Thursday, February 16, 2012

சாணக்கியன் சொல் கேளீர்!



செல்வம் மட்டும் எல்லாதவன் ஏழையல்ல, அவன் நிச்சயமாகச் செல்வந்தன். ஆனால் படிப்பில்லாதவன் எல்லா விதத்திலும் ஏழ்மை அடைகிறான்.

கண்களால் சுற்று முற்றும் நன்றாகப் பார்த்து விட்டு வெளியே செல்லக் காலடி எடுத்து வைக்க வேண்டும்!

தண்ணீரைச் சுத்தமான துணியால் வடிகட்டிக் குடிக்க வேண்டும்!

சாஸ்திரங்களுக்கு ஒத்ததான பேச்சையே பேச வேண்டும்.

மனச்சாட்சியைப் பின்பற்றிக் காரியங்களைச் செய்ய வேண்டும்.

கஞ்சனுக்கு யாசகன் எதிரி. முட்டாளுக்கு ஆசான் எதிரி, மலடிக்குக் கணவன் எதிரி. திருடர்களுக்கு நிலவொளி எதிரி!

ஆற்றோரத்தில் உள்ள மரங்களும், மற்றவர்கள் வீடுகளில் வசிக்கும் பெண்களும்மதியுள்ள மந்திரிகளில்லாத அரசர்களும், விரைவிலேயே சந்தேகமில்லாமல் அழிவடைகிறார்கள்.

அதிகமாகப் பிரயாணம் செய்வதால் ஒரு மனிதன் விரைவில் கிழத்தன்மையை அடைகிறான்.

கட்டிப்போடப்பட்ட குதிரைகள் விரைவிலேயே கிழத்தன்மையை அடைகின்றன.

ஆண்களுடன் சேர்க்கை இல்லாவிடில் பெண்கள் விரைவில் கிழவிகளாகிறார்கள்.

அதிக நேரம் வெயிலில் காய்ந்த துணிகள் விரைவில் கிழிந்து போகின்றன.

சந்தண மரங்கள் நிறைந்திருக்கும் மலையில் விளையும் மூங்கில் சந்தன மரமாகாது.
அதுபோல, புத்தியில்லாதவனுக்குக் கூறும் நல் வார்த்தைகள் வீணே ஆகும்.

ஒவ்வொருவருடைய உண்மையான குணத்தை அதற்கான நேரங்களில் சரியாகத் தெரிந்து
கொள்ளலாம். ஒரு பணியாளனை வெளியே வேலைக்காக அனுப்பும் போது அவனைப்
பற்றித் தெரிந்து கொள்ளலாம். சுற்றத்தைத் துன்பத்திலும், நட்பை ஆபத்து காலத்திலும்,
மனைவியை ஏழ்மையிலும் தெரிந்து கொள்ளலாம்.

- சாணக்கியர்