Thursday, October 4, 2012

பிறப்பின் ரகசியம்!





"நைமிசாரண்ய முனிவர்களே! மானிட சரீரம் எப்படி உண்டாகிறதென்பதே விநதா புத்திரனின் கேள்வி. அதற்கு ஸ்ரீமத் நாராயணன் கூறிய பதிலைக் கேளுங்கள்" என்று சொல்லிக் கூறலானார் சூதபுராணிகர்.

"கச்யப குமாரா!" ஆணும், பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்வதால் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.

ஸ்த்ரீயின் மாதவிலக்கு ஆனதிலிருந்து ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையிலான இரட்டை நாட்களில் ஸ்தீர்யுடன் கூடினால்ஆண்மகவு உண்டாகும்.

பொதுவாக ஒரு பெண் மாத விலக்கான நான்காம் நாளிலிருந்து எட்டாம் நாள் வரை கருவுற வாய்ப்புண்டு.

மதவிலக்கிலிருந்து ஐந்தாம் நாள் முதல் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தரித்துக் கொண்டு குவிந்த சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும்.
                                                                    
அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும். மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.

சேர்க்கை நிகழ்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெரிதாகும். இருபதாவது நாளில் மேலும் அதற்க்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. 

நான்காவது மற்றும் ஐந்தாவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். 

ஆறாவது மாதத்தில் கழுத்தும்தலையும், பற்களும் உண்டாகும். 

ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும்.

எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான்.

ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாடியின் மூலத்தை சிசு அடைகிறது. பத்தாம் மாதம் தன் பிஞ்சுக்கால்களால் உதைத்து உதைத்து கருவறைக் கதவைத் திறப்பதால் தாய்க்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

அன்னையின் கருவில் இருக்கும் போதே உயிருக்கு ஆயுளும், கல்வி, யோகம் ஆகியவைகளும், எந்த நேரத்தில் எந்தவிதமாக இறப்பு நேரிடும் என்பதும்முன் ஜென்ம பாப, புண்ணியங்களுக்கேறப கர்ம வினைகளும் பிரம்மனால் எழுதப்பட்டு விடுகிறது. பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின்பயனையே ஜீவன் மறுபிறவியில் அனுபவிக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

கருடா! உன் மூலம் உலகத்தவர்களுக்குப் பிறப்பின் ரகசியத்தைச் சொன்னேன்.

- கருடபுராணம்

7 comments:

Dr Rama Krishnan said...

I normally enjoy articles in this site.But there are factual errors in this article. I,as a Dr,can point umpteen errors. Example: Ovulation occurs in 2 weeks from the 1st day of the period. Woman cannot fall pregnant prior to ovulation. One of the methods used for contraception, the rhythm method is based on this concept.

Madhavan Srinivasagopalan said...

Though I also believe some factual errors.. but see the wonder that w/o any medical test, they formulated something those are relatively a reasonable / factual events ... may be empirical.

Dr. RK.. I read that on an average 10th to 18th day from 1st day of mensus are not advised for un-protective intercourse if no want of baby. So, an average of second week to 3rd week from 1st day of mensus has the possibility of getting pregnant.

On an average 28 days of each cycle 14th day is probable ovalution day. Some sperms may last for 72 hrs.. (3 days.. hence from 10th to 18th day, not advised for un-protective intercourse for not want of baby.

PS . I am not a doctor.. just on academic interest read from the NET with some ideas received from Gynac.

Balaji Palamadai said...

Dear Sir,
Your articles are really nice. One request from my side, the articles which wrote under the topic Maranthirku Appal was really nice to read. If you couple the complete series into a ebook it would be useful for us to read as a whole. More over if you wish you can also combine other topics into one ebook so that the reader's would be benifited jus one request from side. Many thanks, Balaji

Dr Rama Krishnan said...

Mr Madhavan Srinivasagopalan, you are right on the 10th day-18th day part.

hayyram said...

நண்பர்களுக்கு நன்றி. நண்பர்கள் ஆர்கே மற்றும் மாதவனின் பகிர்வுகள் பயனுள்ள உரையாடல்களாக இருந்தன. இங்கே நாம் வியக்கும் விஷயம் என்னவென்றால் ஸ்கேனர், எக்ஸ்ரே போன்ற கருவிகளெல்லாம் இல்லாத பல நூறு வருடங்களுக்கு முன்னால் ஏறக்குறைய சரியாக எப்படி கருவுக்குள் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள் என்பது தான். வெறும் ஞான த்ருஷ்டியால் முடிந்திருக்குமா? அல்லது ஒவ்வொரு கர்பகாலத்தில் எதேச்சையாக இறந்து போகும் பல்வேறு பெண்களின் வயிற்றைத் திறந்து ஆராய்ச்சி செய்து எழுதியிருப்பார்களா என்பதெல்லாம் புரியாத புதிராகவே இருக்கிறது. வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள் கூறும் பல்வேறு விஷயங்கள் வியக்கச் செய்பவையாகவே இருந்து வருகிறது. விடையில்லாமல்..!

hayyram said...

பாலாஜி அவர்களே, தங்கள் ஆலோசனைகள் படி செய்ய முயற்சி செய்கிறேன். தங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி!


கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் மிக்க நன்றி!





Unknown said...

சிறப்பு