Tuesday, April 12, 2011

ஸ்ரீ சாய்பாபாவின் அமுத மொழிகள்!


உனது உலகக் கடமைகளை மகிழ்வுடன் செய்து கொண்டிரு. ஆனால் இறைவனை மறவாதே! இறைவனை எப்போதும் நினைவு படுத்திக்கொள்!

உணவு, விளையாட்டு, உடற்பயிற்சிகளை விட்டு, கடுந்துறவியாகி விட வேண்டாம். உணவு ஓய்வு முதலியவற்றை ஒழுங்கு படுத்திக் கொண்டால் போதுமானது. 

எந்தப் புத்தகத்தையும் படிக்கத்தேவையில்லை. இறைவனை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

எத்தனை பிறவிகளில் நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்! நாம் மீண்டும் மீண்டும் சந்திப்போம். என்னுடைய குழந்தைகளை நான் இரவும், பகலும் காப்பாற்றியாக வேண்டும். ஒவ்வொரு பைசாவுக்கும் நான் இறைவனிடம் கணக்குக் கொடுத்தாக வேண்டும்.

இவர் என்னுடைய எதிரி என்று யாரைப் பற்றியும் சொல்லாதீர்கள். யாருக்கு யார் பகைவர்? எவரிடத்தும் தீங்கான எண்ணம் கொள்ளாதீர்கள். அனைவரும் ஒன்றே!


இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. ஆனாலும் எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு உணருவதைத் தடுக்கும் இந்த மாயையின் சக்தி தான் எவ்வளவு வலிமைவாய்ந்தது? 


நீ, நான் மற்றும் இவ்வுலகனைத்தும் இறைவனின் அம்சங்களே! எனவே, எவரும் மற்ற எவரையும் வெறுத்தலாகாது. கடவுள் எல்லா இடங்களிலும் உள்ளார் என்பதை மறவாதே!


- ஸ்ரீ சாயிபாபா



.

2 comments:

Suresh said...

Hi Ram, Just thought of informing you about this link

http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_19.html?sms_ss=twitter&at_xt=449aeaf3b9d526f3,0

hayyram said...

hi suresh,

hope you would hv read the same here

http://hayyram.blogspot.com/2010/07/blog-post_24.html

in different way!