Monday, November 15, 2010

சாதனையாளர் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி!


நரேந்திர மோதி

அமைச்சர் ஆ.ராசாவை துறத்தாத குறையாக ஒரு வழியாக வெளியேற்றி விட்டார்கள். ஊழல்களால் உண்டான அவப்பெயரை மறைக்க தி மு க சப்பைக்கட்டு பேச்சுக்களை பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் சரியாக அவர்களின் முகத்தில் அறைந்தார் போல சென்னையில் நேர்மையாகவும் மக்கள் வளர்ச்சிக்காகவும் ஒரு அரசு எப்படி இயங்க வேண்டும் என்று பேட்டி அளித்திருக்கிறார் திரு நரேந்திர மோடி அவர்கள்! தமிழகம் மட்டுமல்ல பல கேடு கெட்ட ஊழல் அரசியல் வாதிகள் இவரைப் பார்த்தாவது பாடம் கற்க வேண்டும்! நரேந்திர மோடியை என்ன தான் மத வாதி என்று ஒட்டு மொத்த ஊடகங்களின் துணையைக் கொண்டு காங்கிரஸ் அரசு பிரசாரம் செய்யப்பார்த்தாலும் உண்மை என்னவோ வேறாகத் தான் இருக்கிறது என்பது மோடிக்கு ஓட்டு போடும் முஸ்லீம்களின் எண்ணிக்கையே காட்டிவிடுகிறது!

இவரை மரணத்தின் வியாபாரி என்று தூற்றிப்பார்த்தும் இத்தாலி சோனியாவால் குஜராத்தில் தனது இத்தாலி ராஜ்ஜியத்தை நிறுவ முடியவில்லை. தமிழகத்தைப் போலவே குஜராத் சட்டசபைத் தேர்தலின் போதும் பல இலவச திட்டங்களை அறிவித்துப் பார்த்தது இத்தாலி காங்கிரஸ். ஆனால் இலவசங்களைப் புறக்கனித்த குஜராத்தியர்கள் காங்கிரஸையும் புறக்கனித்தனர்.

நரேந்திர மோடியிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் பார்வையில் செக்யூலரிஸம் என்றால் என்ன?" அதற்கு மோடியோ, "முழுமையான வளர்ச்சி, எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் நாட்டை முழுமையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே உண்மையான செக்யூலரிசம்" என்றார்.

காந்தி உருவாக்கிய சுதேசி காங்கிரஸ் தற்போது இத்தாலி காங்கிரஸாகத்தான் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சோனியாவின் தலையசைப்பை கண்டே பணி செய்கின்றனர். ஆக காங்கிரஸின் முழு நடவடிக்கைகளுக்கும் சோனியாவே மூலக்காரணி என்கிற முறையில் மத்திய அரசின் குறைகளை குறிப்பிட நேரடியாக சோனியாவைச் சுட்டியே கேள்வி எழுப்பும் ஒரே இந்திய அரசியல் தலைவர் திரு.நரேந்திர மோடி மட்டுமே! அதனால் தான் அவர் மீது தீராத வண்மத்துடன் சோனியா தொடர்ந்து தாக்குவதும், ஊடங்கள் இத்தாலி காங்கிரஸிற்கு ஆதரவாக நரேந்திர மோடியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பலவீனப்படுத்த முயற்சிப்பதையும் பார்க்க முடிகிறது.


ஆனால் இன்று வரை இவர்களது பருப்பு வேகவில்லை என்பது அவரது நிர்வாக செயல்பாடும் அதன் மூலமாக அவருக்குக் கிடைக்கும் வெற்றிகளையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம்!

இதோ மரணத்தின் வியாபாரி பற்றி திரு.சோ இவ்வாறு கூறி அழைக்கிறார்!

மோடியை ஆதரிக்கும் முஸ்லீம் வாக்காளரின் பேட்டி!


இந்த வக்காளர் கூறுவதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் "காங்கிரஸ் எங்களை ஓட்டு வங்கியாகவே உபயோகிக்கிறது. மோதி ஜி யின் வளர்ச்சிப்பணிகளைப் பார்த்தே நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்"
இதோ தினமலரில் இன்று வெளியான செய்தியைப்! பார்ப்போம்!

**** தொழிலதிபர்கள் மத்தியில் அவர் பேசியதில் இருந்து சில:இன்று, வர்த்தக முறை முற்றிலும் மாறிவிட்டது. எதையும், சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே உங்கள் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். அதற்கு குஜராத், தன்னை முழு அளவில் தயார்படுத்திக் கொண்டுள்ளது.முதல் காரியமாக, அரசு நிர்வாகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்தோம். இழுத்தடிப்பு, பொறுப்பற்றத்தன்மை, சோம்பல், லஞ்சம் என, அரசு நிர்வாகத்தின் அவலட்சணமாக அறியப்பட்ட அனைத்தையும் தகர்த்தோம்.இன்று, ஆசியாவிலேயே, 24 மணி நேரமும் தடையற்ற, தரமான மின்சாரம் வழங்கும் ஒரே மாநிலம் குஜராத் தான்.


மாநிலம் முழுவதும், 2,200 கிலோ மீட்டருக்கு எரிவாயுக் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.ஒவ்வொரு குக்கிராமத்திலும், "பிராட் பேண்ட்' இணைப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி, மாநிலத்தில் உள்ள, 1.5 கோடி மாணவர்களுடன், தலைநகரில் இருந்தபடியே உரையாடுகிறேன். முதல்வர் அலுவலகத்திலும் வீடியோ கான்பரன்சிங் வசதி உள்ளது.கடந்த ஏழு ஆண்டுகளாக, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி இரட்டை இலக்கத்திலேயே உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து 9.5 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளோம். இது, தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகம். வைர வர்த்தகத்தில் குஜராத் தான் முதலிடம்.எங்கள் மாநிலத்தில் தொழில் தகராறுகள் இல்லை; தொழிலாளர்கள் பிரச்னை இல்லை; இதனால், 10 ஆண்டுகளாக தொழில் துறை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதோடு ஓய்வதில்லை; இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும் என்பது தான் எங்கள் தீர்மானம்.முதலீடுகளை முன்னிறுத்தியே, "சிறப்பு முதலீட்டு மண்டலங்கள்' (எஸ்.ஐ.ஆர்.,) 30 அமைக்க உள்ளோம். சர்வதேச பொருளாதார நகரம் (கிப்ட்) அமைக்க உள்ளோம். மாநிலத்தின் மொத்த வருவாயில், 30 சதவீதம் தொழிற்சாலைகள், 30 சதவீதம் விவசாயம், 30 சதவீதம் சேவைத் துறைகள் என்பது தான் எங்கள் சமன்பாடு. அப்போது தான், வளர்ச்சிப் பாதையில் இருந்து எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்கும்.நான் முதல் முறை முதல்வராக பொறுப்பேற்றபோது, குஜராத் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்ந்தது. மின்சார பற்றாக்குறை நிலவியது. நிதிப் பற்றாக்குறையும் இருந்தது.


இன்று தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோம். மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வினியோகிக்கிறோம். நிதி நிலைமையில் உபரி மாநிலமாக உயர்ந்துள்ளோம்.குஜராத் அரசு இதுவரை ஏகப்பட்ட விருதுகளைப் பெற்று இருக்கிறது. விருது பெறுவது என்பது, ஏதோ வாராந்திர நிகழ்ச்சி மாதிரி ஆகிவிட்டது. 200க்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்திருப்பதால், எது, எதற்கானது என்பது கூட நினைவில் இருப்பதில்லை.சமீபத்தில் வாங்கிய ஒரு விருதை மட்டும் சொல்கிறேன். குஜராத் முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.நா.,வின் சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது (கைதட்டல்). இதுவல்ல விஷயம். எதற்காக இருந்த விருது வழங்கப்பட்டது என்பது தான் விஷயம்.முதல்வர் அலுவலகத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, அணுகுமுறைக்காக இந்த விருது கிடைத்துள்ளது (பலத்த கைதட்டல்).


முதல்வர் அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டதை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் பெற்றிருக்கிறோம்.உங்கள் கனவுகளை நனவாக்க, உங்களோடு நான் இருக்கிறேன். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள் என்று மட்டும் தான் சொல்லுவேன்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


தொடர்ந்து, தொழிலதிபர்களுடன் கேள்வி - பதில் நிகழ்ச்சி நடந்தது. 70க்கும் மேற்பட்ட கேள்விகள் குவிந்தன. 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தவர், மற்றவற்றுக்கு இ-மெயில் மூலம் பதில் அனுப்புவதாக உறுதியளித்தார்.


குறுந்தொழில்களில் கவனம் : வந்திருந்த தொழிலதிபர்களில் ஒருவர், சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு (எஸ்.எம்.இ.,) வழங்கப்படும் வசதி வாய்ப்புகள் பற்றி மோடியைக் கேட்டார். அவர் அளித்த பதில்:எப்போதுமே எங்கள் முதல் முன்னுரிமை, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்குத் தான். வங்கிக் கடனில் இருந்து, அனைத்து வகையான அனுமதிகள் வரை எதுவாக இருந்தாலும், எஸ்.எம்.இ.,க்கு தான் முன்னுரிமை. இவற்றின் மூலம் தான் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. குஜராத் மாநிலத்தின், 70 சதவீத தொழில் வெற்றி எஸ்.எம்.இ.,க்கள் மூலம் தான் கிடைத்துள்ளது.இந்தியாவில் அதிகம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் குஜராத் மாநில அரசின் பங்கு, 78 சதவீதம். மொத்த இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் சேர்ந்து, 22 சதவீதம் தான். இதற்கு முக்கிய காரணம், சிறு மற்றும் குறுந்தொழில்களில் நாங்கள் கவனம் செலுத்துவது தான்.


நெருக்கடியிலும் நெத்தியடி : குஜராத் மாநில தொழில்துறைச் செயலர் சாகு பேசியதாவது:கடந்த 2009ல், உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலவிய நேரத்தில், "துடிப்பான குஜராத்' மாநாட்டை நடத்த வேண்டுமா என, அனைத்து தரப்பில் இருந்தும் கேள்வி எழுந்தது. தொழிலதிபர்களும், அடுத்த ஆண்டு வைத்துக்கொள்ளலாமே என அறிவுரை வழங்கினர்.இது தொடர்பாக முதல்வரிடம் கருத்து கேட்டோம். அவர் சொன்னார்: நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள இது தான் சரியான நேரம். நிச்சயம், 2009ல், மாநாடு நடக்கும் என்றார். சொன்னபடியே நடந்தது. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாக்குறுதிகளைக் கவர்ந்தது; 8,663 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.இவ்வாறு சாகு பேசினார்.


ஒபாமா மீது மறைமுக தாக்கு : "குஜராத்தில் தொழில் துவங்க விரும்புகிறேன். உங்களால் எந்த விதத்தில் உதவ முடியும்?' என, இன்னொருவர் கேட்டார். அதற்கு மோடி சொன்னது:தாராளமாய் வரவேற்கிறோம். நான் ஒன்றும், அமெரிக்க அதிபர் ஒபாமா மாதிரி இங்கு வரவில்லை. பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை எங்கள் அதிகாரிகள் அனைவரும் இங்கு தான் இருப்பர். அதற்குள், குஜராத்தில் என்னென்ன செய்யப்போகிறீர்கள்? என்னென்ன தேவை? என்பவை பற்றி முடிவெடுக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா? ஆமெனில், கையோடு அதற்கான உத்தரவைப் பெற்றுச் செல்லலாம்.மோடி இவ்வாறு பேசியதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. "அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா வந்தபோது வெறுங்கையோடு வந்தார். அமைச்சர்கள், அதிகாரிகளோடு வராமல், தொழிலதிபர்களோடு வந்து, இங்கு ஏராளமான ஆர்டர்களை வாங்கிச் சென்றுவிட்டார். அதனால் தான், இரு நாட்டு ஒப்பந்தம் போன்ற விஷயங்கள் கையெழுத்தாகவில்லை' என ஒரு பேச்சு உண்டு."அவ்வாறில்லாமல், "ஒட்டுமொத்தமாக அதிகாரிகள் குழுவோடு வந்திருக்கிறேன். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் இப்போதே போட்டுக்கொள்ளலாம்' என்பது தான் மோடியின் கருத்தாக இருந்தது ******

மோடியைப் போல ஒரு முதல்வர் தமிழகத்தில் சாத்தியமா?


ஆத்தீ...நினைச்சாலே தலை சுத்துதே!


.
ராசா, அடுத்து என்ன பண்ணலாம்னு 'உன்' ராணிக்கிட்ட கேட்டியா?


இந்த படத்தை சும்மா தான் போட்டேன்![DOT]

6 comments:

Kumaran said...

என்னதான் நல்லது செய்தாலும் அந்த குஜராத் மக்களையும், ப.ஜ.க. அரசாலும் மாநிலங்களையும் தவிர மோடியின் மீது இருக்கும் ஒரு மதவாதி என்கிற பெயரை மாற்ற முடியாது. அதுவும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி எல்லாம் வரும் என்று கனவிலும் நினைக்க முடியாது. ஏனென்றால் மதத்தை வைத்து வியாபாரம் செய்யும் போக்கு தமிழர்களின் மத்தியில் எடுபடாது.(தங்கள் கனவும் நிறைவேறாது ).

hayyram said...

கருனாநிதி செய்யாத மதவாதமா மற்றவர்கள் செய்கிறார்கள். இந்து கடவுளரை கேவலமாக பேசுவதும் முஸ்லீம் கிறிஸ்தவ மதகடவுளருக்கு மரியாதை செலுத்துவதும், ஜாதி பிரிவினையை தூண்டிவிட்டு ஜாதிச்சண்டைகளில் குளிர்காய்வதும் என்று எல்லா கேவலமான ஜாதி மத வாதங்களை தமிழக அரசியல் வாதிகள் தான் செய்கிறார்கள். அதை நம்பி ஏமாந்து ஓட்டு போடும் ஆட்டு மந்தைகளுக்கு நரேந்திர மோடி பற்றி மதவாதி என்று பேச என்ன தகுதி இருக்கிறது?

nerkuppai thumbi said...

நல்ல பதிவு.
ஆஹா, ஒரு முதல்வர் இப்படியெல்லாம் செயல்பட முடியுமா, இந்த முதல்வரோ, இனிமேல் நாம் தெரிந்தெடுக்கப் போகும் முதல்வரோ இவ்வாறு செய்ய வேண்டும் என கேட்கலாமா என்று கூட நினைக்கலாமே. தமிழ்நாட்டில் பா ஜ க ஆட்சி வராது; மோடிக்கு மதவாதி என்ற அவப்பெயர் நீங்காதது என்று குமரன் சொல்வது வருத்தமாக உள்ளது. பதிவில் பொருளாதார முன்னேற்றம் பற்றியே உள்ளது; நாம் அதைக் காண என் மறுக்கிறோம்?

hayyram said...

//தமிழ்நாட்டில் பா ஜ க ஆட்சி வராது// அதற்கான முயற்சிகள் கூட எடுக்கிறார்களா என்று தெரியவில்லை! மோடியை மதவாதி என்று சாடுவதைத்தவிற இவர்களால் ஒரு முடியைக் கூட கிள்ளிப் போட முடியவில்லை என்பதே நாம் காணமுடிகிற ஆச்சரியம்!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி nerkuppai thumbi

Itsdifferent said...

Only When tamil nadu comes out of its cinema sickness, we can see some progress.
Most of the hindus themselves do not believe in BJP, and BJP is not acting to gain that confidence also. Why are they not creating a grass roots movement, to contest panchayat level elections, and start gaining confidence from there.
We need a leader like Modi.

saravana bhavan said...

குஜராத் முதலமைச்சர் மோடி அவர்களின் ஆட்சி திறமை மற்ற எந்த முதலமைச்சருக்கும் கிடையாது. அரசியலில் பழம்பெரும் தலைவர் என போற்றப்படும் கலைஞர் தனது ஆட்சி காலத்தில் ஒரு
முறை கூட மோடி சாடிதடில் ஒரு பங்கு கூட சாதிக்கவில்லை. நாத்திகம் பேசி திரியும் இவர்கள் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி கவலைப்பட்டார்களா? இன்று ஒரு பன்னாட்டு
நிறுவனம் ஒரு தொழில் தொடங்க நினைத்தால் அவர்களுக்கு ஏறக்குறைய எல்லா ஆவணங்களும் தயார் செய்து தொடங்க குறைந்தபட்சம் ஒரு வருடம் பிடிக்கும். ஆனால் குஜராத்தில் ஒரு வாரத்தில் எல்லா வேலைகளும் ஒரே கவுன்டரில் செய்துவிட முடியும். தமிழ்நாட்டில் எந்த குக்க்றாமத்தில் Broadband வசதி உள்ளது. குஜராத்தில் சின்ன கிராமத்தில் கூட broadband வசதி உள்ளது. மற்றவரின் குறையை மட்டும் பார்க்காமல் அவர் சாதித்ததை கண்டு அவருடன் போட்டி போட பழகிக்கொள்ளவேண்டும்.