Sunday, April 1, 2012

கீதோபதேசம் - பக்தியால் மட்டுமே உணர முடிபவன் நான்!




அர்ஜுனன் கூறினான்..

ஜனார்தனா! உன்னுடைய இந்த இனிய மானுட வடிவத்தினை கண்டு இப்பொழுது நான் மனம் தெளிந்து என் இயல்பான நிலையை அடைந்தானாக இருந்க்கிறேன்.

பகவான் சொன்னது..

எவராலும் காண்பதற்கரிய என்னுடைய இந்த வடிவை பார்த்திருக்கிறாய். இந்த வடிவத்தைத் தரிசிக்க தேவர்கள் எப்பொழுதும் ஆவலாக உள்ளார்கள்.

நீ என்னை எவ்வாறு கண்டாயோ, அவ்வாறு நான் வேதங்களாலும், தவத்தாலும், தானத்தாலும், யாகத்தாலும் தரிசிக்க இயலாதவன்.

அர்ஜுனா! என்னிடம் மாறாத பக்தி செலுத்துவதால் மட்டுமே இவ்வடிவத்தோடு என்னை உள்ளபடி உணர முடியும். காணமுடியும். அடைய முடியும்.

பாண்டவா! எனக்காகவே கர்மம் செய்கிறவனும், என்னையே மேலான லட்சியமாகக் கொள்பவனும், என்னிடம் பக்தி செலுத்துபவனும், பற்றற்றவனும், எல்லா உயிர்களிடத்திலும் பகைமை பாராட்டாதவனும்
எவனோ அவன் என்னை வந்தடைகிறான்.

- பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்.


2 comments:

அகோரி said...

ஐயா வணக்கம்

என் பெயர் கே .பன்னீர்செல்வம்

எனக்கு ஒரு சந்தேகம்

பகவன் கிருஷ்ணர் ஏன் அர்ஜுனக்குமட்டும் தன் தான் யார் என்று காட்டியது ஏன் ?

பிரபு said...

திரு கே. பன்னிர்செல்வம் அவர்களே ,

//பகவன் கிருஷ்ணர் ஏன் அர்ஜுனக்குமட்டும் தன் தான் யார் என்று காட்டியது ஏன் ?//

பகவன் கிருஷ்ணர் தான் யார் என்று காட்டியது ஏன் என்பதை காட்டிலும் எந்த சுழலில் எந்த சந்தர்பத்தில் அதை செய்தார் என்பதை பாருங்கள். அர்ஜுனனும் பகவன் கிருஷ்ணருக்கும் அது முதல் சந்திப்பு அல்ல. எத்தனையோ சந்தர்பங்கள் இருந்தபோதும் எப்பொழுது அர்ஜுனன் முற்றிலும் சரணாகதி அடைந்தானோ அதன் பிறகே அதை செய்தார்(அவன் கண்டான்). அது அவருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் தான் உங்களாலும் காணமுடியும் அதற்க்கு சரணாகதி அடைய வேண்டும். அது நமக்கு முடியுமோ??? எல்லாமும் நீ தான் என்று மனதால் உடலால் அனைத்தும் அவனே என்ற நிலை.
அகங்காரம் அற்ற நிலை.

நன்றி