எதிர் கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டசபையை சினிமா படப்பிடிப்பு என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது! நாக்கை மடித்துக் கொண்டு வசனம் பேசுகிறார். அருகே சுவர் இருந்தால் ஒரு காலை அதன் மீது வைத்துத் தாவி அதிமுக காருக்கு உதை விட்டிருப்பாரோ என்னமோ!
ஐயா விஜயகாந்து, ஏதோ கருனாநிதி மீண்டும் வந்துவிடக்கூடாதே என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் தேங்காய் மூடி கட்சியாக இருந்த உங்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு பிரதான எதிர் கட்சி ஆக்கியிருக்கிறார்கள். அதை மறந்து இடம் பொருள் தெரியாமல் ஒரு ரௌடியைப் போன்ற பாவனையுடன் சட்டசபையில் நடந்து கொள்கிறீர்களே!
சட்டசபையில் கேமிரா இருப்பது நடவடிக்கைகளைப் பதிவு செய்யத்தான் என்று இவருக்கு யாராவது சொல்லுங்கப்பு! ஷூட்டிங்னு நெனச்சு ரொம்பத்தான் உணர்ச்சி வசப்படப் போறாரு!
No comments:
Post a Comment