Monday, April 16, 2012

ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் - வெவ்வேறு குணங்கள்!



ஒரு தாய் தந்தையருக்கு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் விதவிதமான குணங்களும் வாழ்க்கையையும் கொண்டு இருப்பதற்கு பல காரணங்கள் ஒருங்கே அமையப் பெறுகின்றன.

இதில் ஒரு விஞ்ஞான உண்மை புதைந்து இருக்கிறது. முதல் குழந்தை உருவாகும் பொழுது தாய், தந்தையரின் மனநிலை, வயது, உடல்நிலை, செல்வம், அறிவு இவைகளைப் பொறுத்தும், இப்பிரபஞ்சத்தில் அக்கால கட்டத்தில் கோள்களின் சஞ்சாரநிலைபஞ்ச பூதங்களில் ஏற்படுகின்ற ரசாயன மாற்றம் இவற்றைப் பொறுத்தும் அக்குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன ஏற்படுகின்றன.

பின் மூன்று அல்லது நான்கு வருடம் கழித்த பின்பு, தாய் தந்தையரின் மனம், உடல், கோள்கள் பஞ்ச பூதங்கள் இவற்றின் நிலையில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கும். இந்நிலைக்கேற்றவாறு அடுத்த குழந்தையின் உருவ அமைப்பு, குணம் முதலியன வேறுபடும்.

எனவே இந்நிலையில் முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒரு மனிதன் வேறொரு மனிதனிடமிருந்து கருவமைப்பு தொடங்கி பல்வேறு பழக்க வழக்கம், ஒழுக்கம், கலையுணர்வு போன்ற பல குணங்களில் மாறுபடுகிறான். அவ்வாறு மாறுபடும் குணத்தைப் பொறுத்தே அவனது உருவமைப்பு , அறிவின் உயர்வு கீர்த்தி, உடல் வலிவு, உடல் நலம் மற்றும் செல்வம் போன்றவை உண்டாகிறது.

ஆக கரு ஒன்று உருவாகும் காலமும் அக்காலகட்டத்தில் சஞ்சாரிகும் கோள்களின் தாக்கமும் கருவின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தி வெவ்வேறு குணமும் உடல் வலிவும் கொண்ட வேறுபட்ட மனிதர்களை உருவாக்குகிறது.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி