Wednesday, January 19, 2011

சபரிமலை சோகம்!மனிதர்களை இழந்த உறவுகளின் அழுகுரல் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன புல்மேட்டு விபத்து எனும் அதிர்ச்சியான சம்பவத்தினால்.

அந்த இடம் வனத்துறைக்கு கட்டுப்பட்டது அதனால் நாங்கள் பொறுப்பல்ல என மாநில அரசு நழுவுகிறது. வனத்துறையோ, வனத்தை பாதுகாப்பது வேறு அலைஅலையான மக்கள் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது வேறு. எனவே கோடிக்கணக்கில் கூட்டம் வரும் போது அவர்களை காப்பது அரசின் கடமை என்கிறது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்களை சரியாக வழிநடத்த காவல் துறையோ கண்காணிப்போ எதுவுமே இல்லாமல் தவித்தோம் என்கிறார்கள் பக்தர்கள். நடந்து முடிந்த மனித இழப்புகளுக்கு யார் மீது பழி போடலாம் என்று அலைகிறது கேரள அரசு.

நம்மூர்களில் தேர் திருவிழாக் கூட்டம் என்றாலே நூற்றுக்கணக்கில் காவலர்களை அரசாங்கம் குவிக்கிறது. சுற்றுலா பொருட்காட்சி நடத்தினாலே அவசர அழைப்பிற்கு தீயணைப்பு வண்டியை நிறுத்தி வைப்பார்கள். சில லட்சம் மக்கள் கூடும் இடத்திற்கே அரசு முனைந்து இத்தனை பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது என்றால் கோடிக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது அந்த மக்கள் வந்து செல்லும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால் கேரள அரசோ தனது பொறுப்பை வெட்கமில்லாமல் தட்டிக்கழிக்க பார்க்கிறது.

இந்நிலையில் இறப்பு பற்றிய முழுமையான் எண்ணிக்கை வெளிவரவில்லை என்றும் பள்ளத்தில் விழுந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அங்கே சென்று வந்த பக்தர்களுக்குள் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. சபரிமலை சென்று காணாமல் போனவர்கள் பற்றிய சரியான புள்ளி விபரங்களை சேகரித்தால் எதிர்வரும் நாட்களில் ஏதேனும் தகவல் வரலாம் என்ற அச்சத்தை தெரிவிக்கின்றனர் சிலர். அப்படி எதுவும் வராமல் இருந்தால் நல்லது.

பக்தர்களிடம் வியாபாரம் செய்து காசு சம்பாதிக்க கடை நடத்திய மலையாள சேட்டன்கள் கூட்ட நெரிசலால் கடைக்குள் ஒதுங்கிய பக்தர்களை கட்டையால் அடித்து விரட்டிய கொடுமையும் நடந்திருக்கிறது என்று செய்திகளில் வாசிக்கிறார்கள்.சாமிக்கும் பயமில்லை மனிதர்கள் மீது கருணையும் இல்லை. தத்துவம் சாராத பக்தியால் ஆகப்போவது என்ன? சாமியைக் கண்டால் மோட்சம் கிட்டும் என்ற கோஷத்துடன் சென்றவர்கள் ஜோதியைக் கண்டவுடன் மோட்ஷத்திற்கு போனார்களே! இது இறைவனின் கொடையா கொடுமையா? மோட்ஷத்திற்கு போனார்களா அல்லது மோசம் போனார்களா?

பக்தி பணமாகிக்கொண்டிருப்பதன் விளைவுகளில் இதுவும் ஒன்றா? ஐயப்பா சரணம் என்று வருபவர்களிடம் அள்ளி விடலாம் பணத்தை என்ற பேராசையால் ஓட்டை வண்டியை எடுத்து ஓட்டி சம்பாதிக்க நினைத்தவன் ஒட்டு மொத்த கூட்டத்தையும் கொன்று குவித்தானே என்ன கொடுமை?

வனத்தில் வண்டி போகக்கூடாது என்று சேட்டன் மார்கள் சட்டமியற்றி விட்டு
சாமிமார்களிடம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக சட்டையை கழற்றி எரிவது போல சட்டத்தை தூக்கி எறிந்தானே! சத்தமே இல்லாமல் பல உயிர்கள் சமாதியாவதற்காகவா?

தமிழனென்றாலே பாண்டிக்கூட்டமென்று முகம் சுழித்துப் பேசும் பட்டிக்கூட்டம்
தனது ஒட்டு மொத்த அலட்சியத்தால் இன்று உயிர்க்காவு வாங்கியிருக்கிறது.
சபரி மலைக்கு தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்கு ரயில் பெட்டியிலேயே தொல்லைகள் தாளாது. மூன்று மாதம் முன்பாகவே அடித்துப் பிடித்து பயணச்சீட்டு எடுத்து ரயில் வந்த உடன் இடம் தேடி அமரப்போனால் இரவு எட்டு மணிவரை ரிஷர்வேஷன் என்பது கிடையாது. எட்டு மணிக்குப் பின் தான் நீங்கள் சீட்டு கேட்க வேண்டும் என்று சண்டைபிடிப்பார்கள் மலையாளிகள். எட்டு மணிவரை நீ முன்பதிவுப் பெட்டியில் பிரயானிக்கலாம் ஆனால் எனது ரிஷர்வேஷன் சீட்டில் உட்கார சட்டப்படி உனக்கு உரிமை இல்லை என்று வக்கீல் போல வாதாடித்தான் சாமிமார்கள் கேரள ரயில்களில் தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டுகளிலேயே உட்கார முடியும்.

சபரிமலைக்கு ஏறி விட்டால் அங்கே மக்கள் படும் அவஸ்தை வேறுமாதிரி.
சாமிமார்கள் சுத்தமாக ஆட்டு மந்தைகளாகவே நடத்தப்படுவார்கள். அவர்கள் தங்கும் அரைக்கு காசு வாங்குவார்கள். ஆனால் அரைகள் எதுவுமே சுத்தமாக இருக்காது. ஜன்னல் கண்ணாடி உடைந்து அரைக்குள் சிதறிக்கிடக்கும். மாட்டு சாணம் கூட காய்ந்திருக்கும். காகிதக்குப்பைகள், மழையால் பாசிபிடித்த ஈரமான தரைகள் என்று மோசமாக இருக்கும். இவை எதையுமே சுத்தம் செய்து தராத சேட்டன்கள் அந்த அரைக்கு நூறு முதல் ஐநூறு வரை கூட்டத்தை பொறுத்து காசுபார்ப்பார்கள். சாமி மார்கள் அவர்களே ஒரு துடைப்பத்தை வாங்கி பெருக்கி சுத்தம் செய்து பின்னர் உணவருந்தவோ உறங்கவோ செய்வார்கள்.

மலை மேலே இருக்கும் ஹோட்டல்கள் என்ற பெயரில் நடக்கும் மனிதாபிமானமற்ற கொள்ளை இன்னொரு புறம். வரண்ட தோசை, வேகாத இட்லி, மொட்டை தண்ணீர் காபி, டீ, சுகாதாரமே இல்லாத சுற்றுப்புறம், கழுவாத குடிநீர் டம்ப்ளர் என கொடுக்கும் காசிற்கு கொஞ்சமும் பிரயோஜனம் இல்லாத உணவுகள் உயிரை வாங்கும். 30 ரூபாய்க்கு தயிர் சாதம் கொடுப்பார்கள். ரயில்வே கேண்டீனில் தரப்படும் பார்சல் போல இருக்கும். திறந்து பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கும். மொத்தமாக வாரி எடுத்தால் ஒரே ஒரு கவளம் தான் அதில் சோறு இருக்கும். இதை பற்றி கேட்கவும் முடியாது. கேட்டால் திரும்பி முகத்தை கூட பார்க்காமல் வேறுபக்கம் திரும்பி வேலையைப்பார்ப்பான் மலையாளச் சேட்டன். மலையேறிய களைப்பும், நெருக்கி வரும் தூக்கமும் சண்டை போட மனமில்லாமல் கொடுத்ததை முழுங்கிப் பின் படுத்துக்கொள்ள தூண்டும்.

நடக்கும் பாதைகள் குப்பை மேடுகளாகவும் வழுக்கும் பாசிகளாகவும், அரைகுரை சிமெண்ட் தரைகளாகவும் இருக்கும். கால் வைத்து நடக்க முடியாமல் தவித்து எப்போதடா படுத்து உறங்குவோம் என்றாகிவிடும் பக்தர்களுக்கு. அரைகுரை சாப்போடோடு தூங்கி விழித்து பிரசாதங்களை பிரித்துக்கொடுத்து தேங்காய் உடைத்து கையைத் தூக்கி கடைசியாக ஒரு கும்பிடு போட்டு ஐயப்பா இனி அடுத்த வர்ஷம் பாக்கலாம்ப்பா என்று சொல்லி கீழே இறங்கும் போது அப்பாடா என்றாகிவிடும்.

இதில் எந்த இடத்திலும் கேரள அரசாங்கம் பக்தர்களுக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் நுகர்வு உரிமைக்காக என்று எந்த நடவடிக்கைகளையும் இது நாள் வரை எடுத்ததில்லை. ஹோட்டல்களில் சரியான அளவுடன் தரமான உணவு கொடுக்கப்படுகிறதா என்று கண்காணிப்பதில் கேரள அரசுக்கு எந்த அக்கரையும் இல்லை. கூட்டம் கூட்டமாக மலைமேல் தங்கும் பக்தர்கள் சிறு நீர்கழிக்கக்கூட பொதுக் கழிப்பறைகள் தென்படுவதில்லை. கோவிலின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க எந்த முனைப்பும் எடுப்பதில்லை.

ரூம் புக்கிங், ரெஸ்ட் ஹால் போன்றவற்றிற்கு சேட்டன்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இப்படி எண்ணற்ற அலட்சியத்தில் லட்சக்கணக்கான மக்களை ஆட்டு மந்தைக் கூட்டங்களைப் போல நடத்துவதை பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு மந்தை மந்தையான இந்த மரணங்கள். முழுமையான அலட்சியம்.

கேரள அரசு திருவாங்கூர் தேவஸ்வம் போர்டை குறை கூறுவதைப் பார்த்தால் ஏதோ உள்விவகாரம் இருக்கலாம் எனவும் ஐயம் உண்டாகிறது. காரணம் சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் பத்மநாதர் சுவாமி கோவிலை கையகப்படுத்த முனைந்தது கேரள அரசு. ஆனால் தேவசம் போர்டு மற்றும் பல இந்து அமைப்புகள் அதனை கடுமையாக எதிர்த்ததை அடுத்து அந்த முயற்சியை கைவிட்டது. அதனால் தேவசம் போர்டுக்கான பாதுகாப்பை
நாம் ஏன் செய்ய வேண்டும் என கேரள அரசு வேண்டுமென்றே அலட்சியப்படுத்தி இருக்கலாமோ என்கிற ஐயப்பாடும் உண்டாகிறது.

இப்படி பலவித அலட்சியங்கள் ஐயப்ப பக்தர்கள் மீது கேரள அரசாலும் திருவாங்கூர் தேவசம் போர்டாலும் நடத்தப்படுவது மிகவும் வெறுக்கத்தக்கது. இறைவன் மீது கொண்ட பக்தியாலும், மாலை போட்டிருக்கிறோம் என்கிற காரணத்தாலும் சண்டை போடக்கூடாது என்கிற மனோபாவமும் மட்டும் இல்லையெனில் எந்த மலையாளியும் இத்தனை அலட்சியத்தை தமிழர்கள் மீது காட்டிவிட்டு சபரிமலையில் தப்பி விட முடியாது. அது மட்டும் பக்தித்தளமாக இல்லாமல் இருந்திருந்தால் சேட்டன்களை தமிழர்களும் தெலுங்கர்களும் சாயா பிழிந்து குடித்திருப்பார்கள்! அத்தனை அலட்சியங்களும், அவமதிப்புக்களும், மோசமான சூழ்நிலைகளும் கோடிக்கணக்கான மக்களால் தாங்கிக்கொள்ளப் பட்டிருக்கின்றது என்றால் அது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான் என்பதை மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட அமைதியான கூட்டத்தின் உயிர்களை மயிறுக்குக்கூட மதிக்காமல் சாகடித்த கேரள அரசும் தேவசம் போர்டும் என்ன பதில் கூறப்போகின்றன? உயிருக்கு ஒரு விலை கொடுத்து விட்டு மீண்டும் தங்கள் தொழிலை பார்க்கப் போவார்களோ? தமிழக ஆந்திர அரசாங்கங்கள் தம் மக்கள் அண்டை மாநிலத்தில் படும் அவதியைத் தீர்க்க கேரள அரசோடு கைகோர்த்து ஏதேனும் செய்வார்களா?

மாயையில் சிக்கி வாழ்வது மனிதர்களின் இயற்கை. ஏதாவது ஒரு உணர்வில் மயங்கி வாழ்வது மனிதனுக்கு தேவைப்படுகிறது. பக்தியுணர்வும் ஒரு வித மயக்கமே. மற்ற மயக்கத்தை விட பக்தியென்ற மயக்கம் மயங்கியவனுக்கும் அவனைச் சார்ந்த மற்றவர்களுக்கும் நன்மையே செய்கிறது என்பதாலேயே அது சமூகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அத்தகைய மயக்கம் மரணத்தை கொடுக்கும் ஆபத்தாகுமெனில் மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்வது மக்களின் கடமை.

ஆறாத காயத்திற்கு காலம் தான் கஷாயம்.

1942 - ல் சபரிமலை.

13 comments:

KrishnaDeverayar said...

Just like any other government in India Kerala is an anti Hindu government. The painful thing Christians and muslims taking this opportunity to mock at Iyyapan and his followers with all kinds of things, especially at
thatstamil.com

Its very hurting....

hayyram said...

KrishnaDeverayar , தட்ஸ்தமிழ் ஆரம்பத்தில் என்னவோ இப்படி இல்லை. இப்பொழுது தான் ஏனோ இப்படி ஆரம்பித்து விட்டார்கள். முழுக்க முழுக்க இந்துக்களை அவமதிக்கும் விதமாக செய்திகள் வெளியிடுவதும், இந்துக்களை அவமதித்து வரும் பதிவுகளை புக்மார்க்ஸின் முதல் பக்கத்தில் எப்போதும் தெரியும் படி வைத்திருப்பதும், இந்துக்கள் ஆதரவான பதிவுகளை வேண்டுமென்றே நீக்குவதும் திட்டமிட்டே செய்கிறார்கள். அது ஒரு முஸ்லீம் தளம் என்று எல்லோருக்கும் தெரியும். ஒரு முஸ்லீம் வெளிப்படையாகவே இந்து மதத்தை அவமதிக்கும் வேலையை செய்கிறான். ஆனால் நாம் மட்டும் இன்னமும் செக்யூலரிசம் பேசவேண்டுமாம். இல்லையெனில் நம்மை மதவாதி ஆக்கி விடுவார்கள். நீங்கள் கூறுவது போல ஏற்கனவே கேரளா முஸ்லீம் மற்றும் கிறீஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இந்துக்கள் அங்கே சிறுபான்மை தான். இருக்கும் இந்துக்களையும் அவர்கள் இந்தச் சம்பவத்தைக் கூறி மேலும் உள்வெட்கம் கொள்ளச் செய்வார்கள் என்பது நிச்சயம். கோழிக்கோடு பகுதிகளில் நிறைந்திருந்த முஸ்லீம்கள் இப்போது பாலக்காடு கிராமங்களை ஆக்கிரமிக்கத் துவங்கி விட்டார்கள். கேரளா அடுத்த இருபது வருடங்களுக்குள் பாகிஸ்தான் மற்றும் அரபு நாட்டு ஆதரவுடன் முஸ்லீம் நாடாக அறிவிக்கப்படாமல் இருந்தால் ஆச்சரியம் தான்.

KrishnaDeverayar said...

Thanks for your reply....
I would like to bring to your attention one of the bookmarks in thatstamil.com, எது இந்து மதம்? இந்து மதம் எங்கே...
http://thathachariyar.blogspot.com/2011/01/76-to-82-1.html

I seriously don't know whether this guy is a real vaishnava or pretending to be a vaishnava. He keep saying tiruppathi balaji is female deity kaali plus more of his articles are anything but encouraging for hindus.
If you have time please go through that site....

thiruchchikkaaran said...

ராம்,

எல்லோரும் ஒரே நாளில் அங்கு செல்வதால் கூட்டம் அதிகமாகி நெரிசல் வருகிறது என்பதும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

மலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும்விதமாக இந்த தேதியில் இவர் வர வேண்டும் என்று முன்பே புக்கிங் செய்த சீட்டு குடுத்தால் சரியாக இருக்குமா?

பதினெட்டு படி முடித்தவர்கள் ஒரு முறை மகரஜோதி அன்று வரலாம் என்று சொனால் கூட்டம் கட்டுக்கு வருமா?

உங்கள் கருத்து என்ன?

Arun Ambie said...

I'm now out of town and don't have access to Thamizh software. So, pardon my feedback in English. The Kerela Government has, right from the beginning, perpetrated lethargy for arrangements in Sabarimala and through the yathra route. The bus service was pathetic with the transport minister deliberately interfering to ensure extremely lower number of buses.

Haindava keralam website has a list of follies of the Government of Kerela. HC of Kerela has taken up the case now. Let us see what happens? Let us pray for the departed souls!!

Arun Ambie said...

இப்போது தான் Google transliterate கிடைத்தது. (Late pickupடா அருண் நீ!) இனி தமிழ் மணக்க மணக்க பின்னுட்டம் இடுவேன்!

hayyram said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு.திருச்சி, நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. //மலைக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும்விதமாக இந்த தேதியில் இவர் வர வேண்டும் என்று முன்பே புக்கிங் செய்த சீட்டு குடுத்தால் சரியாக இருக்குமா?// திருப்பதிக்கு செல்வோருக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு தரிசனம் என்று கையில் பட்டை ஒன்றை கட்டி விடுவார்கள். அது போல செய்யலாம் என்றால் பல்வேறு மாநிலங்களிலிருந்து வெவ்வேறு பாதை வழியாக வருபவர்களை எந்த இடத்தில் நிறுத்தி எப்படி ஒருங்கினைப்பது என்பது யோசனைக்குரியது.

ஒரு ஒப்பீடாகப் பார்த்தால் கூட மேல் திருப்பதியிலோ அல்லது கீழ் திருப்பதியிலோ தங்குவதற்கு சுகாதாரமான இடங்கள் தேவஸ்தானத்தாலோ அல்லது தனியார் மூலமாகவோ நடத்தப்படுகிறது. அதனால் வருபவர்கள் அந்த அரைகளில் தங்கிவிட்டு பின் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். ஆனால் கேரளத்தில் வந்து குவியும் லட்சக்கணக்கான மக்கள் தங்குவதற்கு ஒரு வசதியும் முறையானதாக இல்லை. மேலும் திருப்பதி நகரத்திற்குள் இருக்கிறது. சபரிமலையோ முழுமையாக வனத்திற்குள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திருப்பதிக்கு எப்போதும் சென்று தரிசனம் செய்யலாம். ஆனால் சபரிமலை பொறுத்தவரை குறிப்பிட்ட இந்த ஒன்றரை மாதம் தான் முழுமையாக திறக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் ஐந்து நாட்கள். தரிசனத்திற்கு குறிப்பிட்ட கால அளவுதான் என்ற விதி முறை இருப்பதால் மொத்த கூட்டமும் ஒரே நேரத்தில் முண்டியடிக்க வேண்டியதாக இருக்கிறது. கூட்டத்தின் அபரி மிதமான நெரிசலுக்கு அதுவே பெரிய காரணம். எல்லா காலமும் தரிசனம் செய்யும் படியாக மாற்றினால் உண்டாகும் சாதக பாதகங்களை பற்றி தேவஸ்தானத்தினர் ஆராய வேண்டும்.

//பதினெட்டு படி முடித்தவர்கள் ஒரு முறை மகரஜோதி அன்று வரலாம் என்று சொனால் கூட்டம் கட்டுக்கு வருமா?// அதைச் செய்ய முடியாது என நினைக்கிறேன். காரணம் வனத்தின் எந்தப் பகுதியிலும் நுழைவுக்கான கட்டுப்பாடு இல்லாததால் ஏற்கனவே வந்தவர்கள் யார், புதிதாக வந்தவர்கள் யார் என்று கண்காணிப்பது கடினம். மேலும் வெட்டவெளியில் தெரியும் ஒரு விஷயத்திற்கு இன்னார் பார்க்கலாம் இன்னார் பார்க்க அனுமதி இல்லை என்று கூறுவது கடினம் தானே! அரசாங்கத்தின் முறையான கண்காணிப்பும் வழிநடத்தலும் இருந்தாலே இந்த நெரிசல்களை தடுக்கலாம். இது முழுக்க முழுக்க கேரள அரசாங்கத்தின் அசாத்திய அலட்சியத்தின் விளைவே ஆகும். ஏதோ மாஸ்டர் பிளான் எல்லாம் வைத்திருக்கிறார்களாம். என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

hayyram said...

திரு க்ருஷ்ணதேவராயர், //I seriously don't know whether this guy is a real vaishnava or pretending to be a vaishnava. He keep saying tiruppathi balaji is female deity kaali plus more of his articles are anything but encouraging for hindus.
If you have time please go through that site...// தட்ஸ்தமிழை பொறுத்தவரை அவர்கள் இந்துக்களை அவமதிக்கும் பதிவுகளை முக்கியமாக முதல் பக்கத்தில் எப்போதும் வருவது போல் திட்டமிட்டே பார்த்துக் கொள்கிறார்கள். நீங்கள் குறிப்பிடும் தளத்தை பார்த்திருக்கிறேன். அந்த தத்தாச்சாரியார் என்பவரை பற்றி தெரியாது. நக்கீரன் போன்ற இந்து விரோத கருத்தும் பார்ப்பன விரோதக் கருத்தும் கொண்டவர்கள் எங்கிருந்தோ தேடிப்பிடுத்து ஒருவரை வைத்து எழுத வைத்திருக்கிறார்கள். அதைக்கொண்டு புத்தகமாகவும் வெளியிட்டு பரப்பி வருகிறார்கள். இந்துக்களுக்கெதிராக ஆயிரம் பேர், இவர் ஆயிரத்தி ஒன்று அவ்வளவு தான். மற்ற படி பாலாஜி சிலையே ஆண் சிலை தானே இருக்கிறது. அது பெண் என்று எந்த கதை வைத்து கூறுகிறார்களோ? இந்து மதத்தைப் பற்றி ஆயிரம் கதைகள். இது ஆயிரத்து ஒன்று. அவ்வளவு தான். இதையும் அப்படி விட்டு விடுங்கள். சாமி ஆணோ பெண்ணோ நாம் ஆண்மீகத்தை சரியான வழியில் புரிந்து கொள்வதே முக்கியம். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள். நிறைய விவாதிப்போம்.

hayyram said...

வருகைக்கு நன்றி அம்பி, //Haindava keralam website has a list of follies of the Government of Kerela.// அந்த தளத்தின் சுட்டியை தாருங்களேன். எமது தளத்தில் ஐஃப்ரேமில் காட்டலாம். //இப்போது தான் Google transliterate கிடைத்தது.// ekalappai.exe இன்ஸ்டால் பண்ணிக்கொள்ளலாமே. சுலபாக இருக்கும். நோட் பேடில் டைப் செய்து கூட காப்பி பேஸ்ட் செய்யலாம். முயற்சி செய்யுங்கள். மிக்க மகிழ்ச்சி அரூண் அம்பி. மீண்டும் வருக.

Arun Ambie said...

ஹே ராம்! நான் இராஜபாளையத்தில் cybercafeலிருந்து வலையளாவுகிறேன். செவ்வாயன்று சென்னை வந்தபின் என் கணினியில் சகல வசதிகளுடன் வழக்கம் போல வளைய வருவேன்.
http://ch-arunprabu.blogspot.com/க்கு வாருங்கள் பழகலாம்.

Arun Ambie said...

Here we go:
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12924&SKIN=K
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12804&SKIN=K
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12621&SKIN=K
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12583&SKIN=K
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=13112&SKIN=K
http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=13103&SKIN=K

hayyram said...

arun, so sad to read it.

premprakash said...

அடடா இவ்வளவு பேர் தமிழ் ட்ய்பிங் தெரிந்து வைதிருகிரர்களே என நினைத்தேன். இப்பதான் ரகசியம் தெரிந்தது. சொன்ன நண்பருக்கு நன்றி.