Saturday, December 15, 2012

இதிகாச நாயகன் குறித்து பால கௌதமன் தொலைக்காட்சி பேட்டி!

இந்த நாட்டின் இதிகாச நாயகனுக்கு நினைவுச்சின்னம் வேண்டுமா அல்லது இடையில் நட்டைக் கொள்ளையடிக்க வந்த பாபருக்கு நினைவுச் சின்னம் வேண்டுமா?

ஹிந்து எழுச்சிநாளில் திரு பால கௌதமன் கேப்டன் டி வியில் உரையாற்றிய காட்சிகள்!



கோவிலை இடித்து மசூதி கட்ட அவர்கள் மார்கத்தில் இடம் கிடையாதாம்..! பேசுகிறார்கள்..!


தமிழ் நாட்டில் ரங்கநாதர் கோவிலும் மீனாக்ஷி அம்மன் கோவிலும் எத்தனை நாள் பூஜை இல்லாமல் முஸ்லீம்களால் உடைக்கப்பட்டது என்பதற்கு வரலாறு இருக்கு...!










கொசுறு:

டிசம்பர் - 1025. பதினேழாவது முறையாக புழுதி பறக்க ராஜஸ்தான் பாலைவனத்தைக் கடந்து குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோமநாத் கோவிலுக்கு வருகிறான் கஜினி முகமது.

கர்பகிரகத்தில் காட்சி அளிக்கும் சிவலிங்கம் அந்திரத்தில் மிதக்கும் படி அமைத்திருந்தது ஓர் அதிசயம்! அந்தக் கோவிலின் தனிச்சிறப்பு!

கோவிலை கொள்ளையடிக்க முயன்ற கஜினியை நோக்கி அவனே எதிர்பார்த்திராத அளவில் பல்லாயிரக்கணக்கான ஊர் மக்கள், கோயிலில் பணிபுரிபவர்கள், அர்ச்சகர்கள் திரண்டெழுந்து கூவிக்கொண்டும், அழுது கொண்டும் கதறிக் கொண்டும் ஓடி வந்து கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு கஜினியின் படையை எதிர்த்துப் போரிட்டார்கள்.

ஆனால், சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் கொன்று பின் கோவிலுக்குள் இருந்த ஆபரனம் , விக்கிரகம் என்று ஒன்றுவிடாமல் மூட்டை கட்டினர் கஜினியின் படைகள். பின் கஜினியின் பார்வை அந்தரத்தில் மிதக்கும் சிவலிங்கத்தின் மீது விழுந்தது. பிரமித்துப் போனான்.

சிவலிங்கத்தைச் சுற்றி நாலாபுறமும் கண்களை சுழற்றிப் பார்த்தான். பின்னர் கூறினான் "பலே! சாமர்த்தியமாகத்தான் அமைத்திருக்கிறார்கள்! மேலே கூரையிலும் பக்கவாட்டிலும் உள்ள அந்தக் கற்களை அகற்றித் தள்ளுங்கள்...இது ஏதோ காந்த சக்தியின் வேலை!" என்று கஜினி ஆணையிட, வீரர்கள் உடனே செயல்பட்டனர். சுற்றிலும் கற்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. சிவலிங்கம் மெள்ள மெள்ள அசைந்தது. பிறகு கீழே இறங்கி இறங்கி..'தொப்' என்று வீழ்ந்தது. தன் இரு கைகளாலும் அலாக்காக அந்த சிவலிங்கத்தைத் தூக்கி வந்து கோயிலின் முன் போட்டு உடைத்தான் முகமது கஜினி. படை வீரர்கள் 'ஹோ' வென்று ஆரவாரிக்க வானமும் சிவந்தது..!

- சோமநாதர் கோயிலில் நடந்தேறிய இத்தனை கொடூரத்தையும் விவரமாக, சற்று வருத்தத்துடன் எழுதியிருப்பவர் அல் காஸ்வினி என்னும் அரபு நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளர்.

- மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்திலிருந்து

3 comments:

Muse (# 01429798200730556938) said...

fantastic responses from Gauthaman.

Muse (# 01429798200730556938) said...

There is another reason for Gajini attacking Somnath. Popular marxist historian Romila Thapar also has written about it.

The pre-islamic Arab is Hindu. When prophet mohammad started destroying the statues of deities there, one deity is taken out from Macca and brought to India. The deity name is Manat, which is placed in Somnath.

Therefore, it has become the duty of muhammadans to destroy that deity. That is another reason for Gajini's attack on Somnath.

Muse (# 01429798200730556938) said...

//ஊர் மக்கள், கோயிலில் பணிபுரிபவர்கள், அர்ச்சகர்கள் திரண்டெழுந்து குவிக்கொண்டும், அழுது கொண்டும் கதறிக் கொண்டும் ஓடி வந்து கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக்கொண்டு கஜினியின் படையை எதிர்த்துப் போரிட்டார்கள்.//

No they did not.

They did not take weapons against Gajini. They conducted a complete non-violent protest. They literally begged him not to destroy the temple.

Gajini ordered his army to kill everyone who is standing before the temple begging him not to destroy the temple. None ran away from that place and everyone was killed.