Showing posts with label garudapuranam. Show all posts
Showing posts with label garudapuranam. Show all posts

Thursday, October 4, 2012

பிறப்பின் ரகசியம்!





"நைமிசாரண்ய முனிவர்களே! மானிட சரீரம் எப்படி உண்டாகிறதென்பதே விநதா புத்திரனின் கேள்வி. அதற்கு ஸ்ரீமத் நாராயணன் கூறிய பதிலைக் கேளுங்கள்" என்று சொல்லிக் கூறலானார் சூதபுராணிகர்.

"கச்யப குமாரா!" ஆணும், பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்வதால் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.

ஸ்த்ரீயின் மாதவிலக்கு ஆனதிலிருந்து ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையிலான இரட்டை நாட்களில் ஸ்தீர்யுடன் கூடினால்ஆண்மகவு உண்டாகும்.

பொதுவாக ஒரு பெண் மாத விலக்கான நான்காம் நாளிலிருந்து எட்டாம் நாள் வரை கருவுற வாய்ப்புண்டு.

மதவிலக்கிலிருந்து ஐந்தாம் நாள் முதல் ஸ்திரிகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும். காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப, தாம்பூல வஸ்துக்களை தரித்துக் கொண்டு குவிந்த சித்தத்தில் அதிக மோகமுடையவர்களாய்ச் சேர்தல் வேண்டும்.
                                                                    
அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்ததால், சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரி வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல அந்தக் கருவானது விருத்தியாகும். மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும் சுக்கில சுரோணிதன்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும், பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும். சுக்கில சுரோநிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.

சேர்க்கை நிகழ்ந்த ஐந்தாவது நாளன்று கர்ப்பப் பையினுள்ளே ஒரு குமிழியுண்டாகும். அது பதினான்கு நாட்களில் தசையால் சிறிது பெரிதாகும். இருபதாவது நாளில் மேலும் அதற்க்குச் சிறிது தசையுண்டாகும். இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியாகிறது. ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்ச பூதத்தின் சேர்க்கை உண்டாகிறது.

மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன. 

நான்காவது மற்றும் ஐந்தாவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும். 

ஆறாவது மாதத்தில் கழுத்தும்தலையும், பற்களும் உண்டாகும். 

ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக்குரியும், பெண் மகவாயின் பெண் இனக் குறியும் உண்டாகும்.

எட்டாவது மாதத்தில் எல்லா அவயங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான்.

ஒன்பதாவது மாதத்தில் சுழிமுனை என்ற நாடியின் மூலத்தை சிசு அடைகிறது. பத்தாம் மாதம் தன் பிஞ்சுக்கால்களால் உதைத்து உதைத்து கருவறைக் கதவைத் திறப்பதால் தாய்க்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

அன்னையின் கருவில் இருக்கும் போதே உயிருக்கு ஆயுளும், கல்வி, யோகம் ஆகியவைகளும், எந்த நேரத்தில் எந்தவிதமாக இறப்பு நேரிடும் என்பதும்முன் ஜென்ம பாப, புண்ணியங்களுக்கேறப கர்ம வினைகளும் பிரம்மனால் எழுதப்பட்டு விடுகிறது. பூர்வ ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளின்பயனையே ஜீவன் மறுபிறவியில் அனுபவிக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.

கருடா! உன் மூலம் உலகத்தவர்களுக்குப் பிறப்பின் ரகசியத்தைச் சொன்னேன்.

- கருடபுராணம்

Thursday, September 15, 2011

பிறர் மனைவியை மோகிப்பவன் ஆவியாய் அலைவான்!




பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதை அடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான்.

இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீய நரகங்களை எல்லாம் அனுபவிப்பான்.

மோசம் செய்து பிறர் பொருட்களை அபகரிப்பவன் கொடுமையான பாவத்தைச் செய்பவனாகிறான். அவன் பிரேத ரூபமெடுத்து யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். தன் சொந்த புத்திரன் முதலியோருக்கு கூட சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான் என்று கூறி அருளினார்.

அந்தணோத்தர்களின் பொருள்களையும் தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் பிரேத ஜென்மத்தை அடைவான்.

தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான்.

தாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.

போரில் புறங்காட்டி ஓடியவனும், செய் நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள்.

பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகப்பிடிப்பான்.
தருமங்கள்.

நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோன்னுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும்.

தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும்,
திருஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது.


.