Sunday, November 14, 2010

ஏசுவைப் பார்த்தால் அழுகை வருகிறதா? ஏன்?





அப்புசாமி அவசர அவசரமாக குப்புசாமியைப் பார்க்க ஓடி வந்தார். முகத்தில் மிகவும் பதட்டம் தெரிந்தது.

குப்புசாமி: என்ன அப்பு, ஏன் இப்டி தல தெறிக்க ஓடி வர, என்ன ஆச்சு?

அப்புசாமி: குப்பு, எனக்கு காவே வல்ல! ராத்திரி தூங்கிட்டிருந்தேனா, ஒரு கனவு.. கடவுள் வந்து என்ன வரம் வேணும்ன்னு கேட்டாரு.. நான் 'எனக்கு காவே வரக்கூடாதுன்னு' வேண்டிகிட்டேன். அதுலருந்து எனக்கு 'காவே' வரல.

குப்புசாமி குழம்பிப்போனார். விஷயம் இதுதான். அப்புசாமியின் கனவில் கடவுள் தோன்றி வேண்டிய வரத்தைக் கேள் என்று கூற, அப்புசாமியோ தனக்கு சாவே வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டார். கடவுளும் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்து விட்டார்.

காலையில் ஒருவன் அப்புசாமியின் பெயரைக் கேட்க டக்கென்று 'அப்புமி' என்று கூறியிருக்கிறார். எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தும், பாவம் அவருக்கு 'சா'வே வரலை. அந்த பதட்டத்தில் தான் குப்புசாமியைப் பார்க்க ஓடோடி வந்து விஷயத்தை சாவில்லாமல் 'கொல்லிக்' கொண்டு இருக்கிறார். மேலும் பார்ப்போம்.

குப்புசாமி: அடப்பாவி, கனவுல தானேடா வரம் கேட்ட, இப்பவுமா அது பலிக்குது!

அப்புசாமி: என்னவோ தெரியல குப்பு, நான் அதிர்க்கி (ஷாக்) ஆயிட்டேன். கொஞ்ங்க நேரமா இப்டி தான் பேத்தறேன்.

குப்புசாமி: அடப்பாவி, உன் கூட பேசிட்டிருந்தா கொஞ்ச நேரத்தில நானும் கக்கா கிக்கீன்னு பேசுவேன் போலருக்கே!

அப்புசாமி: கேலி பண்ணாத குப்பு! காலைல இருந்து எல்லா கடவுளையும் மாத்தி மாத்தி வேண்டிக்கிட்டேன் இது கரியாக மாட்டேன்குது...ஐ மீன் கரெக்ட் ஆக மாட்டேன்குது.

குப்புசாமி: அட அப்பு, கடவுள்ங்கறது ஒன்னே ஒன்னு தான். அவங்கவங்களுக்கு பிடிச்ச உருவத்தில கும்பிடறதனால பல சாமிங்க இருக்கு. நீ ஏன் எல்லாத்தையும் கும்பிடற. ஏதாவது ஒரு சாமிய மனச அமைதியா வெச்சி தியானிக்க வேண்டியது தானே!

அப்புசாமி: குப்பு, எனக்கு ஒரு 'கந்தேகம்'... ஐ மீன் 'டவுட்'

குப்புசாமி: என்ன?

அப்புசாமி: எல்லா கடவுளையும் கும்பிட்டாலும் கார்த்தால கர்க்குக்கு போய் ஏகுவை... ஐ மீன் தேவாலயத்துக்கு போயி கர்த்தர் முன்னாடி நின்ன உடனே என் கண்ணுல இருந்து தாரை தாரையா தண்ணி ஊத்த ஆரம்பிக்கிடுக்கு. ஒரே அழுகையா வந்துது. ரெண்டு நிமிடம் நல்லா அழுதப்பறம் மனம் அமைதியா இருந்திக்கு. வேற எந்த 'காமியை' ஐ மீன் 'காட்' ஐ பாத்தாலும் இப்டி ஆகறதில்லை. அது ஏன் குப்பு எனக்கு இப்டி நடந்தது.

குப்புசாமி: அப்பு, அதுக்கு ஒரு மனோவியல் காரணம் இருக்கு.

அப்புசாமி: என்ன?!!!

குப்புசாமி: நீ காலைல என்ன மூட்ல இருந்த...

அப்புசாமி: ஐயோ, 'கா(சா)வே' வரலையே ஒரே பயத்துல அழுவுற நிலைமைல இருந்தேன்!

குப்புசாமி: அதான் காரணம். விலாவாரியா சொல்லனும்னா, ஒரு சினிமா பார்க்கறோம். அந்த சினிமால ஹீரோ குடும்பத்துக்காக கடினமா உழைக்கறவனா இருந்து க்ளைமேக்ஸிலே ரொம்ப கஷ்டப்பட்டு சாகற மாதிரியும் படம் முடிஞ்சா அந்த காட்சிகள்ல நம்மை அறியாம மனசு கனமாகி விழியோரங்கள்ல கண்ணீர் வந்திடும். ஏசுநாதர் பற்றி மக்களிடம் சொல்லப்படும் கதைகளும் இதே போன்றதொரு சோகக் கதை தானே! மக்களுக்காக உழைத்து கடைசியில் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கும் ஒரு கதாபாத்திரம். அதனால் அந்த கதை நாயகனின் உருவத்தைப் பார்த்த உடனேயே மனசு கனமாகி அழுகை வருது.

பாரு அப்பு..., பொதுவாவே எல்லாருமே நிறைய கஷ்டத்துல இருப்பாங்க. யாருக்கிட்டயாவது சொல்லி அழமாட்டோமான்னு நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. ஏற்கனவே மனம் நிறைய துக்கத்துடன் தேவாலயம் போறவங்க அங்க இருக்கிற சோகமான நம்ம கதைநாயகனைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழத்துவங்கிடறாங்க. அதைத்தான் நீயும் பண்ணிருக்க. எப்பவுமே கண்ணீர் விட்டு அழுதுவிட்டால் மனதில் உள்ள பாரம் குறைந்து மனது லேசான மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும். இது ஹியூமன் சைக்காலஜி. அது தான் உனக்கும் நடந்திருக்கு.

அப்புசாமி: ஓ, அப்ப அதுக்கு என் மனது தான் காரணமா? கர்த்தரோட அருள் இல்லையா?

குப்புசாமி: அருள் இருக்கோ இல்லையோ தெரியாது.. ஆனா உனக்குள்ள முட்டிக்கிட்டு இருக்கிற அழுகைய வெளியில கொண்டு வர ஏசுவோட சோகமான உருவம் ஒரு உந்து சக்தியா பயன்பட்டுவிடுகிறது. அது தான் நிஜம். ஆனா இந்த சராசரி மனோவியல் வடிகால்களைக் காட்டியே பலபேரை மதம் மாற்றிவிடுகிறது மதபோதகக் கும்பல். மதம் மாறின பலபேர் ஏசுவை கும்பிட்டா மனசு அமைதியா இருந்திச்சி. அதான் மாறிட்டேன் என்பார்கள்.

அப்புசாமி: கரி... ஐ மீன் 'ரைட்டு', ஆனா அது தப்பில்லையே... அந்த கடவுளால ப்ராப்ளம் தீர்ந்தா நல்லது நடந்ததுன்னு எடுத்துக்கலாம்ல்ல.

குப்புசாமி: அங்க தான் எல்லாரும் தப்பு பண்றாங்க அப்பு, மனசு சமாதானம் அடையறது வேறு பிரச்சனைகள் தீர்வது வேறு. ஏசுவ கும்பிட்டா மனசு சமாதானம் கிடைக்குதுங்கறது சரி தான். ஆனா அவர்கள் பிரச்சனைக்கு தீர்வை அது கொடுக்கிறதா என்பதை தான் பார்க்கனும்.

உதாரணமா, உன்னை நாய் துறத்துதுன்னு வெச்சிக்கோ... நீ ஏசுவை மனசில நினைச்சிக்கிட்டதால உன் மனசு சமாதானமா இருக்கும். இப்போ பதட்டம் இல்லாதவனா அமைதியான மனசோட உன்னால ஓட முடியும். ஆனா நாய் துறத்துவது நிக்கலையே! என்ன பிரயோஜனம். மன அமைதியா இருந்தாலும் எவ்வளவு தூரம் நாய் துறத்தலுக்காக ஓடிக்கிட்டே இருப்ப?

அப்புசாமி: அதானே!

குப்புசாமி: உத்வேகத்தோட போராட்டங்களில் ஜெயிப்பது தான் சராசரி வாழ்க்கைக்கு முக்கியம். அதனால தான் இந்து கடவுளர்களெல்லாமே தீமையை அழிப்பவர்களாகவும், துஷ்டர்களை வென்று ஜெயிப்பவர்களாகவும் வெச்சிருக்காங்க. இது போன்ற கடவுளரை ஆதர்ஷ நாயகர்களாகக் கொள்ளும் போது நமக்கும் வெற்றி நாயகனாகவே இருக்க வேண்டும் என்ற உத்வேகம் வரும். இன்னும் முனைப்புடன் வாழ்க்கையின் கஷ்டங்களை எதிர் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க இந்த உத்வேகம் உதவும். அதுக்கு தான் சாமியை அந்த மாதிரியெல்லாம் உருவகிச்சிருக்காங்க. இதெல்லாம் ஒரு மனக்கணக்கு தான்.

அப்புசாமி: அப்போ கர்த்தரை விட இந்துகடவுளர் தான் உயர்வு ன்னு கொல்றியா?

குப்புசாமி: நான் அப்படி சொல்லவரல. சாமின்னா எல்லாமே சாமி தான்.
நீ அழுவாச்சியா வந்திச்சுன்னியே அதுக்கு தான் இவ்வளவும் விளக்கினேன். உனக்கு ஏசுவை கும்பிடப்பிடிக்கும்ன்னா உங்க வீட்டு ராமர், க்ருஷ்ணர் சிவன் பக்கத்திலேயே ஏசுவையும் வெச்சிக்கோ. எந்த ரூபத்தை வேணும்னாலும் சாமியா கும்பிடற சிறப்பு இந்துக்களுக்கு மட்டும் தானே இருக்கு.

அப்புசாமி: ஆமாம் ஆமாம், அப்படி உயர்வான மதத்தில இருந்திக்கிட்டு கிலபேர் ஒரு கடவுள கும்பிடறதுக்காக போய் ஒரு மதமே மாறிடறாங்க. அவங்க அடையாளத்தையே அடியோட மாத்திக்கிட்டு வேற்று நாட்டு விகு(சு)வாகி(சி)களாகவும் ஆகிடறாங்க.

குப்புசாமி: இதைத்தான் 'வ' க்காண்டி ஒயின் ஷாப்பையே விலைக்கு வாங்கற கதைன்னு சொல்வாங்க.

அப்புசாமி: அதென்ன 'வ'

குப்புசாமி: அதான்பா 'குவாட்டர் கட்டிங்க்'

அப்புசாமி: அதெல்லாம் இருக்கட்டும் என் ப்ராப்ளத்துக்கு என்ன பண்ண...

குப்புசாமி: ஹா ஹா ஹா ஹா

அப்புசாமி: ஏன்பா இந்த ஹா ஹா....

குப்புசாமி: இல்ல, உங்க வீட்டு மொட்டை மாடிக்கு எப்ப போனாலும் உன்னை ஒரு காக்கா கொத்திக்கிட்டே இருக்குன்னு அடிக்கடி சொல்லுவியே..

அப்புசாமி: அதுக்கென்ன இப்போ...?

குப்புசாமி: ஹா ஹா இல்ல அப்பு, கனவுல சாமிகிட்ட வரம் கேட்டப்போ நல்ல வேளையா 'காக்கா'வே வரக்கூடாதுன்னு நீ கேக்கலை....

அப்புசாமி: கேட்டிருந்தா..?

குப்புசாமி: உன் உச்சரிப்பை தப்பா புரிஞ்சிக்கிட்டு சாமி அப்படியே ஆகட்டும்ன்னு சொல்லப்போய் உனக்கு 'கக்கா' வே வராம போயிருந்தா நீ என்ன பண்ணியிருப்பேன்னு நினைச்சேன். ஒரே சிப்பு சிப்பா வந்திடிச்சு.... ஹாஹ்ஹ்ஹ் ஹாஹ்ஹ் ஹா... ஐயோ ஐயோ!

அப்புசாமி: "போடா..ங்..இவனே..." என்று குப்புவை முறைத்துக்கொண்டே அடுத்த தூக்கத்திற்காக வீட்டை நோக்கி நடக்கலானார். மறுபடி கனவு வருமா?


.

11 comments:

தனபால் said...

திரு ராம் அவர்களே,

அருமையான கட்டுரை.அழகான விளக்கத்துடனும்,நகைச்சுவையாகவும் சொல்லப்பட்ட பதிவு.அய்யா உங்கள் பதிவை ஏன் நீங்கள் இன்ட்லி,தமிழ் மனம் போன்ற திரட்டிகளில் வெளியிடக்கூடாது?பலரையும் சென்றடையுமே.

hayyram said...

நன்றி திரு.தனபால், இன்ட்லி , தமிழ்10 மற்றும் உலவி என்று எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது போடுவதுண்டு. ஆனால் அவற்றிலிருந்தெல்லாம் எனக்கு பெரிய பார்வையாளர்கள் வருவதாகத் இருப்பதாகத் தெரியவில்லை. தட்ஸ் தமிழ் புக்மார்க்ஸ் கொஞ்சம் பயனளிக்கிறது. நம்முடையது டாப்பிகல் சப்ஜெக்ட் என்பதால் அதன் மீது நாட்டம் கொண்டவர்கள் வருவார்கள் அவ்வளவே! இருப்பினும் சுமார் ஒன்றேமுக்கால் வருடத்தில் 101780 பகுத்தறிவாளர்களின் வருகையும் சுமார் 262604 பக்கப்பார்வைகளும் கிடைத்துள்ளது. அதுவே பெரிய விஷயம் என நினைக்கிறேன். பெரியவர்களால் எனக்கு அளிக்கப்பட்ட பொக்கிஷங்களை என்னால் முடிந்த மட்டும் பிறருக்கு விட்டுச் செல்லும் பணியை என்னாலானமட்டும் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவே! தங்கள் ஆதரவிற்கு நன்றி!

tamilan said...

CLICK AND READ

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39)

** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?

** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல் இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்..

இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

remigious @ Ilamaran said...

dont comment non sense ideas. ok. whole shitt idiots

hayyram said...

வருகைக்கு நன்றி இளமாறன், உங்கள் நண்பன் அமுதன் நலமா? (அமுதன் + இளமாறன் )

kashtro Rajkumar said...

அனைவருக்கும் பயன் பட வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் Right click a disable mode la வச்சுருகீங்க....eduthu vitta innnum pala website ku ungal katturai pogumae!!!!

Karthikeyan Rajendran said...

ஜீ. உங்கள் ஃபேஸ்புக் லிங்க் தாங்க

hayyram said...

@கார்த்திகேயன்,

எனது முகநூல் லிங்க்:
https://www.facebook.com/hayyram

Unknown said...

நல்ல கருத்தை அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக நகைச்சுவை கலந்து தந்திருக்கின்றீர்கள்..................நன்றி........ஆலயம்.எஸ்.ராஜா

Unknown said...

நல்ல கருத்தை அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக நகைச்சுவை கலந்து தந்திருக்கின்றீர்கள்..................நன்றி........ஆலயம்.எஸ்.ராஜா

Unknown said...

Good article and useful blog. Please spread this widely.