Sunday, November 7, 2010

பெண்ணாதிக்கமும் ஆணடிமைத்தனமும்!


சில நாட்களுக்கு முன் ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. அநேகமாக ஜெயா டிவி என்று நினைக்கிறேன். நிகழ்சியின் பெயர் தெரியவில்லை. நான்கு ஜோடிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஒரு ஜோடி பேசிக்கொண்டிருந்தது. பெண் ஆணிடம் சில கேள்விகளைக் கேட்க அதற்கு அவன் அளிக்கும் பதிலைக் கொண்டு அவர்களது காதல் எத்தகையது என்று தீர்மானிப்பார்களோ என்னவோ?

சரி அங்கே அந்த ஜோடிக்குள் நடந்த உரையாடலைக் கொஞ்சம் பார்ப்போம்...

பெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் சம்பளப்பணம் முழுவதையும் உங்ககிட்டேயே குடுக்கனும்னு எதிர்பாப்பீங்களா?

ஆண்: இல்லை, நான் அப்படி கேக்க மாட்டேன். இன்னும் சொல்லப்போனா நான் மணி மேனேஜ்மென்ட்ல கொஞ்சம் வீக்கு. அதனாலே என்னோட சம்பளத்தை கூட உங்க கிட்டேயே கொடுத்திடறேன். நீங்க பாத்து எனக்கு ஏதாவது குடுத்தா போதும். அப்போதான் நான் கன்ட்ரோலா இருப்பேன்.

பெண்: கல்யானத்துக்கு அப்பறம் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறதையோ வெளியே போறதையோ அலோவ் பண்ணுவீங்களா? இல்லை யாரையும் பாக்ககூடாதுன்னு தடை பண்ணுவீங்களா?

ஆண்: இல்ல உங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ் இருப்பாங்கல்ல. நான் வந்து அதை மதிக்கிறேன். உங்க ஃப்ரண்ட்ஸ் உங்க தனிப்பட்ட விஷயம். நான் அதுல தலையிட மாட்டேன்.

பெண்: கல்யானத்துக்கு அப்பறம் என்னோட பர்சனல் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா?

ஆண்: சே சே! அப்படியெல்லாம் நான் எதிர்பார்க்கவே மாட்டேன். உங்க பர்சனல் விஷயங்கள்ல நான் தலையிட மாட்டேன்.

பெண்: நான் நிறைய படிச்சிருக்கேன். எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைச்சிதுன்னா என்னை போக விடுவீங்களா? ஏன்னா அது என்னோட ஃப்ரொபஷன். இல்லை, குடும்பத்தை காரணம் காட்டி அங்கெல்லாம் போககூடாதுன்னு தடை பன்னுவீங்களா?

ஆண்: இல்ல, உங்க திறமை காரணமா உங்களுக்கு வேலை கிடைச்சிருக்கு. அதுக்கு நான் ஃபுல் சப்போர்ட் பன்ணுவேன். நம்ம குடும்பத்துக்கு தானே நல்லது. முடிஞ்சா உங்க கூட நானும் வந்து உங்களுக்கு உதவ முடியுமான்னு பாப்பேன்.

பெண்: எனக்கு சுத்தமா சமைக்கத் தெரியாது. வெந்நீர் நல்லா வெப்பேன். நான் உங்களுக்கு சமைச்சுப் போடனும்னு எல்லாம் நீங்க எதிர் பாப்பீங்களா?

ஆண்: இல்ல, எனக்குநல்லா சமைகக்த் தெரியும். நானே என் கையால உங்களுக்கு சமைச்சு போடறேனே. நீங்க தான் சமைக்கனும்னு நான் சொல்ல மாட்டேன்.

இப்படி கேள்வி பதில் இருந்தது. அந்தப் பெண் கேள்வி கேட்டதையும் அதற்கு ஆண் கூறிய பதிலையும் கேட்ட போது உண்மையில் மிகவும்கேவலமாகத் தோன்றியது. பெண்கள் தங்கள் சுயம் பற்றி வாய்கிழியப் பேசி பென்ணியம் பெண் சுதந்திரம் என்று கூச்சலிட்டு கொண்டிருக்கையில் ஒரு ஆண் தன் சுயத்தை இழந்து பெண்ணின் கால்களை கழுவுவதே ஒரு நவநாகரீகமான ஆண்மகன் என எண்ணி பேசியதாக தோன்றியது. அல்லது அந்த நிகழ்ச்சியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்றென்னி இப்படி பேசிக்கொண்டார்களா தெரியாது. ஆனால் பார்க்கும் போது எரிச்சலைக் கொடுத்தது.

பெண் சொல்வதற்கெல்லாம் அப்படியே தலையாட்டுவதே பெண்களை மதிக்கும் குணம் என்றாகிவிட்டது. பொதுவாக இந்தியாவில் நடத்தப்படும் பெண்ணுரிமையின் அதிகப்பிரசங்கித்தனமெல்லாம் ஆண்களையே பெண்களாக்கும் நோக்கிலேயே நகர்ந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் மீசை மட்டும் தானே வித்தியாசம். மற்றபடி நீயும் பெண் தான்
என்று கூறும் அளவு கேவலமான பெண்ணியப் பேச்சுக்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

இந்த மாதிரியான அசிங்கமான பிரசாரங்களைப் பார்த்து பயந்து போன பல ஆண்கள் பெண்களுக்கு அப்படியே ஜால்ராதட்டுவதே பெண்களை மதிக்கும் குணம் என்று எண்ணி விட்டார்கள். இத்தகைய ஐயோ பாவம் கேஸ் தான் மேற்சொன்ன ஆண்மகன் என்று கூட எண்ணத் தோன்றுகிறது. 'சரி உன்கிட்ட இப்டி ஒரு கேள்விய ஒரு பொன்னு கேட்டா நீ என்ன சொல்லுவ?' என்றான் என் நண்பன்.

பெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் சம்பளப்பணம் முழுவதையும் உங்ககிட்டேயே குடுக்கனும்னு எதிர்பாப்பீங்களா?

நான்: இல்ல, பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட குடுத்திடு. நான் அவன்கிட்ட கேட்டு வாங்கிக்கறேன்.

பெண்: கல்யானத்துக்கப்பறம் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசறதையோ வெளியே போறதையோ அலோவ் பண்ணுவீங்களா? இல்லை யாரையும் பாக்ககூடாதுன்னு தடை பண்ணுவீங்களா?

நான்: நம்ம உறவையோ குடும்பத்தையோ பாதிக்கும்னா கண்டிப்பா அலவ் பண்ண மாட்டேன்!

பெண்: கல்யானத்துக்கு அப்பறம் என்னோட பர்சனல் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா?

நான்: புருஷனுக்குத் தெரியாம பெண்டாட்டிக்கு பர்சனல் இருந்தா அதுக்கு பேரு ரகசியம். புருஷன் கிட்டயே ரகசியம் காக்கறவ நம்பிக்கையான பொண்டாட்டியா இருக்கமுடியாது. அதனால ரெண்டுபேருக்குள்ளேயும் ரகசியம் இருகக்கூடாதுன்னு நினைப்பேன்!

பெண்: நான் நிறைய படிச்சிருக்கேன். எனக்கு வெளி நாட்டில் வேலை கிடைச்சிதுன்னா என்னை போக விடுவீங்களா? ஏன்னா அது என்னோட ஃப்ரொபஷன். இல்லை குடும்பத்தை காரணம் காட்டி அங்கெல்லாம் போககூடாதுன்னு தடை பன்னுவீங்களா?

நான்: சூழ்நிலையை பொறுத்து தான் முடிவு செய்யனும். என்னோட படிப்பையும் சம்பளத்தையும் ஆதாரமா வெச்சி தான் நீ என்னைய கட்டிக்கிட முடிவு செஞ்ச. நான் வேலையில்லாம இருக்கும் போது உன் சம்பளத்தை நம்பி என்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா உன் கூடவே வந்திருப்பேன்.

பெண்: எனக்கு சுத்தமா சமைகத் தெரியாது. வெந்நீர் நல்லா வெப்பேன். நான் உங்களுக்கு சமைச்சுப் போடனும்னு நீங்க எதிர் பாப்பீங்களா?

நான்: ரொம்ப ஓவரா பேசாதடீ, எனக்கும் வெந்நீர் தான் வெக்கத் தெரியும். ரெண்டு பேரும் எத்தனன நாள் முடியுமோ அத்தனை நாள் வெந்நீர் குடிச்சே உயிர் வாழலாம்.

இப்படி சொல்லியிருப்பேன்னு நினைக்கறேன். சரி, நீங்க அந்த ஆண்மகனா இருந்தா இதே கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லியிருப்பீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்...



ஆண்களே! ரொம்ப குனிஞ்சீங்க அப்பறம் இந்த கதிதான்!



.

1 comment:

premprakash said...

neenga romba thairiya saalithan. you can tell in which family wife is dominated by seeing few things:

1) girl child wearing sexy clothes
2) husband comming to party when wife is out of station
3)husband going to home straightly after the office hours with out spending time with friends
4) wife's parents, spouses staying month long tent in their house

you believe me or not, 80% of todays husbands whose age are less than 35 were all dominated and cheaply treated by their wives. they don't reveal this.