Tuesday, February 14, 2012

கோவையில் குண்டு வெடிப்பு!

போஸ்டருக்கு நன்றி : இந்து மக்கள் கட்சி!

இன்று காதலர் தினமாம், சிலர் வாழ்வுரிமை மாநாடு நடத்த திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்ததிந்த தினமாம்!

ஆனால் இதே பிப்ரவரி 14 ல் பயங்கரவாதம் என்றால் என்னவென்றும்,  தீவிரவாதம் என்றால் என்னவென்றும் தெரியாத அப்பாவித் தமிழர்கள் மதத்தின் பெயரால் வைக்கப்பட்ட குண்டுக்கு இறையானார்கள். அந்தக் கொடிய நாள் இன்று! 1998 ல் இதே பிப்ரவரி 14 ல் வீட்டில் அன்பு மனைவிக்கு டாட்டா காட்டி காலை அலுவலகம் சென்ற கணவன் மார்களும், செல்லக்குழந்தைகளை பாட்டியிடம் விளையாட விட்டுவிட்டு கடைத்தெருவிற்கு பொருள் வாங்க வந்த தாய்மார்களும், குடும்ப பாரத்தை இறக்க தெருவில் வந்து வேலை செய்தாக வேண்டுமென்ற கடமையின் காரணமாக தெருவெங்கும் நடமாடிக் கொண்டிருந்த பல அப்பாவித் தமிழ் மக்கள் கொடூர வெடுகுண்டுத் தொடர் தாக்குதலுக்கு இறையான தினம் இன்று!

கோயம்புத்தூரில் இறந்து போன அப்பாவித் தமிழர்களுக்கு தீவிரவாதம் என்றால் என்னவென்று தெரியுமா? இஸ்லாம் என்றால் தான் என்னவென்று தெரியுமா? அல்லது அப்துல் நாசர் மதானியைத்தான் யாரென்று தெரியுமா? ஆனால் இறந்தார்கள். அவர்களில் பலரது குடும்பங்கள் இன்று அனாதரவான நிலையில்...பல குழந்தைகள் அனாதைகளாக! 

 எல்லை தாண்டிய இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று வீர முழக்கமிட்டு, வீறு கொண்டு எழுந்து வா, புறப்படுவோம், சக தமிழனே போரிடப் புறப்படுவோம், ஓடி வாருங்கள், தோள்கள் துடிக்கிறாது, கண்கள் சிவக்கிறது கப்பலேரிப் போய் காப்பாற்றுவோம் தமிழரையென்று வீரமுழக்கம் இட்டார்களே பல பெட்டைக் கோழிகள்! அவர்களில் ஒரு குஞ்சு கூட கோயம்புத்தூரில் தொடராக வெடித்த கொலை குண்டில் இறந்து போன தமிழர்களுக்காக இந்த நாளில் முனங்கக்கூட இல்லையே ஏன்?

வெளிநாட்டு மோகம் என்பது இது தானா? சொந்தத் தமிழன் கூட எல்லை தாண்டி இருந்தால் தான் அவன் குண்டடி பட்டவுடன் நமக்கு கோபம் வருமாவெளிநாட்டுத் தமிழனின் உயிருக்காக கோஷம் போடுபவர்கள், உள்நாட்டில் சிதறிச் செத்துப்போன தமிழர்களுக்காக ரோஷப்பட்டு பேச வராதது ஏன்? சொந்த மாநிலத்தில் ஒன்றாய்ச் சோறுண்டு , ஆடிப்பாடி விசிலடித்து, விவாசாயம் செய்துணக்குச் சோறும் போட்ட சொந்தத் தமிழன்  கேட்பாரற்று, ஆனாதையாக உடல் சிதறிக் கிடந்த இந்த நாளில் இறந்து போன அந்தத் தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தவோ அவர்கள் தம் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவோ மானமுள்ள தமிழுணர்வாளர்கள் எங்கேயடா காணோம்!

1998 பிப்ரவரி 14 ல் உடல் சிதறிக்கிடக்கும் கோவைமாநகரச் செந்தமிழர்கள்!


என்ன ஒரு அநியாயம் சீனத்து பயங்கரவாதிகளின் கைக்கூலி ஸ்ரீலங்க்கன் கொன்றால் தான் அதனைக் கண்டிப்போம், அதற்கெதிராக கூச்சலிடுவோம், கூப்பாடு போடுவோம் உள்ளூர் பயங்கரவாதிகள் கொன்றால் அதனை கண்டும் காணாமல் அமைதியாய் இருப்போமென்று என்ன ஒரு அநியாயம்!

தமிழர்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு தேசியத் தலைவர் தான் வரவேண்டி இருக்கிறது!        கொலைக்களத்தைப் பார்வையிடும் அத்வானி!

எல்லை தாண்டி செத்துப்போன தமிழர்களுக்கெல்லாம் இரங்கல் கடிதம் எழுதி மூக்கு சிந்தி அழுபவர்கள் சொந்த மாநிலத்தில் சிதறிப்பலியான தமிழர்களை நினைவில் கூட வைக்காமல் போவதேன்!

அல் உம்மா பாஷா! என்ன ஒரு புன்சிரிப்பு!


பாகிஸ்தானுக்கும், அரபு நாட்டுக்கும் மட்டுமே விசுவாசிகளாக இருந்து உள்நாட்டுக் குடிமக்களை கூறு போடத் துணிபவர்களை கண்டிக்க தமிழுணர்வாளர்கள் ஏன் வக்கற்றுப் போனார்கள்! சொந்த மண்ணில் ஏன் எதற்கென்றே காரணம் தெரியாமல் இறந்து போன இந்தத் தமிழர்களுக்கென்று ஒரு நினைவு நாள் கூட கிடையாது! காரணம் அவர்கள் அரபு விசுவாசிகளால் கொல்லப்பட்டார்கள்! சீன விசுவாசிகளால் அல்லவே!


பார்வையிட்டு என்ன பயன்? பின் கைகொடுத்து அனுப்பினீரே கொலை பாதகனை               அவன் வீட்டுக்கு! அந்தப் பாதகத்தைப் பார்வையிட்டோர் யார்?

கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். இத்தனைக்கும் காரணமாம் இவனென ஒருவனைத் துறத்திப் பிடித்துக் காவலில் வைத்தால், ஆங்கோராயிரம் ஓட்டிற்கு அவனை உச்சி முகர்ந்து வழியனுப்பிய கொலைகாரத் தலைவர்களை தமிழகம் தான் மன்னிக்குமோ! தமிழர்கள் தான் மறப்பரோ!


ரத்த வெறி பிடித்து உரக்கப் பேசி சூளுரைத்து மாந்தர்தம் உயிர் குடிக்கும் கொலைபாதகச் சிந்தனைகளை என்று தான் நிறுத்துவரோ இக்கயமை கொண்ட மானிடர்கள்! என்று தான் நிறுத்துவரோ தன் இறையின் பெயரால் கொட்டும் ரத்தங்களை!


அப்துல் நாசர் மதானி!

நன்றி: vedaprakash!

சில குமுறல்கள், சில கதறல்கள்!

குட்டி பாகிஸ்தானான கேரளத்தில் இது போன்ற ஆயிரம் மதானிகள் பாலூற்றி தேனூற்றி வளர்க்கப்படுகிறார்கள். யாரால்? அப்பாவி ஹிந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து கொண்டு ஓட்டு வங்கிக்காக அராபிய விசுவாசிகளின் கால்களைக் கூடக் கழுவத் தயங்காத  அரசியல்வாதிகளால்! அச்சுதானந்தன்களும், ஈகே நாயனார்களும் வெட்கமின்றி வளர்த்தெடுத்ததார்கள் இந்த வெளிநாட்டு விசுவாசிகளை. விளைவு, இந்த  பாகிஸ்தான் விசுவாசிகள் கல்லூரி பேராசிரியர் கையை வெட்டி விட்டு ஷரியா சட்டப்படி தண்டனை கொடுத்தோம் என்று மார்த்தூக்கி எச்சரிக்கிறார்கள்!

என்று தணியும் இந்த செக்யூலரிச மோகம்? என்று தணியும் இந்த ஓட்டு வங்கி மயக்கம்? என்று கிடைக்கும் பாரதத்தில் உண்மையான சுதந்திரம்?

கோயம்புத்தூரில் கொலை பாதகர்களால் உடல் சிதறி இறந்து போன அப்பாவித் தமிழர்களின் ஆன்மா தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்! 

போலித் தமிழுணர்வாளர்களால் மறக்கப்பட்டாலும், நம் இதயங்களில் வாழும் இறந்து போன கோயம்புத்தூரின் சொந்தத் தமிழர்களின் ஆன்மா சாந்தி அடைய ஒவ்வொரு பிப்ரவரி 14 லிலும் பிரார்திப்போம்! மிச்சமிருக்கும் அப்பாவித் தமிழர்களை இது போன்ற கொலைபாதகர்களிடமிருந்து காக்கச் சூளுரைப்போம்! தீவிரவாதம் எந்த முகம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து போரிடுவோம்!


ஜெய்ஹிந்த்!


9 comments:

ஜடாயு said...

ராம்குமார், போலி தமிழுணர்வாளர்களின் முகத்திரையைக் கிழித்து விட்டீர்கள். சபாஷ்!

கோவை குண்டுவெடிப்பில் மறைந்த சகோதரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

பயங்கரவாதத்தை வேரறுப்போம், அது எந்த வடிவில் வந்தாலும்.

gujjan said...

அருமை... போலித் தமிழ் உணர்வாளர்களின் முகத்திரையை கிழித்து விட்டீர்கள்:.. இந்த கேடுகெட்ட கூட்டம் தீவிரவாத கூட்டத்தை ஆதரிக்கின்றது என்பது தான் உண்மை. அதை மறைப்பதற்கு இவர்கள் எடுத்த திரை "தமிழ் உணர்வு"... உண்மையில் இந்த பண முதலைகளுக்கு எவன் செத்தாலும் கவலையில்லை. புலிகள் இயக்கத்திலிருந்து வந்த பணம் தான் இவர்களின் முதலைக் கண்ணீருக்கு காரணம்....

hayyram said...

ஜடாயு ஜி! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

hayyram said...

குஜ்ஜன், வருக, நீண்ட நாட்களாக தங்களோடு உரையாடும் அளவிற்கு எந்தப் பதிவும் போட முடியவில்லை! நேரமின்மையால் தவிக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

RAJA said...

மிக அருமை ராம். படிக்கும்போதே நம் அரசியல் வியாதிகளின் மேல் கோபம் கொப்பளிக்கிறது. சமீபத்தில் பங்களாதேஷில் இந்து கோவில்கள் உடைத்து நொறுக்கப்பட்டதாக படித்தேன். இந்த செய்திகளை எந்த நாளிதழும், டிவியும் வெளியிடுவதில்லை. எந்த அரசியல் வாதியும் கண்டு கொள்வதில்லை. நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் இந்துக்கள் இன்னும் தூக்கத்திலிருந்து எழாமல் இருக்கிறார்கள். தொடரட்டும் உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்.

gujjan said...

ya i too noticed that some of my comments are not getting published... its ok hayyram sir... i am reading your blog at regular intervals.. eager to read more

premprakash said...

extremely super article. I thought all the bastards in tamilnadu supporting LTTE and srilankan tamilians. But now i have seen a courageous man. but my question, always you are pin pointing your fingers on minority, why you are not scolding hindus who were always supporting these kinds of politicians?

Unknown said...

செத்தவனுக்கு நியாயம் கிடைகளே...குண்டு வெச்ச நாய்க்கலுக்கு கல்யாணம் நடக்குது இந்த தமிழ் நாட்டில்...

Unknown said...

கோவை குண்டு வெடிப்பு இதற்கு எதோ ஆபரேசன் என்று தலைப்பிட்டாவர்களே யாருக்காவது தெரியுமா