக்கள் சவுதி அரபியாவில் நடைபெறுகின்றன//

http://ezhila.blogspot.com/2009/08/blog-post_8077.html சகோதரத்துவத்தை இங்கே படியுங்கள். மேலும்

http://thiruchchikkaaran.wordpress.com/2010/10/22/iswar-allaah-thero-naam-part-1

இந்த தளத்தில் உங்களைப் போல ஆளுக்கு சில கேள்விகள் உள்ளன. உங்களால் அவற்றிற்கு நேரடி பதில் கொடுக்க முடிந்தால் இன்னும் பரஸ்பரம் புரிந்து கொள்ளலாம். முயற்சி செய்து தான் பாருங்களேன்!

hayyram said...

வணக்கம் ம.பொன்ராஜ், முதலில் எனக்கு உங்களைப் போன்ற கோஷ்டிக்காரர்களின் கொள்கைகள் மீது சந்தேகம் உண்டு. பாப்பானை ஒழி, பாப்பானை அழி என்று கூறும் நீங்கள் புதிய பார்ப்பனர்களை உருவாக்குகிறீர்கள்.. ஏன் இந்த முரண்பாடு? சரி விஷயத்திற்கு வருவோம், //மற்ற ஜாதி காரர்கள் அர்ச்சகராவதை பற்றி உங்கள் கறுத்து என்ன? // இதில் தனிக்கருத்து கொள்வதற்கு ஒன்றும் இல்லை. வேதங்களிலோ, கீதையிலோ பகவான் ஓரிடத்தில் இருப்பார் அவரை அர்சகர் வழியாகத்தான் கும்பிட வேண்டும் என்று எங்கும் இறைவனால் குறிப்பிடப்படவில்லை. மாமிசத்தை உணவாகக் கொடுத்து வாயால் துப்பி குளுப்பாட்டிய கண்ணப்ப நாயனார் என்ன பிராமணரா? அவரது தூய அன்பைப் பார்த்து இறைவன் காட்சியளித்து மோட்சம் கொடுத்தாரே! இறைவன் தனக்கு ஏஜண்ட் என்று யாரையும் நியமிக்கவில்லை. எனவே யார் வேண்டுமானாலும் அர்சகர் ஆகலாம். மேலும் சந்தேகம், இறைவனுக்கு ஏஜண்ட் தேவையில்லை என்னும் போது ஏன் புதிய ஏஜண்டுகளை அரசாங்கம் நியமிக்கிறது?

//மற்ற ஜாதினர் முறையாக படித்து பட்டம் வாங்கிய பின்பும் அவர்களை பனி செய்ய விடாமல் நீதி மன்றத்தில் தடை வாங்குவதை பற்றி உங்கள் கறுத்து என்ன?// உங்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் படித்து பட்டம் வாங்கி பணி புரியும் உத்யோகமாகத் தான் அதை குறிப்பிடுகிறீர்கள். அதாவது வேலைக்கு சேர ஆள் ரெடி. ஆனா வேலை கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என புலம்புகிறீர்கள். அதாவது உங்களுக்கு பக்தி உண்டாகவேண்டும் என்பது குறிக்கோள் கிடையாது. நல்ல காசு புறளும் இடங்களில் பார்ப்பனன் மட்டும் சம்பாதிக்கிறானே அதைக் கெடுக்க வேண்டும், அதையும் நாமே பறித்துத் தின்ன வேண்டும் என்பது தான் இதன் ஞாயமான அடித்தள காழுபுணர்ச்சி உணர்வு. இதைத்தவிற இதில் புதிதாக ஒன்றும் இல்லை.

அர்சகர் பணி என்பது அரசு உத்யோகம் என்று கருதப்படுகிற நிலையில் அங்கே இப்போது வேலை காலி இல்லை. ஏற்கனவே இருப்பவர்களின் வேலையைப் பறித்து புதியவர்களுக்கு வேலை கொடுத்தால் அது ஞாயமில்லை. ஏற்கனவே வேலை பார்ப்பவர்களின் வாழ்வைக் கெடுக்காமல் புதிதாக வருபவர்களையும் கூடுதலாக கோவில்களில் பணி செய்ய அனுமதிக்கலாம். அது தான் நீதி. அரசு இந்த துறையில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். இருக்கும் கோவில்களில் இட ஒதுக்கீட்டு முறையில் அனைத்து பிரிவினரும் அர்சகர் ஆக்கப்படலாம். மேலும் புதிய கோவில்கள் பல கட்டி அர்சகர் உத்யோகத்திற்கு வேலை வாய்ப்பை பெருக்கி பலருக்கு வாய்ப்பளிக்கலாம்.

//அவர்களை பனி நிரந்தரம் செய்ய இந்து முன்னணி தடைகளை ஏற்படுத்துகிறது. இதில் நீங்கள் உடன் படுகிறீர்கள இல்லை முரண்படுகிறீர்கள? முரண்பட்டாள் இந்து முன்னணிக்கு பகிரங்கமாக கண்டன குரல் எழுப்புவீர்கள?//

முஸ்லீம்களின் மதத்திலோ, மசூதிகளின் உரிமைகளின் மீதோ தலையிடாத அரசு, கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடாத அரசு இந்துக்களின் கோவில் மற்றும் வழிபாட்டு விஷயங்களில் மட்டும் மிகக் கேவலமான முறையில் அதிகமான தலையீடுகளைச் செய்து வருகிறது. அவற்றை எதிர்ப்பது ஞாயமே.

மேலும் தனிப்பட்ட முறையில் ஒரு அமைப்பை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் எனது வேலையல்ல. நான் அவ்வளவு பெரியவனும் அல்ல.

mubarak kuwait said...

நமது விவாதம் தொடங்கியது இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் இருக்கிறதா என்ற கட்டுரயில் தான், அந்த கட்டுரைல்லேயிய இஸ்லாம் ஜாதிகளை சொல்லவே இல்லை, குரானிலும் ஹதீஸிலும் என்ன சொல்ல பட்டு இருக்கிறதோ அதுதான் இஸ்லாம், இங்கு வாழ்பவர்கள் ஜாதி ஏற்படுத்தி கொண்டால் அதற்கு இஸ்லாம் பொறுப்பு ஆகாது என்று அந்த கட்டுரைலியே பல பேர் உங்களுக்கு பதில் சொல்லி விட்டார்கள், இருந்தும் உங்கள் மனம் அதை மட்டும் புரிந்து கொள்ள மறுக்கிறது,
இங்குள்ளவர்கள் சண்டைக்கு கருத்து வேறுபாடுதான் காரணம், இரண்டு குழுக்களின் புரிதலில் தான் பிரச்னை ஆரம்பம் ஆகிறது. இங்கு சண்டை போடுபவர்கள் அனைவருக்கும் குரான் தான் வேதம் ஹதீஸ் தான் வழிகாட்டி, அல்லா தான் கடவுள் அதில் இங்குள்ளவர்களுக்கும் சரி ஷியா, சுன்னி பிரிவிற்கும் சரி இரண்டு குழுவும் வெவ்வேறு விதமாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள், இந்த உலகம் அழியும் வரை இவர்கள் ஒற்றுமை ஆகா மாட்டார்கள்.
நானும் அரபி நாட்டில் தான் பனி புரிகிறேன் சவுதி அரேபியா விருக்கும் சென்று இருக்கிறேன், இங்கு ஜாதில் கிடையாது குடும்ப பெயர்கள் தான் இருக்கிறது,சவுதி அரேபியா வில் ஒரு குடும்பம் செய்த தவறுக்காக ஒட்டு மொத இஸ்லாத்தை குறை சொல்வது உங்களை போன்ற படித்த சிந்திக்கின்ற வர்களுக்கு அழகல்ல.

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//அதாவது உங்களுக்கு பக்தி உண்டாகவேண்டும் என்பது குறிக்கோள் கிடையாது. நல்ல காசு புறளும் இடங்களில் பார்ப்பனன் மட்டும் சம்பாதிக்கிறானே அதைக் கெடுக்க வேண்டும், அதையும் நாமே பறித்துத் தின்ன வேண்டும் என்பது தான் இதன் ஞாயமான அடித்தள காழுபுணர்ச்சி உணர்வு. இதைத்தவிற இதில் புதிதாக ஒன்றும் இல்லை// ரொம்ப டென்ஷன் ஆகாதிங்க ராம்... கூல்...!!! 206 பிற சாதி மாணவர்கள் அர்ச்சகர் ஆவதை எதிர்த்து "விவாச்சாரியார்கள் சங்கம்" கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் சாராம்சம் இதோ: "பிராமண குலத்தில் பிறந்து, தீட்ச்சதை பெற்றவர்கள் மட்டுமே சிலையை தொட்டு பூஜை செய்ய வேண்டும். மற்ற சாதியினர் ஆகம, வேதங்களை கற்றிருந்தாலும் அவர்களுக்கு சிலையை தொடும் தகுதி கிடையாது. அதை மீறி செயல்பட்டால் கோவிலில் இருந்து தெய்வம் வெளியேறிவிடும்"....!!! நிற்க... 'ராம்' அவர்களே 1 ) பிறப்பால் பிராமணனாக இருக்க வேண்டும் என்பதே தகுதியாக சொல்லப்பட்டதே தவிர, 'மனதில்' பக்தியுடன் அர்ச்சனை செய்வோருக்கே முன்னுரிமை என்று சொல்லப் படவில்லை. 2 ) மேற்ச்சொன விஷயம் ஒரு கொள்கை மட்டுமே. அதை நடைமுறையில் 'தேவநாதன், ஜெயேந்திரர், பிரேமானந்தா' போன்றோர் நிரூபித்துள்ளனர். கோவிலில் அர்ச்சனை செய்ய 'பக்தி' தேவை இல்லை என்று...!!! நிற்க... //எனவே யார் வேண்டுமானாலும் அர்சகர் ஆகலாம்.// என்பதை ஒத்துக் கொள்ளும் நீங்கள் என்றாவது 'சிவாச்சாரியர்கள் சங்கத்தினரின் செயலை குறித்து என்றாவது உங்கள் இணையப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தது உண்டா? கொள்கை பேதம் மறந்து, இந்த பிரச்சனைக்கவது 'தி.க' போன்றோருக்கு தோல் கொடுத்தது உண்டா? நீங்கள் ஒருபோது அது போல செய்ய மாட்டிர்கள் என்பதற்கு //நல்ல காசு புறளும் இடங்களில் பார்ப்பனன் மட்டும் சம்பாதிக்கிறானே அதைக் கெடுக்க வேண்டும், அதையும் நாமே பறித்துத் தின்ன வேண்டும் என்பது தான் இதன் ஞாயமான அடித்தள காழுபுணர்ச்சி உணர்வு.// என்ற உங்களின் வரிகளே சாட்சி...!!! காசு சம்பாதிக்க என்று வந்தாகிவிட்டது... யார் சம்பாதித்தால் என்ன? 'கோவில்' என்ன 'பார்ப்பானின்' அப்பன் வீட்டு சொத்தா? பொதுச் சொத்து... 'அதில் நான் ஏற்க்கனவே குந்தியிருக்கேன், அடுத்தவனை விடமாட்டேன்' என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமை இல்லை....!!!

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

ரொம்ப டென்ஷன் ஆகாதிங்க ராம்... கூல்...!!! 206 பிற சாதி மாணவர்கள் அர்ச்சகர் ஆவதை எதிர்த்து "விவாச்சாரியார்கள் சங்கம்" கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் சாராம்சம் இதோ: "பிராமண குலத்தில் பிறந்து, தீட்ச்சதை பெற்றவர்கள் மட்டுமே சிலையை தொட்டு பூஜை செய்ய வேண்டும். மற்ற சாதியினர் ஆகம, வேதங்களை கற்றிருந்தாலும் அவர்களுக்கு சிலையை தொடும் தகுதி கிடையாது. அதை மீறி செயல்பட்டால் கோவிலில் இருந்து தெய்வம் வெளியேறிவிடும்"....!!! நிற்க... 'ராம்' அவர்களே 1 ) பிறப்பால் பிராமணனாக இருக்க வேண்டும் என்பதே தகுதியாக சொல்லப்பட்டதே தவிர, 'மனதில்' பக்தியுடன் அர்ச்சனை செய்வோருக்கே முன்னுரிமை என்று சொல்லப் படவில்லை. 2 ) மேற்ச்சொன விஷயம் ஒரு கொள்கை மட்டுமே. அதை நடைமுறையில் 'தேவநாதன், ஜெயேந்திரர், பிரேமானந்தா' போன்றோர் நிரூபித்துள்ளனர். கோவிலில் அர்ச்சனை செய்ய 'பக்தி' தேவை இல்லை என்று...!!!

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//எனவே யார் வேண்டுமானாலும் அர்சகர் ஆகலாம்.// என்பதை ஒத்துக் கொள்ளும் நீங்கள் என்றாவது 'சிவாச்சாரியர்கள் சங்கத்தினரின் செயலை குறித்து என்றாவது உங்கள் இணையப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தது உண்டா? கொள்கை பேதம் மறந்து, இந்த பிரச்சனைக்கவது 'தி.க' போன்றோருக்கு தோல் கொடுத்தது உண்டா? நீங்கள் ஒருபோது அது போல செய்ய மாட்டிர்கள் என்பதற்கு //நல்ல காசு புறளும் இடங்களில் பார்ப்பனன் மட்டும் சம்பாதிக்கிறானே அதைக் கெடுக்க வேண்டும், அதையும் நாமே பறித்துத் தின்ன வேண்டும் என்பது தான் இதன் ஞாயமான அடித்தள காழுபுணர்ச்சி உணர்வு.// என்ற உங்களின் வரிகளே சாட்சி...!!! காசு சம்பாதிக்க என்று வந்தாகிவிட்டது... யார் சம்பாதித்தால் என்ன? 'கோவில்' என்ன 'பார்ப்பானின்' அப்பன் வீட்டு சொத்தா? பொதுச் சொத்து... 'அதில் நான் ஏற்க்கனவே குந்தியிருக்கேன், அடுத்தவனை விடமாட்டேன்' என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமை இல்லை....!!!

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//ஏற்கனவே இருப்பவர்களின் வேலையைப் பறித்து புதியவர்களுக்கு வேலை கொடுத்தால் அது ஞாயமில்லை.// ஏதோ பேசுனுங்கிரதுக்காக பேசாதீங்க 'ராம்'...!!! ஏற்கனவே இருந்த மசூதியை இடித்து, அது எங்களுடைய இடம் என்று 'கர சேவைகள்' உட்பட எண்ணற்ற இந்துக்கள் நினைப்பது மட்டும் நியாயம்....ஆனால், ஏற்கவே வேலையில் இருக்கும் ஆட்களை வி.அர்.எஸ் கொடுத்து அனுப்பி விட்டு அந்த இடத்தில் 206 பேரை உட்கார வைப்பது 'அநியாயமா'?....!!! புதிதாக கோவிலை கட்டி அதில் இவர்களை வேலைக்கு பணியமர்த்த சொல்லும் நீங்கள் "மசூதி வேணும்னா இருந்துட்டு போகுது. நம்ம வேற எங்காவது பக்கத்தில் ராமனுக்கு கோவில் கட்டிக்குவோம்" என்று என்றாவது சொன்னது உண்டா? தனக்கு ஒரு நியாயம், அடுத்தவனுக்கு ஒரு நியாயமா?

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

// இந்து மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இருக்கிறதா என்று நாம் எழுதியது இந்துக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாகவே அது பிற மத விமர்சனமாக அமைய வேண்டும் என்பதற்காக அல்ல//எல்லா மதத்திலும் சாதிகள் உள்ளன என்று சொல்வதன் அர்த்தம் என்ன 'ராம்'? நாங்க மட்டும் திருடர்கள் இல்லை, அனைவருமே திருடர்கள் தான் என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித் தானே? பள்ளி சர்ட்டிபிகேட்டில் 'இந்து' , 'பள்ளன்' என்று குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரு மாணவன் தன்னை ஏன் 'தீண்டத் தகாதவன்' என்று இந்து சமூகம் ஒதுக்குகிறது என்று தான் நினைப்பனே ஒழிய, அதை களைய முற்படுவனே ஒழிய "எல்லா மதத்திலும் ஜாதி உள்ளது. எனவே இது என் விதி" என்று அவனை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களா?

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

//பாப்பானை ஒழி, பாப்பானை அழி என்று கூறும் நீங்கள் புதிய பார்ப்பனர்களை உருவாக்குகிறீர்கள்.. ஏன் இந்த முரண்பாடு?// என்ன சொல்ல வருகிறீர்கள் 'ராம்'? பிற சாதியாக இருந்தாலும், 'ஓதும்' வேலை செய்தால் அவன் 'பார்ப்பான்' ஆகிவிடுவான் என்று சொல்ல வருகிறீர்களா? மனசாட்ச்சியை தொட்டு சொல்லுங்கள்... அதுவா நோக்கம்...? "கோவிலை கட்டுபவன் ஒரு சாதிக்காரன். கல் சுமப்பவன் ஒரு சாதிக்காரன். காசு கொடுப்பவன் பல சாதிக்காரன். அதை கருவறை வரை கொண்டு வந்து நிருவுபவன் இன்னொரு சாதிக்காரன். " இப்படி கோவில் கட்டுவதற்கு பலவழிகளில் பணியாற்றிய எவரையும் ஒரு கோட்டைத் தாண்டி உள்ளே அனுமதிக்காமல் "வெறும் மந்திரங்களை மட்டும் ஓதும் நாங்கள் மட்டுமே அனைத்தையும் செய்வோம்" என்று சொல்லும்போது 'சுயமரியாதை' உள்ள எவனும் அந்த கோட்டை தாண்டத் தான் பார்ப்பான்...!!! நியாயப் படி பார்த்தல் 'கோடு' போட்டவனைத் தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். "ஏண்டா இவர்களை உள்ளே விடமாட்டேன்கிற" என்று...!!! ஆனால், கோட்டை தாண்ட முற்படுபவனை அல்லவா நீங்கள் கேள்வி கேட்க்கிறீர்கள்?

hayyram said...

mubarak, //அந்த கட்டுரைல்லேயிய இஸ்லாம் ஜாதிகளை சொல்லவே இல்லை, குரானிலும் ஹதீஸிலும் என்ன சொல்ல பட்டு இருக்கிறதோ அதுதான் இஸ்லாம், இங்கு வாழ்பவர்கள் ஜாதி ஏற்படுத்தி கொண்டால் அதற்கு இஸ்லாம் பொறுப்பு ஆகாது // உண்மைதானே! யாமும் அதைத்தானே அந்தக் கட்டுரையில் தெரிவித்தோம். நீங்கள் இஸ்லாம் என்றீர்கள். யாம் இந்து என்றோம். இந்து மதத்தில் ஜாதிகள் கிடையாது. வாழ்பவர்கள் ஏற்படுத்திக் கொண்டால் மதமென்ன செய்யும்?

read the below

http://hayyram.blogspot.com/2010/08/blog-post_28.html

http://hayyram.blogspot.com/2010/09/2.html

ஆனால் இந்துக்களிடையே பிளவை உண்டாக்க நினைப்பவர்கள் மதத்தின் பெயரால் வெறுப்பை உண்டு செய்யப் பார்க்கிறார்கள். ஆனால் மற்ற மதத்தில் இருக்கும் பிரிவுகளை நாசூக்காக கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இதனை மக்களுணர வேண்டும் என்பதற்காகவே மற்ற மதத்திலிருக்கும் பிரிவுகளைச் சுட்டிக்காட்டியும், எப்படி அரசியல் வியாதிகளும் பகுத்தறிவு வியாதிகளும் இந்துக்களிடையே இருக்கும் பிரிவுகளைப் பெரிது படுத்தி நம்மைப் பிளவு படுத்துகிறார்கள் என்பதை எடுத்துரைக்கவே அந்தப் பதிவு. அதில் நீங்கள் புகுந்து விளக்கப்பார்த்தீர்கள்! //அந்த கட்டுரைலியே பல பேர் உங்களுக்கு பதில் சொல்லி விட்டார்கள், // நீங்கள் மட்டும் தான் நண்பா. சிலர் உங்களிடம் கேள்வி கேட்ட போது நீங்கள் அதற்கு பதில் சொல்லவில்லை. அதற்கு மேல் நீங்கள் கூறியிருக்கும் விளக்கங்கள் யாவும் இந்துக்களுக்கும் பொருந்தக்கூடியதே! நீங்கள் உங்கள் மதம் பற்றி என்னவெல்லாம் உணர்வீர்களோ அதுவே யெமக்கும். உங்களுக்குள் இருக்கும் நான் என்ற உணர்வு தான் எனக்குள்ளும் இருக்கிறது. அதைத்தான் சர்வத்திலும் வியாபித்திருப்பவன் நானே என்கிறான் கண்ணன். எனவே நாம் மேற்கொண்டு ஆத்மார்த்தமான உண்மைகளைத் தேட நேரம் செலவிடுவோம். எமது மதம் பற்றிய கருத்துக்கள் எல்லாம் இஸ்லாமியர்களை குளிர்விக்க இந்துக்களை அவமதிக்கும், பிளவு படுத்தி குளிர்காயும் அரசியல் வாதிகளுக்கு எதிரானாதும் , நாத்திகர்களுக்கு எதிரானதும் தானே ஒழிய மதத்திற்கு எதிரானது அல்ல.

hayyram said...

@ பொன்ராஜ், //ரொம்ப டென்ஷன் ஆகாதிங்க ராம்... கூல்...!!!// ஒகெ பொன்றாஜ். தேங்க்ஸ்!

//, 'மனதில்' பக்தியுடன் அர்ச்சனை செய்வோருக்கே முன்னுரிமை என்று சொல்லப் படவில்லை.//

நண்பா, எப்போ பணம் தான் குறி, அந்த இடத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக ஒருவர் வாழ்க்கையை அழித்து இன்னொருவர் வாழவேண்டும் என்று நீங்கள் நினைத்து விட்டீர்களோ அப்போதே அங்கே பக்தி என்பது வெற்றுப் பேச்சாகி விட்டது. பின்னர் பூஜை செய்பவன் ப்ராமணனாக இருந்தால் என்ன வேறு யாராக இருந்தால் என்ன. அது ஒரு காசு புரளும் கவர்மென்ட் உத்யோகம். அவ்ளோதான்.

//உங்கள் இணையப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தது உண்டா?// அதைத் தொழிலாகச் செய்யவே இங்கே பல கூட்டங்கள் இருக்க நான் வேறு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா?

//தி.க' போன்றோருக்கு தோல் கொடுத்தது உண்டா?// ஆத்திகனை முடிந்தமட்டும் அவமானப்படுத்துவீங்க! சொரனையே இல்லாம அவன்கிட்ட தோல் குடுன்னு வேற கேகறீங்க! என்ன நண்பா! நண்பேண்டா..ன்னு சொல்லிக்கிற மாறியா நீங்கள்ளாம் நடந்துக்கிரீங்க. இது டூமச் மச்சி!..

//அதில் நான் ஏற்க்கனவே குந்தியிருக்கேன், அடுத்தவனை விடமாட்டேன்' என்று சொல்ல எந்த கொம்பனுக்கும் உரிமை இல்லை....!!!// நண்பா...எல்லோரும் சேந்து பொழைப்போம்னு நீங்க பிரசாரம் செஞ்சா யாரும் உங்களை எதிர்க்க மாட்டாங்க. ஆனா பாப்பானை ஒழிச்சுக்கட்டத் தான் நாங்கள்லாம் பாப்பானாகறொம்னு சொல்லிட்டுத் திரிஞ்சா தெரிஞ்சே ஓனானை எடுத்து எவன் வேட்டிக்குள்ள விட்டுப்பான் நண்பா. சொல்லுங்க.. முன்னமேயே சொன்னமாதிரி அது ஒரு உத்யோகம்னு ஆயிட்ட பிறகு எல்லாரும் சேந்து சம்பாதீங்க. தி மு க வில கருனாநிதி குடும்பத்தினர தவிற யாராவது தலைவராவோ முதல்வராவோ ஆகிவிட முடியுமா? அவர்களிடம் போய் எந்த தொண்டனாவது தி மு க என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா என்று கேட்க முடியுமா? ஸ்டாலினிடம் கேட்டால் ஆமாம் என்பார் ஒரே போடா..உங்களால் ஒன்னும் பண்ண முடியாது. அட ஊருக்கு எளச்சவன் தமிழ் நாட்டுப் பாப்பான் தானே! அதனால அவனைப் பாத்து என்ன வேனும்னாலும் கேக்கலாம்! ஆனா யாராயிருந்தாலும்உண்மைய ஒத்துக்கனும் சாமி... அரசுக்கோவில்கள் எதுவும் பார்ப்பானின் அப்பன் வீட்டுச் சொத்து இல்லவே இல்லை! ஆனா பாப்பானை விரட்டினதுக்கப்பறம் ஒவ்வொரு கோவிலையும் யாரெல்லாம் பங்கு போட்டுக்கப் போறீங்கன்னு பாக்கத்தானே போறோம்!
//ஏற்கவே வேலையில் இருக்கும் ஆட்களை வி.அர்.எஸ் கொடுத்து அனுப்பி விட்டு அந்த இடத்தில் 206 பேரை உட்கார வைப்பது 'அநியாயமா'?....!!! // சரி அது ஏன் கோவிலில் மட்டும்... எல்லா அரசு உத்யோகத்திலும் அது போல வி ஆர் எஸ் திட்டத்தை அமல் படுத்தி இன்னும் நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கலாமே! அங்கே மட்டும் 56 ஐ 58 ஆகி அதுவும் பத்தாதென்று 60 ஆக்கி என்று போய்க்கொண்டே இருக்கிறீர்களே! வி ஆர் எஸ் திட்டத்தை எல்லா அரசு பணிகளிலும் அறிமுகப்படுத்தும் போது இங்கேயும் அறிமுகப்படுத்தலாம்.. அதுவரை 'கூல்'.

//அதை களைய முற்படுவனே ஒழிய "எல்லா மதத்திலும் ஜாதி உள்ளது. எனவே இது என் விதி" என்று அவனை ஏற்றுக் கொள்ளச் சொல்கிறீர்களா?// நண்பா கொதிக்காதீங்க.. ஒன்னா ஒக்காந்து ஒரு கப் டீ சாப்டா அல்லாரும் ஃப்ரண்ட்ஸ் தான்.ஒகே வா. முதல்ல அந்த கட்டுரைய நல்லா ஒன்னுக்கு ரெண்டுவாட்டி படிச்சு பாருங்க. யாருடைய ஜாதியையும் ஞாயப்படுத்த அங்கே ஒன்றும் எழுதவில்லை. இந்துக்களிடையே பிளவை உண்டாக்க நினைப்பவர்கள் மதத்தின் பெயரால் வெறுப்பை உண்டு செய்யப் பார்க்கிறார்கள். ஆனால் மற்ற மதத்தில் இருக்கும் பிரிவுகளை நாசூக்காக கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். இதனை மக்களுணர வேண்டும் என்பதற்காகவே மற்ற மதத்திலிருக்கும் பிரிவுகளைச் சுட்டிக்காட்டியும், எப்படி அரசியல் வியாதிகளும் பகுத்தறிவு வியாதிகளும் இந்துக்களிடையே இருக்கும் பிரிவுகளைப் பெரிது படுத்தி நம்மைப் பிளவு படுத்துகிறார்கள் என்பதை எடுத்துரைக்கவே அந்தப் பதிவு. மஞ்சக்காமாலை கண்ணோட பாத்தா எல்லாமே மஞ்சளாத்தான் தெரியும். கோளாறு உங்கள் நோக்கில் தான். பிழையறு நோக்கப் பிணியது போகும், அகநக முகநக நட்பே ஆகும். புரியலையா! சுருக்கமா சொன்னா.. நண்பேண்டா!

hayyram said...

@பொன்ராஜ்

//பிற சாதியாக இருந்தாலும், 'ஓதும்' வேலை செய்தால் அவன் 'பார்ப்பான்' ஆகிவிடுவான் என்று சொல்ல வருகிறீர்களா?//

பின்ன இல்லையா! ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி என்னமா அக்ட் குடுக்கிறீங்க.. மந்தரம் ஓதரவன் பாப்பான், அவன் மந்திரத்தை நம்பாதே, அது மூட நம்பிக்கை, இவனுங்க மந்திரம் போட்டே நம்மள ஏமாத்திட்டானுங்க. . கைபர் கனவாய் வழியா உள்ளே கொண்டு வந்து நம்மை அடிமைப்படுத்திட்டாங்கன்னு காளுகாளுன்னு தெருவுக்குத் தெரு கூச்சல் போட்டுட்டு இன்டெர்நெட் பூராம் எழுதிட்டு சத்தமே இல்லாம அந்த மந்திரத்தை நீங்க கத்துகினு அதையே தொழிலா நீங்க எடுத்துக்கினா அதுக்கு பேறு இன்னாவாம். சரி அப்படியே பார்ப்பானைத் தவிற மற்ற எல்லாரும் அர்ச்சகர் ஆயிட்டாங்கன்னே வெச்சுக்குவோம்.. அப்ப மட்டும் கருவரைக்குள்ள எல்லோரும் போய் குந்த அனுமதி உண்டா? நானும் நீங்களும் கூட திருவண்ணாமலை சிவனையோ, மதுரை மீனாட்சி சிலையையோ கருவரைக்குள்ளே போய் தொட்டு வணங்க அனுமதி இருக்குமா? அப்போதும் யாரையும் கருவரைக்குள் விடமாட்டீர்கள் என்றால் அப்போ என்ன பேசுவீங்க.. செலைய செஞ்சவன் நான், கல்லொடச்சவன் நான், கலவை கலந்தவ்ன் நான் அதை கட்டி முடிச்சவன் நான்னு சொல்லி எல்லாரும் கோவில் கருவரைக்குள்ளே வந்தால் பார்ப்பான் அல்லாத அர்ச்சகர்கள் அப்போது என்ன அனுமதிப்பீர்களா?? பார்ப்பான் இல்லாத பட்சத்தில் எல்லோரும் கருவரைக்குள்ளே போக முடியும் என்றால் பிறகு அர்ச்சகர்கள் என்ற தெண்ட கருமாந்தரம் எதற்கு. தட்டேந்தி பிச்சைகேட்கவா??? (பிச்சை என்ற வார்த்தை கூட உங்களைப் போல பார்ப்பன எதிர்ப்பாளர்கள் பிரயோகிப்பது தான்) உங்கள் வழியிலேயே உங்களிடம் சந்தேகம் கேட்கிறேன் அவ்ளோதான்! நண்பா, பார்ப்பன காழ்புணர்ச்சி இல்லாமல், வெறும் இந்து மத வெறுப்பும் இல்லாமல் மனிதத் தன்மையோடு எதையும் அனுகுங்கள். நிறைய நல்ல விஷயங்கள் கண்ணில் படும். சென்னை திருமுல்லைவாயலில் ராகவா லாரன்ஸ் கட்டிய ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் அர்சகர்கள் கிடையாதாம். மக்கள் கூட்டம் கூட்டமாக பக்தியுடன் அந்தக் கோவிலுக்கும் செல்கிறார்கள். குறிப்பாக ப்ராமணர்கள் விரும்பிச் சென்று வழிபடுகிறார்கள். ப்ராமணர்கள் அர்சகராக இல்லாத கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று எந்த பிராமணரும் நினைத்ததில்லை. மரியம்மன் கோவில் பூசாரிகளிடமும் பிராமணர்கள் பிரசாதம் வாங்கிச் சாப்பிடுவார்கள். அங்கே ஜாதியை விட பக்தி தான் முக்கியம். பிராமணர்கள் தங்களை இந்து மதத்தின் ப்ராண்ட் அம்பாசிடர்களாக நினைக்கவில்லை. அவர்களது வாழ்வு முறை அந்த இடத்தைக் கொடுத்திருக்கிறது. அது மாறவும் செய்யும். ஆனால் எதுவும் உண்மையான உணர்வுடன் நடக்கும் போது சமூகம் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும். அதுவரை பொறுத்திரும் பிள்ளாய்! நல்லதே நினையுங்கள்! நல்லதே நடக்கும்.

Venkatachalam Palani said...

இது கற்பனை கூற்று.
இராமன் இருந்தாறனா
உண்மையா இது கற்பனை பாத்திரம்

இராமாயன கதை 60,000 மனைவி தசரதனுக்கு என்பது

சீதை வயல் வெளியில் பெட்டியில் பிறந்தாள் என்பது

குரங்கு இலங்கைக்கு போனது இராமன் வாலியை கொன்ற துரோகம்
காட்டில் தாழ்த்தப்பட்ட ஒருவர் தவம் செய்தார் என்பதற்காக பார்பனசிறுவன் இறந்தான் என்று அவரது தலையை வெட்டியது சீதையை சந்தேகித்து தீயில் இறங்க வைத்து செருப்பு 14 ஆண்டு ஆண்டது
இராவணன் சைவனை அயக்கனாகவும் கோழை இராமன் வைனவன் கடவள் என்று இப்படி கற்பனை நான்கு வர்னங்களை உறுதிப்படுத்துவது

யாகம் செய்து பார்ப்பனருக்கு அரசிகளை தானம் செய்து அவர்களை குதிரைகளை புணர்ந்து பிள்ளை பெற்றது....
இப்படி யாவும் புரட்டு ஏமாற்று கற்பனை பாவம் கடவுளை இப்படி கேவளமுங பரப்ப வேட்டிய அவளம்

Venkatachalam Palani said...

கடவுள் படைப்பு அனைவரும் சமம் என்கிற போது
அனைத்து ஜுதியினரும் அர்ச்சஙராகலாம்
இந்து சொல்பவனே இந்து கோயிலுக்கு வராதே என்பது பார்ப்பன கூட்டம் கோயில கொள்ளை யடிக்ங
மடாதிபதிகளும் கோயில் சொத்து ஆடம்பர வாழ்வ வாழவே

மடாதிபதிகளுக்கு அரசியல் எநற்கே

மடாதிபதிகளுக்கு சொத்தே பணம் எதறீகே

துறவிகள் ஒளிமையுன வாழீவு வேண்டாமா

இவர்களை பல்லக்கில் தூக்குவதே எதற்கு

ஏமாற்று
ஓடப்பராயிருப்பவர்
உதையப்பர் ஆகிவிட்டாள்
..... எல்லாம் ஓப்பப்பர் ஆய்விடுவர் உணரப்பா நீ