Sunday, August 5, 2012

விவேகானந்தரின் பொன் மொழிகள்!




சமயசாதனையின் நுட்ப ரகசியமெல்லாம் கொள்கைகளில் இல்லை. அதை அனுஷ்டிப்பதில் தான் அடங்கியிருக்கிறது. நல்லவனாகவே இருந்து நன்மை செய்வது தான் சமயசாதனையின் முழு உண்மையாகும். 'கடவுளே! கடவுளே!' என்று அழைத்துக் கொண்டிருப்பவன் சமயச் சான்றோன் ஆகிவிடமாட்டான். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவனே சான்றோன் ஆகிறான்.

ஆன்மிக வாழ்க்கைக்கோ மனதுக்கோ உடலுக்கோ பலவீனத்தை உண்டு பண்ணும் எதையும் உன் கைவிரலாலும் தீண்டாதே. மனிதனிடம் இயற்கையாகப் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவதே சமய வாழ்க்கையாகும்.

லௌகீக உலகம் பற்றிய சக்தியின் மையமாக ஐரோப்பா இருக்கிறது. அது தன்னுடைய இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையாக அது தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளாவிட்டால், இன்னும் ஐம்பதே ஆண்டுகளில் நொறுங்கி அழிந்துவிடும். ஐரோப்பாவை இத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றக் கூடியவை உபநிஷத உண்மைகளே ஆகும்.

ஒழுக்கம் உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலை பெற்றிரு. 

கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் பாவம் செய்வதில்லை. மனதால் கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை. 

சுயநலமே ஒழுக்கக் கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.

- ஸ்வாமி விவேகானந்தர்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வு... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?